|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 October, 2011

உடல் நோய் தீர்க்கும் வெங்காயப் பூக்கள்!


இந்திய சமையலில் இடம் பெறும் முக்கிய காய்கறிகளில் ஒன்று வெங்காயம். சுவைக்காக மட்டுமின்றி வெங்காயம் வியக்கத்தக்க மருத்துவ ரீதியாகவும் பயன்படுகிறது. நன்கு வளர்ந்த வெங்காயம் சமையலில் எவ்வாறு உதவுகிறதோ அதேபோல வெங்காயச் செடியில் உள்ள பூக்களும் மனிதர்களின் நோய் போக்கும் மருத்துவ குணம் கொண்டவையாகும். 

காசநோய்க்கு மருந்து: வெங்காயத்தையும், வெங்காயப்பூவையும் சேர்த்து அரைத்து ஒரு அவுன்ஸ் சாறு எடுத்து இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகிவர காசநோய் குணமடையும்.

மாதவிலக்கு குணமடையும்: வெங்காயப்பூக்களையும் வெங்காயத்தையும், பொடியாக நறுக்கி தயிரில் ஊறப்போட்டு சாப்பிட மூலம் தொடர்புடைய எரிச்சல், குத்தல் குணமடையும். கண்நோயால் பாதிக்கப்பட்டு பார்வை மங்கலாக இருப்பவர்கள் வெங்காயப்பூவைக் கசக்கி சாறு பிழிந்து எடுத்து இரண்டு சொட்டு சாறு காலை, மாலை கண்களில் விட்டு வர மூன்று நாட்களில் கண்பார்வை தெளிவடையும்.  பல்வலியால் அவதிப்படுபவர்கள் சம அளவு வெங்காயம் மற்றும் வெங்காயப்பூ எடுத்து அரைத்து சாறு பிழிந்து தினமும் வாய்கொப்பளித்து வர பல் மற்றும் ஈறு தொடர்புடைய நோய்கள் குணமடையும்.

வயிற்றுவலி போக்கும்: ஒரு கைப்பிடியளவு வெங்காயப்பூ எடுத்து பொடிப்பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு அதில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றவும். வெங்காயப்பூ நன்றாக வெந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிறிதளவு உப்பு சேர்த்து உட்கொள்ள வயிற்று வலி உடன் நிற்கும். வெங்காயம் சேர்த்து சமைக்கும் உணவுகளில் வெங்காயத்திற்கு பதிலாக வெங்காயப்பூவையும், வெங்காயத்தாளையும் சிறியதாய் நறுக்கிப் போட்டு சேர்க்கலாம். இது பசியை தூண்டும். குடலில் உள்ள தேவையற்ற வாயுவை அகற்றும். வெங்காயப் பூவினை ஏதாவது ஒரு வகையில் பக்குவம் செய்து சாப்பிட கீழ் வாதம் குணமடையும்.

6 மாநகராட்சிகளில் பெண் மேயர்கள்!


தமிழகத்தில் முதன் முறையாக 6 பெண் மேயர்கள் வெற்றிப் பெற்று, பதவியேற்க உள்ளனர். கடந்த 2006ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம் என்ற 6 மாநகராட்சிகள் இருந்தன. ஆனால் 2011ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துகுடி உள்ளிட்ட 4 புதிய மாநகராட்சிகள் சேர்த்து கொள்ளப்பட்டன. சென்னை மாநகராட்சியின் எல்லைகளை விரிவுப்படுத்தி 200 வார்டுகளை கொண்ட 'கிரேட்டர் சென்னை' உருவாக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியை தொடர்ந்து திமுக கைப்பற்றி வந்த நிலையில் இந்த முறை சென்னையையும் சேர்த்து மொத்தமுள்ள 10 மாநகராட்சியிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 'கிரேட்டர் சென்னை'யின் முதல் மேயராக அதிமுகவின் சைதை துரைசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெற்றி பெற்றவர்களில் 6 மாநகராட்சிகளின் மேயர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்லை மேயராக விஜிலா, தூத்துக்குடி மேயராக சசிகலா புஷ்பா, வேலூர் மேயராக கார்த்தியாயினி, திருச்சி மேயராக ஜெயா, திருப்பூர் மேயராக விசாலாட்சி, ஈரோடு மேயராக மல்லிகா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

தமிழ் பெண்ணிற்கு சிறந்த பெண் சட்ட வல்லுனர் விருது!


நியூசெளத் வேல்ஸ் : ஆஸ்திரேலியாவின் நியூ செளத் வேல்ஸ் சட்ட வல்லுனர் அமைப்பும், பெண் சட்ட வல்லுனர் சங்கமும் இணைந்து வழங்கும் சிறந்த பெண் சட்ட வல்லுனர் சமூக விருது 2011க்காக வழக்கறிஞர் டாக்டர்.சந்திரிகா சுப்ரமணியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞருக்கு இவ்விருது பரிந்துரை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். டாக்டர் சந்திரிகா சுப்ரமணியன், 2009 ஆண்டில் இது போலவே சிறந்த சட்ட சேவைக்கான ஜஸ்டிஸ் விருதுக்குத் தெரிவாகிய முத‌ல் தமிழ்ப் பெண் ஆவார். டாக்டர்.சந்திரிகா சுப்ரமணியன் பிளக்டவுன் சிட் வெஸ்ட் பல்லின பல் கலாச்சார சேவை நிலையத்தில் இலவச சட்ட சேவையை வழங்குகிறார். இந்தியாவிலும் இலங்கையிலும் பத்திரிகையாளராகவும், ஊடகத்துறையில் ஆய்வாளராகவும், சென்னைப் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் பணி செய்தவர் ஆவார். 1989ம் ஆண்டு இவர் எழுதிய 'மக்கள் தொடர்பு சாதனமும் மகளிரும்' என்ற நூலுக்குத் தமிழக அரசு விருது கிடைத்துள்ளது. இதுவரை 10க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1997ம் ஆண்டு சிட்னியில் குடியேறிய பின்னர், பிற நாடுகளில் இருந்து அங்கு குடியேறியவர்களுக்காக சேவை நிலையங்களில் பணி புரிந்தார். பின் மைக்ரோசாஃப்ட் அங்கீகரிக்கப்பட்ட கம்ப்யூட்டர் மென் பொருள் பணி பயிற்சியாளராகவும், இரட்டை கலாச்சாரத் துறையில் சிறப்பு பயிற்சியாளராகவும் பணி புரிந்து பின் சமூகத்தில் பெண் பழக்கறிஞர் தேவையை உணர்ந்து சட்டம் பயின்றார். தற்போது பரமற்றாவில் சக்ஸஸ் லாயர்ஸ் அண்ட் பாரிஸ்டர்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். வெஸ்டேர்ன் சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் டேஃப் கல்லூரிகளில் சட்ட ஆசிரியராகவும் பணி புரிகிறார். இவரது சோமா இலவச சட்ட சேவை அமைப்பு மூலம் வாரந்தோறும் இலவச சட்டச் சேவையை மேற்கு சிட்னியில் வாழும் பிற நாடுகளைச் சேர்ந்த மக்களுக்காக செய்து வருகிறார். பெண்களுக்கு சட்டத்துறையின் மூலம் சிறந்த சேவை, பயிற்சி மற்றும் உதவிகளை வழ‌ங்கும் தனி திறமைக்காக இவ்விருது இவருக்கு வழங்கப்படுகிறது. அவரது முயற்சிகள் தமிழர்களுக்கெல்லாம் முன்னோடி ஆகும்.

ம.தி.மு.க.,வுக்கு உற்சாகம்!


இந்த தேர்தலில் பெரிய கட்சிகளாக கூறிக் கொண்ட தே.மு.தி.க., - பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் போன்றவை படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், ம.தி.மு.க., தனித்துப் போட்டியிட்டு 150 உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றியிருப்பது, அக்கட்சியினருக்கு புது தெம்பை அளித்துள்ளது.கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிய ம.தி.மு.க., இந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களமிறங்கியது. இதில் கணிசமான வெற்றியை பெற முடியாவிட்டால், கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கும்.
எனினும், எதிர்பார்த்ததை விட கூடுதல் இடங்களை ம.தி.மு.க., பிடித்துள்ளது. நேற்று மாலை 6.30 மணி நிலவரப்படி, மாநகராட்சிகளில் எட்டு கவுன்சிலர் பதவிகளையும், ஒரு நகராட்சித் தலைவர் பதவியையும், 48 நகராட்சி உறுப்பினர் பதவிகளையும், ஏழு பேரூராட்சி தலைவர் பதவிகளையும், 82 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளையும், நான்கு ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளையும் வென்றுள்ளது. இது, ம.தி.மு.க.,வுக்கு அடிமட்டத்தில் இன்னும் செல்வாக்கு உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. இதனால், வைகோ உட்பட ம.தி.மு.க.,வினர் சற்று தெம்பாக உள்ளனர்.

சட்டத்தால் தொட முடியாதவர்களா டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்கள்?


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் வீடுகளில், கடந்த 14ம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். சோதனை நடத்தச் சென்ற அதிகாரிகளிடம், தேர்வாணைய உறுப்பினர் ஒருவர், "நாங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டவர்கள். எங்களை விசாரிப்பதென்றால், மாநில அரசு, கவர்னரிடம் அனுமதி பெற வேண்டும். பின், ஜனாதிபதிக்கு அனுப்பி, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பெற்று தான், விசாரணை நடத்த முடியும்,' என, வாக்குவாதம் செய்துள்ளார்.சட்டப்படி, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடந்தால், சோதனையில் கிடைத்துள்ள ஆவணங்களின் அடிப்படையில், கைது, "ரிமாண்ட்', போலீஸ் கஸ்டடியில் விசாரணை, குற்றப்பத்திரிகை தாக்கல் என, அடுத்தடுத்த நடவடிக்கைகள் துவங்கி விடும்.ஆனால், தேர்வாணைய உறுப்பினர்களைப் பொறுத்தமட்டில், இத்தகைய எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு காரணம், அவர்கள் எழுப்பியுள்ள சட்டப் பிரச்னை தான். இதனால், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பணிகளும் முடங்கி விட்டன. வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களும், அதிர்ச்சியில் உள்ளனர். 

அதிகாரம் உண்டு:இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறுகையில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களின் வீடுகளில், சோதனை மற்றும் விசாரணை நடத்த முடியாது என்பது உண்மை தான். சமீபத்தில், அது மாற்றப்பட்டு, லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை வரம்பிற்குள் வர, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, எங்களுக்கு அதிகாரம் உண்டு,' என்றார்.அவசியம் இல்லை:குற்றவியல் துறை முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா கூறியதாவது: சட்டத்தின் முன் அனைவரும் சமம். அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதென்றால், கவர்னர் அனுமதி பெற்று, ஜனாதிபதிக்கு அனுப்பி, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பெற வேண்டும் என்று கூறுவது, அவர்கள் மீது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு தான்.லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. இரண்டும் வெவ்வேறு விஷயங்கள்.அனைவரும் அரசு ஊழியர்:லஞ்ச ஒழிப்புச் சட்டம், 1998ன் படி, "அரசு ஊழியர்' என்ற பட்டியலில் வருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது விசாரணை நடத்த முடியும். பிரதமர், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் என, அனைவரும், அரசு ஊழியர் பட்டியலில் வந்துவிடுவர்.லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் பேரில், ஐகோர்ட் நீதிபதிகள் மீதே சி.பி.ஐ., விசாரணை நடத்த, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார். 1983ல் நடந்த, "கருணாநிதி எதிர் தமிழக அரசு' வழக்கில், முதல்வரும் அரசு ஊழியர் தான் என, தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. தலைமை நீதிபதியாக இருந்த கே.வீராசாமி மீதே, எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, சி.பி.ஐ., விசாரணை நடத்திய வரலாறுகள் உண்டு.பிரதமருக்கு உத்தரவு:ஸ்பெக்ட்ரம் வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யும்படி, பிரதமருக்கே சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அவர்களை விட, அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் ஒன்றும் பெரியவர்கள் அல்ல. எனவே, அவர்கள், சட்டப்படியான விசாரணையை சந்திக்க வேண்டும். மாநில அரசும், எந்த தயக்கமும் இன்றி விசாரணையை தொடர வேண்டும்.இவ்வாறு ராஜா கூறினார். தேர்வாணைய உறுப்பினர்களாக இருந்தவர்கள், கடந்த ஆட்சியில், "செகண்ட் லேடி' அந்தஸ்தில் இருந்தவருக்கு, ஒவ்வொரு பணியாளர் தேர்வின்போதும், கணிசமான தொகையை கப்பம் கட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும், விசாரணை நடத்த வேண்டும் என, அரசியல் வட்டாரங்களில் கோரிக்கை எழுந்துள்ளது.

10 மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க., அமோக வெற்றி!


தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அனைத்து மாநகராட்சிகளிலும் தி.மு.க., இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது; மிகக் குறைவான ஓட்டுகளை பெற்ற தே.மு.தி.க.,வின், "டிபாசிட்' காலியாகியுள்ளது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், திருநெல்வேலி, திருப்பூர், தூத்துக்குடி, சேலம், ஈரோடு ஆகிய 10 மாநகராட்சிகளுக்கும் கடந்த 17ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. இதுவரை நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த கட்சிகள், இந்த தேர்தலில் தனித்தே களமிறங்கின. மாநிலத்தின் இதயப் பகுதிகளாக விளங்கும் இந்த மாநகரங்களில், மேயர் பதவியைப் பிடிக்க பலமுனைப் போட்டி ஏற்பட்டது.அ.தி.மு.க., - தி.மு.க., - காங்., - ம.தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட பிரதான கட்சிகள் தனித்தும், தே.மு.தி.க., - மார்க்சிஸ்ட் கூட்டணி அமைத்தும் தேர்தலை சந்தித்தன. சட்டசபைத் தேர்தலின் போது, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., தனித்து களமிறங்கியதால், அ.தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பில் பாதிப்பு ஏற்படுமா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.

இந்த சந்தேகத்தை தவிடுபொடியாக்கும் வகையில், அனைத்து மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க., அபார வெற்றி பெற்றுள்ளது. எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்திலும், தி.மு.க.,வே வெற்றி பெற்று வந்த சென்னை மாநகராட்சியையும் முதன்முறையாக அ.தி.மு.க., கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.பத்து மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க., - தி.மு.க., இடையே நேரடி போட்டி நிலவிய நிலையில், அனைத்திலும் தி.மு.க., இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், தி.மு.க., வேட்பாளர்களை விட, அ.தி.மு.க., வேட்பாளர்கள் கணிசமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தி.மு.க.,வை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அனைத்து மாநகராட்சிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. ஆனால், அனைத்து மாநகராட்சிகளிலும் காங்கிரஸ் குறைந்த அளவே ஓட்டுகளைப் பெற்று, "டிபாசிட்'டை பறிகொடுத்தது.

அதேபோல், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து, தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க.,வும் பெரும்பாலான மாநகராட்சிகளில், "டிபாசிட்'டை பறிகொடுத்தது. மாநகராட்சி மேயர் பதவிக்காக களமிறங்கிய பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளும் குறைவான ஓட்டுகளைப் பெற்று பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளன.இதில், தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட ம.தி.மு.க., வேட்பாளர் பாத்திமா 29,336 ஓட்டுகளை பெற்று மூன்றாமிடத்தைப் பெற்று, "டிபாசிட்' பெற்றார். இதர மாநகராட்சிகளில் ம.தி.மு.க., குறைவான ஓட்டுகளைப் பெற்று பின்தங்கியது.

அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நான்கு மாதத்தில், அதிரடியாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதும், மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள கட்சி, உள்ளாட்சியிலும் வெற்றி பெற்றால் பெரும்பாலான திட்டங்கள் கிடைக்கும் என்ற வாக்காளர்களின் நம்பிக்கையும் அ.தி.மு.க.,வுக்கு பெரும் வெற்றியைக் கொடுத்துள்ளது.மேலும் இந்த வெற்றியை தக்கவைக்கும் வகையில், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய தலையாய பொறுப்பு ஆளுங்கட்சிக்கு உள்ளது. பதவிக்கு வந்தவுடன் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை மறந்து, படாடோபத்தில் இறங்கக்கூடாது என்ற படிப்பினையையும் இந்த தேர்தல் வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

உதிரி கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி!

கடந்த சட்டசபை தேர்தலில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி உடன்பாட்டுக் குழு, தனித்தனி தேர்தல் அறிக்கை என, ஆட்டம் போட்ட உதிரிக் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளன. காங்கிரஸ், பா.ம.க., - வி.சி., ஆகிய கட்சிகளை, தி.மு.க.,வும், தே.மு.தி.க., - மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை, அ.தி.மு.க.,வும் கழற்றி விட்டதன் மூலம், இக்கட்சிகளின் சாயம் வெளுத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில், மக்கள் பொதுவாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத் தான் ஓட்டளிப்பர். இம்முறையும் அப்படி தான் நிகழ்ந்துள்ளது. ஆனால், தி.மு.க., - காங்., - தே.மு.தி.க., - மா.கம்யூ., - பா.ம.க., என, பலமுனை போட்டிகளுக்கிடையே, அனைத்து மாநகராட்சிகளையும், அ.தி.மு.க., கைப்பற்றியுள்ளது.நேற்றிரவு 7:15 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள, 125 நகராட்சி தலைவர் பதவிகளில், 87 இடங்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பெரும்பாலான இடங்களை, அ.தி.மு.க., கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.அனைத்து இடங்களிலும், அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் அதிக இடைவெளி உள்ளது. மற்ற உதிரிக் கட்சிகள், அ.தி.மு.க., பெற்ற ஓட்டுகளில், 10ல் ஒரு பங்கு ஓட்டு கூட எடுக்காமல் மண்ணை கவ்வியுள்ளன.

உள்ளாட்சித் தேர்தலில், மக்கள் பொதுவாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத் தான் ஓட்டளிப்பர். இம்முறையும் அப்படி தான் நிகழ்ந்துள்ளது. ஆனால், தி.மு.க., - காங்., - தே.மு.தி.க., - மா.கம்யூ., - பா.ம.க., என, பலமுனை போட்டிகளுக்கிடையே, அனைத்து மாநகராட்சிகளையும், அ.தி.மு.க., கைப்பற்றியுள்ளது.நேற்றிரவு 7:15 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள, 125 நகராட்சி தலைவர் பதவிகளில், 87 இடங்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பெரும்பாலான இடங்களை, அ.தி.மு.க., கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.அனைத்து இடங்களிலும், அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் அதிக இடைவெளி உள்ளது. மற்ற உதிரிக் கட்சிகள், அ.தி.மு.க., பெற்ற ஓட்டுகளில், 10ல் ஒரு பங்கு ஓட்டு கூட எடுக்காமல் மண்ணை கவ்வியுள்ளன.

உள்ளாட்சித் தேர்தலில், மக்கள் பொதுவாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத் தான் ஓட்டளிப்பர். இம்முறையும் அப்படி தான் நிகழ்ந்துள்ளது. ஆனால், தி.மு.க., - காங்., - தே.மு.தி.க., - மா.கம்யூ., - பா.ம.க., என, பலமுனை போட்டிகளுக்கிடையே, அனைத்து மாநகராட்சிகளையும், அ.தி.மு.க., கைப்பற்றியுள்ளது.நேற்றிரவு 7:15 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள, 125 நகராட்சி தலைவர் பதவிகளில், 87 இடங்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பெரும்பாலான இடங்களை, அ.தி.மு.க., கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.அனைத்து இடங்களிலும், அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் அதிக இடைவெளி உள்ளது. மற்ற உதிரிக் கட்சிகள், அ.தி.மு.க., பெற்ற ஓட்டுகளில், 10ல் ஒரு பங்கு ஓட்டு கூட எடுக்காமல் மண்ணை கவ்வியுள்ளன.

கடாஃபியின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலர் !

சமீபத்தில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட லிபியா முன்னாள் அதிபர் கடாஃபிக்கு உலகம் முழுவதிலும் சுமார் 200 பில்லியன் டாலர்கள் அளவிற்கு வங்கி கணக்கு, ரியல் எஸ்டேட், முதலீடு உள்ளிட்டவைகள் இருந்தது தெரிய வந்துள்ளது. மேற்கத்திய நாடுகளில் அதிகளவிலான பணம், தங்கம், முதலீடுகள் ஆகியவற்றை கடாஃபி பதுக்கி வைத்திருந்ததாக லாஸ் ஏஞ்ஜெல்ஸ் டைம்ஸ் என்ற அமெரிக்க பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் மேற்கத்திய நாடுகள் கடாஃபியின் சொத்துக்கள் மட்டுமின்றி லிபியாவில் உள்ள முதலீடுகளை கைப்பற்றவும் இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் மோதலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் கடாஃபிக்கு 37 பில்லியன் டாலர்கள் மதிப்பில் முதலீடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அதே சமயம் பிரான்ஸ், லண்டன், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளிலும் 30 பில்லியன் டாலர்களுக்கு அதிகமாக கடாஃபியின் சொத்துக்களை அந்நாட்டு அரசுகள் கைப்பற்றி உள்ளதாகவும் அந்த பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   

Moammar Kadafi secretly salted away more than $200 billion in bank accounts, real estate and corporate investments around the world before he was killed, about $30,000 for every Libyan citizen and double the amount that Western governments previously had suspected, according to senior Libyan officials.

The new estimates of the deposed dictator's hidden cash, gold reserves and investments are "staggering," one person who has studied detailed records of the asset search said Friday. "No one truly appreciated the scope of it." If the values prove accurate, Kadafi will go down in history as one of the most rapacious as well as one of the most bizarre world leaders, on a scale with the late Mobutu Sese Seko in Zaire or the late Ferdinand Marcos in the Philippines. 
Moammar Kadafi secretly salted away more than $200 billion in bank accounts, real estate and corporate investments around the world before he was killed, about $30,000 for every Libyan citizen and double the amount that Western governments previously had suspected, according to senior Libyan officials.

The new estimates of the deposed dictator's hidden cash, gold reserves and investments are "staggering," one person who has studied detailed records of the asset search said Friday. "No one truly appreciated the scope of it." If the values prove accurate, Kadafi will go down in history as one of the most rapacious as well as one of the most bizarre world leaders, on a scale with the late Mobutu Sese Seko in Zaire or the late Ferdinand Marcos in the Philippines.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...