|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 July, 2011

ரகசிய முகாம்களில் 5000 தமிழ் இளைஞர்களை அடைத்துள்ள இலங்கை!

இலங்கையில் சட்டவிரோதமாக 5000 தமிழ் இளைஞர்கள் ரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட தேசிய சட்டத்திற்கு முரணான வகையில் தமிழ் அரசியல் கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரகசியமான மர்ம முகாம்களில் 5 ஆயிரம் வரையிலான தமிழ் இளைஞர், இளம் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று சோஷலிச இளைஞர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. பத்தரல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சோஷலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்னாயக்க தெரிவித்ததாவது:

அரசியல் கைதிகள் மற்றும் மர்ம முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அவர்களின் விவரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நேரிடும்.

1983 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் 23 ஆம் தேதி நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்செயல்களினால் தேசிய அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டது மட்டுமின்றி பிரிவினைவாதம் ஆயுதப் போராட்டம் என்று இன முரண்பாடு தீவிரமடைந்தது.

ஆனால் தற்போது முப்பதாண்டுகால யுத்தம் முடிவடைந்தும் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கான சிறந்த சந்தர்ப்பம் காணப்படுகின்ற போதிலும் அதனை முறையாக பயன்படுத்துவதில் நடைமுறை தலைமைத்துவம் தோல்வி கண்டுள்ளது. ஜனநாயகம் மீதும் தேசிய அரசியல் மீதும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அரசின் செயற்பாடுகள் அமையவும் இல்லை.

கடந்த 10 வருடத்திற்கும் அதிகமான காலங்களாக தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பலர் ரகசிய முகாம்களிலும் சிறை வைக்கப்பட்டுள்ளனர். எமது தேடல்களின் மூலம் மேற்படி சட்ட விரோதமான தடுத்து வைத்தல் இனம் காணப்பட்டுள்ளது. ஆனால் அரசு காணாமல் போனவர்கள் தொடர்பாகவோ, அரசியல் கைதிகள் தொடர்பாகவோ விசாரணைகளை முன்னெடுப்பதும் இல்லை. விபரங்களை வெளியிடுவதும் இல்லை.

பயங்கரவாதம் இல்லாத போதிலும் நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் போன்றவற்றில் கூட விசாரணைகள் மற்றும் நீதிமன்றில் ஆஜர்படுத்தல் போன்ற சட்ட வழி முறைகள் உள்ளன.

ஆனால் சிறை வைக்கப்பட்டுள்ள, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களுக்கு எந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதே தெரியவில்லை.

எனவே அரசு தொடர்ந்து மௌனம் காக்காமல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும். தம் வசம் குறிப்பிட்ட விபரங்கள் உள்ளது. அவற்றை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்போம்," என்றார்.


ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்?

வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல் களுக்காக  சிலர் ஸ்ரீராம ஜெயத்தை  லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர். உலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும். ராம என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி மரா என்றே முதலில் உச்சரித்தார். மரா என்றாலும், ராம என்றாலும் பாவங்களைப் போக்கடிப்பது என்று பொருள். ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள். ரமா என்று அவளுக்கு பெயருண்டு. ரமா என்றால் லட்சுமி. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம். ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும். ராமன் என்ற சொல்லுக்கும் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். ரா என்றால் இல்லை மன் என்றால் தலைவன். இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை என்பது இதன் பொருள்.

.2014கோடிக்கு யுடிவி-யை வாங்கிய வால்ட் டிஸ்னி!

தமிழ் உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள பொழுதுபோக்கு துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் முக்கிய நிறுவனமான யுடிவி-யை ரூ.2014 கோடிக்கு வால்ட் டிஸ்னி நிறுவனம் வாங்கியுள்ளது. இதன்மூலம் தமிழ் சினிமாவின் தரம் உயர நல்ல வாய்ப்பாக இது அமைந்திருக்கிறது. ஏற்கனவே யுடிவி நிறுவனத்தின் 50.44 பங்குகளை வால்ட் டிஸ்னி நிறுவனம் வாங்கி இருந்தது. இந்நிலையில் மீதமுள்ள பங்குகளையும் ரூ 1000 வீதம் டிஸ்னி நிறுவனம் வாங்க முடிவு செய்து ஒப்பந்தமும கையழுத்தானது. யுடிவியின் புரமோட்டர்களான ரோனி ஸ்க்ரூவாலா மற்றும் அவரது குடும்பத்தினர் வசமுள்ள பங்குகளையும் சேர்த்து வாங்கிக் கொள்கிறது டிஸ்னி. இதன் மூலம் புதிதாக $ 454 மில்லியன் டாலர் அதாவது ரூ 2014 கோடியை முதலீடு செய்கிறது வால்ட் டிஸ்னி.

பாலிவுட் மட்டுமல்லாது சமீபத்தில் கோலிவுட்டில் கால்பதித்தது யுடிவி. இப்போது இந்த நிறுவனம் டிஸ்னி வசம் செல்வது, தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான போக்கை உருவாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. யுடிவி வெளியிட்ட தெய்வத்திருமகள் படம் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதுபோக இந்நிறுவனம் அடுத்து வெளியிட இருக்கும் வேட்டை, வழக்கு எண் 18/9 மற்றும் கும்கி படங்களின் உரிமையையும் யுடிவி பெற்றுள்ளது. இந்தப் படங்கள் இனி வால்ட் டிஸ்னி பேனரில் வெளியாகும் எனத் தெரிகிறது. அதேபோல், யுடிவியின் நேரடித் தயாரிப்பில் உருவாகும் முகமூடி படமும் வால்ட் டிஸ்னி தயாரிப்பாக வெளியாகிறது.

18 லட்சம் ஓடாத மீட்டர்களால் மின்துறைக்கு ரூ.700 கோடி இழப்பு!


தமிழக மின்வாரியத்தில், பழைய கறுப்பு மீட்டர் பெட்டிகளை மாற்றாததால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பழமையான, 18 லட்சம் கறுப்பு மீட்டர்களால் ஆண்டுக்கு, 700 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படலாம் என, மின்வாரியம் கண்டுபிடித்துள்ளது. தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக்க நடந்து வரும் ஆய்வில், இது புதிய கண்டுபிடிப்பு. கடந்த கால பிரச்னைகளை ஆய்வு செய்து, மின்துறையின் நஷ்டத்தை சரிக்கட்டத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும், 2.80 கோடி மின் நுகர்வோர்கள் பயன்படுத்தும் மீட்டர்களின் நிலை குறித்து, மின்துறையின் தொழில்நுட்பக் கருவிகள் மேலாண்மைப் பிரிவு சர்வே எடுத்துள்ளது. இதில், 18 லட்சம் கறுப்பு மீட்டர்கள் என்ற,"மெக்கானிக்கல் மீட்டர்கள்' இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து, மின்துறை ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை, அனைத்து மின் நுகர்வோர்களுக்கும், கறுப்பு வண்ண இரும்புப் பெட்டி போன்ற மெக்கானிக்கல் மீட்டர்கள் வழங்கப்பட்டன.
இந்த மீட்டர்கள் பொதுவாக, ஒரு பல்பு, டியூப்லைட் போன்றவற்றை பயன்படுத்தினால் ஓடாது. அதிக திறனை பயன்படுத்தும், மின்விசிறி, தண்ணீர் மோட்டார், இஸ்திரி பெட்டி போன்றவை பயன்படுத்தினால் தான் மீட்டர் ஓடும். இதனால், சப்ளையாகும் மின்சாரத்திற்கு ஏற்ற வருவாய் மின்துறைக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதையறிந்த மின்துறை, நவீன தொழில்நுட்பம் கொண்ட எலக்ட்ரானிக் மீட்டர்களை பொருத்தியது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், 100 சதவீதம் கறுப்பு மீட்டர் பெட்டிகளை மாற்றும் முயற்சியில் இறங்கியது. ஆனால், பல காரணங்களால் முழுவதுமாக மாற்ற முடியவில்லை.

தற்போது, மின்வாரிய சேர்மன் ஹன்ஸ்ராஜ் வர்மா உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் அனைத்து மின்பகிர்மான வட்டங்களிலும் கறுப்பு மீட்டர் பெட்டிகளை, தொழில்நுட்பக் கருவிகள் மேலாண்மைப் பிரிவு கணக்கெடுத்தது. இதில், 150 வட்டங்களில், சராசரியாக 10 ஆயிரம் மீட்டர்கள் வீதம், 18 லட்சம் மெக்கானிக்கல் மீட்டர்கள் பயன்பாட்டில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், ஆண்டுக்கு 700 கோடி ரூபாய் வரை மின்துறைக்கு இழப்பு ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், புதிதாக இணைப்பு பெற்ற நுகர்வோர்களுக்கும், பழுதான மீட்டர்களை மாற்றவும், 50 ஆயிரம் மீட்டர்கள் தேவைப்படுகின்றன. இதுகுறித்து, மின்துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது, "வீடுகளுக்கான இணைப்புகளுக்கு தேவையான மீட்டர்கள், "ஸ்டாக்' உள்ளன. மும்முனை இணைப்புகளுக்கு தான் பற்றாக்குறை உள்ளது. தற்போது, 15 லட்சம் மீட்டர்கள் தேவை' என்றார். ஆனால், புதிய மீட்டர்கள் வாங்குவதில், கோர்ட் வழக்குகளால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வழக்குகள் முடிந்தால் தான், மீட்டர் கொள்முதலுக்கான டெண்டரை மின்வாரியம் அறிவிக்க முடியும் என்பதால், மின்துறைக்கு தொடர்ந்து வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

பயன்பாட்டுக்கு ஏற்ப புதிய கட்டண முறை: "மின்துறையில் ஏற்படும் இழப்புகளை சரிக்கட்ட, இரவு நேரம் போன்ற பயன்பாடு அதிகமுள்ள நேரத்தில் மட்டும் மின்கட்டண விகிதத்தை அதிகரிக்கலாம்' என, தேசிய எரிசக்தி துறை மாநாட்டில், திட்ட கமிஷன் துணை தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா கூறியுள்ளார். இது சாத்தியமா? என்பது குறித்து, மின் வாரிய உயரதிகாரி கூறும் போது,"தற்போது பழுதான மீட்டர்களை மாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். "பீக் - அவர்ஸ்' என்ற பயன்பாடு அதிகமான நேரத்தில், கட்டணத்தை கணக்கிட, தனி சாப்ட்வேர் தயாரிக்க வேண்டும். "ஸ்மார்ட் மீட்டர்ஸ்' என்ற நேரத்திற்கு ஏற்ற கட்டணத்தை கணக்கிடும் மீட்டர்கள் பொருத்த வேண்டும். தற்போது அதற்கு வாய்ப்பில்லை' என்றார்.

இழுத்து மூடப்பட்ட சோதனை மையங்கள்! இதுகுறித்து மின்வாரிய தொழில்நுட்ப பொறியாளர் ஒருவர் கூறியதாவது: மின்வாரியத்திற்கு சப்ளையாகும் மீட்டர்களில், 30 சதவீதம் வரை பழுதானவையாக உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன், பெல், இந்தியா மீட்டர் லிமிடெட், ஐ.எம்.எல்., கேபிடல் போன்ற நிறுவனங்கள் மீட்டர் சப்ளை செய்தன. தற்போது, எல் அண்ட் ஜி., எல் அண்ட் டி., செக்யூர் போன்ற புதிய நிறுவனங்கள் மீட்டர் தயாரிப்பில் உள்ளன. கடந்த முறை சப்ளை செய்த நிறுவனங்கள், 10 ஆண்டு"சர்வீஸ்' செய்வதாகக் கூறினாலும், அந்த சேவை தொடரவில்லை. இதேபோல், மீட்டர்களை பரிசோதிக்க "மீட்டர் ரிலே டெஸ்டிங்' (எம்.ஆர்.டி.,) மையங்கள் 2,600 இடங்களில் செயல்பட்டன. தற்போது, இவற்றில் 80 சதவீதம் மூடப்பட்டு, "ஹைடென்ஷன்' மீட்டர்களுக்கு மட்டும் வட்டத்திற்கு ஒன்று என, 150 மையங்கள் செயல்படுகின்றன. நிறுவனங்கள் தரும் மீட்டர்களை, மின்வாரியம் சோதிக்காமல் சப்ளை செய்வதால், பழுதான மீட்டர்களை மாற்ற முடியாமல், மின்துறைக்கு மறைமுகமாக பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பயம் பழகிவிட்டது!

ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சியின் போது வந்திருந்த பார்வையாளர்களின் உதிரத்தை உறைய வைத்தது மரணக்கிணறு எனும் சாகச விளையாட்டு. வெளிப்பகுதி முழுவதும் இரும்பாலும், உள்பகுதி முழுவதும் மரச்சக்கைகளாலும், சுமார் 45 அடி உயரத்திலும், 60 அடி சுற்றளவிலும் அமைக்கப்பட்டிருந்தது அந்த செயற்கை மரணக்கிணறு. அதில் இரண்டு மங்கையர்களும்,8 இளைஞர்களும் கார்களையும், பைக்குகளையும் இரு கைகளையும் விட்டு விட்டு மின்னல் வேகத்தில் வளைந்தும், நெளிந்தும், குறுக்கும், நெடுக்குமாக ஓட்டிய போது இதயத் துடிப்பே நின்றுவிடும் போலிருந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தை சேர்ந்தது கோல்டன் அம்யூஸ்மென்ட் எனும் நிறுவனம். அது தென் தமிழகம் முழுவதும் தனது பணியாளர்களுடன் கிராமம், கிராமமாகச் சென்று மரணக்கிணறு என்ற சாகச விளையாட்டை நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த லலிதா சேகரும், தென்காசியைச் சேர்ந்த பேபி என்ற இரு பெண்கள்  பணியாற்றுகின்றனர். இவர்களோடு மீரட்டைச் சேர்ந்த சலீம்கான், அல்டாப், சூரஜ், லக்னோவை சேர்ந்த ராஜூ, அஜய் மேரட், பைரஜ் உள்ளிட்ட மொத்தம் 15 பேர் அடங்கிய ஒரு குழுவே உள்ளது.  பயிற்சியாளர் அபுகான்.  இவர்களால் எப்படி இந்த சாதனையை நிகழ்த்த முடிகிறது? என்ற வியப்புடன், குழுவில் இடம் பிடித்துள்ள சாகச பெண்களான லலிதா சேகரிடமும், பேபியிடமும் பேசினோம்.



இரு கைகளையும் விட்டு விட்டு வாகனங்களை ஓட்டும்போது கீழே விழுந்துவிடுவோம் என்கிற பயமில்லையா? பழகிவிட்டது. பயம் இல்லை. பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான் பயப்படுகின்றார்கள். ஓரளவுக்காவது மன தைரியம் உள்ளவர்கள்தான் பார்க்க வருகிறார்கள். தைரியம் இல்லாதவர்கள் விளையாட்டைத் தொடர்ந்து பார்க்காமல் இறங்கி விடுகிறார்கள். சிலருக்கு மயக்கம்கூட வந்ததுண்டு.


இந்த விளையாட்டைப் பார்க்க வந்த பார்வையாளர்கள் உங்களிடம் எதுவும் சொல்வதுண்டா? கை குலுக்கிப் பலரும் பாராட்டுவர். சிலர் எங்களுக்கு அன்பளிப்புத் தருவார்கள். வயதான பெண்களில் சிலர், ""ஏம்மா உனக்கு வேற பொழைப்பே தெரியாதா? இப்படித்தான் உயிரைப் பணயம் வைத்துப் பொழைக்கணுமா?'' என்றும் கேட்பார்கள். "எப்படிப் பழகினீர்கள்' என்றும் சிலர் கேட்பதுண்டு.


எவ்வளவு நாட்களில் இதைக் கற்றுக் கொள்ளலாம்?

தொடர்ந்து 20 வருடங்களாக இத்தொழிலை செய்து வருகிறோம். ஆர்வத்தைப் பொறுத்துக் குறைந்தது ஒரு வருடமாவது பயிற்சிக்குத் தேவைப்படும்.

இந்த விளையாட்டைப் பார்க்க வந்த சிலர் தைரியமாக எங்களிடம் வந்து, ""எங்களுக்கும் கற்றுத் தாருங்கள். நாங்கள் எழுதி வேண்டுமானாலும் தருகிறோம்'' என்பார்கள். ஆபத்தான விளையாட்டாக இருப்பதால் பெரும்பாலும் யாருக்கும் கற்றுத் தருவதில்லை. கிணற்றுக்குள் வாகனங்கள் செல்லும் போது அந்த சத்தத்தில் பயப்படாமல் உள்ளுக்குள் நிற்க வைத்துப் பழக்குவோம். பின்னர் வாகனங்களைத் துடைத்து சுத்தம் செய்யப் பழக்கி வாகனங்களை ஓட்டவும் பழக்குகிறோம். நிறுவனத்தின் உரிமையாளரும், பயிற்சியாளருமான அபுகானும் சொல்லித் தருவார்.


விளையாட்டின் போது கீழே விழுந்து காயங்கள், உயிர்ப் பலிகள் ஏற்பட்டிருக்கின்றனவா? அப்படி எதுவும் இதுவரை எங்கள் கம்பெனியில் நடக்கவில்லை. பயிற்சியின் போது மட்டும் ஹெல்மெட் அணிந்து கொள்வோம். அப்போது சிறு,சிறு காயங்கள் ஏற்பட்டதும் உண்டு. கொஞ்சம் ஆபத்தான பயிற்சி.


வாகனங்களைக் கிணற்றுக்குள் ஒரே நேரத்தில் வேகமாக பலரும் ஓட்டிக் கொண்டிருக்கும் போது திடீரென டயர் பஞ்சர் ஆகி விட்டால் என்ன செய்வீர்கள்? டயரில் காற்று இறங்குகிறது என்று தெரிந்தவுடனேயே மிகத் திறமையாக கீழே இறங்கி விடுவோம். முன்னும், பின்னும் வளைந்து, நெளிந்து ஓட்டிக் கொண்டிருப்பவர்களைச் சமாளித்துக் கீழே இறங்கவும் திறமை இருக்க வேண்டியது அவசியம்.


இரு கைகளையும் விட்டு விட்டு சாய்வான பகுதியில் எப்படி வாகனங்களை ஓட்ட முடிகிறது? நாங்கள் ஓட்டும் வாகனங்களில் ஆக்ஸிலேட்டர் லாக் வசதி உள்ளது. அதை தேவைக்கேற்றவாறு லாக் செய்து விட்ட பிறகு அதைப் பிடிக்கா விட்டாலும் ஒரே வேகத்தில் வாகனங்கள் போய்க் கொண்டிருக்கும்.


கார்களை ஓட்டும் போது உடம்பு முழுவதும் காருக்கு வெளியில் வந்த பிறகும் கார் ஓடிக் கொண்டிருக்கிறதே அது எப்படி? ரொம்ப சிம்பிள், உடம்பு மட்டும்தான் வெளியில் வரும். காலை மட்டும் ஆக்ஸிலேட்டரிலிருந்து வெளியில் எடுக்கவே மாட்டோம். கைகள் ஸ்டியரிங்கை பிடிக்கவில்லையென்றாலும் கார் ஒரே வேகத்தில் போய்க் கொண்டுதான் இருக்கும். சாய்வாகவே காரை ஓட்டிக் கொண்டு செல்ல பயிற்சியும் மிக முக்கியம்.

ஒரு நாளைக்கு எத்தனை முறை கிணற்றுக்குள் வாகனங்களில் சுற்றுவீர்கள்? ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியிலும் ஒரு நாளைக்கு 50 முறை கூட சுற்றுவோம். கோயில் திருவிழாக்களின் போது கிராமங்களில் கூட்டம் அதிகமாக இருந்தால் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை கூட சுற்றி இருக்கிறோம். கண்காட்சிகள் நடக்கும் இடங்களில் ஓய்வு கிடைக்கும்.

இத்தொழிலில் என்னென்ன கஷ்டங்களைச் சந்திக்
கிறீர்கள்? 
குறைந்தது 15 தினங்களுக்கு ஓர் ஊர் வீதம் தொடர்ந்து பல ஊர்களில் மரணக்கிணறு வடிவமைத்து இந்த விளையாட்டை நடத்துகிறோம். அமைக்கும் இடத்திலேயே டென்ட் அமைத்து அங்கே சமையலும் செய்து கொள்வதுடன் அந்த இடத்திலேயே தங்கிக் கொள்வோம்.கழிப்பறை வசதி, குடிநீர் வசதிகள் ஊருக்கு ஊர் வேறுபடுகிறது. மழைக்காலங்களில் வருமானமே இருக்காது.


சாகசம் புரிந்து சாதிக்கத் துடிப்பவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?


தடம் பார்த்து நடக்காமல் தடம் பதித்து நடந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை.

3 கி.மீ. நீளத்துக்கு தனது பெயரை எழுதிய கோடீசுவரர்! விண்ணில் இருந்து பார்க்கலாம்!!


ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த கோடீசுவரர் ஹமாத். சமீபத்தில் அவர் அபுதாபி அருகே உள்ள அல்புடய்சி என்ற தீவை விலைக்கு வாங்கினார். அதில் தனது பெயரை 3 கி.மீட்டர் நீளத்துக்கு எழுதி வைத்தார்.
 
தனது பெயரின் ஒவ்வொரு எழுத்தையும் சுமார் 0.5 கி.மீட்டர் நீளத்துக்கு ஆங்கில எழுத்தில் பொறித்து தரையில் பதித்து வைத்துள்ளார்.   அந்த எழுத்துக்களை விண்ணில் பறந்தபடியே பார்க்க முடிகிறது. இந்த எழுத்துக்கள் “பேஷ்புக்” இணைய தளத்தில் இடம்பெற்றுள்ளன. அவற்றை தண்ணீரால் அழிக்க முடியாதபடி எழுதப்பட்டுள்ளது.
 
சமீபத்தில், இவர் ரூ.12 கோடிக்கு உலகின் மிக விலை உயர்ந்த அதிநவீன காரை வாங்கினார். அபுதாபியில் இவருக்கு ஆட்டோமொபைல் மியூசியம் உள்ளது. அதில் கவர்ச்சிகரமான 200 வெளிநாட்டு கார்கள் உள்ளன. இவர் மிகப்பெரிய ஒரு லாரியை வடிவமைத்துள்ளார். அது அவரது மாளிகையை விட 64 மடங்கு பெரியது. 

வேலை வழங்க கோரி கிரேன் உச்சியில்...! Still up there for more than 200 days, an unlikely protester sparks a movement!


தென்கொரியாவில் பூசன் நகரில் பிரபலமான தொழிற்சாலை மற்றும் கட்டுமான நிறுவனம் உள்ளது. இது தனது கப்பல் கம்பெனியில் பணிபுரிந்த 400 பேரை வேலைநீக்கம் செய்தது. அதை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் தொழிற்சங்க பெண் பிரதிநிதி கிம்ஜின்-சுக் என்பவர் ஒரு நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.   அதாவது கப்பல் தளத்தில் உள்ள 115 அடி உயர கிரேனில் (பாரம் தூக்கும் கருவியில்) தங்கியிருந்து போராடி வருகிறார். ஒருநாள், 2 நாள் அல்ல. 200 நாட்களாக இப்போராட்டத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார். கிரேன் உச்சியில் மின்சார வசதி இல்லை. துணிகளை துவைத்து குளிக்க முடியாது. ஒரு வாளி மட்டுமே வைத்துள்ளார். இவரை சமாதானப்படுத்த பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.  
 
ஆனால் பணியில் இருந்து நீக்கப்பட்ட 400 பேருக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும். அதுவரை கிரேனில் இருந்து இறங்க மாட்டேன், எனது போராட்டம் தொடரும் என கண்டிப்புடன் தெரிவித்து விட்டார். தென்கொரிய வரலாற்றிலேயே நீண்ட நாட்களாக அதுபோன்ற மிகப்பெரிய போராட்டம் நடத்தியது கிம் ஜின்-சுக்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

Two other “buses of hope” – actually more caravans of hope comprising hundreds of buses –have arrived in Busan on earlier weekends, carrying thousands of protesters against mass layoffs at Hanjin, where police have doused them with water cannons in an attempt to keep them away from the Yeongdo site. Authorities have sought to close off the avenues of approach for the third bus of hope.


Busan, South Korea’s second-biggest city, occupies a significant place in the country’s history. It is known not only for producing two former presidents — Kim Young-sam and Roh Moo-hyun – but also for igniting the epochal June 1989 democratization uprising. It has thus taken center stage again as a major segment of society looks for new hope in the promise of worker solidarity.


Kim, an essay writer who writes about people who survive in an unfriendly labor environment, is not alone. Two New Progressive Party advisors have been staging a hunger strike in front of the Daehanmun Gate of Deoksu Palace in central Seoul. Academics and others have begun hunger strikes as well.

விளையாட்டு வீராங்கனைகளுக்கு புதிய வகை “பிரா”


விளையாட்டு வீராங்கனைகளுக்கு அவர்கள் அணியும் உடைகள் பிரச்சினையாக அமைந்து விடுகின்றன. குறிப்பாக மேல் பகுதியில் அணிய கூடிய ஆடைகள் கச்சிதமாக அமைவதில்லை.  ஏதாவது ஒரு வகையில், அவை ஆபாசத்தை வெளிக்காட்டி விடுகின்றன. இதை தடுக்க புதிய வகை விளையாட்டு பிராவை இங்கிலாந்து விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள்.
 
இந்த புதிய வகை பிராக்கள் மார்பகங்களை பாதுகாப்புடன், அசைவுகளையும் கட்டுப்படுத்துகிறது. எந்த கோணத்தில் சாய்ந்து நிமிர்ந்தாலும் அதற்கு ஏற்ப பிரா நெளிந்து கொடுத்து மார்பை இறுக்க பற்றிக் கொள்ளும். குதிக்கும் போதும், தாவூம் போதும் மார்பகங்கள் குலுங்குவதை கட்டுப்படுத்துகிறது.
 
குறிப்பாக பெரிய மார்பகங்களை கொண்ட பெண்கள் குனியும் போது, மார்பகங்கள் கீழ் நோக்கி சரிந்து உடைக்கு வெளியே கவர்ச்சியாக தெரிவது உண்டு. இது ஆபாச கோணத்திலும் பார்க்கப்படும். ஆனால் புதிய வகை பிராவானாது, அவ்வாறு வெளியே தெரியவிடாது. குனியும் போது, மார்பகங்கள் நகராமல் இறுக்கி பிடித்துக் கொள்ளும். எனவே எந்த கோணத்திலும் ஆபாசம் வெளிப்படாது.
 
எனவே இது விளையாட்டு வீராங்கனைகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்.   5 சைஸ்களில் இந்த வகை பிராக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அக்டோபர் மாதம் சந்தையில் விற்பனைக்கு வருகின்றன. இந்த பிரா ஒன்றின் விலை 35 பவுண்டுகள் ஆகும். இந்திய பண மதிப்பு படி சுமார் ரூ.2630 ஆகும்.

Come October, women everywhere will be celebrating. For some, news of the latest over-shoulder-boulder-holder will be no biggie, but for others who know what it's like to go running and be in constant fear of bounce-back, there will be silent thankyous whispered London-wide.

This is because - after months of research - Clare Fallon, Panache Lingerie's head designer, has come up with the ultimate new sports bra, one that she claims will finally eliminate the bounce. Called the Panache Sports Bra, it hits stores in October (£35, panache-lingerie.com) and the hope is that by wearing it women won't have to endure hours of painful workouts, or worry ever again about an embarrassing wobble.


But will the Panache really work and what makes it worth the fuss? Well, following vigorous tests by the Loughborough Sports Technology Institute, fellow tester and sports bra specialist Selaine Saxby, founder of lessbounce.com, says: "We've had it in. We've tried it. My staff have all pre-ordered [them]. It's comfy, it's well-designed, it does what it says on the tin, which is good as a lot of women have really been waiting for this to come to market." Saxby definitely understands the value of a good sports bra, adding that the effect of an ill-fitting one is potentially irreversible.


"The primary supporting structures in the breasts, the Cooper's ligaments, can stretch and won't come back up, so you really need to invest in one. Women really notice a difference when they wear a new sports bra," she says. The three things to look for are bounce reduction, comfort and appearance which, according to Saxby, you should be able to get by spending about £30. Of course, what you buy depends on your shape, how much sport you do and how many times you wash it.


"Fitting a sports bra is different to fitting a normal bra. During exercise you need to be able to breathe more deeply so make sure you can get one finger behind the strap. For example, with a Shock Absorber bra, if you measure 30, you'll need a 34. My advice is that if you want a bra for everything, get one really good one and once it wears down after 30 washes, you can use it for low-impact sports like yoga," Saxby advises.

But while we have a lot to look forward to in Panache's new breast protector, not all of us can fork out £35. Currently, the most popular range is Shock Absorber, which took two years of biomechanical research, prototypes, trials and road testing by Olympic gold medallist Sally Gunnell to bring to the market. Since then both Anna Kournikova and champion long-jumper Jade Johnson have both stood for the brand. Shock Absorber's Julia Nolan says that the team has been committed to investing in pioneering research and design for 15 years and now bestsellers include the RUN (for runners), the MAX (a crop top with an encapsulation bra structure) and the PUMP (with padding). 


Other notable contenders include the Berlei Running Bra, which suits horse riders, Triumph's Tri-Action for all-rounders, or the Sportjock Action Bras for younger girls or women doing low-impact sport. "Of course there are statistics to show how many women need a good bra but, to be honest, an average look in London parks should show you. Four boobs is not a good look and neither is cleavage," says a stern Selby. And no one wants to be a victim of the quadruple boob, now do they? 

சீனா சாதனை 7 ஆயிரம் மீட்டர் கடலுக்குள் நீர்மூழ்கி கப்பலை செலுத்தியது!


சீனா “ஜியோலாங்” என்ற நவீன நீர்மூழ்கி கப்பலை தயாரித்துள்ளது. அதை 7 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் செலுத்தி உலக சாதனை படைக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான சோதனை ஓட்டம் நேற்று சீனாவில் உள்ள பசிபிக்கடலில் நடந்தது.
 
அதற்காக அந்த நீர்மூழ்கி கப்பல் 3 பேர் கொண்ட குழுவுடன் கிரேன் மூலம் கடலுக்குள் இறக்கப்பட்டது.   அக்கப்பல் 5,067 மீட்டர் அதாவது 16,591 அடி ஆழத்தில் கடலுக்குள் பயணம் செய்து சாதனை படைத்தது.
 
இது வருகிற 2012-ம் ஆண்டில் 7 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் பயணம் செய்து சாதனை படைக்க வழி வகுக்கும் என நீர்மூழ்கி கப்பல் அதிகாரி வாங் பே தெரிவித்தார். இதற்கு முன்பு ஜப்பானின் “சிங்காய்” என்ற நீர் மூழ்கி கப்பல் 6500 மீட்டர் ஆழ கடலுக்குள் பயணம் செய்து சாதனை படைத்தது. கடந்த 1989-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இச்சாதனை நிகழ்த்தப்பட்டது. இதை முறியடிக்கவே ஜப்பான் தனது “ஜியோலாங்” நீர் மூழ்கி கப்பலை 7 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் செலுத்தி தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. 

Having only recently conquered space, it seems China is now turning its attention to the seas. As part of the country's deep sea exploration programme, the manned Jiaolong underwater craft this week reached a staggering 5,057 metres below sea level in an 'international area' of the Pacific Ocean.


It comes more than 50 years since the fabled Trieste dropped more than 10,000 metres to the bottom of Challenger Deep, the lowest point of the Pacific's Mariana Trench.
And the Chinese mission has also pipped film director James Cameron - who wants to film scenes for the sequel to blockbuster Avatar from 7,000 metres below surface - to the post in plumbing the murky depths of the world's waters.

The Jiaolong's crew of Tang Jialing, Fu Wentao and Ye Cong, now hope next year to take their titanium-hulled 26ft-long craft even deeper to 7,000 metres.
If that dive is successful, it will mean the Jiaolong, named after a mythical Chinese sea dragon, will bypass the Japanese craft Shinkai to become the world's deepest exploration vessel. 

கொலை செய்வது எப்படி? 100 தடவை கத்தியால் குத்தி...??


லண்டன் அருகே உள்ள யார்க்ஷைர் நகரில் வசிப்பவர் ஆல்பிரடோ மெரிகோ (43). இவரது மனைவி லிண்டா (40).  
 
இவர்களுக்கு 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 வயதில் ஒரு மகன் உள்ளான். மனைவி நடத்தையில் மெரிகோவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கணவரின் சித்ரவதை தாங்க முடியாமல் திருமணமான ஒரு வருடத்திலேயே லிண்டா கணவரை பிரிந்து அருகில் உள்ள டிரிப்பீல்டு என்னும் இடத்தில் குழந்தையுடன் தனியே வசித்து வந்தார்.
 
கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார். சமரசத்தை ஏற்க மனைவி மறுத்ததால் அவரை கொடூரமாக கொலை செய்ய திட்டமிட்டார். இதற்கு முன்பு நடந்த கொலைகள் பற்றிய விவரங்களை இண்டர்நெட்டில் தேடினார்.
 
அதில் ஒருவரை கொல்வது எப்படி? என்ற தலைப்பில் 10 டாப் டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. எப்படி கொலை செய்யலாம், கொலைக்கு என்னென்ன வகையான தண்டனைகள் கிடைக்கும் என் பதையும் இன்டர்நெட் மூலம் அவர் தெரிந்து கொண்டார்.
 
பின்னர் கொலை திட்டத்துடன் மெரிகோ நேற்று முன்தினம் மனைவி வீட்டுக்கு வந்தார். 2 வயது குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்த லிண்டோவை மெரிகோ கத்தியால் சரமாரியாக குத்தினார். 100 முறை மாறி மாறி வெறியுடன் குத்தினார். இதில் லிண்டோ துடிதுடித்து செத்தார்.
 
பின்னர் உடலை தனது காரில் ஏற்றிக்கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வீசி விட்டார். போலீசார் விசாரணை நடத்தி மெரிகோவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி முன்பு மெரிகோ மேற்கண்ட தகவல்களை வாக்குமூலமாக தெரிவித்தார். 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...