14 September, 2011

`பழங்களின் ராஜா'


தமிழர்களின் முக்கனிகளுள் முதலாவதான மாம்பழத்திற்கு `பழங்களின் ராஜா' என்ற பெயரும் உண்டு. இனிப்பு சுவை அதிகம் கொண்ட மாம்பழத்தில் காணப்படும் `ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ்', இருதய நோய், விரைவில் முதுமை அடைவது மற்றும் புற்று நோய் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சேதமடையாமல் பாதுகாத்து, அவற்றை சீராக வைத்துக்கொள்கிறது.
 
அதோடு மாம்பழத்தில் இரும்புச் சத்து மிக அதிகம் காணப்படுகிறது. அதனால் ரத்த சோகை உள்ளவர்கள் இதை சாப்பிடுவது நல்லது. அதேநேரம், இந்த பழத்தை அதிக அளவில் சாப்பிடக்கூடாது. பல மருத்துவ குணங்களும் மாம்பழத்திற்கு உண்டு.
 
சருமம் வறட்சியாக காணப்பட்டாலோ அல்லது செதில் செதிலாக உதிர்ந்து காணப்பட்டாலோ மாம்பழத் துண்டுகளை அந்த இடத்தில் சுமார் 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின்னர் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். 

No comments:

Post a Comment