|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 September, 2013

இந்த உலகம் இன்னுமாட நம்மள நம்புது!


இது உங்களுடைய தவறு!


சட்டப்பூர்வமாக பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதி பெற்றவர்கள் இங்கே நடமாடிக் கொண்டிருக்கும்போது பாலியல் பலாத்காரத்துக்கு, பெண்கள் ஆளாவது யாருடைய தவறு?. இது  உங்களுடைய தவறு!பாலியல் பலாத்காரத்தில் செய்ய ஒருவர் வந்தால்,. 'அண்ணா... ப்ளீஸ் அண்ணா.. விட்டுடுங்க' என்று சொல்லிப் பாருங்கள்... 'ரேப்' கேன்சலாகிவிடும். சில சாமியார்கள் இதைத்தான் பரிந்துரைக்கிறார்கள்.

பெண் வீட்டை விட்டு வெளியில் வருவதால்தான் பாலியல் பலாத்காரம்  நடக்கிறது. எதற்காக வெளியில் வரவேண்டும்...எதற்காக வேலைக்குச் செல்ல வேண்டும். படிதாண்டாமல் இருந்துவிட்டால்  இந்தப் பிரச்னை இருக்காதல்லவா? ஆனால் அப்போதும்  விருப்பமில்லாத சமயத்தில் கணவனே பாலியல் வன்முறையில் ஈடுபட்டால்?

ஆண்களின் உணர்ச்சிகளை தூண்டக்கூடிய உணவுகள்கூடபாலியல் பலாத்காரம் நிகழ காரணமாக  அமைந்துவிடுகின்றன. ஆனால், வீட்டில் சமைப்பது யார்? பெண்கள்தானே.

ஆபாசமான சினிமாவினால்தான் பாலியல் வன்முறைகள் நடக்கின்றன. அதுபோன்ற சினிமாக்களில் நடிப்பது யார். பெண்கள்தானே?

பாலியல் பலாத்காரம் நடப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம் -செல்போன். அதிகம் செல்போன் பேசுவது யார்? பெண்கள்தானே. இப்போது புரிகிறதா.. இது யாருடைய தவறு என்று? ஆம். இது  உங்களுடைய தவறு.

புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன? இதுபோன்ற  பாலியல் வன்முறைகள்  நடப்பதற்கு காரணமாக இருப்பது 100% பெண்கள்தான். அட, இங்கே 90% என்று சொல்லியிருக்கிறார்களா? கணக்கு போடுவதிலும் பெண்கள் பலவீனமாகத்தான் இருக்கிறார்கள்.... பாவம்!

பாலியல் பலாத்காரம் நிகழ்ந்தால், போலீஸிடம் செல்ல வேண்டும். நிச்சயமாக அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.
''ஏன்  பாலியல் பலாத்காரம் நடக்கிறது... ஆண்களோடு இருப்பதால்தானே?''

நடுரோட்டில் டாக்டர் வெட்டிக் கொலை!


நாங்கல்லாம் அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்?


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...