|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 October, 2012

Pakistan observes day of prayer...

 பாகிஸ்தானின் தாலிபான் பயங்கரவாதிகள் ஸ்வாத் பள்ளத்தாக்கை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது, சிறுமி மலாலாவுக்கு வயது 11. ஸ்வாத் பகுதியில் உள்ள பெண்கள் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்பது தாலிபான்களின் உத்தரவு.அந்த இக்கட்டானச் சூழலில், மலலா செய்த காரியம் வியப்புக்கு உரியது. அவர் தான் எழுதிய டயரிக் குறிப்புகளை புனைப் பெயர் ஒன்றில் பிபிசி உருது மொழிப் பிரிவுக்கு அனுப்பினார். அதில், பயங்கரவாதிகளால் தங்கள் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் பதிவு செய்தார். குறிப்பாக, பெண்கள் கல்வி கற்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதைச் சொன்னார். ஸ்வாத் பகுதியின் உண்மை நிலை உலகுக்குத் தெரிந்தது. விளைவு... அப்பகுதியில் இருந்து தாலிபான் பயங்கரவாதிகள் விரட்டப்பட்டனர்.

இவையெல்லாம் நடந்தபின்புதான் தெரியும் அந்த டயரிக் குறிப்புகளை அனுப்பி வந்தது சிறுமி மலாலா என்பது. அவரது புகழ் உலகம் முழுவதும் பரவியது. போராளிச் சிறுமிக்குத் தீரச் செயலுக்கான தேசிய விருதும் கிடைத்தது. மலாலாவின் பெயர், சிறார்களுக்கான சர்வதேச அமைதி விருது ஒன்றுக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது."பெரியவள் ஆகும்போது சட்டம் படித்து அரசியலுக்கு வரவேண்டும். கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் நாடாக பாகிஸ்தான் விளங்க வேண்டும்." - இதுவே நம் மலாலாவின் கனவு.

இந்தச் சூழலில்தான் மலாலாவைப் பழிவாங்கி இருக்கிறார்கள் பயங்கரவாதிகள். சிறுமியைக் கொல்வதற்குத் திட்டமிட்டனர். அதன்படி, பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்தவரை, அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அதில் மலாலா படுகாயம் அடைந்தார்.இப்போது, மலாலா தன் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மீண்டு வருவதற்கு பாகிஸ்தான் தேசம் இன்று நாள் முழுவதும் பிரார்த்தனையில்

மன்னியுங்கள் ஐயா!

திமுக ஆட்சியில் இரண்டு மணி நேரம் மின்வெட்டு இருந்த போது, அப்போது மின்துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராச்சாமியை மக்கள் கண்டபடி திட்டி தீர்த்தார்கள்.இரண்டு மணி நேர மின் வெட்டிற்கே, அப்போது அப்படி திட்டி தீர்த்த பொதுமக்கள் இப்போது 16 மணி நேரம் வரை மின்வெட்டாவதை எப்படி பொறுத்துக்கொள்கிறார்கள் என்பது நியாயமான கேள்விதான்.,பொறுத்துக்கொள்ளவில்லை புலம்பி தீர்க்கிறார்கள் என்பதுதான் நிஜம்.இன்றைய மின்வெட்டை பார்க்கும் போது அன்றைய வீராச்சாமியை ரொம்பவே திட்டிவிட்டோமோ என வருத்தப்பட்ட மக்கள் அவரிடம் மன்னிப்பு கேட்பது போல குமாரபாளையத்தில் வைத்துள்ள பேனர் பலரையும் கவர்ந்துள்ளது.வேதனையைக்கூட வேடிக்கையாக வெளிப்படுத்த முடியும் என்பதன் வெளிப்பாடான இந்த போஸ்டர் தற்போது தமிழகம் முழுவதும் பாப்புலராகிவிட்டது

நவராத்திரி...

வீடு தோறும் கலையின் விளக்கம்' என்று பாடினார் மகாகவி பாரதியார். ஆம்; ஒவ்வொரு இல்லமும் எழிலோவியமாக, கலைக் கோயிலாக விளங்கும் விழாவே நவராத்திரி.
 நம் பாரதத்தில் பல்வேறு பெயர்களால் இந்த விழா அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் "கொலு', "சாரதா நவராத்திரி' என்றும் வங்கத்தில் "துர்க்கா பூஜை' என்றும், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் "மகாலட்சுமி பூஜை' என்றும், கர்நாடகத்தில் ஒன்பது தினங்களோடு, விஜய தசமியையும் சேர்த்து "தசரா' என்றும் இந்த விழாவைப் போற்றுவர்.
 பழந்தமிழர் நாகரிகத்தில் இருந்த கொற்றவை வழிபாடே ஜெய துர்க்கா பூஜையாக மலர்ந்தது என்றும் சொல்வர்.
 நவராத்திரியின் முதல் மூன்று நாள்கள் பார்வதி தேவி (மலைமகள்) வழிபாடாகவும், நடு மூன்று நாள் (அலை மகள்) மகாலட்சுமி வழிபாடாகவும்,கடைசி மூன்று நாள்கள் (கலைமகள்) மகா சரஸ்வதி வழிபாடாகவும், பத்தாவது நாள் வழிபாட்டினால் வரும் "வெற்றித் திருநாளாக' விஜயதசமியாகவும் அமைந்துள்ளது.
 நாடெங்கும் மக்கள் விழாவாகக் கொண்டாடும் நவராத்திரி விழாவில் தாய்க்குலத்துக்கு தனிப்பெரும் சிறப்பு உண்டு. நவராத்திரியின் ஒரு அங்கமாக "கன்னிகா பூஜை' என்று குறிப்பிடப்பட்ட சில இடங்களில் நிகழ்கிறது. இரண்டு வயது முதல் பத்து வயது வரை உள்ள கன்னிகளைத் தேர்ந்தெடுத்து குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோஹிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்க்கை, சுபத்ரை என அம்பிகை திருப்பெயர்களாக அவர்களைப் பாவித்து சிறப்பிப்பதும் உண்டு.
 அம்பிகையின் அலங்கார விழாவான நவராத்திரியை பாவைமார்களே பக்தி சிரத்தையுடன் கொண்டாடி வருகிறார்கள். நவராத்திரி கொலுவில் ஒன்பது படிகள் இருக்க வேண்டும்; இல்லையேல் குறைந்த பட்சம் ஐந்து படிகளாவது அமைக்க வேண்டும். பற்பல வர்ண பொம்மைகள், சுதைச் சிற்பங்கள் மற்றும் பூங்கா, கோயில், கலைக் காட்சிகளையும் கொலுவில் இடம் பெறச் செய்ய வேண்டும். விழா நாள்களில் பெண் குழந்தைகள் சிவன், இராமன், கண்ணன் போல் வேஷங்கள் போட்டுக்கொண்டும், குறத்தி, பார்சி, மார்வாரிபோல் ஆடைகள் புனைந்துகொண்டும், குங்குமச் சிமிழை எடுத்துக் கொண்டு ""எங்கள் வீட்டுக் கொலுவுக்கு வாருங்கள்'' என்று ஒவ்வொரு இல்லமும் சென்று உவகையுடன் அழைப்பார்கள். தன் இல்லத்துக்கு வரும் மங்கையர்க்கு மஞ்சள், குங்குமம் வெற்றிலைப் பாக்குடன், வசதியிருந்தால் புடைவையும் வைத்து வழங்கிச் சிறப்பிப்பார்கள்.
 வரலட்சுமி விரதத்துக்கு நோன்பு எடுத்துக் கொள்வதுபோல், நவராத்திரி பூஜைக்கும் பழைமைப் பற்றுடைய ஸ்திரீரத்னங்கள் நோன்பு எடுத்துக் கொண்டு வழிபடுவதை "மகா நோன்பு' என்று தேவி தொடர்பான நூல்கள் சொல்கின்றன. பூஜை காலங்களில் தேவி பாகவதம், தேவி மாகாத்மியம், லலிதா சகஸ்ர நாமம், ùஸளந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி, வடிவுடை மாணிக்கமாலை போன்ற தோத்திர நூல்களை வாசிப்பதும் கேட்பதும் மிகுந்த மங்களங்களைக் கொடுக்கும்.
 நவராத்திரி ஒவ்வொரு நாளும் கோயில்களில் காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, சிவகாமவல்லி, கமலாம்பிகை, மகாகாளி, இவ்வண்ணம் ஒவ்வொரு வடிவமாக அலங்காரம் செய்து வழிபடுவதும் நடைமுறையில் உள்ளது.
 மகாகவி பாரதியார் நவராத்திரி பாடல்கள், நவராத்திரி கட்டுரைகள் வரைந்துள்ளார். ஒரு கட்டுரையில் ""இந்தப் பூஜைகளின் நோக்கம் உலக நன்மை; நவராத்திரி காலத்தில் யோக மாயை துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என்ற மூன்று வித வடிவங்கொண்டு துஷ்டரை அழித்து, மனித ஜாதிக்கு மகிழ்ச்சி பெருக வைத்தாள். சக்தியால் உலகம் வாழ்கிறது; நாம் வாழ்வை விரும்புகிறோம்; ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம்'' என்று அருமையாகக் குறிப்பிடுகிறார்.
 நவராத்திரி நாயகியை வணங்கிப் போற்றி, ""நாளும் நாளும் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே'' என்ற ஞான சம்பந்தர் சொற்படி நலங்கள் பெறுவோம்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...