|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 November, 2013

டயர் வாங்கும்போது...

உதாரணமாக, (35PSI)MAX PRESS என்று ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீட்டு எழுத்துக்கள் அந்த டயரின் அதிகபட்ச காற்றின் அழுத்த அளவை குறிக்கும். அதற்கு மேல் காற்றின் அழுத்தம் இருக்கக் கூடாது. அடுத்ததாக, 215/65R14 89H M+S என்று கொடுக்கப்பட்டிருந்தால், அதில், 215 என்பது அந்த டயரின் அகல அளவு மில்லிமீட்டரில் குறிக்கப்படுகிறது. அடுத்து 65 என்று குறிக்கப்பட்டிருக்கும் எண்கள் அந்த டயரின் பக்கவாட்டு உயரத்தை குறிக்கும். R என்ற ஆங்கில எழுத்து ரேடியல் டயர் என்பதை குறிக்கும். இதுதவிர, சாதாரண டயர்கள் B மற்றும் D ஆகிய ஆங்கில எழுத்துக்களில் குறிக்கப்பட்டிருக்கும். 14 என்ற எண்கள் டயரின் உள் விட்டம் அல்லது ரிம் அளவை குறிக்கிறது. அடுத்து 89 என்று குறிக்கப்பட்டிருந்தால், அந்த டயர் அதிகபட்சம் 580 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டது. அடுத்து இந்த வரிசையில் கடைசியில் குறிக்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்து அந்த டயர் அதிகபட்சமாக செல்லும் வேகத்தை குறிக்கும். உதாரணமாக, H என்ற ஆங்கில எழுத்து குறிக்கப்பட்டிருந்தால் அந்த டயர் அதிகபட்சம் மணிக்கு 210கிமீ வேகத்தில் செல்வதற்கு லாயக்கானது என்று அர்த்தம்.
 
(டயர் வேக அளவின் குறியீட்டு எழுத்துக்கள் விபரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், M+S என்று குறிக்கப்பட்டிருந்தால், சேறு மற்றும் பனி படர்ந்த சாலைகளில் செல்ல ஏதுவானது என்றும், அனைத்து கால நிலைகளுக்கும் ஏற்றது என்று பொருள் கொள்ளலாம். இதேபோன்று, ஓல்டு ஸ்டாக் டயரை கண்டுபிடிப்பதற்கும் வழி இருக்கிறது. டயரில் ஆங்கிலத்தில் DOT GHYT 1212 என்று குறிக்கப்பட்டிருந்தால் அதில், கடைசியில் வரும் முதல் 12 என்ற எண்கள் 12வது வாரத்தையும், இரண்டாவது 12 எண்கள் 2012ம் ஆண்டையும் குறிக்கும். அதாவது, மார்ச் மாதம் 2012ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட டயர் என்று அர்த்தம். மேலும், இதில் GHYT என்ற எழுத்தில் முதல் இரண்டு ஆங்கில எழுத்துக்கள் தயாரிப்பு நிறுவனத்தின் குறியீடு, அடுத்த இரு எழுத்துக்கள் அந்த டயரின் தயாரிப்பு குறியீடு. எதிர்காலத்தில் டயரில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், குறிப்பிட்ட இந்த எழுத்துக்களை அடிப்படையாக கொண்டு திரும்ப பெறப்படும். டயரின் ஆங்கில எழுத்து குறியீடும் அதன் அதிகபட்ச வேக திறன் விபரம்: M- 130 Kmph P-150 Kmph Q-160 Kmph R-170 Kmph S-180 Kmph T - 190 Kmph H - 210 Kmph V - 240 Kmph W - 270 Kmph Y - 300 Kmph ZR - over 240 Kmph

மனிதாபிமானத்தையும் சேர்த்து காக்க முன் வாருங்கள்.

சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு, மறந்துபோன மனிதாபிமானமும் ஒரு காரணமாகியுள்ளது. புற்றீசல் போல பெருகி வரும் வாகனங்களுக்கு தக்கவாறு விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சாலை விபத்து செய்தி இல்லாத நாளிதழ்களே என்று கூறும் அளவுக்கு மோசமான நிலை உருவாகியுள்ளது. ADVERTISEMENT சாலை விபத்தில் சிக்கி ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பாதிப்படைவர்களை உரிய நேரத்தில் உதவி கிடைக்காததும் முக்கிய காரணம். துடிதுடிப்பவர்களை ஒரு சில நொடிகள் நின்று வேடிக்கை பார்த்து விட்டு கண்டும் காணாமல் செல்லும் மனப்போக்கு அதிகரித்துள்ளது. இதுவே பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு காரணமாகிறது. விபத்துக்கள் எதிர்பார்த்து நடப்பது இல்லை. எனவே, சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு ஒவ்வொரு வினாடியும் மிக முக்கியமானது என்பதை உணர்ந்து விபத்தில், பாதிக்கப்படுவர்களுக்கு அலட்சியம் காட்டாமல் உதவி செய்யுங்கள். 
 
 பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளித்தவுடன் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல உதவுங்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதும் அவசியம். உரிய நேரத்தில் நீங்கள் செய்யும் உதவி ஒரு உயிரை காப்பாற்றப் போகிறது என்பதை மனதில் வைத்து யோசிக்காமல் களத்தில் இறங்குங்கள். மேலும், அவசர வேலை, முக்கிய வேலை என்று யோசிக்காதீர். ஒரு உயிரை காப்பாற்றுவதை விட இந்த உலகில் வேறு அவசர வேலை எதுவும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் என்று அலைய வேண்டியிருக்கும் என்று அச்சப்பட வேண்டாம். தற்போது விபத்தில் சிக்குபவர்களை மருத்துவமனையில் உடனே அனுமதிக்க சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சட்டத்தில் பல தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் உதவி செய்ய முன்வரும்போது அடுத்தவர் யோசிக்காமல் முன் வருவார். எனவே, விபத்தில் சிக்கி துடிதுடிப்பவர்களின் உயிரை மட்டுமல்ல, மறந்துபோன மனிதாபிமானத்தையும் சேர்த்து காக்க முன் வாருங்கள்.

22 November, 2013

ஓட்டுப்போட்டுருவேன்..


'முள்ளிவாய்க்காலோடு முடிந்தது திமுக; முற்றத்தோடு முடிந்தது அதிமுக'

முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவரை தமிழக அரசு கட்டித்தரக் கோரி சென்னை ஜெமினி மேம்பாலத்தை மறித்து மாணவர்கள் பூட்டுப்போட்டு போராட்டம் நடத்தினர். 'முள்ளிவாய்க்காலோடு முடிந்தது திமுக; முற்றத்தோடு முடிந்தது அதிமுக' தஞ்சாவூரில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் பகுதியை தமிழக அரசு மீண்டும் கட்டித்தர வலியுறுத்தியும், வழக்குப் பதிவு செய்யப்பட்ட பழ.நெடுமாறன் உள்ளிட்டவர்களின் மீதான வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தியும் மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். அவர்கள் ஏந்தி வந்த பதாகைகளில் "முள்ளிவாய்க்காலோடு முடிந்தது திமுக; முள்ளிவாய்க்கால் முற்றத்தோடு முடிந்தது அதிமுக" என எழுதப்பட்டிருந்தது.

20 November, 2013

786 மற்றும் ஓம்

அதிர்ச்சி தரும் சில விஷயங்கள்.....

அரிதிலும் அரிதாக தேடலில் கிடைத்த சில செய்திகள்..... நம்ப முடியவில்லை.... ஆனால் நம்பாமல் இருக்க போதிய ஆதாரம் இல்லை.இது யாருடைய மனதைடும் புண்படுத்தவோ ஒப்பு நோக்கவோ நான் பெரியவன், நீ சிறியவன் என எண்ணியோ, என் மதம் பெரிது உன் மதம் பெரிது என்று எண்ணியோ இடப்பட்டதல்ல. சர்ச்சைக்குரிய விஷயம் ஆதலால், இதை நம்புவதும் நம்பாததும் அவரவரிடமே விட்டு விடுகிறேன்.

அதிர்ச்சி எண் 1

இஸ்லாமியர்களின் புனித எண் 786 என்பது பிரம்மி எழுத்துக்களில் ஓம் என்பதையே குறிக்கிறது.

அதிர்ச்சி எண் 2

காபா எனும் புனிதக் கல் இந்துக்களின் சாளக்கிராமம் எனும் புனித வகையைச் சேர்ந்தது.

அதிர்ச்சி எண் 3

இஸ்லாமியர்களின் தொழுகை சம்ஸ்கிருத வேதத்தில் சொல்லப் பட்ட தொழுகை முறையை ஒத்து இருக்கிறது.

அதிர்ச்சி எண் 4

புனிததலத்தில் இறை வழிபாடு செய்யும் முறை இந்துக்களைப் போன்றே பூணுல் வடிவில் இட்ட மேல் துணியும், பின்னர தலை முடி காணிக்கையும் ஒன்றாகவவே உள்ளது. மேற்கூறிய அனைத்தையும் வலைத்தளங்களில் நிறைய விளக்கங்களுடன் பலர் எழுதி இருக்கிறார்கள். படித்துப் பார்த்த எனக்கு தலை சுற்றுகிறது. இதில் உண்மை உள்ளதா இல்லையா என மத குருமார்கள் மட்டுமே விளக்க முடியும்...

Bangalore - Attack on women inside ATM


18 November, 2013

பார்த்ததில் பிடித்தது

 

மரபைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை

ந்தக் கூட்டணியும் ரொம்ப நாள் நீடிப்பதில்லை. உண்மைதான்! எலும்பு, நரம்பு, சதை... இப்படி உதிரிக் கட்சிகள் 'உயிர்’ என்கிற தனிக் கட்சியுடன் வைத்திருக்கும் கூட்டணிதான் நாம். நாம் எவ்வளவு நாள் நீடிக்க முடியும்?உடம்பையும் உயிரையும் பிரித்து, இந்தக் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க, 'மரணம்’ என்கிற எதிர்க்கட்சி தவியாகத் தவிக்கிறது. எப்படியும் ஜெயிக்கிறது! ஆனால், மரணம் ஜெயிக்கிற வரை, உடம்பு ப்ளஸ் உயிர் கூட்டணி ஆட்சி நடக்கத்தான் செய்கிறது! இந்தக் கூட்டணி ஆட்சிக்கு - அதாவது, மனிதனுக்கு ஏதாவது ஒரு பேர் வைக்க வேண்டியுள்ளது!

ராமசாமி, கிருஷ்ணசாமி, பிரமிளா, ஜானகி... இப்படி ஏதாவது பெயர் வைத்தாக வேண்டி உள்ளது. பெயர் வைக்காமல், காருக்கு நம்பர் பிளேட் போடுகிற மாதிரி மனித ஜென்மங்களுக்கு நம்பர் போட முடியாது! இந்துக்கள் கெட்டிக்காரர்கள். பரப்பிரம்மமாகிய கடவுள்தான், இப்படி மனித வடிவத்தில் பிறந்து, வாழ்க்கை நாடகம் நடத்துகிறார் என்று முடிவு கட்டி, 'பரம்பொருளுக்குப் பெயர் வைக்கிறோம்’ என்ற எண்ணத்தில், இறைவன் நாமாக்களையே பெயர்களாக வைத்தனர். விஷ்ணு சகஸ்ரநாமத்திலும் லலிதா சகஸ்ரநாமத்திலும் உள்ள பெயர்களைச் சூட்டும் வழக்கம் பல குடும்பங்களில் உண்டு. பகவானின் நாமத்தை உச்சரிக்க, இதுவும் ஒரு வாய்ப்பு என்ற எண்ணத்தால் செய்தவர்கள் சிலர். 'மனிதன் பரப்பிரம்மத்தின் துளி’ என்று உணர்ந்து செய்தவர்கள் சிலர்.

இப்போதெல்லாம் கதை மாறிவிட்டது! 'பப்லு, ஷம்மி’ என்று நாகரிகமாக நாய்க்குட்டிகள் மாதிரி பெயர் வைத்தால்தான் பலருக்குப் பிடிக்கிறது.முன்பெல்லாம் ஒருவர் பெயர் சொன்னால், உடனே நட்சத்திரம் சொல்லிவிடலாம். சு, சே, சோ - என்கிற எழுத்துக்களில் பெயர் ஆரம்பமானால் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்திருப்பார். அ, இ, உ, எ - என்றால் கிருத்திகை. தி, து, தெ, தொ - என்றால் விசாகம் என்று ஒரு பட்டியல் உண்டு.
முன்பு பல குழந்தைகள் பெற்றதால், எல்லா தாத்தா, பாட்டி பெயர்களையும் வைக்க வசதியாக இருந்தது. இப்போது ஒன்றிரண்டு என்பதால், எந்த தாத்தா, பாட்டி பேர் என்பது முதல் பிரச்னை! தாத்தா, பாட்டி பேர் வைத்தால், ஏன்  வைத்தாய் என்று குழந்தைகள் வளர்ந்ததும் படுபிரச்னை.

ஆண் குழந்தைக்கு 'சிவசாமி’ என்று தன் அப்பா பேர் வைக்க, தகப்பனார் ஆசைப்பட்டார். 'கிருஷ்ணசாமி’ என்ற தன் அப்பா பேர் சூட்ட, மனைவி ஆசைப்பட்டார். ஆசை, சண்டை வரை போனது. எதிர்வீட்டுக்காரர் உள்ளே வந்தார். பிரச்னைக்குத் தீர்வு சொன்னார். 'சிவராமகிருஷ்ணன் என்று பேர் வைத்தால் சிவசாமி, கிருஷ்ணசாமி இரண்டு சாமியும் வந்துவிடுவார்கள்!’ என்றார். ஒரே சந்தோஷம்! ஒரு வாரம் கழித்து கணவன் - மனைவி பேசிக்கொண்டிருந்தபோது, 'சிவராமகிருஷ்ணன்’ என்ற பேரைப்பற்றி ஆராயத் தொடங்கினார்கள்.

''சிவசாமி எங்க அப்பா. கிருஷ்ணசாமி உங்க அப்பா. நடுவுல ராமசாமி வந்துட்டாரே? அவரு...'' என்று கணவர் இழுத்தார்.''அதுவா... ராமசாமி, எங்க அப்பா!'' என்று எதிர் வீட்டுக்காரர் உள்ளே வந்தார்.ஒரு குழந்தைக்கு யார் பேர் வைக்கலாம்? அப்பா-அம்மா பேர் வைக்கலாம். அல்லது அப்பா-அம்மாவைப் பெற்ற அவர்கள் அப்பா-அம்மா பேர் வைக்கலாம். அல்லது அவர்கள் ஸ்தானத்தில் இருக்கிற மாமா, பெரியப்பா, சித்தப்பா பெயர் சூட்டலாம். கண்டவனும் பெயர் வைக்கலாமோ?

பெற்றவர்களைத் தவிர வேறு யார் பேர் வைக்கலாம் என்றால், அவர்களின் குரு, குலகுரு, ஆச்சார்யர்களுக்கு இந்த உரிமை உண்டு.உயிர் அல்லது ஆன்மாவை நமக்குப் புரிய வைப்பவர் குரு, ஆச்சார்யர். 'உயிர் இறைவனே’ என்று உணர்த்தி, முக்திக்கு வழிகாட்டும் குரு, இந்தக் கூட்டணிக்குப் பெயர் வைக்கத் தகுதி உடையவர்.உடம்பு ப்ளஸ் உயிர் சேர்ந்த கூட்டணிக்கு, உடம்புக்கு உரிமை உடைய பெற்றோர் அல்லது உயிருக்கு உடைமை உடைய குரு... இவர்கள்தான் பெயர் வைக்கலாமே ஒழிய, தெருவில் போகிற, வருகிறவர் எல்லாம் பெயர் வைப்பது நல்ல கலாசாரமாகத் தோன்றவில்லை.
ராமாயணத்தில் ராமனுக்குப் பேர் வைத்தவர் யார் தெரியுமோ? வசிஷ்டர். பரதன், லட்சுமணன், சத்ருக்னன் என்று தசரதன் பிள்ளைகளுக்குக் குலகுரு வசிஷ்டர்தான் பேர் வைத்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது? அரசியல் தலைவனுக்குக்கூட குருதான் பேர் வைக்க வேண்டும் என்று தெரியவில்லையா?

இராமன் எனப் பெயர் ஈந்தான்...
பரதன் என்று பன்னினான்...
இலக்குவன் என்று இசைத்தனன்...
சத்ருகனன் என்று சாற்றினான்...
என்கிறது கம்ப ராமாயணம்.

நான்கு வேதம் மாதிரி பிறந்த நான்கு அரச குடும்பத்துத் தலைவர்களுக்கும் நான்மறை பயின்ற குலகுரு வசிஷ்டர் பேர் வைத்தார். அதனால்தான், இன்றுவரை அந்தப் பெயர்கள் நிலைத்து நின்றுள்ளன.ஞானம், தவம், சீலம், நிறைநலம் மிக்க குருமார்கள், பிறந்த சிசுக்களைத் தீண்டி, செவிவழி உரக்கச் சொல்லி, உடம்பும் உயிரும் சேர்ந்த கூட்டணிக்குப் பெயர் வைக்கும் பாரத மரபைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.


Summa News


14 November, 2013

சக்கர இனிக்கிற சக்கர

நவம்பர் 14, 2013 உலக நீரிழிவு நாள்

நீரிழிவு நோய் -  21-ம் நூற்றாண்டின் மனித இனத்துக்கே சவால் விடும் ஒரு சுகாதாரம் மற்றும் சமூகவியல் சார்ந்த பிரச்னையாக உருவெடுத்துள்ளது.கடந்த 1922-ம் ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ் பெஸ்ட் என்பவருடன் இணைந்து நீரிழிவு நோயாளிகளின் உயிர் காக்கும் இன்சுலினைக் கண்டுபிடித்தார். பொதுமக்களிடையே நீரிழிவைப் பற்றிய விழிப்பு உணர்வை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பன்னாட்டு நீரிழிவு நோய் கூட்டமைப்பும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து, ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க்கின் பிறந்தநாளை உலக நீரிழிவு தினமாக அறிவித்தது.

ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் மற்றும்  சார்லஸ் பெஸ்ட் அதன்படி, உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14-ம் நாள் 'உலக நீரிழிவு தினமாக' அனுசரிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி, தற்போது உலக அளவில் 346 மில்லியன் பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்தியாவில் நீரிழிவின் பாதிப்பு மிக அதிகம். எவ்வளவு தெரியுமா? 62.4 மில்லியன்.மேலும், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் 77.2 மில்லியன் பேருக்கு நீரிழிவு பிரச்னை வரக்கூடிய வாய்ப்பு உள்ளதாம்.

இந்தியாவின் ரன் மெஷின்!

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் கிரிக்கெட், ஒரே ஒருவரால்தான் அதிகம் நேசிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஒருவர்... சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். இவரின் கிரிக்கெட் சகாப்தம் இதோ முடிவுக்கு வருகிறது!மும்பை, வான்கடே மைதானத்தில் தனது 200-வது டெஸ்ட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிவிட்டு, கிரிக்கெட்டில் இருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வு எடுக்கவிருக்கிறார் சச்சின். இனி இந்தியக் கிரிக்கெட்டை, சச்சினுக்கு முன் - சச்சினுக்குப் பின் என்றே குறிப்பிடலாம்.

05 November, 2013

படம் பார்க்க வந்தவங்கள பழி வாங்குது


நண்பன் ஒருத்தன் திபாவளிக்கு வந்த 3 படமும் பார்த்துட்டான் 3 படத்துக்கும் ஒரு வரில ஒரு விமர்சனம் சொன்னான்.நண்பன கொன்னவன பழிவாங்குறது ஆரம்பம். அண்ணன்ன கொன்னவன பழிவாங்குறது பாண்டியநாடு,  படம் பார்க்க வந்தவங்கள பழிவாங்குவது  இந்த ஆல் இன் ஆல்அழகுராஜா  படம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...