|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 February, 2013

இந்தியாவை பழிவாங்குவோம்.


நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளியான அப்சல் குரு கடந்த சனிக்கிழமை திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டார். அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய ஜிகாத் குழு இன்று இஸ்லாபாத்தில் மாநாடு நடத்தியது.  இதில் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, அல் பத்ர் முகாகிதீன், ஐக்கிய ஜிகாத் கவுன்சில் உள்ளிட்ட இந்தியாவுக்கு எதிரான பல்வேறு போராளிக் குழுக்களைச் சேர்ந்த ஏராளமான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தேசிய பிரஸ் கிளப்பில் நடந்த இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அத்துடன் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்குவது மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புனிதப் போரை வலுப்படுத்துவது என்றும் சபதம் செய்தனர். இதுதொடர்பாக ஜெய்ஷ் இ முகமது இயக்க மூத்த தலைவர் முப்தி அஸ்கார் கூறுகையில், இந்திய அரசாங்கத்தையும், பாதுகாப்பு படைகளையும் எங்கள் இயக்கம் பழிவாங்கும் என்றார். ஐக்கிய ஜிகாத் கவுன்சில் தலைவர் செய்யது சலாஹூதீன் பேசும்போது, ‘காஷ்மீரில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் அப்சல் குரு தூக்கு தொடர்பாக பாகிஸ்தான் மவுனமாக இருக்கிறது. காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதால் நேரம் வீணாகிறது. எனவே, புனிதப்போர் மூலமாகத்தான் இதற்கு தீர்வு காண முடியும்’ என்றார். இது போன்று தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பாகிஸ்தான் தலைநகரில் மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடத்துவது கடந்த 4 ஆண்டுகளில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நித்யானந்தாவிற்கு மஹா மண்டலேஷ்வர் பட்டம்!




உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் மஹா கும்பமேளா திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவிற்கு இந்தியா முழுவதிலிருந்து இந்து மதக்குருக்களும், பக்தர்களும் என கோடிக்கணக்கானோர் இங்கு வந்து கங்கையில் புனித நீராடி செல்கின்றனர். நடிகை ரஞ்சிதாவுடன் கிசுகிசுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சுவாமி நித்யானந்தா இந்த விழாவிற்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பே வந்து கலந்துகொண்டார். அவருக்கு நாகா சாதுக்களின் மஹாநிர்வானி அகாரா என்ற அமைப்பினர் மஹா மண்டலேஷ்வர் என்ற கௌரவ பட்டம் வழங்கப்பட்டது. தெற்கில் இருந்து வரும் தீர்க்கதரிசிகளுக்கு இந்த கௌரவ பட்டம் வழங்குவது மரபு என்று அப்போது அந்த அமைப்பினர் கூறினர். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள், அவரது தனிப்பட்ட விசயமாக இருக்கிறது. இதில் மஹாநிர்வானி அகாரா ஒன்றும் செய்வதற்கில்லை என்றும் அவர்கள் கூறினர்.

உலக அங்கீகாரத்தை நோக்கி விஸ்வரூபம்!


கமல் எழுதி, இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் வெளிநாடுகளில் 25-ஆம் தேதியும், தமிழ்நாட்டில் 7-ஆம் தேதியும் ரிலீஸானது. உலக அளவில் உள்ள கமல் ரசிகர்களிடமிருந்தும், திரையுலகினரிடமிருந்தும்,  நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் விஸ்வரூபம் ஹாலிவுட் படங்களுக்கு இணையான மதிப்பை பெற்றுள்ளது தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய புகழைத் தேடி தந்துள்ளது. திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள் அடங்கிய ‘IMDB' எனும் இணையதளம் படங்களின் தன்மையை ஆராய்ந்தும், ரசிகர்களிடம் கருத்து கணிப்பு நடத்தியும் படங்களை வரிசைப்படுத்தும் அந்த வகையில் 4 நாட்களுக்கு முன் ரிலீஸான கமலின் விஸ்வரூபம் IMDB இணையதள ரேட்டிங்கில் 10-க்கு 9.5 மதிப்பெண் பெற்றுள்ளது.   மேலும் 14,000 ரசிகர்கள் கமலுக்கு சாதகமாக ஓட்டு போட்டிருக்கின்றனர். இதே நிலை தொடர்ந்து கமலின் விஸ்வரூபம் 25,000 ஓட்டுகளைப் பெற்றால் டாப் 250 படங்கள் வரிசையில் விஸ்வரூபமும் இடம்பிடிக்கும். இதுவரை எந்த தமிழ்ப் படமும் டாப் 250 படங்கள் லிஸ்டில் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கண்ணதாசனின் கடைசிப் பாடல் கம்போஸிங்


சென்னையில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இயக்குநர் பாக்யராஜ், ‘’ஒரு ரீலை ஒருமுறை பார்த்துவிட்டு உடனே பின்னணி இசை அமைக்கும் அவர் வேகத்தையும், திறமையையும் இந்திப் பட இசை அமைப்பாளர்கள் உட்பட வேறு யாரிடமும் நான் கண்டதில்லை. எனது வெற்றிப் படமான அந்த 7 நாட்கள் முக்கிய கதாபாத் திரங்களான மாதவன் நாயரும், கோபியும் எம்எஸ்வியும் அவரது குழுவின் உறுப்பினர் பிரசாத்தையும் மனதில் கொண் டே வடிவமைக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ’’இதுநாள் வரை தெரியாத ஓர் உண்மை, கவியரசு கடைசியாக கம்போசிங்கில் அமர்ந்தது, அந்த 7 நாட்கள் படத்தின், தென்றல் வந்து உன்னிடத்தில் என்ற பாடலின் பல்லவியே என்றும், அந்தப் பாடலின் சரணம் எழுதுவதற்கு நேரம் கிடைக்காமல் அமெரிக்கா போனதால், பாடலை முடிக்க முடியாமல் போனது’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் காதல் நகரம்!


கற்பழிப்பு நகரமா தானே இருக்கணும்? ஏதோ சதி நடந்துருக்குங்க! காதலர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சர்வேயில் இந்தியாவின் காதல் நகரமாக டில்லி தேர்வு செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர் குஷ்வந்த் சிங், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்ட நான்கரை லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த சர்வேயில் டில்லியை 53 ஆயிரத்து 174 பேர் தேர்வு செய்து ள்ளனர். மும்பைக்கு 49 ஆயிரத்து 010 பேரும், ஸ்ரீநகருக்கு 29 ஆயிரத்து 047 பேரும் வாக்களித்துள்ளனர். இது குறித்து டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் கூறுகையில், டில்லியை அனைவரும் நேசிக் கின்றனர்.  இங்குள்ள வெளிமாநிலத்தவரும் இதை தங்கள் சொந்த மண் போல் நேசிக்கின்றனர் என்று தெரிவித்து ள்ளார். 

காதல் இனிக்குதய்யா...!


காதல்' என்ற மூன்று எழுத்தை சுவாசிக்காதவர்கள் இருக்க முடியுமா என்பது சந்தேகம் தான். பெரும்பான்மையானோர், ஏதாவது ஒரு தருணத்தில் காதல் என்ற காற்று அவர்களை தொட்டுச் சென்றிருக்கும்.   காதல் என்ற வார்த்தை சக்தி மிக்கது. எதையும் சாதிக்கு தூண்டும் சக்தி அதற்கு உண்டு. இதற்கு எல்லையும் கிடையாது. சாதி, மதம், மொழி, இனம், நாடு, நிறம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து இரண்டு இதயங்கள் இணைவது தான் காதல் . உலகம் முழுவதும், பிப்.14ம் தேதி, காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர்கள் மட்டுமின்றி, திருமணமான தம்பதியரும் பரிசு, வாழ்த்துகளை வழங்கி அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.   எப்படி வந்தது:  காதலர் தினத்துக்கு முன்னோடியாக கருதப்படும் வேலன்டைன் துறவி, ரோம் சாம்ராஜ்யத்தை சேர்ந்தவர். ரோம் அரசர் இரண்டாம் கிளாடியஸ், இளைஞர்களை போர் களத்திற்கு அழைத்தார். அதற்கு வரவேற்பில்லாததால், அவர்களின் திருமணத்திற்கு தடை விதித்தார் எனவும், இதற்கு மாறாக வேலன்டைன் எனும் பாதிரியார் இளைஞர்களுக்கு ரகசிய திருமணம் செய்து வைத்தார் எனவும், ஆத்திரமடைந்த அரசர், வேலன்டைனுக்கு மரண தண்டனை விதித்ததாகவும் கூறப்படுகிறது. 

பின் அவரது நினைவு நாளையே "வேலன்டைன் தினமாக' இளைஞர்கள் கொண்டாட தொடங்கினர். 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான், வேலன்டைன் தினம் முழுவதும் காதலர் தினமாக மாறியது.  எப்படி கொண்டாடுவது:  மேற்கத்திய நாடுகளில் இத்தினம், பல ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. வாழ்த்து அட்டைகள், சாக்லெட்டுகள், ரோஜாக்கள், ஆடை ஆபரணங்கள் என பரிசுப் பொருட்களை காதலர்கள் பரிமாறிக் கொள்கின்றனர். சில ஆண்டுகளாக இந்தியாவிலும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய இன்டர்நெட் யுகத்தில் சமூக இணையதளங்கள், இ-மெயில், எஸ்.எம்.எஸ், இன்டர்நெட் என காதலர் தினம் புதிய பரிணாமத்தில் செல்கிறது.   எதிர்ப்பை மீறி:  காதலர் தினம் என்பது மேற்கத்திய பண்பாடு; வியாபார நோக்கங்களுக்காக வர்த்தக நிறுவனங்கள், இத்தகைய கலாசாரத்தை இந்தியாவிலும் பரப்புகின்றன; அதை தடைசெய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. காதல் என்றாலே எதிர்ப்பு தான். அது போல, காதலர் தினமும் பல எதிர்ப்புகளை தாண்டி கொண்டாடப்படுகிறது. 

காதலைப் பற்றி திருக்குறளில் தொடங்கி, இலங்கியங்கள், புலவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பல அர்த்தங்களை கூறுகின்றனர்.   காதல் என்ன கத்தரிக்காயா!  காதல் என்பது மனது சம்பந்தப்பட்டது. இது ஒன்றும் பொருள் அல்ல. விரும்புவதை அடைவதற்கு. பள்ளிப்பருவத்தில் கூட காதல் சம்பவங்கள் நடக்கின்றன. இது ஒருவிதமான ஈர்ப்பே தவிர; காதலாக இருக்க முடியாது. தற்கால இளைஞர்கள், ஈர்ப்புக்கும், காதலுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும். இளமைப் பருவத்தின் ஒரு "பகுதி' தான் காதல். குடும்ப சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, வருங்கால இளைஞர்கள் செயல்பட வேண்டும்.   உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்து விடு: அவளை உயிருக்கு உயிராய் நினைத்து விடு!

காதலில் வெற்றி பெற...?


திருமணத்தில் தடையுள்ளவர்கள், இந்த கடிதத்தைப் படித்தால் சிறந்த வாழ்க்கைத்துணை அமையும் என்பது நம்பிக்கை. விதர்ப்பதேசத்தின் ராஜா பீஷ்மகரின் மகள் ருக்மிணி. இவள் கிருஷ்ணரைக் காதலித்தாள். ஆனால், ருக்மிணியின் அண்ணன் ருக்மியோ அவளை சேதி நாட்டு இளவரசன் சிசுபாலன் என்பவனுக்கு திருமணம் செய்ய நிச்சயித்தான். இதை விரும்பாத ருக்மணி, கிருஷ்ணரைத் திருமணம் செய்யும் விருப்பத்தை ஏழு ஸ்லோகங்களாக எழுதி அனுப்பினாள். அவை..  

கண்ணபிரானே! தங்களுடைய தகுதியான குணங்களையும், உன்னதமான அழகையும் பற்றி கேள்விப்பட்டு என் மனம் உங்கள் வசம் முழுவதுமாக வந்துவிட்டது.  தங்கள் ஒழுக்கம், குணம், வடிவம், கல்வி, இளமை,தைரியம், தர்மசிந்தனை ஆகியவை யாவும் என்னிடமும் இருப்பதாக நினைக்கிறேன்.  என் ஆத்மாவை, சிங்கம் போன்ற வீரமிக்க உங்களுக்கு என்னை அர்ப்பணித்து விட்டேன்.  உங்களைக் கணவராக அடைவதற்கு, பல ஜென்மங்களாக விரதங்கள், ஹோமங்கள் உள்ளிட்ட சடங்குகளை சரியான முறையில் நிறைவேற்றியிருப்பதாகக் கருதுகிறேன். என்னைத் தாங்களே கைபிடிக்க வேண்டும். எனக்கு விருப்பமில்லாத திருமணம் நடப்பதற்கு முதல்நாளே இங்கு வந்து, எதிரிகளைத் தோற்கடித்து, துவாரகைக்கு தூக்கிச் சென்று, விதிகளின்படி திருமணம் செய்ய வேண்டுகிறேன்.  எங்கள் குலவழக்கப்படி, திருமணத்திற்கு முன்தினம் அம்பிகை கோயிலுக்குச் செல்வேன். பூஜை முடிந்து வெளியே வந்ததும் என்னைக் அழைத்துச் செல்லலாம். யோகிகளாலும் மகான்களாலும் பூஜிக்கப்படும் தங்கள் திருவடிகளை, தினமும் பூஜிக்கும் பாக்கியம் வேண்டும்.

விசாரணை நம்பிக்கைக்குரிய வகையில் இருக்க வேண்டும்.



 இலங்கையில்  நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, சர்வதேச அளவில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும், '' என, ஐ.நா.,வுக்கான, சர்வதேச மனித உரிமை கமிஷனர் நவநீதம் பிள்ளை வலியுறுத்தியுள்ளார். இலங்கையில், 2009ல், விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதி கட்ட சண்டையில், பிரபாகரன் கொல்லப்பட்டார். இதையடுத்து, ஏராளமான விடுதலை புலிகள், அரசு படைகளிடம் சரணடைந்தனர்.இந்த சண்டையின் போது, போர் குற்றம் நடந்ததாக, ஐ.நா., குற்றம் சாட்டியிருந்தது. இது குறித்து விசாரிக்க வேண்டும், என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வற்புறுத்தின. இலங்கை போருக்கு பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அதிபர் ராஜபக்ஷே தலைமையில், நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.  இந்த குழு ஏராளமான பரிந்துரைகளை அளித்தது. ஆனால், பெரும்பாலான பரிந்துரைகளை, இலங்கை அரசு நிறைவேற்றவில்லை, என, ஐ.நா.,மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது, 16 பக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது:குடிபெயர்ந்த மக்களை குடியேற்றுவதில் முன்னேற்றம் காணப்பட்டாலும், மனித உரிமை மீறல் குறித்து, நல்லிணக்க ஆணைக்குழு அளித்த பரிந்துரையின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. போர் முடிந்த பின்பும், தமிழர்கள் பலர் கடத்தப்பட்டுள்ளனர்; சிலர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் பலரை காணவில்லை. இந்த விஷயத்தில் அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது.  "நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படும்' என, இலங்கை அரசு உறுதியளித்துள்ளது. ஆனால், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை, சர்வதேச அளவில், நம்பிக்கைக்குரிய, பாகுபாடு அற்ற விதத்தில் சுதந்திரமாக இருக்க வேண்டியது அவசியம்.இவ்வாறு நவநீதம் பிள்ளை, தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதிக்கு எதிராக வழக்கு!

 
சூரியநெல்லி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியை விபசாரி எனவும், அவர் விபசார தொழில் செய்து வந்ததால், கற்பழிப்பு குற்றம் ஆகாது எனவும் ஹைகோர்ட் முன்னாள் நீதிபதி, கூறிய தீர்ப்பு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதிக்கு எதிராக வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள சூரியநெல்லி கற்பழிப்பு வழக்கில் தீர்ப்பு கூறிய ஹைகோர்ட்டின் முன்னாள் நீதிபதிகளில் ஒருவரான வசந்த், ‘‘வழக்கில் தொர்புடைய மாணவி விபசார தொழில் செய்து வந்ததால், கற்பழிப்பு குற்றம் ஆகாது'' என்று தீர்ப்பு கூறியிருந்தார். அத்துடன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தியும் இருந்தார். 
 
நீதிபதியின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரளாமாநில சட்டப்பேரவையிலும், நீதிபதிக்கு எதிரான கருத்துக்களை எதிர்க்கட்சிகள் கூறினர். இதற்கிடையில் அவருடைய இந்த கருத்தை எதிர்த்து அவதூறு வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு அனுமதி வழங்கும்படி, கேரள மாநில அரசு தலைமை வக்கீலிடம், எம்.பிரகாஷ் என்பவர் மனு தாக்கல் செய்து இருக்கிறார். பிரகாஷ் தாக்கல் செய்துள்ள மனுவில், "நீதிபதி வசந்த் தெரிவித்த கருத்துகள் பொறுப்பற்றவை. அவர் வகித்து வந்த ஹைகோர்ட் நீதிபதி பதவியின் கண்ணியத்துக்கு பொருத்தமானவை அல்ல. இது, நீதித்துறைக்கு எதிரான கிரிமினல் அவதூறு" என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். பிரகாஷ், ஹைகோர்ட்டின் முன்னாள் ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிராடு MP,MLA க்கள்

தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் சம்பளத்திலும் வருமான வரி பிடித்தம் செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதிலளிக்க கோரி மத்திய அரசு வழக்கறிஞருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி மனு தாக்கல் செய்த வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உள்ளகரத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: "எம்.பி.,க்கள் ஒவ்வொருவரும் 11.40 லட்சம் ரூபாய்; எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவரும் 5.60 லட்சம் ரூபாய், ஆண்டு தோறும் சம்பளமாக பெறுகின்றனர். இவர்களுக்கான இந்த சம்பளத்திற்குரிய வருமான வரியை மத்திய அரசும் மாநில அரசும் பிடித்தமே செய்வதில்லை. 
 
2006 -11ம் ஆண்டில் பதவி வகித்த எம்.எல்.ஏ.,க்கள் தாக்கல் செய்த மனுக்களைப் பார்க்கும் போது, கிட்டத் தட்ட எட்டு எம்.எல்.ஏ.,க்களுக்கு நிரந்தர கணக்கு எண்ணே இல்லை. அதே சமயம் ஆறு எம்.எல்.ஏ.,க்கள் பான் கார்ட் பெற்றிருந்தும் வருமானம் இல்லை என கூறியுள்ளனர். சில எம்.பி.,க்கள் குறைவான தொகையை வருமான வரியாக செலுத்தியுள்ளனர். இதுகுறித்து 2011ம் ஆண்டு வருமான வரித் துறைக்கு புகார் அனுப்பினேன். எனவே எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்களுக்கான சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் செய்ய பார்லிமென்ட் விவகார அமைச்சக செயலர் மற்றும் சட்டசபை செயலருக்கு, உத்தரவிட வேண்டும். 2006-12ம் ஆண்டில் வருமான வரி செலுத்த தவறிய எம்.பி.,க்கள் எம்.எல்.ஏ.,க்களிடம் திருப்பி வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இம்மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.கே.அகர்வால், நீதிபதி வெங்கட்ராமன் அடங்கிய முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வழக்கறிஞருக்கும், சட்டசபை செயலருக்கான வழக்கறிஞருக்கும் உரிய நோட்டீஸ் வழங்குமாறு மனுதாரரின் வழக்கறிஞர் மணிகண்டன் வரதனுக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

மாநிலத்தில் குற்றங்களுக்கு வெளிமாநிலத்தவர்களே காரணம்.


மகாராஷ்டிராவை சேர்ந்த 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதற்காக ராஜூ பஸ்வான் என்ற பீகார் மாநிலத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டான். போலீ்சார் விசாரணையின் போது மராட்டிய மாநிலத்தில் பீகாரிகளுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக இதை செய்ததாக வாக்குமூலம் கொடுத்திருந்தான். இந்நிலையில் கோல்காபுரில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய ராஜ் ‌தாக்கரே, "பீகார் மற்றும் உத்தர்பிரதேசத்தில் இருந்து மும்பைக்கு தினமும் 56 ரயில்கள் இயக்கப்படுகின்றன. வட இந்தியர்களை மகாராஷ்டிராவுக்குள் அதிகம் நுழைவதற்கு ரயில்வே அமைச்சகம் உதவி செய்கிறது. மாநிலத்தில் நடைபெறும் குற்றங்களுக்கு வெளிமாநிலத்தவர்கள் தான் காரணம் என்றார் வெளிமாநிலத்தவர்கள் யாராவது நம் மாநிலப் பெண்களை தொட்டால் அவர்களது கைகளை வெட்ட வேண்டும். இதற்கு கட்சி தொண்டர்கள் என்னிடம் அனுமதி கேட்கத் தேவையில்லை. இவ்விவகாரத்தில் ‌போலீசார், நவநிர்மான் சேனா தொண்டர்களின் செயல்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

பாரீஸ் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கதீட்ரல் தேவாலயத்துக்கு, உடலை மறைக்கும் கால் வரை நீண்ட கோட் அணிந்து 8 பெண்கள் வந்தனர். பிரார்த்தனைக்காகவே வருகிறார்கள் என்றே அங்கிருந்தவர்கள் நினைத்திருந்தனர். திடீரென இந்த 8 பெண்களும் அவர்கள், அணிந்திருந்த கோட்டுகளை கழட்டிவிட்டு, கோஷங்களை எழுப்ப தொடங்கினர். அப்போதுதான், அவர்கள் டாப்-லெஸ் ஆர்ப்பாட்டம் நடத்த வந்தவர்கள் என அங்கிருந்தவர்கள் தெரிந்து கொண்டனர். "போப் இனி இல்லை" எனவும், "குட்பை போப் பெனடிக்ட்" என்றும் இவர்கள் கோஷம் எழுப்பினர். புனித போப்பாண்டவர் பெனடிக்ட் XVI பதவி விலகுவதாக அறிவித்துள்ளதை அடுத்தே இவர்கள் இந்த அரை நிர்வாண ஆட்டத்தை பேட்டனர். "இது ஒரு புனிதமான இடம். இங்கு இப்படியெல்லாம் செய்யக்கூடாது" என்று அங்கிருந்த பிரெஞ்ச் பெண் ஒருவர் கூறியதையும் இவர்கள் கேட்பதாக இல்லை. அதையடுத்து, தேவாலய காவலர்கள் வந்து இவர்களை கைகளைப் பிடித்து வெளியே இழுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்கு!



வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார். இதனால் அவர்கள் தூக்கிலிடப்படவுள்ளனர். பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு ஆகியோர் சமீபத்தில் தூக்கிலிடப்பட்டனர். இந்த நிலையில் அடுத்து யார் என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்து உலவி வரும் நிலையில் வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் கருணை மனுக்களை குடியரசுத்தலைவர் நிராகரித்துள்ள செய்தி வந்துள்ளது. இந்த நால்வரின் பெயர்கள் ஞானப்பிரகாசம், சைமன், மீசைக்கார மாதையா, பிலவேந்திரன் ஆகியோர் ஆவர். இவர்கள் நால்வரும் கர்நாடக மாநிலம் பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 1993ம் ஆண்டு பாலார் காட்டில், வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் சேர்ந்து 21 போலீஸாரை குண்டு வைத்துத் தகர்த்துக் கொன்றனர். இந்த வழக்கில் இந்த நான்கு பேருக்கும் மைசூர் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. அதை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றம் போனது. உச்சநீதிமன்றமோ மேல்முறையீடு செய்த 7 பேரில் நால்வரின் ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையாக அதிகரித்து உத்தரவிட்டது. தற்போது அந்த மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் நாலவரும் விரைவில் தூக்கிலிடப்படுவார்கள்

காதலில் சொதப்புவது தமிழ்நாடுதானாம்.

 
இந்தியாவிலேயே தமிழ் நாட்டுக்காரர்களிடம்தான ரொமான்ஸ் உணர்வு குறைவாக இருக்கிறதாம். அதாவது தமிழகத்தில்தான் மிகவும் குறைந்த அளவில் காதல் திருமணங்கள் நடக்கிறதாம். தேசிய குடும்ப சுகாதார மையம் நடத்திய சர்வேயில்தான் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அளவிலான காதல் திருமணங்களின் சராசரி 10 ஆக உள்ளது. குறிப்பாக தென் மாநிலங்களிலேயே தமிழகத்தில்தான் மிகவும் குறைந்தஅளவிலான காதல் திருமணங்கள் நடைபெறுகிறதாம். தமிழகத்தில் வெறும் 2.6 சதவீத காதல் திருமணங்கள்தான், அதாவது கலப்பு திருமணங்கள்தான் நடக்கின்றனவாம். இந்த ஆய்வுக் கட்டுரையை குமுதின் தாஸ், கே.சி.தாஸ், டி.கே.ராய், பி.கே.திரிபாதி ஆகியோர் எழுதியுள்ளனர்.இந்த சர்வே முடிவை செய்தியாளர்களிடம் வெளியிட்டவர் வேறு யாருமல்ல, சாட்சாத் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்தான்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...