22 March, 2011

தே.மு.தி.க.சார்பில் போட்டிடும் நடிகர் அருண் பாண்டியன்

நடிகர் அருண்பாண்டியன் தே.மு.தி.க. வேட்பாளராக பேராவூரணி தொகுதியில் போட்டியிடுகிறார்.   வேட்பாளரானது குறித்து அருண்பாண்டியன், 

விஜயகாந்தும் நானும் நெருங்கிய நண்பர்கள். ஊமை விழிகள் படத்தில் இருந்து நெருக்கமாக பழகி வருகிறோம். எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூக சேவை பணிகளில் எனக்கு ஆர்வம் உண்டு. “நந்தலாலா”, “பேராண்மை”, “அங்காடித்தெரு” போன்ற நான் தயாரித்த படங்கள் சமூக சிந்தனை உடையவை. எனக்கு போதும் என்கிற அளவு பணமும், புகழும் இருக்கிறது. இனிமேல் மக்கள் பணியாற்றுவது என முடிவு செய்துள்ளேன்

பேராவூரணி எனக்கு பரிச்சயமான தொகுதி. அங்கு எனக்கு நிறைய நண்பர்களும், உறவினர்களும் உள்ளனர். என்னை வெற்றி பெறச் செய்தால் முன் மாதிரி எம்.எல்.ஏ.வாக பணியாற்றுவேன். சட்டமன்ற உறுப்பினருக்கு உள்ள அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்வேன்.  

தேர்தல் கமிஷனர்கள் பலர் வந்து போய் உள்ளனர். டி.என். சேஷன் பொறுப்பேற்ற போதுதான் அதன் மகத்துவத்தை அறிய முடிந்தது. நானும் எம்.எல்.ஏ. பதவியை பயன்படுத்தி முத்திரை பதிப்பேன்’’ என்று தெரிவித்துள்ளார்.  


அய்கரன் நிறுவனம் தரமான படங்களை அளித்துவரும் அருண்பாண்டியன் நிச்சயம் நல்ல MLA  வாக செயல்படுவார் என்ற நம்பிக்கையில் நாம்  வாழ்த்துவோம்  நம்பிகைதானே வாழ்கை!          

No comments:

Post a Comment