20 September, 2011

இயற்கைக்கு மாறான செக்ஸ் கணவனை கொன்ற மனைவி !


இயற்கைக்கு மாறான முறையில் செக்ஸ் உறவு கொள்ள மனைவியை வற்புறுத்திய கணவனின் தலையில் கல்லால் அடித்து கொலை செய்த பெண் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். மத்திய பிரதேச மாநிலம் பித்தல் மாவட்டத்தில் உள்ள சார்னி நகரில் வசித்து வந்தவர் ராம்சந்திரன். இவரது மனைவி அனிதா (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராம்சந்திரன் விகாரமான செக்ஸ் உறவு கொள்வதில் அதிக விருப்பம் கொண்டவர்.

ராம்சந்திரனின் மொபைல்போனில் இருந்த சில இயற்கைக்கு மாறான செக்ஸ் உறவு முறை காட்சிகளை காட்டி அதை போல உறவு கொள்ள மனைவியை வற்புறுத்தியதாக தெரிகிறது. இதற்கு சம்மதிக்காத அனிதாவை அடித்த துன்புறுத்தி உள்ளார். இந்நிலையில் நேற்றும் இயற்கைக்கு மாறாக உறவு கொள்ள வருமாறு அனிதாவை, ராம்சந்திரன் வற்புறுத்தி உள்ளார்.

வழக்கம் போல அதற்கு அனிதா சம்மதிக்கவில்லை. இதையடுத்து அனிதாவை அடித்து துன்புறுத்திய போது அவரிடமிருந்து தப்ப அருகில் கிடைத்த கல்லால் ராம்சந்திரன் தலையில் கோபம் தீர தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராம்சந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதன்பின் கணவனை கொலை செய்ததாக கூறி, அருகில் உள்ள பத்தக்ஹீடா போலீஸ் நிலையத்தில் குழந்தைகளுடன் சென்ற அனிதா சரணடைந்தார். ராம்சந்திரன் தன்னை துன்புறுத்திய முறைகளை விளக்கும் மொபைல் படங்களையும் அனிதா, போலீசாரிடம் சாட்சிக்காக ஒப்படைத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராம்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment