22 September, 2011

மாயாவதி கட்சி எம்.எல்.ஏ. மீது சி.பி.ஐ கற்பழிப்பு வழக்கு!

உத்தரபிரதேச மாநிலத்தில் 17 வயது மைனர் பெண் கற்பழிப்பு வழக்கில், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் , 17 வயது மைனர் பெண்ணை கற்பழித்ததாக பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. புருஷோத்தம் திவேதி 48 என்பவர் மீது புகார் எழுந்தது. எனினும் அரசியல் செல்வாக்கினால் தப்பித்தார். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரி சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கடந்த 12-ம் தேதி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டது. இதன்படி எம்.எல்.ஏ. புருஷோத்தம் உள்பட 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment