|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 May, 2014

லொள்ளு சபா ஜீவா வெளியிட்ட கோச்சடையான் ஆதாரம்!

கோச்சடையான் படத்தில், ரஜினிக்கு பதிலாக மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் நடித்தது சின்னத்திரை காமெடி நடிகர் லொள்ளு சபா ஜீவாதான் என்ற செய்தி நீண்டகாலமாகவே உலவிக்கொண்டிருக்கிறது. இந்த செய்தியை திரையுலகினர் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. ரஜினி ரசிகர்களோ இதை நம்பவே இல்லை. இந்நிலையில் அதை உண்மை என நம்ப வைப்பதுபோல் தற்போது ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு பதிலாக பல முக்கிய காட்சிகளில், லொள்ளு சபா ஜீவா நடித்திருப்பது உண்மை என தெரிய வருகிறது. தற்போது வெளியாகி உள்ள அந்த புகைப்படத்தில்... மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் நடிக்கும்போது நடிகர்கள் அணியும் விசேஷ உடையில் காட்சியளிக்கிறார் லொள்ளு சபாஜீவா. சினிமாவில் ஆபத்தான காட்சிகளில் கதாநாயகர்களுக்கு பதிலாக டூப் கலைஞர்கள் நடிப்பது வழக்கம்தான். ஆனால் கோச்சடையான் படத்தில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதால், ஆபத்தான காட்சியில் நடிக்க வேண்டிய அவசியமே கிடையாதே... அப்புறம் என்னத்துக்கு டூப் வைத்து எடுக்க வேண்டும்?

ரஜினிக்கு உடல்நிலை சரியாகி மீண்டும் அவர் நடிக்க வந்தபோது, மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லக் கூடாது என கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் மருத்துவர்கள் விதித்தனர். அதனால்தான் அதிக சிரமமில்லாமல், கோச்சடையான் படத்தை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் எடுக்க முடிவு எடுத்தார் ரஜினி. அதிக சிரத்தையின்றி நடித்து விடலாம் என்று தீர்மானித்து கோச்சடையான் படப்பிடிப்பை தொடங்கினார்கள். ஆனால் மோஷன் கேப்சர் அரங்கினுள் படப்பிடிப்பு நடத்தியபோது ரஜினி அடிக்கடி களைத்துப்போனாராம். அதன் பிறகே ரஜினியை சிரமப்படுத்தக் கூடாது என்று தீர்மானித்து அவரைப்போற் பாடிலாங்குவேஜ் கொண்ட லொள்ளு சபா ஜீவாவை வர வழைத்து நடிக்க வைத்திருக்கிறார்கள். தீபிகா படுகோனுடன் உள்ள சண்டைக் காட்சி உள்ளிட்ட முக்கியமான காட்சிகளில் ரஜினிக்கு பதில் ஜீவா நடித்துக் கொடுத்திருக்கிறார்.

இத்தனை நாட்கள் வெளியிடப்படாமல் ரகசியமாக இருந்த புகைப்படம் தற்போது வெளிவந்தது எப்படி?

கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு பதில் டூப்பாக லொள்ளு சபா ஜீவா நடித்தபோது, தீபிகா படுகோன் உட்பட பல நடிகர்களுடன் காம்பினேஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார். அப்போதெல்லாம் தன் மொபைல் போனில் போட்டோக்கள் எடுத்திருக்கிறார். அந்த போட்டோக்களில் ஒன்றுதான் தற்போது வெளியாகி உள்ள புகைப்படம். கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு பதில் டூப்பாக லொள்ளு சபா ஜீவா நடித்தபோது, இதுபற்றி வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது என்று கட்டளையிட்டிருக்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த். அதுமட்டுமல்ல, கோச்சடையான் படம் வெளியாகி வெற்றியடைந்ததும் சக்சஸ்மீட்டில் உங்களை அழைத்து கௌரவப்படுத்துகிறேன் என்றும் உறுதி அளித்தாராம். கோச்சடையான் படம் வெளியாகிவிட்டநிலையில், சௌந்தர்யா சொன்ன வாக்கை காப்பாற்றவில்லை. அந்த வெறுப்பில் லொள்ளு சபா ஜீவாவே தன் புகைப்படத்தை வெளியிட்டுவிட்டதாக சொல்கிறார்கள்.

நல்லாத்தான் கலாய்க்கராங்கப்பா...!


30 May, 2014

யாரை காக்க அமைச்சர் பதவி?

மோடி என்ற ஆடிக்காற்றில், அத்வானி, எம்.எம்.ஜோஷி போன்ற, அம்மிகளே பறந்து கொண்டிருக்கையில், இலவம் பஞ்சுகளான, அன்புமணி, விஜய காந்த் ஆகியோர், எகிறி எகிறி குதிப்பதைக் காணும் போது, வேடிக்கையாகத் தான் உள்ளது. ஒருவர், எவ்வளவு நிர்வாகத் திறமை மிக்கவராகவும், மக்கள் செல்வாக்கு உள்ளவராகவும் இருந்தாலும் கூட, அவரால், இரண்டு முறைக்கு மேல், அமெரிக்க ஜனாதிபதியாக, பதவி வகிக்க முடியாது. அந்தக் கொள்கையை, இங்கே இந்தியாவில் பின்பற்றும், ஒரு அரசியல் கட்சி உண்டென்றால், அது, பா.ஜ., மட்டும் தான். நிரந்தரப் பொதுச் செயலர், பார்லிமென்ட் தலைவர் என்ற பேச்சுக்கே, பா.ஜ.,வில் இடமில்லை. அத்வானியாக இருந்தாலும், எம்.எம்.ஜோஷியாக இருந்தாலும் யாருக்கும், எதற்கும், எப்போதும் விதிவிலக்கு கிடையாது. கடந்த, 20 ஆண்டு கால வரலாற்றைப் புரட்டி பாருங்கள். ஏனைய கட்சிகளில், எத்தனை தலைவர்கள், பதவியில் மாறி இருக்கின்றனர், எத்தனை தலைவர்களை பா.ஜ., அறிமுகப்படுத்தி இருக்கிறது என்பது, தெரிய வரும். 

எதிலும் புதுமையைப் புகுத்த விரும்பும் மோடி, 'சிறிய அரசு; நிறைந்த நிர்வாகம்' என்ற கோஷத்துடன், பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். இங்கு, அரசியல்வாதிகளுக்கு ஓய்வே கிடையாது. காலனாகப் பார்த்து, கையைப் பிடித்து இழுத்துக் செல்வது வரை, பதவி சுகத்தில், மிதந்து கொண்டிருக்கவே விழைவர். அதிலும், காங்கிரசில், 80, 90 வயதுடையவர்களை, அவர்கள் உடம்பில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக, பதவியில் அமர்த்துவர். காலஞ்சென்ற ஜனாதிபதி, சங்கர் தயாள் சர்மா இதற்கு சரியான உதாரணம். அவர் பதவி வகித்த போது, அவரால், தனியாக நடக்கக் கூட முடியாது. இடதுபக்கமும், வலது பக்கமும் இரண்டு பேர், அவரது கைகளை, தோள்களில் தாங்கியபடி அழைத்து வருவர். பார்க்கும் நமக்குத் தான், மனம் பதைபதைக்கும்; காங்கிரஸ் கவலைப்படாது. அதற்கும், ஒரு வழியை மோடி அரங்கேற்றியுள்ளார். அவரது அமைச்சரவையில், 75 வயது பூர்த்தியானவர்களுக்கு, அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், அமைச்சர் பதவி கிடையாது என்று, துணிச்சலாக முடிவெடுத்துள்ளார். 

இந்த நிலையில், அன்புமணி ராமதாசும், விஜயகாந்தும், முறையே தனக்கும், மச்சான் அல்லது மனைவிக்கும் மத்திய அமைச்சர் பதவி கேட்டு மோடியிடம் கோரிக்கை வைத்து, காத்திருக்கின்றனராம். 'வென்றவர்களுக்கே அமைச்சரவையில் இடமில்லை' என்று, மோடி, கறார் காட்டும் போது, ஒருவரையொருவர் நம்பாமல், ஒருவருக்கொருவர் குழிதோண்டி, காலை வாரி, தோல்வியையும் தழுவிய பின், எந்த முகத்தை வைத்து, அமைச்சர் பதவி கேட்கின்றனர்! அதிலும், பிரேமலதாவுக்காம். பிரதமர் பொறுப்பேற்பு நிகழ்ச்சிக்கு, அழைப்பனுப்பி, வரவேற்று ஆலிங்கனம் செய்தது, தப்பாகப் போயிற்று போலும். அன்புமணி மீதோ, சி.பி.ஐ., வழக்கு நிலுவையில் உள்ளது. இல்லை, தெரியாமல் தான் கேட்கிறோம். இவர்களைப் பொறுத்தவரை, அமைச்சர் பதவி என்பது, மக்களைக் காக்கவா? தங்களை, வழக்குகளிலிருந்து காத்துக் கொள்ளவா? 

போகிற போக்கைப் பார்த்தால், கருணாநிதி கூட, 'பிளைட்' பிடித்துச் சென்று, '2ஜி' வழக்கிலிருந்து, ஆ.ராசாவைப் பாதுகாக்க ஒரு அமைச்சர் பதவி, குறிப்பாக, தொலை தொடர்புத்துறை கேட்கத் துணிந்தாலும், ஆச்சர்யமில்லை. ஏற்கனவே, அப்படித் தானே, விரும்பிய துறைகளை, காங்கிரசிடம் கறாராகக் கேட்டுப் பெற்றார். ' பா.ஜ.,வோடு, தி.மு.க., கூட்டணியே வைக்கவில்லையே... எப்படி ஆ.ராசாவுக்கு அமைச்சர் பதவி கேட்பார்' என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? 'வரும், 2016 சட்டசபைத் தேர்தலில், கூட்டணி வைப்போம். பா.ஜ.,வைச் சேர்ந்தவர், முதல்வராகப் பதவி வகிக்கலாம். ஸ்டாலின், துணை முதல்வராக இருக்கட்டும். அதற்கு, 'அட்வான்சாக' ஆ.ராசாவுக்கு, இப்போது மத்திய அமைச்சர் பதவி ப்ளஸ், ராஜ்யசபா சீட் கொடுங்கள்' என்று கேட்டாலும் வியப்பதற்கில்லை. எப்பூடி?

இதுவே ஒரு அன்னதானம் தான்..!


ஆடலாம் பாய்ஸ் காமெடியா ஒரு டான்ஸ்!


வ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மாதிரி ஒவ்வொரு நடிகருக்கும் டான்ஸ்ல சில வித்தியாச ஸ்டெப்ஸ் உண்டு. வாங்க அதைக் கொஞ்சம் விலாவரியா பார்ப்போம்.எம்.ஜி.ஆர்: கை இல்லாமல் ஆட மாட்டார். வானத்தைக் காட்டுவார், பூமியைக் காட்டுவார், மரத்தைக் காட்டுவார், குளத்தைக் காட்டுவார். காட்டு காட்டு காட்டுனு காட்டுவார். ஹீரோயின் நின்றால் புத்தூர் கட்டு போடும் அளவுக்கு உலுக்கி எடுப்பார். மாங்காய் திருடினது ஒரு குத்தமாய்யா? அதுக்கு ஈவ்டீசிங் ஸ்டெப்ஸ் போட்டு மிரளவைப்பார். சந்தேகம்னா 'உரிமைக்குரல்’ படத்தில் வரும் 'பொண்ணாப் பொறந்தா...’ பாட்டைப் பாருங்க. மைண்ட் புளோயிங்! 

சிவாஜி: டான்ஸிலும் புது வெரைட்டி காட்டியவர் இவர். சோகப் பாட்டிலும் முகத்தில் நிறைய எக்ஸ்பிரஷன்களோடு ஆடுவார். ரொமான்ஸ் பாடல்களில் குட்டி யானை போல நடந்து ஹீரோயினைக் காதலோடு பார்த்து உதட்டைக் கடிப்பார். (அவரோட உதட்டைத்தான்) அடிக்கடி காலை அகற்றி நின்று இரண்டு கைகளையும் மேலே தூக்கி 'ஓ ஜீசஸ்... ஃபர்கிவ் மீ’ எக்ஸ்பிரஷன் கொடுப்பார். உதாரணத்திற்கு நெஞ்சு வரைக்கும் பேன்ட் போட்டு சீ த்ரூ சட்டையைப்போட்டு இவர் ஆடிய எங்கே நிம்மதி... 'புதிய பறவை’ படத்தின் பாடல் அக்மார்க் சிவாஜி ஸ்கூல் ஆஃப் டான்ஸ். 'பாட்டும் பரதமும்’ என்ற படத்தில் 'சிவகாமி ஆட வந்தால்...’ பாடலுக்கு அவர் ஆடிய பரதத்தில் நவரசத்தையும் வெறும் காலால் எட்டி உதைப்பார்.
ரஜினி: காற்றிலே சைக்கிள் ஓட்டுவார். பம்பரம் விடுவார். குழந்தைபோல ஓடுவார். மியூட்டில் இருந்தாலும் என்ன பாட்டுக்கு ஆடுகிறார் என்பதை கைகளாலும் விரல்களாலும் செய்கையின் மூலமே விளக்கிடு வார். உதாரணத்திற்கு 'ஒருவன் ஒருவன் முதலாளி...’ போல பல பாடல்கள் இருக்கின்றன. நகம் கடித்து வெட்கப்படுவதில், சரோஜாதேவியையே மிஞ்சிவிடுவார் தலைவர்.சத்யராஜ்: தன் க்ளோஸ் ஃப்ரெண்ட் கவுண்டமணியின் ஸ்டெப்ஸ்களை இரவல் வாங்கித்தான் பல படங்களில் ஆடுவார். டான்ஸ் நடுவில் எப்போதும் 'அட்டென்ஷன்’ 'ஸ்டேண்ட்டடீஸ்’ பொசிஷனுக்கு கொஞ்சம் பக்கத்தில் போய் வருவதுபோல் கையைக் காலை உதறுவார். அது சில நேரங்களில் அழுது அடம்பிடிக்கும் குழந்தையைப்போலவே இருக்கும். அவரே டைரக்டர் அவதாரம் எடுத்து மிரட்டிய 'வில்லாதி வில்லன்’ படத்தைப் பாருங்க. நக்மாவோட 'தீம்தலக்கடி தில்லாலே...’னு ஒரு டெரர் பாட்டு இருக்கு. சும்மா ரோல்கால் பரேடு போயிருப்பார் நம்ம புரட்சித் தமிழன்.
பிரபு: தன் குழி விழுந்த கன்னத்தைக் காட்டாமல், ஆடவே மாட்டார். கன்னக்குழியை விரலால் குத்திக் காட்டுவார். இடுப்பை ஆட்டிக் காட்டுவார். தொடையைத் தட்டுவார். உடம்பைக் கஷ்டப்பட்டாவது 'உக்கி’ போடுவது போல அடிக்கடி உட்கார்ந்து எழுந்திருப்பார். அழகு காட்டி பழிப்புக் காட்டி பெண்கள் போல நடந்து ஆடுவதெல்லாம் இளைய திலகத்துக்கு இளநீர் குடிப்பதுபோல. சந்தேகம்னா சின்னத்தம்பி படத்தில் வரும் 'அரைச்ச சந்தனம்... மணக்கும் குங்குமம்...’ பாட்டை ஒரு வாட்டிப் பார்த்துத் தெளிஞ்சுக்கோங்க பாஸ்.ராமராஜன்: டான்ஸைவிட கான்ட்ராஸ்ட் கலர்களால் சிதறவிடுவார். கைகளைக் கட்டிக்கொள்வார். மூன்று விரல்களை அடிக்கடிக் காட்டிக் காட்டி ஏதோ இந்த உலகத்துக்குச் சொல்ல வருவார். பெரும்பாலும் இரண்டு கைகளால் முட்டுக்கொடுத்து வகையாக நின்றபடி ஆடுவார். சிவப்பு சட்டை, ஊதா பெல்ட், பச்சை பேன்ட், வெள்ளை ஷூ என கண்ணைக் குத்தும் அவரோட பிராப்பர்ட்டி.
டி.ஆர்: வயதுக்கு மீறி ஸ்டெப்ஸ் போட்டு இவர் ஆடுவதைப் பார்த்தால், பயங்கரமாக இருக்கும். இடுப்பை ஆட்டி ஆட்டி கையைத் தலைக்கு மேல் தூக்கி டவுசர் தெரிய ஆடுவார். தலையை அடிக்கடி சிலுப்புவார். தரையில் தவழ்வார், உருள்வார், புரள்வார். ஆனால் ஸோலோவாக. விரகதாப எக்ஸ்பிரஷன்களை டெரராய்க் கொடுக்கும் இவர் பேசாமல் ஹீரோயின்களை தொட்டே ஆடியிருக்கலாம். அப்படி கொலைக்குத்து மூவ்மென்ட் மற்றும் பார்வையோடு இருக்கும் இவரின் டான்ஸ் ஸ்டைல்.  'டிஆர் டான்ஸ் கங்னம் ஸ்டைல்’ என்று யூடியூபில் தட்டிப் பாருங்கள். இதய பலவீனமானவர்கள் அந்த வீடியோ பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது!

திருமணத்திற்கு முன்னும் பின்பும்!


29 May, 2014

kochadaiyaan Movie

என்ன கொடுமை சரவணன்னு என்று சொன்னவருக்கே போய்  சேர்ந்த படம்! சுட்டி  T V ல போடவேண்டிய படம். கருமம் இதுல இடையே இடையே பாட்டு வேற இசை AR ரகுமான்.கொடுமை! motion picture ல படம் எடுத்தாங்களாம் இப்படி "மோசமான Picture" ஆ   போய்டுத்து. இந்த படம் ரஜினி பொண்ணு இல்லாம வேற யாரவது எடுத்துருந்தா? கல்லால்லையே அடிச்சி கொன்றுப் பாங்க பாவம்.நல்லவேலை தியேட்டருக்கு போய் படம் பார்க்கலை.(ஆனந்தம்)  இந்த கொடுமைய தியேட்டர்ல போய் பார்த்தவங்களுக்கு! சரி அத விடுங்க அதை ஏன் என் வாயால சொல்லிக்கிட்டு... AVATHAR பார்த்து சௌந்தர்யா   சூடு போட்டு கொண்ட படம்.

Imsai Arasan 23am Pulikesi full movie


பாஸ்போர்ட்டில் படம் வரைந்த மகன்- நாடு திரும்ப முடியாமல் தந்தை!சீனநாட்டை சேர்ந்த தந்தையும், அவரது நான்கு வயது மகனும் தென்கொரியாவுக்கு சென்றிருந்தனர். விமானத்தில் செல்லும்போது, பிரயாண களைப்பு தெரியாமல் இருக்க சிறுவன் பேனாவை எடுத்து படம் வரைந்து கொண்டே வந்துள்ளான் அச்சிறுவன். ஆனால் அவன் படம் வரைந்தது வெற்று காகிகத்தில் கிடையாது, தந்தையின் பாஸ்போர்ட்டில். இது தெரியாத தந்தை தென்கொரிய குடியுரிமை அதிகாரிகளிடம் பாஸ்போர்ட்டை காட்டியபோது அதிர்ச்சியடைந்தார். தந்தையின் உருவமே தெரியாத அளவுக்கு கண்டபடி படம் வரைந்து வைத்துள்ளான் சிறுவன். பாதுகாப்பு காரணங்களால் சிறுவனையும், தந்தையையும் சீனாவுக்கு திருப்பியனுப்ப முடியாத நிலையில் தென்கொரிய அதிகாரிகள் உள்ளனர். இந்த சுற்றுப்பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டாளர்கள், பாஸ்போர்ட்டில் இருப்பது, அவர்தான் என்று கூறியும்கூட, தென்கொரிய அதிகாரிகள் ஏற்பதாக இல்லை.


ஓடாத படங்களுக்கெல்லாம் சக்சஸ் மீட் வைக்கும் கோடம்பாக்கம்!


முன்பெல்லாம் ஒரு படம் வெளியாகி 50 நாட்கள் அல்லது 100 நாட்கள் ஓடிய பிறகுதான் அந்த படத்தின் வெற்றியை கொண்டாடுவார்கள். ஆனால், இப்போதோ படம் வெளியாகி இரண்டு மூன்று நாட்களில் சக்சஸ் மீட் வைக்கிறார்கள். ஆனால், இது படங்களின் வெற்றிக்காக அவர்கள் வைப்பதில்லை. அப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தி பப்ளிசிட்டி செய்து படத்தை ஓடவைப்பதற்காக எடுக்கும் முயற்சிதான் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம் என்பதால், திரையுலகினரே இந்த சக்சஸ் மீட்டை கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், மற்ற இயக்குனர்களின் படங்கள் வெளியாகும்போது அதுபற்றி நீங்கள் யாரிடமாவது உண்மையான விமர்சனங்களை சொன்னதுணடா? என்று இயக்குனர் சசிகுமாரிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது, இப்போதெல்லாம் விமர்சனங்களை கேட்க யாருமே தயாராக இல்லை. காரணம், படம் வெளியான சில நாட்களிலேயே சக்சஸ் மீட் நடத்தும் வேலைகளில் பரபரப்பாகி விடுகிறார்கள். அதுமட்டுமின்றி, படம் வசூலித்ததோ இல்லையோ அவர்களே பாக்ஸ் ஆபீசில் வசூலில் முதலிடம் என்று விளம்பரப்படுத்திக்கொள்கிறர்கள். அந்த அளவுக்கு எதையாவது சொல்லி படத்தை ஓட வைக்க வேண்டும். என்கிற நிலையும் உருவாகி விட்டது என்று தனது கருத்தினை தைரியமாக பதிவு செய்திருக்கிறார் சசிகுமார்.

28 May, 2014

சுற்றுலாவுக்கு தகுந்த இடம் டோக்கியோ!


உலகளவில் உள்ள சுற்றுலாத் தளங்கள் குறித்த தகவல்களை வெளியிடும் டிரிப் அட்வைசர் என்ற இணையதளம் வருடந்தோறும் மேற்கொள்ளும் சிறந்த நகரங்கள் குறித்த சர்வேயின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. மொத்தம் 37 நகரங்களை ஐந்து பிரிவுகளின் அடிப்படையில் 54,000 சுற்றுலாப் பயணிகளின் வாக்கெடுப்பில் இந்த நிறுவனம் தர வரிசைப்படுத்தியது.

இதில் ஜப்பானின் தலைநகரான டோக்கியோ ஒட்டு மொத்த பிரிவுகளிலும் சிறந்த சுற்றுலாத் தளமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் ஒட்டுமொத்த தர மதிப்பில் 11-வது இடத்தைப் பெற்றபோதிலும் இரவு வாழ்க்கை என்ற தலைப்பில் இரண்டாவது இடத்தையும், ஷாப்பிங் பிரிவில் மூன்றாவது இடத்தையும் பெற்றது. வசதியான பயணம் என்ற தலைப்பில் சிங்கப்பூர் முதலிடத்தையும், டாக்சி சேவை, சுத்தம், எளிதாக இடங்களை அடைவது, குடும்பத்தினருக்கான நட்புச் சூழல் போன்றவற்றில் இரண்டாவது இடத்தையும் பிடித்தது. கலாச்சார விஷயங்கள் பட்டியலில் ரோம் முதல் இடத்தையும், ஹோட்டல்கள் மற்றும் ஷாப்பிங் பட்டியலில் துபாய் முதல் இடத்தையும் பிடித்திருந்தது.

பயணிகளின் ஒட்டுமொத்த அனுபவத்தில் சுத்தமான தெருக்கள், எளிதாக இடங்களை அடைதல் போன்ற பிரிவில் இந்தியாவின் மும்பை மோசமான நகரம் என்ற கருத்தைப் பெற்றுள்ளது. இதில் கடைசி இரண்டாவது இடத்தைப் பிடித்தது டொமினிகன் குடியரசின் புண்டா கனா நகரமாகும். ஏனெனில் இயற்கைக் காட்சிகளைத் தவிர இங்கு வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை என்ற கருத்து பயணிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்துக் கணிப்பின் குறிப்பிடத்தக்க விஷயமாகக் கருதப்படுவது ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ பற்றிய பயணிகளின் மதிப்பீடு ஆகும். சிறந்த ஒட்டு மொத்த அனுபவம் என்ற தலைப்பில் கடைசி மூன்றாமிடத்தையும், உணவகங்கள், ஷாப்பிங், குடும்பத்திற்கான நட்பு சூழல் பிரிவுகளில் கடைசி இரண்டாமிடத்தையும், உள்ளூர் உதவிகள், டாக்சி சேவைகள் மற்றும் ஓட்டுனர் உதவி, ஹோட்டல் மற்றும் பணத்தின் மதிப்பு போன்ற பிரிவுகளில் கடைசி இடத்தையுமே மாஸ்கோ பிடித்திருந்தது என்பது இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.


கேபினட் அமைச்சர், இணையமைச்சர் வேறுபாடு என்ன?


மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு), இணை அமைச்சர்கள் என்ற மூன்று பிரிவுகள் உள்ளன. இந்த மூன்று பிரிவுக்கும் முக்கிய வேறுபாடுகள் இருக்கின்றன. இவையல்லாமல் துணை அமைச்சர் என்ற அந்தஸ்தில் சிலரை நியமிக்கவும் சட்டம் இடம் தருகிறது.பெரும்பாலும் இந்தியாவில் அப்படி நியமிப்பதில்லை.

கேபினட் என்பது, 'மத்திய அரசுக்குள் ஒரு குட்டி  அரசு' என்று சொல்லத்தக்க வகையில் சக்திவாய்ந்த உயர் அதிகார அமைப்பாகும். கேபினட்டில் முக்கியமான துறைகளின் அமைச்சர்கள் இருப்பார்கள். இந்த அமைச்சர்கள் பெரும்பாலும் மூத்தவர்களாகவும் பல்வேறு துறைகளில் ஆழ்ந்த அனுபவமும் அறிவும் வாய்க்கப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். அரசியல், சட்டம், தொழில்நுட்பம், வேளாண்மை, வாணிபம், ராணுவம், வெளியுறவு, தொழில்துறை ஆகியவற்றில் தனிச் சிறப்பு பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் கேபினட் அமைச்சர்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளைத் தங்கள் வசம் வைத்திருப்பார்கள். அவர்களுடைய துறை பெரியதாக இருந்தால் ஒன்று அல்லது இரண்டு இணை அமைச்சர்களை உதவிக்கு அமர்த்திக்கொள்வார்கள்.

இணை அமைச்சர்களில் ‘தனிப்பொறுப்பு' உள்ளவர்களும் உண்டு. குறிப்பிட்ட சில துறைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நினைத்தால் அதை மட்டும் தனியாகப் பிரித்து, இணை அமைச்சரின் தனிப்பொறுப்பில் விடுவது உண்டு. சிவில் விமானப் போக்குவரத்து போன்ற துறைக்கு கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் வேண்டாம் என்று நினைத்தால் தனிப்பொறுப்பாக ஒரு இணை அமைச் சரிடம் தருவது உண்டு.

கேபினட் அமைச்சர்கள் சில வேளைகளில், அவர்களுக்கென்று ஒதுக்கிய துறைபோக, பிரதமரின் வேண்டுகோளின் பேரில் மற்றொரு துறையையும் கூடுதலாக வகிப்பதும் உண்டு. சக கேபினட் அமைச்சர் வெளிநாடு செல்லும்போதோ, உடல் நலக்குறைவால் சிகிச்சை பெறும்போதோ இப்படி கூடுதல் பொறுப்பை வகிப்பார்கள். அமைச்சரவையிலிருந்து யாராவது விலக நேர்ந்தால் தற்காலிக ஏற்பாடாக அந்தத் துறையை இன்னொரு அமைச்சரிடம் கூடுதல் பொறுப்பாகவும் தருவார்கள்.

கேபினட்டில் இடம் பெற்ற அமைச்சர்கள் மட்டுமே கேபினட் கூட்டங்களில் பங்கேற்பார்கள். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே, இணை அமைச்சர்கள் கேபினட் கூட்டங்களுக்கு விசேஷமாக அழைக்கப் படுவார்கள். கேபினட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அந்தந்தத் துறைக்கு உரிய அமைச்சர்கள் மட்டுமின்றி இதர அமைச்சர்களும் கருத்துகளைத் தெரிவிப்பார்கள். கேபினட் கூட்டத்தில் நடக்கும் விவாதங்களும் எடுக்கப்படும் முடிவுகளும் முறையாகப் பதிவு செய்யப்படும். இணை அமைச்சர்களில் தனிப்பொறுப்பு என்று அறிவிக்கப்படுகிறவர்கள் தங்களுடைய துறை தொடர்பான எல்லா முடிவுகளையும் அவர்களே எடுப்பார்கள். பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் அவர்கள் செயல்படுவார்கள்.தனிப்பொறுப்பல்லாத இணை அமைச்சர்கள், தத்தமது துறையின் கேபினட் அமைச்சரின் வழிகாட்டுதலின்படி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்வார்கள். இவர்களை 'அதிகாரம் இல்லாத அமைச்சர்கள்' என்று அரசியல் வட்டங்களில் கேலி செய்வார்கள். சில மூத்த அமைச்சர்கள் இணை அமைச்சர்கள் மீது நம்பிக்கை வைத்து, பொறுப்புகளை அளித்து நன்றாகத் தயார் செய்வார்கள். வேறு சிலரோ அவர்களைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். சில இணை அமைச்சர்கள் தாங்கள் உட்கார மேஜை, நாற்காலிகூட இல்லை என்று கேபினட் அமைச்சர்களிடமே முறையிட்டதும் உண்டு.

நாடாளுமன்றக் கூட்டங்களில் கேபினட் அமைச்சர் அவைக்கு வர முடியாத சந்தர்ப்பங்களில், இணை அமைச்சர்கள், கேள்விகளுக்குப் பதில் அளிப்பது உண்டு. அரசியல் காரணத்துக்காக ஒருவருக்கு கேபினட் அந்தஸ்து தரப்படுவதும் அவருக்காக அந்தத் துறையின் பணிகளைக் கவனிக்கும் பொறுப்பை இணை அமைச்சரே மேற்கொள்வதும் சமீபத்தில்கூட நடந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் பதில் சொல்லும் பொறுப்பை கேபினட் அமைச்சருக்குப் பதிலாக இணை அமைச்சரே சொல்ல நேர்ந்திருக்கிறது.

இணை அமைச்சர்கள் துறைக்கும் கேபினட் அமைச்சருக்கும் பாலமாக இருந்து செயல்படுவார்கள். நாடாளுமன்றப் பணிகளிலும் அவருக்கு உதவுவார்கள். அதன் மூலம் அவர்களும் நிர்வாகப் பயிற்சியைப் பெறுவார்கள். இணை அமைச்சர்களாக நியமிக்கப் படுகிறவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாகவோ, அமைச்சர் பொறுப்புக்குப் புதியவர்களாகவோ இருப்பார்கள். பிரதமர் அலுவலகத்தில் பணியாற்ற இணையமைச்சர் அந்தஸ்தில் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஆட்சியிலும் இப்படியொரு இணையமைச்சர் இருந்தார்.நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் (மக்களவை, மாநிலங்களவை) சுமார் 10% வரையிலான எண்ணிக்கையில் மத்திய அமைச்சரவை இருக்கலாம் என்று நிர்வாக சீர்திருத்தக்குழு பரிந்துரை செய்திருக்கிறது. அதே சமயம் மொத்தம் எத்தனை துறைகள் இருக்கலாம், எத்தனை கேபினட் அமைச்சர்கள் இருக்கலாம், எத்தனை இணை அமைச்சர்கள் இருக்கலாம் என்றெல்லாம் அது பரிந்துரைக்கவில்லை. இவை அனைத்தும் பிரதமரின் விருப்ப அதிகாரத்துக்கும் செல்வாக்குக்கும் உள்பட்டவை.

கேபினட் அமைச்சர்களைவிட இணை அமைச்சர்களுக்கு ஊதியம், படிகள், சிறப்புச் சலுகைகள் போன்றவை குறைவாகவே இருக்கக்கூடும். கேபினட் அமைச்சர்களுக்கு பங்களா, கார் போன்ற வசதிகளும் அதிகமாகவே இருக்கும். அரசியல்ரீதியாகவும் கேபினட் அமைச்சர் களுக்கு செல்வாக்கு அதிகம். இருப்பினும் இணை அமைச்சர்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் இன்றியமையாத அம்சமாகிவிட்டார்கள். கேபினட் அமைச்சர்களை அணுக முடியாதவர்கள் இணை அமைச்சர்களை எளிதில் அணுக முடியும்.

அரசியல் சட்டம் 370 வது பிரிவு!

மோடி தலைமையில் பா.ஜனதா அரசு மத்தியில் பதவியேற்று 2 தினங்கள்தான் ஆகின்றன. அதற்குள் அந்த கட்சியின் நீண்டநாள் செயல்திட்டங்களில் ஒன்றான காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு நீக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழத்தொடங்கிவிட்டன. 
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை நீக்க வேண்டும் என்பது பா.ஜனதாவின் கொள்கை.ஆனால், காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள், அப்பிரிவை நீக்கக்கூடாது என்று போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில் இருந்து முதல்முறையாக எம்.பி.யான பிரதமர் அலுவலக அமைச்சர் ஜிதேந்திர சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது குறித்து சிலரை சம்மதிக்க செய்து விட்டோம். சம்மதிக்காதவர்களை சம்மதிக்க செய்ய முயற்சி நடந்து வருகிறது" என்றார்.

ஜிதேந்திர சிங்கின் தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர்
அப்துல்லா, "காஷ்மீருக்கும், நாட்டின் இதர பகுதிக்கும் இடையிலான ஒரே அரசியல் சட்ட தொடர்பு 370வது பிரிவுதான். எனவே, ஒன்று, 370வது பிரிவு இருக்கும் அல்லது காஷ்மீர், இந்தியாவில் இருக்காது. இதை நினைவில் கொள்ளுங்கள்" என்று கூறினார்.

ஒமர் அப்துல்லாவின் இந்த கருத்துக்கு பா.ஜனதா தரப்பிலிருந்தோ அல்லது மத்திய அரசிலிருந்தோ பதில் வருவதற்குள் முந்திக்கொண்டு பதிலடி கொடுத்தது ஆர்.எஸ்.எஸ்.

இது தொடர்பாக அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் ராம் மாதவ்,  தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், "காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி.ஒமர் அப்துல்லா நினைப்பது போன்று காஷ்மீர் ஒன்றும் பரம்பரை எஸ்டேட் பகுதி அல்ல. ஒமரின் கருத்து ஏற்றுகொள்ள முடியாத ஒன்று" என்று காட்டமாக கூற,  காஷ்மீர் என்னுடைய சொத்து என கூறவில்லை என்று உமர் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்.
370 வது பிரிவு உருவானது எப்படி?
இந்த அளவுக்கு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் அந்த அரசியல் சட்டம் 370 வது பிரிவு என்பது என்ன? அது எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்த சில தகவல்கள்...
சுதந்திரத்திற்கு முன்னர் பல்வேறு மன்னர்களின் ஆளுமைக்கு கீழ் இருந்துவந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டு, இந்தியா உடன் இணைப்பதா, பாகிஸ்தானுடன் இணைப்பதா அல்லது தனி நாடாக செயல்படுவதா என்ற குழப்பம் நிலவியது.
அப்போது, காஷ்மீரின் மன்னராக இருந்த ஹரி சிங், இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்து, ஷேக் அப்துல்லாவை பிரதமராக நியமித்தார். அப்போதைய நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, சிறப்பு அந்தஸ்து அளிக்கஅரசியல் சட்டப்பிரிவு 370 ஐ உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இந்திய அரசியல் சாசனத்தின் முதன்மை வடிவமைப்பாளரும், சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய சட்டத்துறை அமைச்சருமான டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 வது பிரிவை வடிவமைக்க மறுத்துவிட்டார். 

அதன்பின்னர் 1949 ல் அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு, காஷ்மீர் தலைவர் ஷேக் அப்துல்லாவிடம் பேசி,  அம்பேத்கருடன் கலந்து பேசி பொருத்தமான அரசியல் பிரிவை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அம்பேத்கர் மறுத்துவிட்டதால், கடைசியில் கோபாலஸ்வாமி அய்யங்காரால்தான் 370 வது பிரிவு உருவாக்கப்பட்டது. கோபாலஸ்வாமி அப்போது நேரு தலைமையிலாம்ன இந்தியாவின் முதல் அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். மேலும் ஜம்மு காஷ்மீர் மகாராஜா ஹரி சிங்கின் முன்னாள் திவானாகவும் பதவி வகித்தார்.

370 வது பிரிவு சொல்வதென்ன...?

* இந்திய அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தற்காலிகமாக சிறப்பு அந்தஸ்தை அளிக்கிறது. இந்த சிறப்பு அந்தஸ்தின்படி இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர்  மாநிலம் மட்டுமே பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளது. இதன்படி, இந்திய பாராளுமன்றத்தில் ராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளை தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி அம்மாநிலத்தில் செல்லாது. 

* ஜம்மு காஷ்மீர்  மாநிலத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் ஆளுகையும் உள்ளது. மேலும் இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு. இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் இந்த மாநிலத்தில் நிலம் முதலான அசையா சொத்து வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது.  

* ஜம்மு காஷ்மீர் மாநில பெண்கள் மற்ற மாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால் அப்பெண்கள் நிலம் வாங்கும் உரிமையை இழந்துவிடுவார்கள், ஆண்கள் மற்ற மாநில பெண்களை மணந்தாலும் அவர்கள் நிலம் வாங்க முடியும். 

* ஜம்மு காஷ்மீர்  மாநில சட்டமன்றத்தின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும், மற்ற எந்த இந்திய மாநிலங்களின் சட்டமன்ற காலம் 5 ஆண்டுகளாகும். 


* அரசியல் சாசனத்தின் 238 வது பிரிவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தாது. 

* இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் XXI வது பகுதியில் திருத்தம் செய்து தற்காலிக மற்றும் மாறுதலுக்கு உட்படுத்துதலின் கீழ் 370 வது பிரிவு வரையறுக்கப்பட்டது. 

* முதலில் உருவாக்கப்பட்ட 370 வது பிரிவில், "மாநில அரசு என்பதற்கான அர்த்தம் ஜனாதிபதியால் தற்காலிகமாக அங்கீகரிக்கப்படுகிற நபரே ஜம்மு காஷ்மீரின் மகாராஜாவாக, மத்திய அமைச்சர்களின் அறிவுரைப்படி தற்காலிகமாக செயல்பட முடியும்"  என கூறப்பட்டிருந்தது. 

அதன்பின்னர் 1952 நவம்பர் 15 ல் அதில், அதாவது 370 வது பிரிவில்  மாற்றம் செய்யப்பட்டு, " மாநில அரசு என்பதற்கான அர்த்தம் ஜம்மு காஷ்மீர் கவர்னரால், மாநில சட்டசபை மூலம் பரிந்துரைக்கப்பட்டு, ஜனாதிபதியால் தற்காலிகமாக அங்கீகரிக்கப்படுகிற நபரே ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக மத்திய அமைச்சர்களின் அறிவுரைப்படி தற்காலிகமாக செயல்பட முடியும்"  என வரையறுக்கப்பட்டது. 

* அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவின்படி மாநிலத்தின் எல்லையை இந்திய நாடாளுமன்றத்தால் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது.

25 May, 2014

நல்லாத்தான் கலாய்க்கராங்கப்பா...!


நல்லாத்தான் கலாய்க்கராங்கப்பா...! சுவைகளில் சிறந்தது நகைச் சுவை. நாட்டு நடப்பையும் அரசியலையும் கிண்டலாக கலாய்ப்பது என்பது நமது ரத்தத்தில் ஊறிய ஒன்று. படங்களாகவும் வாசகங்களாகவும் இத்தகைய நகைச்சுவை கலந்த பதிவுகள் எவர் மனதையும் நோகடிக்கும் நோக்கம் கொண்டவை அல்ல; படித்து, ரசித்து, மகிழ்வதற்காக மட்டுமே

24 May, 2014

நீதியோ அநீதியோ கடுமையான சொற்கள் தீங்கிழைப்பைவையே..!


பெருகி வரும் ஏடாகூட தலைப்புகள்!

சினிமாவுக்கு தலைப்பு வைப்பது குழந்தைக்கு பெயர் வைக்கிற மாதிரி" என்பார் ஏவிஎம் மெய்யப்ப செட்டியார். "படத்தின் தலைப்பே பாதி கதை சொல்ல வேண்டும்" என்பார் அடூர் கோபால கிருஷ்ணன், "தலைப்புக்குள் கதை இருக்க வேண்டும்" என்பார் கே.பாலச்சந்தர். ஆனால் இன்றைக்கு வருகிற தலைப்புகளை பார்க்கும்போது கூவத்தின் கரையில் செல்லும்போது மூக்கை பொத்திக் கொள்வதைப்போல, கேட்கும்போதே காதை பொத்திக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது.

படிக்காத மேதை, பாவை விளக்கு, படித்தால் மட்டும் போதுமா, ஆயிரத்தில் ஒருவன், அடிமைப் பெண், நாடோடி மன்னன், ஒரு கைதியின் டயரி, கடல் மீன்கள், நெற்றிக்கண், அபூர்வ ராகங்கள், தப்புதாளங்கள், அன்புக்கு நான் அடிமை... இப்படி தலைப்புகளே கதை சொன்ன காலம் ஒன்று இருந்தது. இந்த தலைப்புகள் அந்தந்த படங்களை கவுரப்படுத்தியது. கதைக்கேற்ற நல்ல தலைப்பு அமையாவிட்டால் பேசாமல் படத்தின் ஹீரோ, அல்லது ஹீரோயின் கேரக்டர் பெயரையே தலைப்பாக வைத்து விடுவார்கள். எப்படி இருந்தாலும் தலைப்பில் ஒரு கண்ணியம் இருந்தது. ஆனால் இன்றைக்கு வைக்கப்படும் தலைப்புகளில் கண்ணியமும் இல்லை, கவுரவமும் இல்லை.

வாரணம் ஆயிரம், நீதானே என் பொன்வசந்தம் என்று தன் படங்களுக்கு அழகான தமிழ் பெயர்களை வைத்த கவுதம் மேனன், நடுநிசி நாய்கள் என்ற தலைப்பையும் வைத்தார். கே.பாலச்சந்தருக்கு பிறகு தலைப்பில் கவனமும் கண்ணியமும் காக்கிறவர்கள் மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட சிலர்தான். இவர்களின் தலைப்புகளில் கனம் இருக்கும், கதை இருக்கும். நானே ஒரு டுபாக்கூடர் எனக்கிட்டேவா, மண்ணாங்கட்டி பயலுக, பித்தேரி, தீத்துக்கட்டு, பட்ற, தருதல, குபீர்,

நம்புங்க இதெல்லாம் இப்போது தயாரிப்பில் இருக்கிற சில படங்களோட தலைப்புகள். 3லட்சம் வார்த்தைகள் கொண்ட தமிழ் மொழியில் எப்படியெல்லாம் தலைப்பு வைத்திருக்கிறார்கள் பாருங்கள். ஒருவேளை இந்த தலைப்புகளுக்கும், இவர்கள் எடுக்கிற கதைக்கும் சம்பந்தம் இருப்பதாக வைத்துக் கொண்டால் அந்த கதையும், காட்சிகளும் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. தமிழில் வார்த்தைக்கு பஞ்சமில்லை. இயக்குனர்களின் கற்பனை வறட்சியே இதற்கு காரணம்.

எதையாவது ஏடாகூடமாக செய்து மக்கள் கவனத்தை படத்தின் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காக இப்படி தலைப்புகள் வைப்பதாக கூறப்படுகிறது. அதற்கு வேறு ஏதாவது நல்ல வழிகளை தேட வேண்டியதுதானே. தன் பிள்ளைகள் மற்றவர்களிடமிருந்து தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக எருமை, கழுதை, தண்டம்னு யாராவது பெயர் வைப்பார்களா? தயாரிப்பில் இருக்கும் இன்னும் சில தலைப்புகளை பாருங்கள்...

பட்டைய கிளப்பணும் பாண்டியா

ஆடாம ஜெயிச்சோமடா

நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்

நாங்கெல்லாம் ஏடாகூடம்

நாங்கெல்லாம் அப்பவே அப்படி

நீ என்ன பெரிய அப்பாடக்கரா

கள்ளபடம்

சுட்ட படம்

ஆயா வடை சுட்ட கதை

சேர்ந்து போலாமா

தலைகால் புரியல

காயலான்கடை கந்தன்

எவ்வளவோ பார்த்தாச்சு

மங்குனி பாண்டியர்கள்

ஆறுமுகம் காதலிக்கிறான்

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்

நட்பு காப்புக் குழு

கிடாரி பூசாரி மகுடி

நேரா போய் நேரா வா

பதினேழு ஜி.பி

8 எம் எம்

எண்றதுக்குள்ள

அழகர் களத்துல இறங்கிட்டாரு

இவை சின்ன பட்டியல்தான் இதை விட இன்னும் நிறைய இருக்கிறது. 

பஞ்சு மாமே!


கொய்யால இதெல்லாம் நம்மளால மட்டும்தான் முடியும்!கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டால்?

ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது.
அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..
அது என்னன்னா...!
1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.
2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும். ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..அப்டியே வெளிய தான் போக முடியும்.
இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."ப‌ச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது"
முதல் தளத்துல அறிக்கை பலகைல,
"முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு
இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா
இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு
இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.
மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு
அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும், "ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ" அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.
நாலாவது தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள் ..வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.
இதை விட வேற என்ன வேணும்... நல்ல குடும்பம் அமைக்கலாமே?
கடவுளே... மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும். அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.
ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.
அவ்ளோ தான்.....அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ... சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே.. அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது... சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..
ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை.. வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது .. இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான்
எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...பார்த்து சூதாணமா கீழே படிகளில் இறங்கவும் " அப்டின்னு போட்டிருந்தது..

23 May, 2014

Kochadaiyaan Movie Review


42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த யானை!


பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, யானைகள் போன்ற தோற்றமுடைய ‘மம்மூத்’ என்ற அரியவகை உயிரினங்கள் வாழ்ந்து வந்தன. தற்போது காண முடியாத இந்த வகை மம்மூத் குட்டி ஒன்றின் உடல், கடந்த 2007–ம் ஆண்டு சைபீரியாவில் ஒரு மான் மேய்ப்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடல், ‘மம்மி’ பாணியில் கெட்டுப்போகாமல் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்தது. அது, 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளது. 

அக்குட்டி, பிறந்து ஒரு மாதமே இருக்கும். 130 செ.மீ. உயரமும், 50 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. அதன் வால் பகுதி, மற்ற மிருகங்கள் கடித்ததால் காயமாக உள்ளது. தும்பிக்கையில் மண் ஒட்டி இருப்பதால், அக்குட்டி மூச்சுத்திணறி இறந்து இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அந்த மம்மூத் குட்டியை நன்கு பதப்படுத்தி, லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்துள்ளனர்.

முற்பிறவியில் கொலை செய்தவனைக் காட்டிக் கொடுத்த சம்பவம்

சிரியாவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தன்னை முற்பிறவியில் கொலை செய்தவனைக் காட்டிக் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. சிரியாவில் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியை சேர்ந்த 3 வயது ஆண் குழந்தை பிறக்கும் போதே தலையில் சிறிய கோடு போன்ற அடையாளத்துடன் பிறந்ததாகக் கூறப்படுகிறது. அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் தங்களது முற்பிறவியை நினைவில் கொண்டிருப்பார்கள் என்பது ட்ருஸ் தனி இனக்குழுவின் நம்பிக்கையாம். அதை உண்மையென்று நிரூபிக்கும் விதமாக அந்த சிறுவன் பேசும் வயதை எட்டியவுடன் தனது முற்பிறவி ரகசியங்களை கூறியுள்ளான். அதன்படி, முற்பிறவியில் தன்னுடைய பெயர் மற்றும் தான் வசித்த இடத்தைப் பற்றியும் அச்சிறுவன் தெரிவித்துள்ளான். மேலும், முற்பிறவியில் ஒருவன் தன்னை கோடாரியால் வெட்டிக் கொன்றதாக அதிர்ச்சித் தகவலைக் கூறிய சிறுவன், தன்னை புதைத்த இடத்தை மக்களுக்கு நேரில் சென்று காட்டியுள்ளான். அங்கிருந்த மக்களிடம் இது தொடர்பாக விசாரித்த போது அச்சிறுவன் குறிப்பிட்ட மனிதன் அங்கு வசித்து வந்ததும், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனதும் உறுதி செய்யப் பட்டது. அதனைத் தொடர்ந்து சிறுவன் காட்டிய இடத்தில் தோண்டிப் பார்த்துள்ளனர். 


அங்கே ஒரு ஆணின் மண்டை ஓடு மற்றும் கோடாரியும் கண்டெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தன்னைக் கொலை செய்தவனையும் நேரில் அடையாளம் காட்டியுள்ளான் அச்சிறுவன். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் செய்த கொலை குறித்து ஆதாரத்துடன் சிக்கியதால் கொலைகாரன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான். அதன் தொடர்ச்சியாக கைது செய்யப் பட்ட அக்கொலைக்காரன் சிறையில் அடைக்கப் பட்டான். இந்த சம்பவங்களை ஜெர்மனி நாட்டு தெரப்பிஸ்ட் ஆன டிரட்ஸ் ஹார்டோவிடம் சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார். ஹார்டோ இதை ஒரு புத்தகமாக எழுதியுள்ளார். அதில் சிறார்கள் குறித்தும் அவர்களின் மறு பிறப்பு குறித்தும் அவர் விளக்கியுள்ளார். இதுகுறித்து ஹார்டோ கூறுகையில், டாக்டர் எலி லாஸ், இதுகுறித்து தனது மரணத்திற்கு முன்பு என்னிடம் கூறினார் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை படித்தவர்களில் சிலர் இது கட்டுக்கதை என்றும், சிலர் நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கருத்துத் தெரிவித்துள்ளனர். 


21 May, 2014

யார் இந்த ஏ பி டி வில்லியர்ஸ்..?


அனைவருக்கும் தெரிந்த பதில் அவர் ஒரு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர்.பெங்களூரு அணிக்காக ஆடுகிறார் என்பது மட்டுமே.அனால் அவர் அது மட்டும் அல்ல.
1.தேசிய ஜூனியர் ஹாக்கி அணிக்கு தேர்வு செய்ய பட்டவர்.
2.தேசிய ஜூனியர் கால் பந்து அணிக்கும் தேர்வானவர்.
3.தேசிய ஜூனியர் ரக்பி அணியின் தலைவர்,
4.தேசிய நீச்சல் ஜூனியர் பிரிவில் 6 தேசிய சாதனைகளை படைத்தவர்.
5.தேசிய தடகள போட்டியில் ஜூனியர் பிரிவில் வேகமாக 100 மீட்டர் ஓடிய சாதனைக்கு சொந்தக்காரர்.
6.19 வயதிற்கு உட்பட்டோருக்கான பூ பந்து போட்டியில் சாப்பியன் பட்டம் வென்றவர்.
7.தன்னுடைய அறிவியல் ஆராய்சிக்காக நெல்சன் மண்டேலாவிடம் விருது வாங்கியவர்.;
இப்போது சொல்லுங்கள் யார் நிஜமான ஆல் ரவுண்டர்.?

16 May, 2014

chennai super police.movie


சீட்பெல்ட் க்ரூ...

சீட்பெல்ட் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்த வீடியோதான் இப்போது இணையத்தில் சூப்பர்ஹிட் மும்பைவாழ் திருநங்கைகளை ஹிஜ்ரா என்றழைக்கிறார்கள். இவர்களில் சிலர் ''சீட்பெல்ட் க்ரூ'' என்கிற ஒரு சிறிய குழுவை உருவாக்கியுள்ளனர். இந்தக்குழு மும்பையின் முக்கிய சாலைகளில் இறங்கி சீட்பெல் அணிவதன் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கி வருகின்றனர்.

14 May, 2014

11வது மாடி ஜன்னலில் நிர்வாணமாக ஆடிய பெண் !
தென் சீனாவில் உள்ள லியூசோ நகரில் இருக்கும் பிரபல ஹோட்டல் ஒன்றில் ஒரு ஆணும், பெண்ணும் வாடகைக்கு அறை எடுத்துள்ளனர். 11வது மாடியில் அறை எடுத்த அவர்கள் இரவு நேரத்தை ஒன்றாக கழித்துள்ளனர். காலையில் அந்த ஆண் அங்கிருந்து சென்றுவிட்டார். அதன் பிறகு அந்த இளம்பெண் நிர்வாணமாக ஜன்னல் வழியாக வெளியே சென்றார். கை, கால்களை உதறி அட்டகாசம் செய்த அந்த பெண்ணை போலீசார் அறைக்குள் இழுத்தனர். அவர் போதைப் பொருள் உட்கொண்டு இவ்வாறு செய்தது தெரிய வந்தது

11 May, 2014

எதுக்கும் தொடர்பில்லை!


குறையும் தனிமனித நேர்மை?

நேர்மை அல்லது தனிமனித ஒழுக்கத் துக்குப் பெயர்போனவர்கள் நம் இந்தியர்கள். அமெரிக்காவில் இருக்கும்போது பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் இதைப் பெருமைபொங்க சொல்வதைக்கேட்டு நானே புழங்காகிதம் அடைந்திருக் கிறேன். ஆனால், இன்றைக்கு நம்மிடம் நேர்மையும் தனி மனித ஒழுக்கமும் வேகமாகக் குறைவதைப் பார்த்தால்  வேதனையாகவே இருக்கிறது.நம்மவர்களுக்குத் தானதர்மம் என்பது புதிதல்ல. பழங்காலத் தில் சுமைதாங்கிக்கல் அமைப்பது தொடங்கி, அன்ன சத்திரங்கள் அமைப்பது எனப் பல்வேறு வகையில் தாங்கள் சம்பாதித்த செல்வத்தின் ஒருபகுதியை சமூகத்துக்காகத் திருப்பித் தந்தார்கள். மீதி மட்டுமே வாரிசுகளுக்குச் சென்றது. ஆனால் இன்றோ, நாம் இந்தச் சமூகத்திலிருந்துதான் சம்பாதித் தோம், அதில் பெரும்பகுதி இந்தச் சமுதாயத்துக்குத்தான் செல்ல வேண்டும்; அதுவும் தனது வாழ்நாளிலேயே எனப் பலரும் விரும்புகிறார்கள். இதற்கு முன்னுதாரணமாக மைக்ரோசாஃப்ட் பில்கேட்ஸ், வாரன் பஃபெட், ஹெச்சிஎல் சிவ்நாடார், விப்ரோ பிரேம்ஜி போன்றோரைக் கூறலாம். இந்தச் செயலை டாடா போன்ற குழுமங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்தன. இப்போதும் செய்துவருகின்றன. டாடா குழுமத்தின் பெரும்பகுதி பங்குகளை டிரஸ்ட்கள்தான் வைத்துள்ளன. டாடா குழுமம் செயல்படுத்தும் டிரஸ்ட்கள் அனைத்தும் உண்மையான, லாப நோக்கமற்ற சமூகத்துக்காகப் பாடுபடும் டிரஸ்ட்கள்.

இன்று நம் தமிழ்நாட்டிலும் பெரும்பாலான கல்வி நிறுவனங் கள் லாப நோக்கமற்ற டிரஸ்ட் முறையில்தான் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. ஆனால், இந்த டிரஸ்ட் களை நடத்தும் எத்தனைபேர் உண்மையாக, லாபமற்ற நோக்கோடு, சமூகச் சிந்தனையோடு நடத்துகிறார்கள்? இந்த நிறுவனங்களை நிறுவியவர்கள் முழுக்க முழுக்க லாபநோக்கோடு தான் நடத்துகிறார்கள். எத்தனை பள்ளிகளும், தனியார் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் வாங்கும் நன்கொடைக்கு ரசீது தருகின்றன? இந்த நிறுவனங்களின் நிறுவனர்கள் எத்தனையோபேர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையிட்டு, அபராதம் கட்டச் சொல்லியிருப்பது எல்லாருக்கும் தெரியும். நாணயமாக நடப்பவர்கள், தனிமனித ஒழுக்கத்தோடு இருப்ப வர்கள் இந்தச் செயல்களைச் செய்யமாட்டார்கள். உண்மைக்குப் புறம்பாக நடக்கமாட்டார்கள். டிரஸ்ட் மூலம் தனது சொந்த வாழ்வுக்குப் பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் கேவலமான ஒன்று.
தனிமனிதனாகட்டும், நிறுவனங் களாகட்டும் வரி ஏய்ப்பு செய்யும் வரை நாடு முன்னேறுவது கடினம். அமெரிக்கா போன்ற பொருளாதாரத்தில், வருமான வரித்துறைதான் ஒரு பெரிய சட்ட ஒழுங்கு நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. பல பெரிய கிரிமினல்களை இந்தத் துறையின் மூலம்தான் சிறைக்குக் கொண்டுவந்தார்கள். அரசியல்வாதிகள்தான் எடுத்ததற்கெல்லாம் லஞ்சம் வாங்குகிறார்கள் என்றால், அரசு வேலையில் அதிகாரிகள்கூட வாங்கவே செய்கிறார்கள். அரசுப் பணியிடங்களை நிரப்பு வதிலிருந்து, துணைவேந்தரை அமர்த்துவதுவரை எல்லா வற்றுக்கும் பணம்தான் பிரதானமான விஷயமாக இருக் கிறது. இதனால் நேர்மையான பலர் அரசாங்க வேலையே வேண்டாம் என நல்ல தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். அரசு வேலைகளில் கைநிறையச் சம்பளம், பென்ஷன் மற்றும் மருத்துவ வசதி, 100 நாட்களுக்கு மேலாக விடுமுறை என எத்தனையோ வசதிகள் இருந்தும் 'எக்ஸ்ட்ரா’ பணத்தை எதிர்பார்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்தத் தவறுகளைச் செய்பவர்களிடம் ஏன் செய் கிறீர்கள் என்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒரு விளக்கம் வைத்திருப்பார்கள். தாங்கள் செய்யும் தவறுகளுக்குப் பொய்யான ஒரு காரணத்தைத் தேடிக்கொள்வார்கள். ஆனால் உண்மை என்னவென்று பார்த்தால், அவர்களிடம் தனி மனித ஒழுக்கம் இல்லை.
பிற வளர்ந்த நாடுகளில்  இதுபோல் நடக்கிறதா? ஊழல் முழுவதுமாக இல்லாத நாடுகளே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், வளர்ந்த நாடுகளில் இந்தியாவில் நடக்கும் இந்த அளவுக்குத் தவறுகள்/ ஊழல் கள் நடப்பதில்லை என்று உறுதியாக அடித்துக்கூறலாம். அதற்கு முக்கியக் காரணம், சட்டதிட்டங்களைக் கடைப்பிடிப்பதில் எள்ளளவும் பிசகமாட்டார்கள். உதாரணத்துக்கு, ரஜத் குப்தாவை எடுத்துக்கொள்ளுங்கள். இவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்து ஐ.ஐ.டி டெல்லியில் படிப்பு முடித்து, அமெரிக்கா சென்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பு முடித்து அங்கேயே வேலை பார்த்து செட்டிலாகிவிட்டார். உலகளவில் பிரசித்தமான மெக்கன்ஸி நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டராக மூன்று முறை பணியாற்றினார். இந்தியாவில் ஐஎஸ்பி (Indian School of Business) என்ற எம்பிஏ படிக்கும் பள்ளியை நிறுவி உலகளவில் முதல் 15 ரேங்குக்குள் அந்தப் பள்ளியை கொண்டுவந்தார். இந்தியாவிலும் இவருக்கு ஏகப்பட்ட மதிப்பு.
இவ்வளவு இருந்தும் சுயஒழுக்கமற்ற ஒரு சிறிய தவறி னால் (இவர் டைரக்டராக இருந்த நிறுவனத்தின் பங்குச் சந்தை சார்ந்த செய்தியை பரிமாறிக்கொண்டார் என்பதற்காக) இவரின் தவறு நிரூபணமாகி அமெரிக்காவில் இவருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் வழங்கப்பட்டது. இவர் எந்த அளவுக்குக் கௌரவமாக இருந்தாரோ, அவையெல்லாம் இன்று எங்கோ போய்விட்டது. ஓய்வுக்காலத்தில் இவர் டைரக்டராக இருந்த பல பெரிய நிறுவனங்களும் இவரைப் பதவியைவிட்டு விலகச்சொல்லின. பணத்துக்கு ஆசைப்பட்டு மனிதன் தன்னைத்தானே கீழிறக்கிக் கொள்வதற்கு இதைவிட ஒரு சிறந்த உதாரணம் இருக்க முடியாது.வரி கட்டுவதில், நிறுவனத்தில் வேலை செய்வதில்,  லஞ்சம் தருவதில், சுயகௌரவத்துடன் இருப்பதில், சட்டத்துக்கு ஒருபடி மேலே சென்று நியாயமாக/ தர்மமாக நடப்பதி லாகட்டும் சுய ஒழுக்கத்துடன் செயல்படுவோம். இனியாவது நாம் திருந்துவோம்!

09 May, 2014

மனைவியைக் கவர ஒற்றைக்கால் நடனமாடும்!

 
நடனங்களில் பல வகை உண்டு.பரதநாட்டியம், மோகினி ஆட்டம், குச்சுப்புடி, கதக், ஒடிசி என்று உங்களுக்கு எல்லா வகையான நடனங்கள் பற்றியும் தெரிந்திருக்கலாம். ஆனால், தவளைகளின் நடனம் பற்றி யாருக்காவது தெரியுமா? சிலர் தவளை போல ஆடுவதைச் சொல்லவில்லை. நிஜமாகவே தவளைகள் ஆடும் காதல் நடனம் பற்றியது இது. ஆம், தவளைகளும் நடனமாடும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக ஆண் தவளைகள்தான் நடனத்தில் "எக்ஸ்பர்ட்" என்றும் கண்டறிந்துள்ளனர்.நடனமாடக்கூடிய 14 புதிய தவளை இனங்களை தென்னிந்தியாவிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சிலோன் ஜர்னல் ஆஃப் சயன்ஸ் என்ற பத்திரிக்கையில் இந்த புதிய இனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 
 
பின்னங்கால் நடனம்: தன்னுடைய இணையைக் கவர்வதற்காக ஆண் தவளைகள் இந்த வித்தியாசமான நடன முறையைக் கையாளுகின்றன.பின்னங்கால்களை லேசாக விரித்து, விரித்து வாயைக் குவித்து இந்த நடனத்தை ஆடி பெண் தவளைகளைக் தன்வசம் இழுக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலை: மகாராஷ்ட்ரா முதல் தென்குமரி வரைக் காணப்படும் மேற்குத் தொடர்ச்சிமலையில் இந்த வகைத் தவளைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. மில்லியன் ஆண்டுகள்: மத்திய அமெரிக்காவிலும், கிழக்கு ஆசியாவிலும் கூட இத்தகைய தவளைகள் காணப்பட்டாலும் இந்த இந்தியத் தவளை இனங்களிதான் 85 மில்லியன் ஆண்டுகளாக சரியான பரிணாம வளர்ச்சிப் பெற்றுள்ளன.LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...