|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 February, 2012

வார பலன் (24-2-2012 முதல் 1-3-2012 வரை)

மேஷம் பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்கள் பலவற்றில் வெற்றி கிடைக்கும். திறமை பளிச்சிடும். பண வரவு நன்றாக இருக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடல் நலம் மேம்படும். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். அதேசமயம் உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். சேமிப்பில் கவனம் தேவை. வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். அலுவலகத்தில் இருந்து வந்த கெடுபிடிகள் குறையும். எதிர்பார்த்த கடன் தொகை கைக்கு வந்து சேரும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.

ரிஷபம் பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். உற்றார், உறவினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலர் புதிய வீட்டுக்கு மாறக்கூடும். தேவையில்லாத பயணங்களைத் தவிர்க்கவும். பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். வேலை பார்ப்போருக்கு: சிலர் விருப்ப ஓய்வு பெற்று வேறு வேலைக்கு செல்லக்கூடும். சக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது. அடுத்தவர்கள் பிரச்சனையில் தலையிட வேண்டாம்.

மிதுனம் பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உடல் நலனில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கலாம். பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். குழந்தைகளால் பெருமைப்படக்கூடும். குலதெய்வ வழிபாடு செய்யத் திட்டமிடக்கூடும். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைத்து மகிழக்கூடும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் சில சலுகைகள் பெறக்கூடும்.

கடகம் பொது: முன்னேற்றமான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். எதிலும் நிதானமாக செயல்படுவீர்கள். திறமை மேம்படும். உடல் நலனில் கவனம் தேவை. தன்னம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். உறவினர் வீட்டு மங்கல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதிய ஆடை மற்றும் மங்கலப் பொருட்கள் பெறக்கூடும். குடும்பத்தாரை அனுசரித்துச் செல்வது நல்லது. வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். உங்கள் வேலைகளை அடுத்தவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

சிம்மம் பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் பலவற்றில் வெற்றி கிடைக்கும். உடல் நலம் மேம்படும். பண வரவுக்கு குறைவிருக்காது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். நண்பர்கள் வீ்ட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு மகிழக்கூடும். வீண் செலவுகளைக் குறைக்கவும். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். அலுவலகத்தில் சில சலுகைகளும் பெறக்கூடும். 

கன்னி பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு சீராக இருக்கும். பேச்சில் நிதானம் தேவை. நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக நடக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சி நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலையை திறம்பட செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். உங்கள் ரகசியங்களை யாரிடமும் கூற வேண்டாம். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும்.

துலாம் பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். சமுதயாத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பயணங்களால் நன்மை உண்டு. யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் திட்டத்தை தள்ளிப்போடவும். பேச்சில் நிதானம் தேவை. உடல் நலனில் கவனம் செலுத்தவும். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். சக ஊழியர்களை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.

விருச்சிகம் பொது: சந்தோஷமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். செலவுகள் அதிகரிக்கலாம். பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். உடல் நலம் மேம்படும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். வேலை பார்ப்போருக்கு: பொறுப்புகள் அதிகரிக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. சிறப்பாக பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு பொது: சுமாரான வாரம். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். பண வரவு நன்றாக இருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். வீண் செலவுகளைக் குறைப்பது நல்லது. பெண்களுக்கு: கணவருடன் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை. யாரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். உடல் நலம் நன்றாக இருக்கும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். சக ஊழியர்களைப் பற்றி விமர்சிக்க வேண்டாம்.

மகரம் பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உடல் நலனில் கவனம் தேவை. பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கணவரிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பண வரவுக்கு குறைவிருக்காது. உறவினர்களிடம் எதையும் வெளிப்படையாக பேச வேண்டாம். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கவும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

கும்பம் பொது: உற்சாகமான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். திறமை மேம்படும். பண வரவு சீராக இருக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். யாருடனும் வீண வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். மனதில் புது தெம்பு பிறக்கும். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். குடும்பத் தலைவருக்கு அதிக வருமானம் வரும் வேலை கிடைக்கக்கூடும். எதிலும் நிதானமாக இருக்கவும். கணவரை அனுசரித்துச் செல்லவும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம்.

மீனம் பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. சமுதாயத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும், நண்பர்களும் ஆதரவாக இருப்பார்கள். உடல் நலம் நன்றாக இருக்கும்.பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள்.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். சிறப்பாக பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறக்கூடும். வேலை பளு அதிகரி்ககும். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும்.

திருக்கயிலாய யாத்திரை செல்ல நிதியுதவி வழங்க கோரிக்கை!

இந்துக்கள் திருக்கயிலாய யாத்திரை செல்ல அரசு நிதியுதவி வழங்க வேண்டும், என, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:நடராஜர் கோவிலை கடந்த ஆட்சியில் அரசு கையகப்படுத்தி உண்டியல் வைத்துள்ளது. இந்து கோவில்களைப் பாதுகாக்க அறவோர் வாரியம் அமைக்க வேண்டும் என, நாங்கள் போராடி வருகிறோம். இந்தக் கோவிலையும் அறவோர் வாரியத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்லவும், இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை செல்லவும் அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. அதே போன்று இந்துக்கள் தங்கள் புனிதத் தலமான திருக்கயிலாயம், முத்திநாத் பயணம் செல்வதற்கு அரசு 5,000 பேருக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய்வழங்க வேண்டும்.இவ்வாறு அர்ஜுன் சம்பத் கூறினார்.

எதை இழக்கவே கூடாது?

வாழுகின்ற நாட்களில் எதை எதையோ இழக்கின்றோம். மதிப்புமிக்க பொருட்களை இழக்கின்றோம்; அரிய நட்பை இழக்கின்றோம். ஏன், பந்த பாசங்களைக் கூட இழக்கின்றோம். எந்த ஒன்றை இழந்தாலும் மனம் வேதனைப்படுகிறது. ஆனாலும், காலமும் நேரமும் நமக்கு சாதகமாக இருக்கும்போது இழந்த சிலவற்றைத் திரும்பப் பெறுகின்றோம். மனம் குதூகலமாகிறது.  நம்மிடம் இருக்கும் செல்வத்தை இழப்பது, ஒன்றையும் இழப்பதாகாது. நம்முடைய உடல் நலத்தை இழப்பது ஏதோ சிறிதளவு இழந்ததாகக் கொள்ளப்படும். ஆனால், நம்மிடம் இருக்கின்ற நற்குணத்தை இழந்துவிட்டால் எல்லாவற்றையும் இழந்ததற்கு ஒப்பாகும். வாழ்க்கைத் தத்துவத்தை இதைவிட எளிமையாகச் சொல்ல முடியாது. வாழ்வாதாரத்துக்கே அடிப்படையான செல்வத்தை இழந்தால்கூட ஒன்றுமில்லையாம். தேக நலனில் இழப்பு வந்தால்கூட, ஏதோ சிறிதளவைத்தான் நாம் இழந்ததாகக் கொள்ள வேண்டுமாம். ஆனால், நம்மிடம் ஒட்டிக் கொண்டுள்ள நற்குணங்களை இழப்பது என்பது எல்லாவற்றையும் இழந்ததற்கு சமமாகும். ஆக, நல்ல குணங்களைக் கொண்டு வாழும் வாழ்க்கை என்றைக்கும் போற்றுதலுக்குரியது. நற்குணங்களைக் கொண்டிருக்கும் ஒருவன் என்றைக்குமே பிறரால் வஞ்சிக்கப்பட மாட்டான்.

இதே நாள்...

  •  மெக்சிகோ கொடி நாள்
  •  தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்த தினம்(1948)
  •  நாசிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது(1920)
  •  எஸ்தோனியா விடுதலையை அறிவித்தது(1918)
  •  கிரிகொரியன் நாட்காட்டி அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது(1582)

குடிபோதையில் வாகனம் ஓட்டி, மரணம் 10 ஆண்டுகள் தண்டனை!


குடிபோதையில் வாகனம் ஓட்டி, மரணம் விளைவிக்கும் நபர் மீது, 10 ஆண்டுகள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய, போலீசாருக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது போன்ற வழக்குகளில், அபராதம் மட்டுமல்லாமல், தகுந்த தண்டனையும் விதிக்க வேண்டும் என, மாஜிஸ்திரேட்டுகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், கடற்கரை சாலையில் கார் ஓட்டிச் சென்ற போது, மஞ்சள் கோட்டை தாண்டி, எதிரில் வந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில், ஒருவர் இறந்தார். சிலர் காயமடைந்தனர். கடந்த மாதம் 26ம் தேதி, சம்பவம் நடந்தது. ரமேஷ் மீது முதலில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304 (ஏ) - அலட்சியம், கவனமின்மையால் மரணம் ஏற்படுத்துதல், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின், இவர் மதுபானம் குடித்து விட்டு வாகனத்தை ஓட்டியது தெரிய வந்தது. இதையடுத்து, பிரிவு 304 (2)ன் கீழ் வழக்கு மாற்றப்பட்டது. ஜனவரி 30ம் தேதி, ரமேஷ் கைது செய்யப்பட்டார். ஜாமின் கோரி, சென்னை ஐகோர்ட்டில், ரமேஷ் மனு தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், போலீஸ் தரப்பில் கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம்.மகாராஜா ஆஜராகினர்.

சமூகத்திற்கு எதிரான குற்றம்: ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பிறப்பித்த உத்தரவு: குடிபோதையில் வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்படுத்தும் வழக்குகளில், அபராதம் மட்டும் விதித்து, லேசாக விட்டு விடுகின்றனர். மாஜிஸ்திரேட் கோர்ட்டுகளின் இத்தகைய அணுகுமுறை, சட்டத்துக்கு முரணானது. இதுபோன்ற வழக்குகளை அணுகும் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனையானது, இதே குற்றங்களை விளைவிக்கக் கூடிய மற்றவர்களுக்கும் விதிக்கும் வகையில் இருக்க வேண்டும். எனவே, இதை தனிப்பட்ட ஒருவருக்கு எதிரான குற்றமாகப் பார்க்காமல், சமூகத்துக்கு எதிரான குற்றமாகக் கருத வேண்டும். விபத்துகளை குறைக்க வேண்டும் என்றால், குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதை நிறுத்த வேண்டும். அனைவரும் கவனமுடன் வாகனங்களை ஓட்ட வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை, கடந்த மாதம் 30ம் தேதி முதல், சிறையில் மனுதாரர் உள்ளார். போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டு விட்டது. எனவே, அவரை ஜாமினில் விட உத்தரவிடப்படுகிறது. சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில், தினசரி நான்கு வாரங்களுக்கு ஆஜராக வேண்டும். அதன் பின், தேவைப்படும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும். போலீசாருக்கும், மாஜிஸ்திரேட் கோர்ட்டுகளுக்கும், கீழ்க்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

கடைநிலை ஊழியர் 70 கோடி சொத்து!

ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் சுங்கத்துறையில் கிளர்க்காக பணியாற்றும் கடைநிலை ஊழியர் செட்டிப்பள்ளி சேஷகிரி ராவ் சுமார் 50 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்துள்ள விவரம் வெளிவந்துள்ளது.போலி ஆவணங்கள் கொடுத்து கடைக்கு உரிமம் பெற்ற வழக்கில், வீட்டை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சியாக, அவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சொத்தின் மதிப்பு 70 கோடியைத் தொடலாம் என்றும் கூறப்படுகிறது.

கேரளாவில் பார்த்திபனுக்கு சிறந்த நடிகர் விருது!

இது கூத்து முக நூலில் பார்த்திபன் இன்று மாலை இந்தப்புரத்திலிருந்து அந்தப்புரம் செல்கிறேன், திருவன-அந்தபுரம்! எக்காலத்திலும் நான் காலத்தை கால்ஷீட்டாக்கி அதை காசாக்க திரைப்படங்கள் செய்ததில்லை.ஆனால் நல்ல cause-க்காக செய்த சிலபடங்களில் மலையாள 'மேல்விலாசம்' குறிப்பிடத்தக்கது.'சிறந்த நடிகர்' விருது நாளை கேரளாவில் எனக்கு வழங்கப்படுகிறது.கூடவே இன்னும் இரு மலையாள படத்திற்கு கதை கேட்டலும்,கதாநாயகி வேட்டையும்..! பாரதி மகா தீர்க்கதரிசி "சிந்து நதியின்மிசை........."

மனித உறுப்புகளை வைத்து பூஜை செய்தால் ?

ஆப்பிரிக்க நாடுகளில்  நோய் ஏற்பட்டால் மக்கள் ஆஸ்பத்திரிகளுக்கு செல்வதை விட மந்திர வாதிகளை தேடி செல்வதே அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தான்சானியா நாட்டில் உள்ள சான்டசியா என்ற இடத்தில் மந்திரவாதிகள் 6 பெண்களை நரபலி கொடுத்து பூஜை நடத்தி உள்ளனர். அந்த பெண்களை துண்டு துண்டாக வெட்டி அவர்களின் உறுப்புகளை எடுத்து சென்று இந்த பூஜைகளை செய்து இருக்கிறார்கள். மனித உறுப்புகளை வைத்து பூஜை செய்தால் பணக் காரர்கள் ஆகலாம் என்ற நம்பிக்கை தான்சானியாவில்பலரிடம் உள்ளது. அவர்கள் மந்திரவாதிகளை அமர்த்தி பெண்களை கொன்று பூஜை செய்திருக்கலாம் என்றுகருதப்படுகிறது.   பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விஷயம் வெளியானதை அடுத்து அந்த பகுதி மக்கள் போராட் டத்தில் குதித்தனர். அவர்கள் வன்முறையிலும் இறங்கினார்கள். அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

ஐ.சி.சி. பரிசுத்தொகையை பெற போட்டி!


ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 ந்தேதி நிலவரப்படி தரவரிசையில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பரிசுத்தொகையை வழங்கி கவுரவிக்கும்.இந்தவகையில் ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் தற்போது ஆஸ்திரேலியா 129 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. முதலிடத்தில் வலுவாக உள்ள அந்த அணி ஒரு நாள் போட்டி சாம்பியன்ஷிப் கோப்பை மற்றும் ரூ.87 லட்சம்பரிசுத்தொகையை பெறப்போவது உறுதி.

ஆனால் 2 வது இடத்திற்கு வழங்கப்படும் ரூ.37 லட்சத்தை தட்டிச்செல்ல தான் 3 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. தரவரிசையில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா தலா 116 புள்ளிகள் பெற்றிருந்தாலும், மயிரிழையில் இந்தியா 2 வது இடத்தில்உள்ளது. தென்ஆப்பிரிக்கா 3 வது இடத்திலும், இலங்கை 113 புள்ளிகளுடன் 4 வது இடத்திலும் உள்ளன.முத்தரப்பு தொடரில் அடுத்தடுத்த தோல்விகளால் வீழ்ச்சிக்குள்ளாகி இருக்கும் இந்திய அணி, எஞ்சிய ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் நம்பர் 2 இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் இலங்கை அல்லதுதென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளில் ஒன்று 2 வது இடத்திற்கு முன்னேறி விடும். தென்ஆப்பிரிக்க அணி விரைவில் நிழூசிலாந்துக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

இருநபர் சம்மதத்துடனான ஓரினச்சேர்க்கை குற்றம் அல்ல என்ற தீர்ப்பை ஏற்க இயலாது மத்திய அரசு!

அந்தரங்க இடத்தில் இரு நபர்கள் சம்மதத்துடன் நடக்கிற ஓரினச்சேர்க்கை குற்றம் ஆகாது என்ற ஐகோர்ட் தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதிட்டது. இந்திய நாட்டில் ஓரினச்சேர்க்கை குற்றம் என்று இந்திய தண்டனைச்சட்டத்தின் பிரிவு 377 கூறுகிறது. இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கவும் சட்டம் வகை செய்துள்ளது. ஆனால், "ஒரு அந்தரங்க இடத்தில் இரு நபர்கள் சம்மதித்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் அது குற்றம் அல்ல. ஓரினச்சேர்க்கை குற்றம் என கூறுகிற இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 ல் உரிய திருத்தம் செய்யப்பட வேண்டும்'' என்று டெல்லி ஐகோர்ட்டு கடந்த 2009 ம் ஆண்டு ஒரு தீர்ப்பினை வழங்கியது. இந்தத் தீர்ப்பு பலத்த சர்ச்சைக்கு வழிவகுத்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓரினச்சேர்க்கைக்கு எதிரான பல்வேறு அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளன. இந்த அப்பீல் வழக்குகள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு எதிரானதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியது நினைவுகூறத்தக்கது. இந்த நிலையில், அப்பீல் வழக்குகள் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாய் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.பி.மல்கோத்ரா ஆஜராகி வாதாடியதாவது: 

இந்திய சமூகம் பிற நாடுகளிலிருந்து மாறுபட்டதாகும். ஓரினச்சேர்க்கை என்பது மிகவும் ஒழுக்கக்கேடானது. இது சமூக ஒழுங்குக்கும் எதிரானது. இத்தகைய செயல்கள் மூலம் எய்ட்ஸ் உள்ளிட்ட (பாலியல்) நோய்கள் பரவுவதற்கும் வாய்ப்பு உண்டு.நமது அரசியல் சட்டம் மாறுபட்டது. நமது ஒழுக்கம் மற்றும் சமூக மதிப்பீடுகளும் பிற நாடுகளில் இருந்து வேறுபட்டவை. எனவே வெளிநாடுகளில் நடப்பதை இங்கு பின்பற்ற முடியாது. ஓரினச் சேர்க்கையை நமது சமூகம் அங்கீகரிக்கவில்லை என்பதே அது குற்றம் என்று கூறுவதற்கு காரணம் ஆகிறது. இந்திய சமூகம் ஓரினச்சேர்க்கையை ஏற்றுக்கொள்ளாத நிலையில், சமூகத்திலிருந்து சட்டம் தனியே இயங்க முடியாது. எனவே (இருநபர் சம்மதத்துடனான) ஓரினச்சேர்க்கை குற்றம் அல்ல என்ற ஐகோர்ட்டு தீர்ப்பினை ஏற்க இயலாது. இவ்வாறு அவர் வாதிட்டார்.

மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக ஐ.நா. அமைதி படை குழுவில் இருந்து து இலங்கை தளபதி நீக்கம்!

ஐ.நா. சபை மேற்பார்வையில் செயல்படும் அமைதி படையை நிர்வகிக்கும் குழுவில் 10 நாட்டு பிரதிநிதிகள் இடம் பெற்று இருக்கிறார்கள். இவர்களில் 5 பேரை ஐ.நா. பொது செயலாளர் பான் கீலிமூன் நியமிக்கிறார். மற்றவர்கள் பிராந்திய நாடுகளின் குழு பரிந்துரையின் அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள். இந்த ஐ.நா. அமைதி படை குழுவில் ஆசிய பசிபிக் நாடுகளின் சார்பில் இலங்கை தளபதி ஷாவேந்த்ரா சில்வா நியமிக்கப்பட்டார். இவர் விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதி கட்ட போரில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக ஐ.நா. அமைதி படை குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.

சைக்கிளின் விலை ரூ.43 ஆயிரம்

சைக்கிள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹீரோ குழும நிறுவனம் முதல் முறையாக "ரெட் டாட்' என்ற பெயரில் விலை உயர்ந்த சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. நகர்ப்புற இளைஞர்களை இலக்காகக் கொண்டு சந்தைக்கு வந்துள்ள இந்த சைக்கிளின் விலை ரூ. 43 ஆயிரமாகும்.  முழுவதும் கார்பன் ஃபிரேமினால் இந்த சைக்கிள் தயாரிக்கப்பட்டுள்ளது. கார்பனில் தயாரிக்கப்பட்டு இவ்வளவு குறைவான விலைக்கு இந்தியாவில் விற்கப்படும் சைக்கிள் இது என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பங்கஞ் முஞ்சால் தெரிவித்துள்ளார்.  பொதுவாக ஃபார்முலா 1 ரேஸ்களில் பங்கேற்கும் கார்கள் மட்டுமே கார்பன் ஃபிரேம் கொண்டவை.  இப்போது ஹீரோ அறிமுகப்படுத்தியுள்ள சைக்கிளில் முதல் முறையாக கார்பன் பிரேம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் எடை 12 கிலோ. அலாய் சக்கரம், டிஸ்க் பிரேக், கியர் வசதி உள்ளிட்ட பல மேம்பட்ட அம்சங்கள் உள்ள இந்த சைக்கிள் நீலம், வெள்ளை, கருப்பு நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

வருமானம் சொத்து விவரங்களை வெளியிட சோனியா மறுப்பு!

தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ)சட்டத்தின் மூலம், தன்னுடைய வருமான வரி தாக்கல் குறித்த விபரங்களை வெளியிட முடியாது என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா தெரிவித்துள்ளார். சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் வி. கோபால கிருஷ்ணன் டெல்லி வருமான வரி உதவி கமிஷனருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு மனு அனுப்பி இருந்தார். அதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 2000 2001 மற்றும் 2010 2011 ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்த படிவங்களை தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 பிரிவு 11 ன் கீழ் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால், தனிப்பட்ட சுதந்திரம், பாதுகாப்பு பாதிக்கப்படும் என்று கூறி சொத்து விவரங்களை வெளியிட சோனியா மறுத்து விட்டார். தன்னுடைய விபரங்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால், அதனை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கிழ் வழங்க இயலாது என்று சோனியா மேலும் தெரிவித்துள்ளார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...