02 August, 2011

கச்சத்தீவில் தேசியக்கொடி ஏற்றுவோம் பொன். ராதாகிருஷ்ணன்!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை இனிமேலும் தாக்குதல் நடத்தினால் கச்சத்தீவில் இந்திய தேசியக்கொடியை ஏற்றப்போவதாக பாஜக தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மீனவர்களை தாக்குவதை கண்டித்து ராமேஸ்வரத்தில் பா.ஜ., சார்பில் கடல் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இதன் பிறகும் இலங்கை தமிழக மீனவர்களை தாக்கினால் கச்சத்தீவில் தேசிய கொடி ஏற்றுவோம். தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு பா.ஜ., சார்பில் கண்டனம் தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினார்.

No comments:

Post a Comment