|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 February, 2013

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் இந்தியா ஆதரரிக்கும்

இலங்கை நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரையை செயல்படுத்தத் தவறிவிட்டதாகக் கூறி கடந்த ஆண்டு இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில், மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்தது. தமிழக மக்களின் ஒட்டுமொத்த போராட்டத்தைத் தொடர்ந்து இந்த தீர்மானத்துக்கு இந்தியாவும் ஆதரவு அளித்தது. இதனால் இந்த தீர்மானம் வெற்றிபெற்றது.இருப்பினும் இந்த நடவடிக்கை போதாது என்றும்,  ராணுவ அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறி, இதுதொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் மற்றொரு தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் என அமெரிக்காவின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த தீர்மானத்துக்கும் இந்தியா ஆதரவு தெரிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் இந்தியா வந்த இலங்கை அமைச்சர் இந்த தீர்மானத்துக்கு இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் நாராயணசாமியிடம் இன்று செய்தியாளர்கள் கேட்ட போது, ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்தால், அதை இந்தியா ஆதரரிக்கும்'' என்று தெரிவித்தார்.

மகளை விபச்சாரி ஆக்கி...?

திண்டுக்கல் நத்தம் ரோடு ஏ.பி., நகரில் வசிப்பவர் முகமது சித்திக், 57. மெங்கில்ஸ் ரோட்டில், கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். கிழக்கு ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்த மரிய புஷ்பம் மகள் விக்டோரியா ராணி, 29, இந்நிறுவனத்தில் வேலை செய்தார். சித்திக், குடும்பத்தினரை பிரிந்து வாழ்வதால், தனது மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு, மரிய புஷ்பம் கூறினார். கடந்த 2012, ஜூன், 25ல், விக்டோரியா ராணிக்கு, வஹிதா ராணி என, பெயர் மாற்றி, சித்திக் திருமணம் செய்துகொண்டார். தனது மகளுக்கு, வீடு, நகைகளை சித்திக்கிடம் இருந்து, மரிய புஷ்பம் வாங்கினார். இதையடுத்து, விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஜெயராஜ கணபதிக்கு, 32, தன் மகளை வைத்து, மரியபுஷ்பம் வலை விரித்தார். ஜெயராஜ கணபதி, திண்டுக்கல் வந்து விக்டோரியாவை அழைத்துச் சென்றார்.

மனைவியை காணாமல் தேடிய சித்திக், சென்னையில் இருப்பதை அறிந்து அழைத்து வந்தார். ஆனால், விக்டோரியா, ஜெயராஜ கணபதியுடன் தொடர்பு வைத்திருந்தார். ஏமாற்றப்பட்டதை அறிந்த முகமது சித்திக், விக்டோரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, திண்டுக்கல் மகளிர் போலீஸ் மற்றும் எஸ்.பி., யிடம் புகார் கொடுத்தார். நடவடிக்கை எடுக்காததால், ஜே.எம்., 2 கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில், சித்திக் மயக்க மருந்து கொடுத்து, மானபங்கப்படுத்தி, வீடியோ எடுத்ததாக, திண்டுக்கல் மகளிர் போலீசில், விக்டோரியா புகார் செய்தார். சித்திக் தான் விக்டோரியாவின் கணவர் என தெரியாமல், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், சித்திக் தாக்கல் செய்த மனு மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க, கோர்ட் உத்தரவிட்டது. இதன் படி, விக்டோரியா ராணி, தாய் மரிய புஷ்பம், உறவினர்கள் அமுதா, ராஜூவை, மகளிர் போலீசார் கைது செய்தனர்.

இன்று தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம்!

இன்றைய உலகம் சூரியன் மறைந்த பின்பும்  இரவிலும், பகலைப் போல மன்னுகிதே. அதற்கு காரணம் தாமஸ் ஆல்வா எடிசனின் கண்பிடிப்புகள். இவர் அமெரிக்காவின் நகரில் 1847ல் பிப்., 11ல் பிறந்தார். தனது அரிய கண்டுபிடிப்பால் உலகுக்கே வெளிச்சம் கொடுத்தார். இவர் மின் விளக்கு மட்டுமல்லாமல், போனோகிரால், டெலிபிரின்டர், பேட்டரி, சிமென்ட், நிலக்கரி, கேமரா, ஒலி நாடா உள்ளிட்ட ஏராளமான கண்டுபிடிப்புகளை உருவாக்கினார். இவர் அமெரிக்காவில் மட்டும் தன் பெயரில் 1093 கண்டுபிடிப்புகளுக்கான உரிமங்களை பதிவு செய்துள்ளார். சில படைப்புகள், ஏற்கன÷ கண்டுபிடிக்கப்பட்டதை மேம்படுத்தி உருவாக்கப்பட்டவை.

ஏழாவது குழந்தையாக பிறந்த எடிசன். பள்ளி பருவத்திலேயே காது கேளாமையால் பாதிக்கப்பட்டார். ஆசிரியர் திட்டியதால் பள்ளிக்க செல்வதை நிறுத்தினார். இவரது தாயார் ஆசியை என்பதால், வீட்டிலேயே கல்வி கற்றார். 12வது வயதிலேயே படிப்புக்கு முடிவு கட்டினார். காரணம் அறிவியலில் கொண்ட ஆர்வம். டெட்ராய்ட் ரயில் நிலையத்தில் செய்தித்தாள், காய்கறி விற்றார். அப்போதெல்லாம், தந்திப்பதவு (டெலிகிராப்) மூலம் ரயில் போக்குவரத்து நடந்தது.புள்ளிக் கோடுகளாக பதிவதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் ஆப்பரேட்டர் வேலையில் சேர்ந்தார். 1871ல் திருமணம் செய்தார். மூன்று குழந்தைகள் பிறந்தன.

டெலிகிராப் ஆப்பரேட்டர் வேலையில் இருந்து விலகில நியூயார்க் சென்றார். அங்கு, 'போனோகிராப்' எனும் ரிகார்டிங் கருவி, ஒலிநாடா, மின் டெலிகிராப் கருவிகளை கண்டுபிடித்தார். டெலிகிராப் மட்டும் 10 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு விலை போனது. இதன் மூலம் தொழில் அதிபராக உயர்ந்தார்.அக்காலத்தில் வாயு விளக்குகள் தான் பயன்பாட்டில் இருந்தன. மின் விளக்கு கண்டுபிடிப்பது பலரது கனவு. மின் விளக்கு ஆராய்ச்சிக்காக,'எடிசன் மின்விக்கு கம்பெனி'தொடங்கப்பட்டது. பிரான்சிஸ் அப்டன் என்பவரும் எடிசனின் ஆய்வுக்கூட்த்தில் சேர்ந்தார். இவர்கள் 1879ல், பிளாட்டினம் கம்பிச்சுருளை, வெற்றிட பல்ப் ஒன்றில் பயன் படுத்தி கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில் , உலகின் முதல் மின்விளக்கை கண்டுபிடித்தனர். பின் எலக்ட்ரிக் மோட்டார், சினிமா கேமரா உள்ளிட்ட கண்டு பிடிப்புகளø உருவாக்கினார். இவரிடம் எப்படி இவ்வளவு கண்டு பிடிப்புகளை உருவாகினீர்கள் என்று கேட்ட போது, படைப்புக்கு தேவை 'ஒரு சதவீதம் ஊக்கமும் 99 சதவீதம் கடின உழைப்பும் தான்' என்றார்.எடிசன், 1931 அக் 18ல் வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் மறைந்தார். அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஹெர்பர்ட் ஹூவர், எடிசனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, நாடு முழுவதும் தேவையான விளக்குகள் தவிர மற்ற அனைத்தையும் ஒரு நிமிடம் அணைக்க உத்திரவிட்டார்.

கும்பமேளாவில் காணமல் போனவர்கள் 3 லட்சம் பேராம்!


த்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் இதுவரை சுமார் 3 லட்சம் பேர் காணாமல் போயிருக்கின்றனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா தற்போது அலகாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான சாதுக்களும் பல லட்சம் பக்தர்களும் கலந்து கொண்டு கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில் கோடிக்கணக்கில் பக்தர்கள் கூடுகின்றனர். இந்த கும்பமேளாவுக்கு வந்து கூட்ட நெரிசலில் காணாமல் போனோரை பற்றி ஒலி பெருக்கி மூலம் அறிவித்து குடும்பத்தினருடன் இணைத்து வைக்க உதவி மையங்கள் அலகாபாத் நகரின் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உதவி மையங்கள் அனைத்தும் தற்போது நிரம்பி வழிகின்றன. இந்த உதவி மையங்கள் தெரிவித்திருக்கும் தகவலின்படி இதுவரை 3 லட்சம் பேர் காணாமல் போயிருக்கின்றனர். மவுனி அமாவாசை நாளான நேற்று மட்டும் சுமார் 3 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். இவர்களில் 97 ஆயிரம் பேர் காணவில்லை. இப்படி கும்பமேளா காலங்களில் இதுவரை தொலைந்தோர் எண்ணிக்கை சுமார் 16 லட்சம் பேர் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க இன்னும் பலர், கும்பமேளா நடைபெறும் புண்ணிய தலங்களில் தங்கள் வீட்டு முதியவர்களை கொண்டுவந்து விட்டு விடும் சம்பவங்களும் நிகழ்வதாகவும் கூறப்படுகிறது.

பார்த்ததில் பிடித்தது!


Dog With Human Face Up For Adoption

பூடுல்/ஷி ஷு ஆகிய இரண்டு ஜாதி கலந்து பிறந்துள்ள டோனிக் பிற நாய்களை விட வித்தியாசமானது. அதன் முகத்தைப் பார்த்தால் மனித முகம் போன்றே உள்ளது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...