23 August, 2011

ஊழலுக்கு எதிராக ரத்தமில்லா புரட்சி ஹசாரேக்கு ரஜினிகாந்த் ஆதரவு!


அன்னா ஹசாரே போராட்டத்தை ஆதரிக்கிறேன். எனக்கு உடல்நிலை சரி இல்லாமல் உள்ளது. இல்லையேல் டெல்லி சென்று அன்னா ஹசாரே போராட்டத்தில் கலந்து கொண்டு இருப்பேன். அரசியல்வாதிகள் லோக்பால் மசோதாவை சீக்கிரத்தில் நிறைவேற்ற விடமாட்டார்கள். ஹசாரே உறுதியாக இருந்து இதை செயல்படுத்த வேண்டும்” என்றார்.
 
இப்போது அன்னா ஹசாரே, போராட்டம் நாடு முழுவதும் தீவிரம் அடைந்துள்ளதால் ஊழல் எதிர்ப்பு இயக்கத்துக்கு அளிக்கும் ஆதரவை உறுதி செய்து இன்று ரஜினிகாந்த் மீண்டும் அறிக்கை வெளியிட்டார்.
 
அதில் கூறி இருப்பதாவது:-  இந்திய சமுதாயத்தில் இன்று ஊழல் ஒரு கடும் நோய் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. ஊழலுக்கு எதிரான இந்த போராட்டத்தில் அன்னா ஹசாரே போன்ற ஒரு மாபெரும் தலைவர் கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஜன் லோக்பால் பாராளுமன்றத்தில் சட்டமாக்க எடுத்துக்கொண்டுள்ள இந்த பணியினை நான் மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்.  
 
இந்த ரத்தமில்லாத ஒரு புரட்சியில் பங்கு கொண்ட எல்லா இந்தியர்களையும் நான் வாழ்த்துகிறேன். அமைதியான இம்மாதிரியான போராட்டம், சத்தியாககிரகத்தின் பிறப்பிடமான, இந்தியாவில் மட்டும்தான் நடக்க முடியும். இந்தியன் என சொல்லி கொள்வதில் நான் பெருமை கொள்கிறேன்.
 
இவ்வாறு அறிக்கையில் 

No comments:

Post a Comment