15 August, 2011

திருச்சி ஆர்.டி.ஓ.வுக்கு கல்பனா சாவ்லா விருது!


பல்வேறு துறைகளில் சிறப்பான சாதனை புரிந்தவர்களுக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று சுதந்திர தின விழாவில் விருதுகளை வழங்கினார். துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை திருச்சி ஆர்.டி.ஓ. சங்கீதா பெற்றார்.
 
இவருக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையும், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்கப் பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தொண்டாற்றிய ஆவடியை சேர்ந்த டாக்டர் துரைசாமி, திருச்சி மன்னார்புரம் விழிஇழந்த மகளிர் மறுவாழ்வு இல்லத்தை சேர்ந்த பிரியாதியோடர், பாளையங்கோட்டை பிஷப் ஜார்ஜன்ட் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி சார்பில் அதன் தலைவர் சந்திரசேகரன், அதிக அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்த திருச்சி தனியார் நிறுவனத்தை சேர்ந்த பொன்னுதுரை, தேனி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி, வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் தேன் மொழி ஆகியோருக்கு பதக்கம், சான்றிதழ், ரூ.50 ஆயிரம் காசோலை ஆகியவை வழங்கப்பட்டது.
 
மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனங்களான வேலூர் மாவட்டம் அரியூர் கிராம வளர்ச்சி தொண்டு நிறுவன தலைவர் மணியன் புதுக்கோட்டை ரெகோ திட்ட இயக்குனர் பரிபூரணலில்லி ஆகியோருக்கும் பதக்கம், சான்றிதழ், காசோலை ஆகியவை வழங்கப்பட்டன. 

No comments:

Post a Comment