|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 February, 2012

இதே நாள்...


  • ஹங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது(1946)
  •  முதலாவது மின்சார வீதி விளக்குகள் இந்தியானாவில் நிறுவப்பட்டன(1880)
  •  ஏற்றுமதி-இறக்குமதி வங்கி அமெரிக்காவில் துவங்கப்பட்டது(1934)
  •  மெக்சிகோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பேர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது(1848)

. விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி அங்கீகாரத்தை இலங்கை தேர்தல் கமிஷன் ரத்து!

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி உள்ளிட்ட மூன்று கட்சிகளின் அங்கீகாரத்தை இலங்கை தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளது. விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி, ஈழம் தேசிய குடியரசு முன்னணி மற்றும் தேசிய ஐக்கிய கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளும், தேர்தல் சட்டம், 1981ன் படி, தங்கள் வருமானவரிக் கணக்கு விவரங்களை செலுத்தாததால் அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக, இலங்கை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதையடுத்து, இலங்கையில், அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 67 ஆகக் குறைந்துள்ளது.

அமெரிக்காவிடம் கையேந்தும் ஆசியா...

 தங்களை மேம்படுத்தவும், சீனாவிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், ஆசிய நாடுகள் அமெரிக்காவின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்த தேர்தல் பிரசார நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒபாமா கூறியதாவது: கடந்த மூன்றாண்டுகளில், நாம் அனேக பிரச்னைகளைக் கடந்து வந்து விட்டோம். அதே காலகட்டத்தில், நான் உலகம் முழுவதும் சுற்றிப் பார்த்தபின், ஒன்றைத் தெரிந்து கொண்டேன். அது, உலகம் இன்னும் நமது தலைமையை எதிர்பார்த்திருப்பது தான். நம்மிடம் உள்ள அதிகாரத்திற்காக, அவர்கள் நம்மை எதிர்பார்க்கின்றனர். ஆசியாவில், சீனாவின் வளர்ச்சியை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அவர்களின் பொருளாதார எதிர்காலம், நம்மோடு மட்டுமல்ல, அசுர வேகத்தில் வளர்ந்து வரும் சீனாவோடும் தொடர்பு கொண்டிருப்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். அதனால், ஆசியாவின் அச்சிறிய நாடுகள், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தங்களின் இயற்கை வளங்கள் சுரண்டப்படாமல் முறையாக மேம்படுத்தவும் விரும்புகின்றனர். அதனால், அவர்கள் நம்மை விரும்புகின்றனர். இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.

டைம்லைனை பயன்படுத்துங்கள் ஃபேஸ்புக்!


ஃபேஸ்புக் டைம்லைன் பற்றி சில மாறுபட்ட கருத்துகள் வெளி வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் டைம்லைன் வசதியை ஃபேஸ்புக்கில் பயன்படுத்த, ஃபேஸ்புக் அறிவுறுத்தி வருகிறது. டைம்லைன் ஆப்ஷனை பயன்படுத்தினால், ஃபேஸ்புக்கில் நண்பர்களுடன் பரிமாறிய செய்திகளை ஆண்டு வாரியாக வரிசைபடுத்தி பார்க்கலாம். இதனால் எந்த ஆண்டு, எந்த தேதியில் பகிர்ந்து கொள்ளப்பட்ட செய்தியையும் எளிதாக எடுத்து ஞாபகப்படுத்தி பார்க்கலாம். பலபேரிடம் இன்னும் டைரி எழுதும் பழக்கம் இருக்கிறது. இதனால் நினவுகளை புரட்டுவது போல, பக்கங்களை புரட்டி இனிய நினைவுகளை திரும்ப பெறலாம். ஃபேஸ்புக்கில் உள்ள டைம்லைனும் அப்படித்தான். இது ஒரு நினைவு பெட்டகம். தகவல் பரிமாற்றங்களை வரிசைப்படுத்தி காட்ட டைம்லைன் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்கிறார், ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க்.

சிறிய நாடுகளை அமெரிக்கா தண்டிக்கிறது ராஜபக்சே!


ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையால் இலங்கை போன்ற சிறிய நாடுகள் பாதிக்கப்படுவதாக ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், எண்ணைய் வளத்தில் ஈரானை மட்டுமே இலங்கை சார்ந்திருப்பதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எண்ணைய் தேவையில் 93 சதவீதத்தை ஈரானே வழங்குவதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டார். ஈரானுக்கு எதிரான நடவடிக்கை மூலமாக அந்நாட்டை மட்டும் அமெரிக்கா மற்றும் மேற்குல நாடுகள் தண்டிக்கவில்லை. எங்களைப் போன்ற சிறிய நாடுகளும் தண்டனைக்குள்ளாகியிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவின் உதவியை நாட உள்ளதாகவும் குறிப்பாக அமெரிக்காவின் தடைக்கு எதிராக இந்தியா பின்பற்றக் கூடிய வழிமுறைகளை பின்பற்ற உத்தேசித்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Aanbe Vaa Blockbuster Tamil Movie With English Subtitles


டெல்லியில் கோத்தபயா...


இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சே தலைமையிலான குழு டெல்லி வந்துள்ளது. இக்குழு இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

இது ஆண்டுதோறும் நடைபெறும் இருதரப்பு பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை செயலாளர் சக்திகாந்த் ஷர்மா தலைமையில் இந்தியக் குழு இலங்கை குழுவுடன் ஆலோசனை நடத்தியது. இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு மற்றும் இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட இருநாட்டு பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு அமைச்சர் அந்தோணியையும் இருதரப்பு குழுவும் செளத் பிளாக்கில் சந்தித்து ஆலோசித்தது.

தகுதியே இல்லாத தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக நான் வெட்கப்படுகிறேன்!


அதிமுகவினரை திருப்திப்படுத்தவே விருப்பமில்லாமல் தேமுதிகவுடன் கூட்டணி வைத்தேன். தகுதியில்லாதவர்கள் அரசியலில் உயர் நிலையை எட்டினால் தேமுதிகவினர் போலத்தான் நடப்பார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா காட்டமாக கூறியுள்ளார். தமிழக சட்டசபையில் இன்று தேமுதிகவையும், அதன் தலைவர் விஜயகாந்த்தையும் கடுமையாக விமர்சித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். அவரது பேச்சின்போது தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுவதாக அவர் கோபத்துடன் கூறினார். முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க எனக்கு சற்றும் விருப்பமில்லை. ஆனால் அதிமுக தொண்டர்கள் அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று விரும்பியதால் அவர்களின் விருப்பப்படியே கூட்டணி வைத்தேன். எனக்கு விருப்பமில்லாவிட்டாலும் கூட கட்சியினரின் விருப்பத்தை மதித்துக் கூட்டணி வைத்தேன்.

ஆனால் தகுதியே இல்லாத அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்ததற்காக இப்போது நான் வெட்கப்படுகிறேன். விஜயகாந்த் இன்று சட்டசபையில் நடந்து கொண்டதைப் பார்க்கும்போது தகுதி இல்லாதவர்கள் அரசியலில் உயர் நிலையை எட்டினால் இப்படித்தான் ஆகும் என்பதைப் புரிந்து கொண்டேன்.தேமுதிக தலைவர் விஜயகாந்த் சட்டசபையில் இன்று பேசிய பேச்சுக்கள் மிகவும் கீழ்த்தரமானது. சபையின் மாண்பை அவரது பேச்சு குலைத்து விட்டது எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தில் இப்போது விஜயகாந்த் இருப்பதற்கும், அவரது கட்சி இந்த மாண்பு மிகுந்த சட்டசபைக்குள் நுழைவதற்கும் அதிமுகவும், அதன் தொண்டர்களும், எங்களது உழைப்பும்தான் காரணம் என்பதை அவர்கள் உணர வேண்டும். நாங்கள் இல்லாவிட்டால் உங்களுக்கு ஒரு சீட் கூட கிடைத்திருக்காது.

அதேசமயம் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்திருக்காவிட்டாலும் கூட அதிமுக அமோக வெற்றி பெற்றிருக்கும். காரணம், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தார்கள். ஆனால் அதிமுகவுடன் இணைந்ததால் தேமுதிகவுக்குத்தான் அதிர்ஷ்டம் அடித்தது. அந்தக் கட்சிக்கு 29 சீட்கள் கிடைத்தன. அக்கட்சிக்கு முதன்மை எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தும் கிடைத்தது.அத்தனைக்கும் காரணம் அதிமுகதான். ஆனால் இனிமேல் தேமுதிவுக்கு இறங்குமுகம்தான். அதை நான் திட்டவட்டமாக சொல்லிக் கொள்கிறேன் என்று கடுமையாக சாடினார் ஜெயலலிதா.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...