23 April, 2011

இந்த ஆண்டின் உலகின் சிறந்த காராக நிசான் லீப் தேர்வு

நியூயார்க் நகரில் சர்வதேச கார் கண்காட்சி நடந்து வருகிறது. இதில், பல்வேறு அம்சங்கள் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஆண்டிற்கான சிறந்த கார்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டன.

இதில், நிசான் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய லீப் எலக்ட்ரிக் கார் இந்த ஆண்டின் சிறந்த காராக அறிவிக்கப்பட்டது. எலக்ட்ரிக் காராக இருந்தாலும், செயல்திறனில் சிறப்பாக இருப்பதால் இந்த ஆண்டிற்கான சிறந்த காராக லீப் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment