17 August, 2011

விண்வெளியில் ஓட்டல் அமைக்க ரஷ்யா திட்டம்!

விண்வெளியில் செயற்கை முறையில் ஓட்டல் ஒன்றை நிர்மாணிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. பூமியிலிருந்து 217 மைல்கள் உயரே அமையவிருக்கும் இந்த ஓட்டலில் ஒரு நேரத்தில் 7 பேர் தங்கும் வகையில் நான்கு அறைகள் மற்றும் பூமி கீழே சுற்றுவதை எளிதாக பார்க்கும் வகையில் அமைந்த பெரிய ஜன்னல்கள் ஆகியவை இடம் பெறும். ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் உதவியுடன் 2 நாட்கள் பயணம் செய்து இதனை அடையலாம். விண்வெளி சுற்றுலா செல்ல விரும்பும் பணக்காரர்கள், விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்வோர் ஆகியோருக்கு ஏற்ற வகையில் உருவாகும்.

இதில் 5 நாட்கள் தங்குவதற்கு 1 லட்சம் முதல் 5 லட்சம் பவுண்டுகள் வரை செலவாகும். மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரியும் விண்வெளி வீரர்கள் அவசர காலத்தில் பூமிக்கு திரும்புவதற்கு பதிலாக தங்குமிடமாகவும் இந்த ஓட்டல் இருக்கும். இதனை ஆர்பிடல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் உருவாக்குகிறது. வரும் 2016-ம் ஆண்டிற்குள் இதன் பணிகள் முடிவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment