08 August, 2011

அதிகளவில் தங்கம் வைத்திருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில்!

 உலகளவில் அதிகளவில் தங்கம் வைத்திருக்கும் நாடுகளில் சீனா 6வது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை சீனாவில் உள்ள தங்கத்தின் அளவு 1051.1 டன் ஆகும். உலக தங்க கழக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் உள்ள மொத்த தங்கத்தில் எட்டில் ஒரு பங்கு ஆகும். இப்பட்டியலில் 8133.5 டன் தங்கத்துடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. 3406.8 டன் தங்கத்துடன் ஜெர்மனி 2வது இடத்திலும், 3005.3 டன் தங்கத்துடன் இத்தாலி 3வது இடத்திலும், 2435.4 டன் தங்கத்துடன் பிரான்ஸ் 5வது இடத்திலும் உள்ளது. 

No comments:

Post a Comment