15 August, 2011

மங்காத்தா இம்மாதம் 30-ம் தேதி ரிலீஸ்!


அஜீத்தின் 50-வது படம் என்பதால் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மங்காத்தா படம் பற்றி வெங்கட்பிரபு கூறியதாவது:-
"மங்காத்தா" படத்தில் அஜீத் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். 5 முக்கிய கேரக்டர்கள் உள்ளன. அதில் 4 பேர் கெட்டவர்கள். 5-வது ஆள் ரொம்ப கெட்டவன். அந்த கேரக்டரில் அஜீத் வருகிறார்.  எனது படங்களின் கதை சுருக்கம் கிரிக்கெட்டுக்கும் தொடர்பு இருக்கும். "சென்னை 28-ல் பசங்களோட ஏரியா கிரிக்கெட்டை சொன்னேன். "சரோஜா"வில் கிரிக்கெட் போட்டி பார்க்க போனவர்கள் கதையை சொன்னேன். "மங்காத்தா"வில் கிரிக்கெட் பின்னால் உள்ள சூதாட்டங்களை சொல்லி உள்ளேன்.
அஜீத்துக்கு பிடித்தமான மோட்டார் சைக்கிள் ரேசையும் படத்தில் சேர்த்துள்ளோம்.   இந்த படத்தின் பாடல்களை யுவன்ஷங்கர்ராஜா பிரமாதமாக கொடுத்துள்ளார். ஹாலிவுட் நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியமான கெட்டப்பில் வெள்ளை முடியோடு அஜீத் வருகிறார்.  வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. இம்மாதம் இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு வெங்கட் பிரபு 

No comments:

Post a Comment