|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 May, 2012

பார்த்ததில் பிடித்தது ...!

வெளிநாடுகளில் பணிபுரியும் நமது நட்புக்கள் இவ்வாறுதான் நம்முடன் . 


நட்புகளின் வாழ்வின் வலியை காண முடிகின்றது இந்த புகைப்படம் மூலம் 


வேதனை கண்ணீருடன் !!!!!I have no words to write to me ..... Except for the tears 


கருத்து எழுத வார்த்தைகளே இல்லை என்னிடம்..... கண்ணீரை தவிர.. 


சமைப்பதும்;குளிப்பதும்; அட்டவணையில் தொங்க;ஊர்ச் சாமான்கள் 


படுக்கைக்குக் கீழே பதுங்கிக்கிடக்க; காலணிகள் ஒரத்தில் ஒதுங்கிக் கிடக்க;

கனமான இதயத்துடன் கவனமாக உழைக்க வந்தத் தேசத்தில்; நாங்கள் 


ஓய்வெடுக்கும் இடம்....!!!


டெக்னாலஜி சோ மச் இம்ரூவ்டு மச்சி!


தமிழ்நாட்டில் 1.96 லட்சம் மக்களுக்கு எய்ட்ஸ் நோய்..!! செய்தி :


# உலகில் 20 பேருக்கு பன்றி காய்ச்சல் இருந்தபோது 2 மில்லியன் மக்கள் 


முக கவசம் அணிந்து நடந்தார்கள் ஆனால், உலகில் 2 மில்லியன் மக்களுக்கு 


எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிந்தும் 20 பேர் கூட "காண்டம்" அணிய தயாராக 


இல்லை.






10ம் வகுப்பு மாணவனை கழுத்தை அறுத்துக் கொன்ற சக மாணவன் (செய்தி )

’பிறந்தவுடன் பிரசவ வார்டில் மருத்துவரைக் கொன்ற குழந்தை’ எனும் 


செய்திதான் பாக்கி?


கூடங்குளம் அணுஉலையும், அரசின் அடக்கு முறையும் - உச்சநீதிமன்ற 


நீதிபதி தலைமையில் பொது விசாரணை!


 கரண்டே இல்லாத ஊருக்கு எதுக்குடா லைட்டு....? காந்தி-ஜியோட அகிம்சை 


குரங்கு



கலாமின் உண்மை முகம்........ஞானி சொல்லும் உண்மை இது ஒரு மீள்பதிவு.. 

பதிவை தேட ... http://www.facebook.com/photo.php?

fbid=295563037196956&set=a.243236522429608.60705.206848242735103&type=1

இதை பார்த்ததும், உங்கள் வயிறு எரியவில்லையா? வேளாண் அமைச்சர், 


ஐபில் போட்டிகளில் பிசியாக இருக்கிறார்....இந்த ”எச்சகளை சரத்பவார்” 


கிரிகெட் பாத்துக்கிட்டு இருக்கான், ”மண்னுமோகன்” வழக்கம் போல 


ஊமைகோட்டான் போல சும்மாயிருக்கு, ”சாக்கு” இல்லேன்னு சாக்கு 


சொல்லுது ”பிரணாப் கிழம்”.......



இதே நாள்...



  • சிப்பாய் கழகம் துவங்கியது(1857)
  • நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவரானார்(1994)
  • அன்னையர் தினம் முதன் முதலில் அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது(1908)
  • ருமேனியா, துருக்கியிடம் இருந்து விடுதலை பெற்றது(1877)

சென்னையில் 7 இடங்களில் புதிதாக மேம்பாலங்கள் !

சென்னையில் 7 இடங்களில் புதிதாக மேம்பாலங்கள் கட்ட மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாலங்கள் அமைய இருக்கும் இடங்கள்:
1. மகாலிங்கபுரம்- வடக்கு உஸ்மான், தெற்கு உஸ்மான் சாலை மேம் பாலங்களை இணைத்து அண்ணாசாலை வரை ஒரே மேம்பாலமாக அமைத்தல. அல்லது தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தை அண்ணாசாலை வரை நீட்டித்தல்.
2. எழும்பூர் ஆதித்தனார் சாலை, பாந்தியன் சாலை மற்றும் டாக்டர் ருக்மணி லட்சுமி சாலை சந்திப்பு.
3. கல்லூரி சாலை, ஸ்டெர்லிங் ரோடு மற்றும் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை சந்திப்பு
4. சாலி கிராமத்தில் ஆற்காடு சாலை மற்றம் கே.கே. நகர் 80 அடிசாலை சந்திப்பு.
5. மந்தவெளி பஸ்நிலையம் அருகே
6. பாரதிசாலை மற்றும் ராயப்பேட்டை மணிக்கூண்டு சந்திப்பு
7. கோட்டூர்புரத்தில் காந்தி மண்டபம் சாலை மற்றும் பொன்னியம்மன் கோவில் சந்திப்பு.

உடற்பயிற்சியை செய்யாமல் எடையை குறைக்க

கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது. அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும். இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த கொதிப்பு மற்றும் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.மேலும் வெந்தயத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், எடை அதிகரிக்க வழி இல்லை மற்றும் உடலில் கலொரி குறைவாக இருந்தாலும் எடை அதிகரிக்காது.

எப்படியெல்லாம் சாப்பிடலாம் இரவில் ஒரு ஸ்பூன் வெந்தய விதையை நீரில் ஊற வைத்து, காலையில் சுடு தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுப்பொருளை வெளியேற்றுவதோடு, உடல் எடையையும் குறைக்கும்.வெந்தய விதையை சாதாரண தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதோடு, ஜீரண சக்தியும் கூடும்.வெந்தய விதையை பொன்னிறமாக வறுத்து அதை பொடியாக்கி, காற்று புகாத ஒரு டப்பாவில் வைத்து, உண்ணும் உணவில் கலந்து சாப்பிடலாம்.வெறும் வயிற்றில் டீ யுடன் வெந்தயப் பொடியைக் கலந்து சாப்பிடலாம். இதனால் அடிக்கடி பசி ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும்.எனவே வெந்தயத்தை சாப்பிடுங்க!! எடையை குறையுங்க!!

19ந் தேதி முதல் கார் கண்ணாடியில் கூடுதலாக ஒட்டப்படும் சன் கன்ட்ரோல் ஃபிலிமுக்கு விதிக்கப்பட்ட தடை!


வரும் 19ந் தேதி முதல் கார் கண்ணாடியில் கூடுதலாக ஒட்டப்படும் சன் கன்ட்ரோல் ஃபிலிமுக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வருகிறது. தடையை மீறினால் அபராதம் மற்றும் லைசென்ஸ் பறிமுதல் நடவடிக்கைகள் பாயும்.கார்களில் கூடுதலாக ஒட்டப்படும் சன் கன்ட்ரோல் ஃபிலிம்களுக்கு கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. காரை பயன்படுத்தி நடக்கும் சமூக விரோத செயல்களை தவிர்க்கும் வகையில் இந்த தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் அறிவித்தது.வரும் 19ந் தேதி முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. தடை அமலுக்கு வந்த பின் சன் கன்ட்ரோல் ஃபிலிம் காரில் ஒட்டப்பட்டிருந்தால் முதல்முறை ரூ.100 அபராதமும், இரண்டாவது முறை ரூ.300 அபராதமும் விதிக்கப்படும்.தொடர்ந்து இதுபோன்று ஒட்டப்பட்டிருந்தால் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்டும் என்று போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. கூடுதலாக ஒட்டப்படும் சன் கன்ட்ரோல் ஃபிலிமுக்கு மட்டுமே இந்த தடை உத்தரவு பொருந்தும்.கார் வாங்கும்போதே ஒட்டப்பட்டிருக்கும் டின்டட் கண்ணாடிகளுக்கு இந்த தடை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கூடுதலாக சன் கன்ட்ரோல் ஃபிலிம் ஒட்டியிருப்பவர்கள் அதை உடனடியாக நீக்கிவிடுவது நல்லது.

இன்டர்நெட் காதல்...?


பேஸ்புக் மூலம் மோசடியாக காதல் வலை வீசி சென்னையைச் சேர்ந்த சில பெண்களிடம் வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் ரூ. 40 லட்சம் வரை சுருட்டியுள்ளனர். ஏமாந்து போன பெண்கள் காவல்துறையின் உதவியை நாடி வந்துள்ளனர்.கண்ணால் கண்டு காதலிக்கும் காலம் ஓல்டு பேஷனாகிவிட்டதால் இப்பொழுது அதிகம் பேர் பேஸ்புக், இண்டர்நெட் மூலம் காதலிக்கத் தொடங்கிவிட்டனர். இதைப் பயன்படுத்தி நைஜீரியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இருந்து சிலர் மோசடியாக காதல் வலை வீசி பலரையும் ஏமாற்றிப் பணம் கறந்து வருகின்றனர்.இப்படித்தான் சென்னையைச் சேர்ந்த கோடீஸ்வர பெண்கள் இருவர் 40 லட்சம் ரூபாயை பறிகொடுத்துவிட்டு சமீபத்தில் போலீஸ் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு மட்டும் இன்டர்நெட் மூலம் காதல் வலையில் பெண்களை வீழ்த்தி 20.3 லட்சம் டாலர் பணத்தை நூதனமாக திருடியுள்ளதாக தெரிவிக்கிறது போலீஸ் தரப்பு புள்ளிவிபரம்.கண்ணால் கண்டு காதலிக்கும் ஆண்களே சில நாட்களில் காணாமல் போய்விடுகின்றனர். ஆனால் முகமும் தெரியாமல் முகவரி தெரியாமல் இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் காதல் வலையில் சிக்குகின்றனர். அவர்களின் ஆசை வார்த்தையில் மயங்கி அவர்களின் செலவிற்கு லட்சம் லட்சமாக பணமும் அனுப்பி வைக்கின்றனர்.ஆன்லைன் பேங்கிங் மூலம் பணத்தை பெற்றுக்கொள்ளும் அந்த இளைஞர்களும் கடைசியில் காதலிகளுக்கு டாடா காட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றன. கடந்த சில வருடங்களாகவே இதுபோன்ற இன்டர்நெட் காதல் மோசடிகள் சைபர் கிரைம் குற்றப்பிரிவுக்கு வந்த வண்ணம் உள்ளன.

சென்னை பெண்கள் இந்த இன்டர் காதலர்களின் வலையில் சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற கோடீஸ்வர பெண் சிக்கியுள்ளார். இன்டர்நெட் மூலம் அறிமுகமான காதலனை திருமணம் செய்ய முடிவு செய்து காதலனுக்கு லட்சக்கணக்கில் பணம் அனுப்பியுள்ளார். வரும் ஜுலை மாதம் சென்னையில் திருமணத்தை வைத்துக்கொள்ள இருவரும் முடிவு செய்திருக்கிறார்கள்.திருமணத்துக்குப்பிறகு சென்னையில் தங்கிவிடுவதாக தென் ஆப்பிரிக்க காதலன் விட்ட கதையை கதை விட்டதை நம்பி கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீயும் ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்பியபடி இருந்தார். சென்னைக்கு வந்து குடியேறுவதற்காக தனது உடமைகளை கப்பல் மூலம் கண்டெய்னரில் அனுப்பி வைப்பதாக காதலன் சொல்லி இருக்கிறான். அதற்கான செலவையும் ஜெயஸ்ரீயே ஏற்றுக்கொண்டார்.

கம்பி நீட்டிய காதலன் கப்பலில் அனுப்பும் பொருட்களை எடுத்து வைத்துக்கொள், நான் விமானத்தில் வருகிறேன் என்று காதலன் சொன்ன இனிப்பான கதையை நம்பி ஜெயஸ்ரீ மோசம் போய்விட்டார். காதலன் சொன்னபடி கப்பலில் கண்டெய்னர் வந்தது. ஆனால் கண்டெய்னரை திறந்து பார்த்தபோது, அதற்குள் பொருட்கள் எதுவும் இல்லை. வெறும் பேப்பர் கட்டுகள் மட்டும் இருந்தது.பலவாறாக கதை சொன்ன தென் ஆப்பிரிக்க காதலன் ஜெயஸ்ரீயிடமிருந்து ரூ.25 லட்சம் வரை கறந்துவிட்டு கம்பி நீட்டி விட்டான். அதன்பிறகு அந்த காதலன் ஜெயஸ்ரீயோடு இன்டர்நெட்டில் பேசுவதை நிறுத்திக்கொண்டான்.இந்த காதல் மோசடியில் சிக்கி ரூ.25 லட்சம் பணத்தை பறிகொடுத்த ஜெயஸ்ரீ தனது புகார் மனுவில் காதலன் பெயரையோ, முகவரியையோ, அவனது போட்டோவையோ கொடுக்கவில்லை. எல்லாம் போலி என்றும், அதனால் எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.

ரூ. 15 லட்சம் இழந்த பெண் இதேபோல பெயர் சொல்ல விரும்பாத இன்னொரு பெண்ணும், இன்டர்நெட் காதல் வலையில் சிக்கி ரூ.15 லட்சத்தை காதலனிடம் இழந்துவிட்டதாக புகார் கொடுத்திருந்தார். இந்த 2 புகார் மனுக்களும் மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இன்டர்நெட், பேஸ்புக், செல்போன் மூலம் காதலிக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற காதலில் காதல் ஜோடிகள் முகம், முகவரி தெரியாமல் கூட காதலில் மூழ்கி திளைக்கிறார்கள். இது விபரீதத்தில் முடிகிறது, எனவே பெண்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். ஆண்களே, பெண்களே முகம் பார்த்துக் காதலியுங்கள், இப்படி மோசம் போகாதீர்கள்..

திருமணமான பெண்கள் சீதையைப் போல வாழ வேண்டும்!


 திருமணமான பெண்கள் சீதையை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும். சீதையைப் போல வாழ வேண்டும் என்று பாம்பே உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஒருவர், தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளார். தனக்கு போர்ட்பிளேருக்குப் பணிமாற்றம் ஆகியுள்ளதாகவும், ஆனால் தன்னுடன் வந்து வசிக்க மனைவி மறுத்து வருவதாகவும் அவர் காரணம் கூறியுள்ளார்.இந்தத் தம்பதிக்கு 2000மாவது ஆண்டு திருமணமானது. அந்தப் பெண் மும்பையைச் சேர்ந்தவர். அவரது கணவர் கொல்கத்தாவைச் சேர்ந்தவர். திருமணமானதும் பணி நிமித்தமாக கப்பலிலேயே இருந்துள்ளார் அப்பெண்ணின் கணவர். அப்பெண் மும்பையிலேயே தங்கியிருந்தார்.2005ம் ஆண்டு போர்ட் பிளேர் துறைமுகத்திற்கு கணவர் மாற்றப்பட்டார். இதையடுத்து தன்னுடன் வந்து வசிக்குமாறு அவர்தனது மனைவியை அழைத்தார். ஆனால் மனைவி வர மறுத்து விட்டார். இந்தத் தம்பதிக்கு ஒன்பது வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில்தான் கணவர் விவாகரத்து கோரியுள்ளார்.

இந்த வழக்கு பாம்பே உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எம்.மஜூம்தார் மற்றும் அனூப் மோத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில்,சீதாப் பிராட்டி போல வாழ ஒவ்வொரு திருமணமான பெண்ணும் முயல வேண்டும். கணவர்தான் எல்லாமே என்று வாழ்ந்தவர் சீதை. தனது கணவர் ராமரின் அடியொற்றி அவர் பின்னாலேயே சென்று காட்டில் 14 வருடங்கள் வாழ்ந்தவர். பல சோதனைகளைச் சந்தித்தபோதும் கணவரை மதித்தவர்.உங்கள் இருவருக்கும் பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்காவாவது நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும். எனவே மீண்டும் சேர்ந்து வாழ்வது குறித்து யோசியுங்கள் என்றனர்.இதையடுத்து தான் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்குத் தயங்கவில்லை என்றும், என்னுடன் வந்து எனது மனைவி வாழ்ந்தால் போதும் என்றும் கூறினார். இருப்பினும் அவருடைய மனைவி எந்தவிதமான சமசரசத்திற்கும் இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் 21ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

கள்ளக்காதல் களமாகிப்போனது தமிழகம்...!

தடுக்கி விழுந்தால் ஒரு கள்ளக்காதல் கொலையாகி விட்டது தமிழகத்தில். தினசரி ஒரு கொலை இப்படி நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் சென்னையில் ஒரு கொடூரமான கொலை நடந்துள்ளது.சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் சேகர். 39 வயதாகிறது இவருக்கு. டேங்கர் லாரி ஓட்டி வந்தார். நேற்று இவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இந்தக் கொலை நடந்த இடம் செங்குன்றம், உல்லாசம் நகர். சேகரை கை, கால், தோள், வயிறு என உடலின் ஒரு பகுதி விடாமல் சரமாரியாக வெட்டித் தள்ளி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது கொலைக் கும்பல்.

மலர் மீது வந்த மோகம்...!சேகர் கொலைக்கு கள்ளக்காதல்தான் காரணம் என்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். சேகர் சாமானியமான ஆள் கிடையாது. பல கொலை வழக்குகளில் தொடர்புடைய ஆள்தான். சமீ்ப காலமாகத்தான் டேங்கர் லாரி ஓட்டிக் கொண்டிருந்தார். அவர் மீது பல காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. குண்டாஸிலும் உள்ளே போய் வந்தவர்தான்.சேகருக்கும், அவரது இணை பிரியா நண்பரான பிரகாஷ் என்பவரின் மனைவி மலருக்கும் இடையே கள்ளக்காதல் மூண்டிருந்ததாம். ஒரு வருடமாகவே இது ஓடிக் கொண்டிருந்திருக்கிறது. அடிக்கடி பிரகாஷைப் பார்க்க வீட்டுக்கு வருவாராம் சேகர். அப்போது பிரகாஷ் இல்லாவிட்டால் மலரைப் பார்த்து 'பேசி விட்டு'ப் போவாராம்.சில சமயங்களில் மலரைப் பார்ப்பதற்காகவே பிரகாஷ் இல்லாத நேரமாக வந்து போவாராம். இந்த வந்து போகும் சமாச்சாரம் பிரகாஷுக்குத் தெரிய வரவே அவர் கோபமடைந்தார். அதேபோல சேகரின் மனைவி தேவிக்கும் தகவல் போய் விட்டது. அவர் அதிர்ந்தார், கணவரைக் கண்டித்தார்.

தடுத்த தேவியை வீடு தேடி வந்து மிரட்டிய மலர்! மனைவி கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் மலர் மீதான காதலை நிறுத்தினார் சேகர். இது மலருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் தனது உறவுக்காரப் பெண்களைத் திரட்டிக் கொண்டு தேவி வீட்டுக்கு வந்தார். உன் புருஷனை தடுத்து நிறுத்துற வேலையை இத்தோட நிறுத்திக்கோ, அவரை வரக் கூடாது என்று சொல்ல நீ யார் என்று உரிமைப் போராட்டத்தில் குதித்தார்.இனிமேல் சேகரை தடுத்தால் ஆசிட் வீசி கொன்று விடுவேன் என்றும் தேவியை மலர் மிரட்டியுள்ளார்.இதனால் கோபமடைந்த தேவி, போலீஸில் புகார் கொடுத்தார். மேலும் தன் பங்குக்கு சிலரைத் திரட்டிக் கொண்டு மலர் வீட்டுக்குப் போய் பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளார். இதனால் பிரகாஷ், சேகர் இடையிலான நட்பு நாறிப் போனது, பிளந்து போனது.

தீர்த்துக் கட்ட திட்டம் இந்த நிலையில் சேகரை தீர்த்துக் கட்ட பிரகாஷ் தீர்மானித்தார். இதற்காக கொலை செய்வதில் தேர்ந்தவர்களான சிலரை கூலிப்படையாக ஏற்பாடு செய்தார். தக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்.இந்த நிலையில் உல்லாசம் நகரில் ஒரு பட்டறையில் லாரியைப் பழுது பார்க்கும் பணியில் ஒரு வாரமாக தங்கியிருந்து சேகர் வேலை செய்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு போய் போட்டுத் தள்ளி விட்டார்கள்.போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர், விரைவில் குற்றவாளிகளைப் பிடித்து விடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.நாளைக்கு எந்த ஏரியாவில் கொலை நடக்கப் போகுதுப்பா...?

உயர் நீதிமன்றம் சொல்லியே கேட்காத பைலட்டுகள்!


இந்திய பைலட்டுகள் சங்கத்தைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவன பைலட்டுகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 200 ஏர் இந்தியா விமானிகளின் சட்டவிரோத போராட்டத்தை அதன் நிர்வாகம் ஒடுக்க வேண்டும். இல்லையென்றால், உயர்நீதிமன்றம் தலையிட நேரிடும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்த ஸ்டிரைக் சட்டவிரோதம் எனத் தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், இந்த ஸ்டிரைக்கின் மூலம் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டது.முன்னதாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள பைலட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அரசு தெரிவித்தது.எனினும் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்று பயணிகளிடம் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித்சிங் தெரிவித்தார்.

ஏற்கனவே நஷ்டத்தில் ஓடும் ஏர் இந்தியாவுக்கு இந்த வேலைநிறுத்தத்தால் மேலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடுப்பான ஏர் இந்தியா நிர்வாகம் இன்று காலை 16 பேரையும், மாலை மேலும் 9 பைலட்டுகளையும் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.இது குறித்து விமான போக்குவரத்து அமைச்சர் அஜித் சிங் கூறுகையில், உயர் நீதிமன்றம் சொல்லியே கேட்காத பைலட்டுகள், நான் சொல்வதை எங்கே கேட்கப் போகிறார்கள் என்றார்.

ஐ.நா.வின் மனித உரிமைகள்-தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் ஆலோசகராக தமிழக வழக்கறிஞர் அசன் முகமது.

ஐ.நா.வின் யுனெஸ்கோ (மனித உரிமைகள்-தகவல் தொழில்நுட்பப் பிரிவு) ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார் தமிழக வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா(வயது 34). தமிழர்களின் பிரச்சனைகளையும், ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளையும் ஐநா மனித உரிமையின் கவனத்துக்கு கொண்டு செல்ல, ஜின்னாவின் நியமனம் உதவியாக இருக்கும் என்று தமிழ் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

அசன் முகமது ஜின்னா! தி.மு.க இளைஞரணி மாநில துணைச் செயலாளர். திமுக பொருளாளார் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் நிர்வாக இயக்குநர். முற்போக்கு எண்ணங்கள் கொண்ட அரசியல் பிரமுகர். அவருக்குக் கிடைத்திருக்கும் புதிய வாய்ப்பு, தமிழர் நலனுக்குத் துணையாக அமையும்.ஜின்னா அமைதியாக அரசியலில் ஈடுபடுபவர், ஆர்ப்பாட்டம் செய்யாதவர். விளம்பரம் செய்து கொள்ளாதவர். திமுக தலைமை அவருக்கான விளம்பரத்தை சட்டமன்ற தேர்தலின் போது இயல்பாய் வழங்கியது. அவர் அதற்கு முன்பு பத்திரிக்கைகளில் பிரபலமடையவில்லையே தவிர, கட்சிக்கும் அதன் செயல்பாடுகளுக்கும் புதியவரல்ல.

ஜின்னாவின் குடும்பம் பாரம்பரியமான தி.மு.கழக குடும்பம். அவரது தந்தை அசன் முகமது, முரசொலி நாளேட்டில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். கழகம் நடத்திய போராட்டங்களில் பங்கேற்றவர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்றவர். கழகத்தின் பொதுக்குழு உறுப்பினராக பணியாற்றியவர். ஒருங்கினைந்த நாகை, திருவாரூர் மாவட்ட அரசு வழக்கறிஞராகச் செயலாற்றியவர்.தந்தையை போலவே, கழக பற்றுகொண்ட ஜின்னா, திருவாரூரில் வார்டு செயலாளராகவும், வார்டு பிரதிநிதியாகவும் அடிப்படைப் பொறுப்புகளை வகித்தவர்.சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியின் தி.மு.க மாணவர் அணி செயலாளர், மத்திய சென்னை தி.மு.க வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர், தி.மு.க. மாணவரணி மாநிலத் துணைச் செயலாளர் எனப் படிப்படியாக ஒவ்வொரு பொறுப்பையும் வகித்து, அதன்பின் மு.க.ஸ்டாலினால் இளைஞரணியின் மாநிலத் துணைச் செயலாளர் பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டார். கடந்த 2004ம் ஆண்டு இவர் இளம் அரசியல் தலைவர் என்று கவுரவிக்கப்பட்டிருக்கிறார் ஜின்னா . மாணவி சரிஹாசா ஈவ்டீசிங் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்தவர் ஜின்னா என்பது குறிப்பிடத்தக்கது.

Dr. Tae Sul KimUNESCO Centre has appointed Hasan Mohammed Jinnah 
2012/05/08
The Secretary General of UNESCO Centre has appointed Hasan Mohammed Jinnah as a Regional Advisor (Asia-Pacific Region) for Human Rights and ICT. With this assignment, Hasan Mohammed Jinnah, an advocate and a human rights activist from India will carry his experiences from the sub-continent to the Asia-Pacific. Mr. Jinnah holds a Master of Arts and Master of Law degrees and is a practising senior criminal lawyer. A human rights activist, Mr.Jinnah has been one of the most vocal and influential advocate for the freedom and entitlements of women in particular, and has often said that gender issues are essentially human right violations and should be treated as such. He is an ICT strategist with over a decade of hands-on experience in expanding information resources and networking capacities adding positive value to organized groups, NGOs and policy networks within political parties. His expertise has helped bridge gaps between policy making and information technology, predominantly in the field of education for his home State and in overcoming the digital divide in areas where consistent and multi-variant ICT initiatives have started showing results. In the year 2004, Jinnah was chosen as a Young Political Leader from India, for the yearly convention of the American Council of Young Political Leaders, among a pool of local, state and national nominations by Governors, Members of Parliament, National and State political party chairs, State legislative leaders, and corporate contributors. He was a special invitee to the July 4th American Independence day celebrations, where he registered the opinion that India should be made a permanent member of the UN Security council. His experience and expertise is expected to add value to the Asia-Pacific region and UNESCO's goals of expanding information resources and networking capacities, and reaching out to many organized groups, social movements, NGOs, transnational policy networks, political parties and the marginalized of the region.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...