சத்தியமங்கலம் காட்டில் புலிகளின் எண்ணிக்கை உயர்வு!
சத்தியமங்கலம் காட்டில் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக, ஈரோடு மாவட்ட
வனப் பாதுகாப்பு அதிகாரி அருண் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது
குறித்து ஈரோடு மாவட்ட வனப் பாதுகாப்பு அதிகாரி டி.அருண் கூறியதாவது, கடந்த
2 ஆண்டுகளில் சத்தியமங்கலம் காட்டில் புலிகளின் எண்ணிக்கை 10ல் இருந்து
18ஆக உயர்ந்துள்ளது. இது 2009 ஆண்டுடன் ஒப்பிடுகையில், 8 புலிகள் அதிகம்.
ஈரோடு
மாவட்டத்தில் வனப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருவதால் தான் வனவிலங்குகளின் எண்ணிக்கை வெகுவாக
உயர்ந்துள்ளது. அண்மையில் நடந்தப்பட்ட கணக்கெடுப்பின்படி,
சத்தியமங்கலத்தில் 785 யானைகளும், 564 காட்டெருமைகளும், 18 புலிகளும்
உள்ளது.
மேலும், குடியிருப்பு பகுதிகளிலும், விளை நிலங்களிலும்
யானைகள் புகுந்து நாசப்படுத்துவதை தவிர்க்க உரிய முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொண்டு வருகின்றது, என்றார்.
No comments:
Post a Comment