20 January, 2014

இன்னோரு புதிய கட்சி

முதல்ல கொடிய நேராப்பிடியுங்க...:
நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய இன்னோரு புதிய கட்சி உதயமாகியுள்ளது.கட்சிக்கு பெயர் மக்கள் தேசிய கட்சி.சென்னை பத்திரிகையாளர்களிடம் கட்சி கொடியை அறிமுகப்படுத்தும் போது தலைகீழாக காட்டினார் தலைவர்.'முதல்ல கொடியை நேராபிடியுங்க அப்புறம் மத்ததை பார்கலாம்' என்றதும் அவசர,அவசரமாக கொடியை நேராகபிடித்தார்.

டீ மாஸ்டர் தேவை...

என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் ,மோடியை டீகடைக்காரர் என்று பேசி நாடு முழுவதும் வாங்கிக்கட்டிக்கொண்டு இருக்கிறார் காங்.கட்சியின் முன்னாள் அமைச்சர் மணிசங்கர் அய்யர்.சென்னையில் காங்.கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவன் அருகே பா.ஜ.,கவினர் நடத்திய வித்தியாசமான டீகடையில் இடம் பெற்றிருந்த போஸ்டர்.