14 March, 2011

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவி கற்பழித்துக் கொலை: ஒருவர் கைது


ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவி ஒருவர் கற்பழிதுக் கொல்லப்பட்டுள்ளார். கொலையாளிகள் அவரது உடலை சூட்கேசில் வைத்து கால்வாயில் வீசியுள்ளனர்.


தோஷா தாக்கர் (24) என்னும் இந்திய பெண் சிட்னி காலேஜ் ஆப் பிசினஸ் அன்ட் ஐடியில் படித்து வந்தார். அவர் ஆஸ்திரேலிய குடியிருப்பு பெற்றவர். கடந்த 9-ம் தேதி திடீர் என்று மாயமானார்.

இந்நிலையில் கடந்த 11-ம் தேதி காலை கட்டுமானப் பணியாளர்கள் சிலர் மெடோபாங்க் பார்க் அருகில் உள்ள கால்வாயில் ஒரு சூகேஸ் கிடப்பதைப் பார்த்தனர். அதை திறந்து பார்த்தபோது ஒரு இளம் பெண்ணின் உடல் இருந்தது. உடனே அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதற்கிடையே போலீசார் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து தேனியல் ஸ்டானி-ரெஜினால்ட் 19) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதாகியுள்ள ரெஜினால்ட் தோஷா வீட்டிற்கு அருகில் தான் வசித்துள்ளான்.

No comments:

Post a Comment