|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 January, 2013

மதத்தைவிட மனிதநேயம் முக்கியம் கமல்

விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழக அரசு தடை விதித்து, நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு அடுத்து  படம் வெளியிட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று மாலை தமிழக அரசு படத்தை தடை செய்ய உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சட்டம்- ஒழுங்கு கருதி படத்தை தடை செய்தது.  இதுகுறித்து கமலஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-​இது நான் சிறுவயதில் இருந்து ஓடி விளையாடி வளர்ந்த வீடு இது. இங்கு இருந்து பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். இது எனது சொந்த வீடு. இதில் எனது சகோதரர்களுக்கும் உரிமை உண்டு. அவர்களிடம் இருந்து நான் விலைக்கு வாங்கி விட்டேன். நான் கொடுத்த பணத்தை என் தந்தை எல்லா சகோதரர்களுக்கும் பிரித்து கொடுத்து விட்டார்.

நான் எடுக்கும் படத்தில் எனது சகோதரர் சந்திரஹாசன் பங்குதாரர் என்று வரும். அவர் சம்பளமாக பணம் எதுவும் வாங்கியது இல்லை. சிறுவயதில் இருந்து இன்று வரை என்னை தன் பொறுப்பில் வளர்த்து வருகிறார். தற்போது என்ன நடக்கிறது என்று எனக்கு தெரிய வில்லை. அது தெரிந்தால் நான் அரசியல் வாதியாகி விடுவேன் என்ற பயம் இருக்கிறது.
இன்று காலை படம் வெளிவரும் என்று எதிர்பார்த்தேன். தியேட்டர்களில் எனது ரசிகர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். என் ரசிகர்களில் இஸ்லாமியரும் இருக்கிறார்கள். சினிமாதான் என் தொழில். நான் நேர்மையை மட்டுமே கற்று இருக்கிறேன். இந்த படத்தில் நிறைய முதலீடு செய்து இருக்கிறேன். ரசிகர்களின் திறமையையும், நம்பி படத்திற்கு முதலீடு செய்து இருக்கிறேன். இருக்கிற சொத்துக்களை விட அதிகம் கடன் வாங்கி முதலீடு செய்து இருக்கிறேன். எனக்கு மதம் முக்கியம் இல்லை. மனிதநேயம் தான் முக்கியம். ரசிகர்கள் மீதும் படத்தின் மீதும் இருக்கும் நம்பிக்கையில் சொத்துக்களை அடகு வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறேன். சரியான நேரத்தில் பணத்தை கட்டவில்லை என்றால் சொத்துக்களை தனதாக்கி கொள்ளலாம் என பணம் கொடுத்தவருக்கு எழுதி கொடுத்துள்ளேன். 

இதுபோல் பல இடையூறுகளை  ஏற்கனவே சந்தித்து உள்ளேன். ராஜபார்வை படத்தில் நிறைய இழந்தேன். அதில் இருந்து மீள 7, 8 வருடங்கள் வேலை செய்ய வேண்டி இருக்கிறது.1986-​ல் மறுபடியும் ஜ்ஜியம் நிலைக்கு தள்ளப்பட்டேன். அதில் இருந்து மீண்டு இப்போது ரூ.100 கோடி செலவில் படத்தை எடுத்துள்ளேன். அதற்கும் நிறைய தடங்கல்கள். தமிழகத்தில் நான் இருக்க வேண்டியது இல்லை என்று நினைக்கிறார்களோ என தெரியவில்லை. எனக்கு சிறு ஆசை வந்துள்ளது. மதசார்பற்ற மாநிலத்தில் தான் நாம் இருக்கிறோமா என்று எண்ண தோன்றுகிறது. தமிழ்நாடு மதசார்பற்ற மாநிலம். இப்போது இங்கேயும் அந்த நிலை உருவாகி இருக்கிறது. காஷ்மீரில் இருந்து கேரளா வரை மதசார்பற்ற இடம் கிடைக்குமா என்று தேடுவேன். இங்கு கிடைக்கா விட்டால் வேறு நாடுகளில் மதசார்பற்ற மாநிலம் இருக்கிறதா என்று தேடுவேன்.  கோபத்தில் இதை நான் சொல்லவில்லை. புண்பட்டது போதும், உனக்கு தமிழர்களை பிடிக்கவில்லையா என்று கேட்கலாம். தமிழர்கள் என் உயிர். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று என் உடலையும், இந்த மக்களுக்குத்தான் கொடுத்து இருக்கிறேன். நடந்துள்ள சம்பவங்கள் என் மனதை உருக்கிவிட்டன. என் சொத்துக்களை எடுத்தால்தான் தேசத்துக்கு ஒற்றுமை கிடைக்கும் என்றால் தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். நான் குழந்தையாக நடிகையர் திலகம் (சாவித்திரி) கையில் இருந்தவன். ஜெமினி கணேசன் கையைப் பிடித்து நடை பயின்றவன். நடிகர் திலகத்தின் மடியில் அமர்ந்தவன். எம்.ஜி.ஆரின் தோளில் ஏறி நிமிர்ந்து நின்றவன் அப்படி வளர்ந்த பிள்ளை நான். எனக்கு பயம் இல்லை. திறமை இருக்கிறது. இந்த படத்தின் கதை களம் ஆப்கானிஸ்தானில் நடக்கிறது. இங்கே இந்திய முஸ்லிம்களை கேலி செய்வதாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும். இந்த படத்தின் தீர்ப்பு எனக்கு சாதகமாக இல்லை. தற்போது கிடைத்திருக்கும் நீதியை நான் வணங்குகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பின்னர் 5 முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கமல்ஹாசனை சந்தித்தனர். அவர்களுடன் சேர்ந்து கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- என்னை சந்தித்த முஸ்லிம் அமைப்புகள் கேட்டுக்கொண்டபடி சர்ச்சைக்குரிய குரான் பற்றிய காட்சிகளை மக்களின் ஒற்றுமையை கருதி நீக்குகிறேன் என்று கூறினார். இதையடுத்து நேற்று பிற்பகலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது விசாரணையில் தனி நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை நிறுத்தி வைத்தும், தமிழக அரசு விதித்த தடையை நீட்டித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டை அலுவலகம் முன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடினர். இதனால் ஆழ்வார்பேட்டை பகுதி நாள் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

பத்திரிகை சுதந்திரம் 140வது இடத்தில் இந்தியா?

பத்திரிகை சுதந்திரம் குறித்த 179 நாடுகளின் பட்டியலில் இந்தியா 9 இடங்கள் கீழிறங்கி 140வது இடத்தில் உள்ளது. இது, கடந்த 2002ம் ஆண்டுக்குப் பிறகு மிகப் பெரும் வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவுக்கும் இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று பெயர் பெற்றுள்ளது. உலக அளவிலான 2013ம் வருட பத்திரிகை சுதந்திர குறியீட்டு எண் அடிப்படையில் இந்தியா 140வது இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டை விட 9 இடங்கள் வீழ்ச்சி என்பது குறிப் பிடத்தக்கது. ஊடகவிய லாளர்கள் மீதான தாக்குதல்கள், இணையதள கருத்துச் சுதந்திரம் பறிப்பு, கருத்துகளுக்கு தணிக்கை உள்ளிட்ட காரணிகள் கடந்த வருடம் இந்தியாவில் அதிகரித்துள்ளதாம்.

சீனா ஒரு இடம் மேலேறி 173வது இடத்தில் உள்ளது. பத்திரி கை சுதந்திரம் விவகாரத்தில் வேறு எந்த முன்னேற்றமும் சீனாவில் ஏற்படவில்லை. கடந்த வருடத்தில் இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடத்தைப் பிடித்த நாடுகள் மூன்றுமே ஐரோப்பிய நாடுகளே. பின்லாந்து, நெதர்லாந்து, நார்வே ஆகியவை பத்திரிகை சுதந்திரத்தைப் பேணிக்காக்கும் உலகின் மிகச் சிறந்த நாடுகள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.துர்க்மேனிஸ்தான், வட கொரியா, எரித்ரியா நாடுகள் தொடர்ந்து பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, இணையதளக் கட்டுப்பாடுகள், கருத்து தணிக்கை, காஷ்மீர் மற்றும் சட்டீஸ்கரில் அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள், பொதுவாக பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப் படுதல் போன்றவை இந்தப் பட்டியலில் வரிசைப்படுத்தப் படும்போது கணக்கில் கொள்ளப் பட்டுள்ளன.

இது வேரையா? கமல் என்ன ஏசுபிரானா?

கமலின் விஸ்வரூபம் படம் குறித்த சர்ச்சை நாடு முழுவதும் பேசப்படும் ஒன்றாகிவிட்டது. கமல் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துவிட்டதாகக் கூறி வழக்கு நடந்துவருகிறது. இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகள் விஸ்வரூபம் படத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துவருகின்றன.இந்நிலையில் கிறித்துவ மதத்தைச் சார்ந்த வசீகரன் என்ற நபர் தலைமைச் செயலாளரை சந்தித்து கமல்ஹாசன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் ” கமல்ஹாஸன் இனி ‘உலகநாயகன்’ என்ற  பெயரை உபயோகப்படுத்தக்கூடாது. ‘உலக நாயகன்’ என்ற பெயர் பிரபஞ்சத்தைக் காக்கும் ஏசு கிறிஸ்துவின் பெயர்.கமல் ஏசு பிரானின் பெயரை தனக்கு வைத்துக்கொள்வது ஏசு நாதரை இழிவுபடுத்துவது போல் உள்ளது” என்று கூறியிருக்கிறார். மேலும் இதை தலைப்புச் செய்தியாக போடும்படி அவரே பத்திரிக்கையாளர்களிடம் கேட்டுக்கொண்டது மேலும் சிறப்பான விஷயம்.

தத்துவச் சிறப்பு!

நடப்பவை நன்றாக நடக்கட்டும்!

கும்பாபிஷேகத்தில் கருணாநிதி...!

தனக்கும் கடவுளுக்கும் ரொம்ப தூரம் என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி சொல்லியுள்ளது அவர்களது தொண்டர்களுக்கு தெரியாதா, அல்லது தெரிந்தும் அவரை கிண்டல் செய்கின்றனரா என்று தெரியவில்லை. திருச்சி உக்கிரகாளியம்மன் கோயில் விழா தொடர்பாக தி.மு.க.,வினர் வைத்துள்ள பேனரில் அம்மன், கோபுர படத்துடன் கருணாநிதி படமும்

இதுலே யாரு அரூபம்?

அரசு விளக்கியே தீர வேண்டும் விஜயகாந்த்.


விஸ்வரூபம் விவகாரம் முஸ்லிம்கள் பிரச்சினையாக மட்டுமே இருந்தவரை அமைதி காத்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், இப்போது பிரச்சினையில் அரசு தீவிரமாகத் தலையிட்டுள்ளதால் விஜய்காந்த் களமிறங்கியுள்ளார்.படத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியால், தமிழகத்தை விட்டே வெளியேறப் போவதாகக் கமல் கூறியுள்ளது என் மனதை வருத்தப்பட வைத்துள்ளது. சினிமாவுக்காக தன்னையே அற்பணித்துக் கொண்ட மகா கலைஞனை தமிழக அரசு புண்படுத்திவிட்டது. அவர் எங்கும் போகக் கூடாது. இந்த நெருக்கடிக்கெல்லாம் என்ன காரணம் என்பதை இந்த அரசு விளக்கியே தீர வேண்டும். கமல் ஹாஸன் தன் படத்தை ஆளுங்கட்சி தொலைக்காட்சிக்கு விற்க மறுத்தது காரணமா? ஒரு விழாவில் வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக அமர்வதை விரைவில் பார்க்க விரும்புகிறேன் என்று சொன்னது காரணமா? அல்லது அரசின் நெருக்கடிக்கு பணியாமல் சட்டத்தை நாடியது காரணமா? இதனை விளக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்த அரசு," என்றார். மேலும், கமலை நேரில் சந்தித்து அவருக்கு உறுதுணையாக இருப்பதாகவும் விஜயகாந்த் தெரிவித்தார்.

 

கலைஞனை காயப்படுத்திப் பார்ப்பது அரசுக்கு நல்லதல்ல!


விஸ்வரூபம் படம் இந்த அளவுக்கு சர்ச்சையில் சிக்க தமிழக அரசே முழுக் காரணம் என்று மூத்த பத்திரிக்கையாளர் ஞானி கூறியுள்ளார். இதுதொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், கமல்ஹாசன் தனது நிலைப்பாட்டை கூறியிருப்பது மிகவும் வருத்தமான ஒன்றாகும். இந்தப் பிரச்சினைக்கு முழுக் காரணமும் தமிழக அரசுதான். தமிழக அரசு இந்தப் பிரச்சினையை கையில் எடுத்ததால்தான் இந்த நிலை. சர்ச்சைக்குரிய படம் என்றால் அதுகுறித்து இஸ்லாமியர்கள் கோர்ட்டுக்குப் போயிருக்க வேண்டும். ஆனால் கமலிடம் அவர்கள் போனால் அரசு கோபப்பட்டு பிரச்சினையை அது தனது கையில் எடுத்துக் கொண்டது. மிகவும் நொந்து போய்தான் கமல் ஹாசன் பேசியுள்ளார். இது வருத்தம் தருகிறது. ஒரு கலைஞனை இப்படிக் காயப்படுத்திப் பார்ப்பது எந்த அரசுக்கும் நல்லதல்ல, சரியல்ல. நீதிமன்றம் மீது நிறைய நம்பிக்கை உள்ளது. இந்தத் தடையை நீதிமன்றம் நீடிக்காது, நீக்கும் என்றே நம்புகிறேன். அதேபோல தமிழக அரசும் பொறுப்புடன் நடந்து கொண்டு கோர்ட் தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும். தியேட்டர்கள் மீது நடக்கும் தாக்குதல்களை தடுக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு. சட்டம் ஒழுங்கை தமிழக அரசு தான் பராமரிக்க வேண்டும் என்றார் ஞானி.

 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...