04 October, 2011

காரில், பார்க்கில், பாத்ரூமில்... 'செக்ஸ்!


நியூயார்க்கில் செக்ஸ் குறித்த ஒரு சர்வேயை எடுத்துள்ளனர். அதில் பல நூதனமான, வித்தியாசமான விவரங்கள் கிடைத்துள்ளதாம். வழக்கமாக எல்லோரும் படுக்கை அறையில்தான் செக்ஸ் வைத்துக் கொள்வார்கள். இதுதான் இயல்பானது. ஆனால், இந்த சர்வேயில் கிடைத்துள்ள தகவல்கள் வியப்பளிப்பதாக உள்ளது.

சர்வேயில் மொத்தம் 500 பேர் கலந்து கொண்டு தாங்கள் எங்கெல்லாம் செக்ஸ் உறவை வைத்துக் கொள்வோம் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 46 சதவீதம் டாக்சியின் பின்பக்க டிக்கியில் உறவு வைத்துக் கொள்வோம் என்று கூறியுள்ளனர். 31 சதவீதம் பேர் காரில் வைத்துக் கொள்வதாகவும், 18 சதவீதம் பேர் பார்க்கில் என்றும், 9 சதவீதம் பேர் பொதுக் கழிப்பறைகள் மற்றும் பாத்ரூம்களில் என்றும் பதிலளித்துள்ளனர்.

ப்ரூக்ளினைச் சேர்ந்த 29 வயதுப் பெண் ஒருவர் கூறுகையில், நானும், எனது துணையும் எப்போதுமே பொது கழிப்பறை மற்றும் பாத்ரூமில்தான் உறவு கொள்வோம். ஒருமுறை ரெஸ்டாரென்ட் ஒன்றுக்குச் சென்றோம். நேராக பாத்ரூமுக்குப் போனோம், அங்கு செக்ஸ் வைத்துக் கொண்டோம். பின்னர் கிளம்பிப் போய் விட்டோம். ஒரு கூல் டிரிங்ஸ் கூட சாப்பிடவில்லை என்றாராம். சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 43 சதவீதம் பேர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொள்வதை விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 55 சதவீதம் பேர் குரூப் செக்ஸில் தவறில்லையே என்று தெரிவித்துள்ளனர்.

மன்ஹாட்டனைச் சேர்ந்த 52 வயது நபர் கூறிய தகவல் 'கிரேஸி'யாக இருந்தது. நானும், எனது கேர்ள் பிரண்ட்டும் டின்னருக்கு ஒரு ரெஸ்டாரென்ட்டுக்குப் போயிருந்தோம். அங்கு சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினோம். பின்னர் இருவரும் செக்ஸ் வைத்துக் கொண்டோம். அதை முடித்து விட்டு நான் மீண்டும் ரெஸ்டாரென்ட் வந்தேன். அங்கு நாங்கள் சாப்பிட்ட டேபிளின் பொறுப்பாளராக இருந்த சர்வர் பெண்ணை அப்போதே நான் கண் வைத்து விட்டேன். அவரிடம் போய் செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டன், அவரும் ஓ.கே. சொன்னார். பின்னர் அதே இரவில் அவருடனும் உறவு கொண்டேன் என்று கூறியுள்ளார்.

சர்வேயில் பங்கேற்றவர்களில் கிட்டத்தட்ட 69 சதவீதம் பேர் முரட்டுத்தனமான காதலில் தாங்கள் ஈடுபடுவதாக கூறுகின்றனர். அதாவது உண்மையான அன்பு, நேசம், காதல் என்றில்லாமல், உறவுக்காக மட்டுமே தாங்கள் பெண்கள் அல்லது ஆண்களை நாடுவதாக அவர்கள் கூறியுள்ளனர். 15 சதவீதம் பேர் தீவிர காதலில் தாங்கள் இன்னும் ஈடுபடவில்லை என்றும், ஆனால் வாய்ப்பு கிடைக்கும்போது முயற்சிப்போம் என்றும் கூறியுள்ளனர்.

சரி இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் மற்றும் அவரது தங்கை பிப்பா மிடில்டன் ஆகியோரில் யார் மிகவும் கவர்ச்சிகரமானவர்கள் என்று கேட்டபோது, 55 சதவீதம் பேர் பிப்பா மிடில்டனையும், 45 சதவீதம் பேர் கேட் மிடில்டனையும் கூறியுள்ளனர். செக்ஸ் உறவு என்பது மோசடியாக உள்ளதா என்ற கேள்விக்கு 69 சதவீதம் பேர் ஆம் என்றும் 30 சதவீதம் பேர் அப்படியெல்லாம் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
இவர்களையெல்லாம் இந்தியாவில் ஒரு மாதம் தங்க வைத்தால் செக்ஸ் குறித்த இவர்களது பார்வையில் நிறைய 'மாற்றங்களை' உணர்வார்கள் என்று நம்பலாம்.

No comments:

Post a Comment