|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 March, 2011

இன்று (10-Mar-2011)

  • பிரிட்டனில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றது(1801)
  •  ஐவரி கோஸ்ட், பிரெஞ்சுக் குடியேற்ற நாடானது(1893)
  •  அலெக்சாண்டர் கிரகாம் பெல், உலகின் முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார்(1876)
  •  யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது(1977)

தனிநபர் வருமானத்தில் கோவா முதலிடம்: தமிழகம் எங்கே?

தனிநபர் ஆண்டு வருமானத்தில் கோவா மாநிலம் முதலிடம் பெற்றுள்ளதாக, பார்லிமென்ட் விவகாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, பார்லிமென்ட் விவகாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார், லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: நாட்டில், கடந்த 2009-10ம் நிதியாண்டில், தனிநபர் ஆண்டு வருமானத்தில் கோவா மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது. அம்மாநில ஆண்டு தனிநபர் வருமானம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 719 ரூபாய். இந்த பட்டியலில் சண்டிகார் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. சண்டிகாரின் தனிநபர் ஆண்டு வருமானம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 912 ரூபாய். மூன்றாம் இடத்தில் உள்ள டில்லியின் ஆண்டு தனிநபர் வருமானம் 1 லட்சத்து 16 ஆயிரத்து 886 ரூபாய். இப்பட்டியலில் பீகார் மாநிலம் கடைசி இடம் பெற்றுள்ளது. இம்மாநிலத்தின் ஆண்டு தனிநபர் வருமானம் 16 ஆயிரத்து 119 ரூபாய். தமிழகத்தில் தனிநபர் ஆண்டு வருமானம் 62 ஆயிரத்து 499 ரூபாய்.

குடோன்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் பதுக்கல்: மனித நேய மக்கள் கட்சி தலைவர் "பகீர்'

சென்னை: ""தமிழகம் முழுவதும் குடோன்களில், தி.மு.க.,வினர் பல ஆயிரம் கோடி ரூபாயை பதுக்கி வைத்துள்ளனர். இவற்றை தேர்தல் கமிஷன் கண்டறிந்து முடக்கினால் மட்டுமே இந்த தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெறும்,'' என, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறினார்.

இது குறித்து, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறியதாவது: தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரின் நடவடிக்கைகள், பேச்சுக்கள், சட்டசபை தேர்தலை நடுநிலையாக நடத்த வேண்டும் என்று அவர் விரும்புவதை காட்டுகிறது. சமீபத்தில், குண்டல்பட்டியில் கூட அதிரடி வாகன சோதனைகள் நடத்தி, பல லட்சம் ரூபாய் பணத்தை கைப்பற்றியிருக்கின்றனர். தேர்தலை நடுநிலையாக நடத்த, தேர்தல் அதிகாரிகளின் பேச்சுக்கள், செயல் வடிவம் பெற வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள குடோன்களில், தி.மு.க.,வினர் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். இது, மத்திய, மாநில உளவுத் துறைகளுக்கு நன்றாகவே தெரியும். இந்த பணத்தைக் கொடுத்து வாக்காளர்களைக் கவர, தி.மு.க., நினைக்கிறது. தலைமை தேர்தல் கமிஷனர் இது குறித்து அதிரடி ஆய்வு நடத்தி, குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை கைப்பற்ற வேண்டும். அப்போது தான், தேர்தல் கமிஷன் நினைக்கும் வகையில் தேர்தல் நடுநிலையாக நடக்கும். இவ்வாறு பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறினார்.

தி.மு.க.,வை திணறடித்த காங்., மேலிடம்: அரசியல் களத்தில் அரங்கேறிய அடேங்கப்பா பின்னணி

கட்சியின் உயர் மட்டக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பிறகும், காங்கிரசுடன் தி.மு.க., கூட்டணி வைத்துக் கொண்டது, அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. மிகப்பெரிய அரசியல் நாடகத்தின் முடிவில் நடந்த புதிருக்கான விடை, சற்று மெல்ல விலகியுள்ளது. தி.மு.க.,வை வழிக்கு கொண்டுவர, காங்கிரஸ் எடுத்த பிரம்மாஸ்திரமும், அ.தி.மு.க., ஆடிய சதுரங்க ஆட்டமும் தான், தி.மு.க.,வை திணறடித்து, கடைசியில், கேட்டதற்கு அதிகமாகவே, 63 தொகுதிகளை கொடுத்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டது என்பது தெரியவந்துள்ளது.

தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை, ஆரம்பம் முதலே கடும் இழுபறியாக இருந்தது. ஐவர் குழு, பல முறை கூடி பேசியும், துளியும் முன்னேற்றம் இல்லை. இதனால், மேலிடத் தலைவரான குலாம்நபி ஆசாத்தே வந்து கருணாநிதியுடன் பேசினார். அப்போது, இருதரப்புக்கும் கடும் இறுக்கம் ஏற்படவே, அடுத்தநாளே, தி.மு.க., உயர்மட்டக்குழு கூடியது. ஐ.மு., கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாகவும், அடுத்தநாளே அமைச்சர்கள் ராஜினாமா கடிதங்களை அளிப்பர் என்றும் அறிவிக்கப்பட்டது. உயர்மட்டக்குழு என்பது, தி.மு.க.,வின் அதிகாரம் மிக்க அமைப்பு. அங்கு ஒரு முடிவு எடுக்கப்பட்டால், அதை மாற்ற வாய்ப்பே இருக்காது. 53லிருந்து 57 சீட் வரை மட்டுமே அளிக்க முடியும் என கறாராக பேசிவிட்டு, இரண்டு நாட்களாக, காங்கிரசிடம் இடைவிடாமல் பேசி பேசி, கடைசியில், 63 வரை காங்கிரசுக்கு அளிக்க முன்வந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. என்ன நடந்துவிட்டது இடையில் என்ற கேள்விக்கும், எதற்காக இந்த முடிவை மாற்ற வேண்டுமென்றும் என்ற கேள்விக்கும், தற்போது விடை தெரியவந்துள்ளது.

தே.மு.தி.க., - அ.தி.மு.க., அணியில் சேர்ந்துவிட்டபிறகு காங்கிரசுக்கு வேறு வழியில்லை என தெரிந்த பின்னரே, தி.மு.க., தீர்மானத்தை நிறைவேற்றி, காங்கிரசுக்கு நெருக்கடி கொடுத்தது. ஆனால், அ.தி.மு.க.,வுடன் கூட்டணிக்கு காங்கிரஸ் ஆயத்த வேலைகளை ஆரம்பிக்கப் போவதற்கான அறிகுறிகள் தென்பட துவங்கியதும், தி.மு.க., ஆடிப்போனது. தி.மு.க.,வின் இந்த தள்ளாட்டத்தை ரசித்துக் கொண்டே, வேண்டுமென்றே அ.தி.மு.க.,விடம் தூது பேசும் காட்சிகளை, காங்கிரஸ் அரங்கேற்றியது. டில்லியில் ம.நடராஜன் முகாம் அடித்து இருந்ததால், காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடப்பதை, தி.மு.க., கவனித்தது. அதற்கேற்ப, அன்றைய தினம் காலையில் பார்லிமென்டில் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் பலரும் குஷியாக இருந்தனர். குறிப்பாக, தம்பிதுரை, செம்மலை, பாலகங்கா போன்றவர்கள், மிகவும் பிசியாக இருந்தனர். அவர்களிடம் பேசியபோது, "அதெல்லாம் ஒன்றுமில்லை' என, மறுத்தனர். ஆனாலும், அவர்களின் முகபாவங்கள் மகிழ்ச்சி ஆகியவை எல்லாம், "ஏதோ நடக்கிறது' என்பதை மட்டும் உறுதிப்படுத்தியது.

அ.தி.மு.க., கூட்டணி பற்றி காங்கிரஸ் எம்.பி.,க்கள் மத்தியிலும் பலமான பேச்சு இருந்தது. இதை, காங்கிரஸ் வேண்டுமென்றே செய்தது. சென்னையிலும் ம.தி.மு.க., - இடதுசாரிகள் கட்சிகளுடன் அ.தி.மு.க., நடத்தியிருக்க வேண்டிய பேச்சுவார்த்தையும் தாமதமாகிக் கொண்டே இருக்கவே, தி.மு.க.,வுக்கு உச்சகட்ட டென்ஷன் ஆனதாக தெரிகிறது. இதையடுத்தே, எப்படியும் அ.தி.மு.க., பக்கம் காங்கிரஸ் சென்று விடாமல், தடுத்தே ஆக வேண்டுமென வியூகம் வகுக்கப்பட்டது. காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை அளிக்க தயாராக இருப்பதாகவும், குறிப்பிட்ட தொகுதிகளையும் கூட அளிக்க தயார் என, தி.மு.க., இறங்கி வந்ததாகவும் அடுத்தடுத்த பேச்சுவார்த்தையில் முடிவானது. பின்னர் ஒருவழியாக, 63 தொகுதிகள் என முடிவாகி அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க.,வுடன் கூட்டணிக்கு பேச்சுவார்த்தையை துவங்கி அதை காட்டி காட்டியே காங்கிரஸ், தி.மு.க.,விடம் தன் தொகுதிகளை கேட்டு வாங்கிக் கொண்டது.

ஆனால், காங்கிரஸ் வகுத்த வியூகத்திற்கு அ.தி.மு.க., ஏன் வளைந்து கொடுக்க வேண்டும், அதற்கான அவசியம் ஏன் ஏற்பட்டது என்பது பற்றி விசாரிக்கையில், ஆச்சரியமான வியூகங்கள் அந்த பக்கம் இருந்தும் வருகின்றன. தற்போது, தே.மு.தி.க., இருப்பதால், இந்த கூட்டணியே போதுமான பலமுடன் இருக்கிறது. தேர்தலை சந்திக்க இதுவே போதும் என்பது அ.தி.மு.க.,வின் நிலை. காங்கிரஸ் வருமானால், அந்த கட்சிக்கு குறைந்தது 50 தொகுதிகள் வரை ஒதுக்கவேண்டும். அப்படி காங்கிரசும் சேரும்போது, அ.தி.மு.க.,வின் வெற்றி, 100 சதவீதமாகவிடும். அந்த சூழ்நிலையில், தே.மு.தி.க., - காங்கிரஸ் இரு கட்சிகளுமே தாங்கள் போட்டியிட்ட 90 தொகுதிகள் வரை வெற்றியை பெற்று இருக்கும் சூழ்நிலையில், முதல்வர் யார் என்ற கேள்வியும் கூடவே வரும். ஜெயலலிதா எளிதாக முதல்வராவதற்கு சிக்கல் உருவாகும். அந்த நிலை வருவதை அ.தி.மு.க., தலைமை விரும்பவில்லை. அதனால் தான், காங்கிரசை சேர்த்துக் கொள்ளும் எண்ணம் அ.தி.மு.க.,வுக்கு கிடையவே கிடையாது. தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்ற வேண்டுமென்பது மட்டுமே, அ.தி.மு.க.,வின் எண்ணம். அதற்காக, அ.தி. மு.க.,வும், காங்கிரஸ் நேற்று முன்தினம் நடத்திய நாடகத்திற்கு, தன் பங்கிற்கு காய் நகர்த்தி பரபரப்பை கிளப்பியது. இப்படி காங்கிரசும் அ.தி.மு.க.,வும் ஆடிய சதுரங்க ஆட்டத்தில், தி.மு.க., மிகுந்த தள்ளாட்டத்திற்கு ஆளாகி, இறுதியில், 63 தந்து தனது இடத்தை, ஐ.மு., கூட்டணியில் தக்க வைத்துக் கொண்டது

தபால் நிலையங்களில் ரயில் டிக்கெட்டுகள் வாங்க புதுத்திட்டம்

தபால் நிலையங்களிலும் ரயில்வே டிக்கெட்டுகள் வாங்கும் வசதி துவங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ரயி்ல்நிலையங்களில் மட்டுமே கம்ப்யூட்டர் முன்பதிவு மையங்கள் இருந்து வருகின்றன. இங்கு கூட்டம் கட்டுக்கடாங்காமல் உள்ளது. அதுவும் பண்டிகை காலங்களில் இரண்டு அல்லது , மூ்ன்று மாதங்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்து கொள்ளப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குளளாகின்றனர். இந்நிலையில் தபால் நிலையங்களிலும் ரயில்வே டிக்கெட்டுகள் வாங்கும் புதிய திட்டம் விரைவில் துவங்கவுள்ளது. இத்திட்டத்தின் கீழ்‌ 27 மாநிலங்களில் 38 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு முக்கிய தலைமை தபால் நிலையங்களில் இந்த டிக்கெட் கவுன்டர்கள் துவங்கவுள்ளன.தற்போது பீகார் மாநிலத்தில் பாட்னா, முஷாபர்பூர், நாளந்தா, கயா, சரண், மதுபானி, கிழக்கு சம்ப்ரான், முங்கர், பகல்பூர்,,பன்கா, சிவான், ஜாமூ, புகஸ்வேரி, புருனியா, தர்பங்கா ஆகிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து புருனியா மாவட்ட தலைமை தபால் நிலைய வர்த்தக ப்பிரிவு இயக்குனர் அனில் குமார், நிருபர்களிடம் கூறும்போது , தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் முதல்கட்டமாக ரயில்வே முன்பதிவு குறித்து இங்கு பணியாற்றும் அதிகாரிகளுக்கு 15 நாள்பயிற்சி அளிக்கப்படவுள்ளது. வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் தபால் நிலையங்களி்ல் ரயில் டிக்கெட் வாங்கும் திட்டம் துவங்கிவிடும். பின்னர் நாடுமுழுவதும் கம்ப்யூட்டர் நெட்வொர்க் இணைப்புள்ள 117 தபால் நிலையங்களில் இந்த சேவை மையம் செயல்படும். இதற்காக தனி கவுன்டர்கள் திறக்கப்படவுள்ளது. இந்த சேவையினை வாரத்திற்கு இருமுறை கண்காணிப்பதற்காக வீடியோ கான்பரன்சிங் மூலம் நிர்வாகிக்க அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.

ஆஸ்திரேலிய பெண்ணுக்கு பிறந்த மெகா சைஸ் குழந்தை

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 5.75 கிலோ எடையுடன் மெகா சைஸ் ஆண் குழந்தை பிறந்தது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து‌ ஹெரால்டு சன் எனும் பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்தவர் அமந்தாபுக்கர் (36). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மூன்றாவதாக கர்ப்பிணியாக இருந்த இவர் மெல்போர்ன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திறகாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 4-ம் தேதியன்று அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிரசவித்த குழந்தையை பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். சாதாரணமாக பிறந்த குழந்தை சராசரியாக 3 கிலோ வரை இருக்கும் .ஆனால் அமந்தாபுக்கருக்கு பிறந்த குழந்தை 5.75 ‌கிலோ எடையுடன் பிறந்தது. இது தொடர்பாக நியூஸ்.காம் எனும் இணையதளத்தில் பிற்நத அந்த ஆண்குழந்தை 4 வயது குழந்தையைப்போல் இருந்ததாகவும், சிசேரியன் முறையில் பிறந்த இந்த குழந்தை பிறந்த போது 5.19 கிலோ இருந்தது. தற்போது 6 கிலோ வரை உள்ளது. துவக்கத்தில் மூச்சுவிடசிரமப்பட்டது. பிறகு அந்த குழந்தையின் ரத்த அழுத்தம் , சர்க்கரை பரிசோதிக்கப்பட்டபின் தற்போது நலமாக உள்ளது.இவ்வாறு அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. பிறந்த ஆண் குழந்தைக்கு ஜாஸ்பர்லூகாஸ் என பெயரிட்டுள்ளனர். இந்த மெகா சைஸ் ஆண் குழந்தையை மருத்துவமனையில் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்வதால் ஸ்டாராக பிரபலமடைந்துள்ளது. குழந்தையின் தாயும் இவ்வளவு பெரிய குழந்தை பிறந்ததை கண்டு ஆச்சர்யம் அடைந்துள்ளார்.

பொங்கல் விழா with gopinath


Maximise the Power of Your Brain - Tony Buzan


ஹாரி பாட்டர் நடிகர்கள் பேராசிரியர் பம்பல்டோர், லார்ட் வோல்டிமார்ட்டுக்கு ஸ்டாம்ப்

இங்கிலாந்தில் உலகப் புகழ்பெற்ற ஹாரி பாட்டர் நட்சத்திரங்களான ரால்ப் பியன்னஸ் மற்றும் மைக்கேல் கேம்பன் ஆகியோருக்கு நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.

சிறியவர்களை காந்தம் போல் கவர்ந்த படம் ஹாரி பாட்டர். ஹாரி பாட்டர் நாவல்களும் சரி, படங்களும் சரி வசூலில் எப்பொழுதும் டாப் தான்.

ஹாரி பாட்டர் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. அந்தப் படத்தில் ஹோக்வர்ட்ஸ் மாயாஜாலப் பள்ளியின் தலைமையாசிரியராக வரும் பேராசிரியர் பம்பல்டோர் மற்றும் பாட்டரின் பரம எதிரி லார்ட் வோல்டிமார்ட் ஆகியோரது புகைப்படங்கள் அஞ்சல் தலையாக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், தி குரோனிக்கல்ஸ் ஆப் நார்னியா படத்தில் வெள்ளை சூனியக்காரியாக நடித்த டில்டா ஸ்வின்டன் சிறப்பு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டுள்ளது. இது லிமிடெட் எடிஷன் அஞ்சல் தலையாகும்.

இந்த 3 அஞ்சல் தலைகளிலும் நடிகர்கள் தங்கள் கதாபாத்திர கெட்டப்பில் தான் இருப்பார்கள்

தனிநபர் வருவாய்... டாப் டென்னில் இந்தியாவுக்கு இடமில்லை!

தனிநபர் வருவாயில் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பெற்றுள்ளது.

இந்தியாவின் தனிநபர் ஆண்டு வருவாய் 2009-10 கணக்கீட்டின்படி ரூ 46492 ஆக உள்ளது. நாடாளுமன்றத்தில் இந்தத் தகவல் இன்று தெரிவிக்கப்பட்டது. வளர்ந்த நாடுகளில் தனிநபர் ரூ 25 லட்சத்துக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் வரும் 2050ம் ஆண்டு இந்திய தனி நபர் வருமானம் ரூ 18 லட்சத்துக்கும் அதிகமாக உயரும் என்கிறது ஒரு ஆய்வறிக்கை. ஆனால் அப்போதும் கூட முதல் 10 இடங்களுக்குள் இந்தியா வர வாய்ப்பில்லையாம்.

தனி நபர் வருவாயில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளின் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.

அவற்றின் விவரம் (மதிப்பு டாலர்களில்):

1. சிங்கப்பூர் - $56,532
2.நார்வே -$51,226
3. அமெரிக்கா - $45,511
4. ஹாங்காங் - $45,301.
5. ஸ்விட்சர்லாந்து-$42,470
6. நெதர்லாந்து - $40,736
7. ஆஸ்திரேலியா - $40,525
8. ஆஸ்திரியா - $39,073
9.கனடா - $38,640
10. ஸ்வீடன் -$36,438

உலகக் கோப்பைக் கிரிக்கெட்-2000 ரன்கள் குவித்து சச்சின் சாதனை

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர், உலகக் கோப்பைப் போட்டிகளில் 2000 ரன்களைக் குவித்து புதிய சாதனை படைத்தார்.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஓரளவுக்கு கை கொடுக்க, நடுநிலை ஆட்டக்காரர்கள் தடுமாறு, பின்வரிசை வீரர்கள் சற்றே சமாளிக்க 189 ரன்களை வரை சமாளித்த நெதர்லாந்து 46.4 ஓவர்களில் ஆல் அவுட் ஆனது. ஜாகிர் கான் 3 விக்கெட்களை வீழ்த்த, மற்ற விக்கெட்களை சுழற்பந்து வீச்சாளர்கள் சரித்தனர்.

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த இந்த மோதலில், மிகவும் அபாரமான பந்து வீச்சை இந்தியா வெளிப்படுத்தியது. ஜாகிர்கான் ஆரம்பத்தில் அசத்த, பின்னால் வந்த சுழற்பந்து வீச்சாளர்கள் நெதர்லாந்தை எழுந்திருக்க முடியாதபடி செய்து விட்டனர்.

ஒரு கட்டத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களுடன் இருந்தது நெதர்லாந்து. ஆனால் கேப்டன் பீட்டர் போரன் கடுமையாக போராடி 38 ரன்களை எடுத்தார். முடாசர் புகாரி 21 ரன்கள் எடுத்தார். பியூஷ் சாவ்லா, யுவராஜ் சிங்குக்கு தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். ஆசிஷ் நேஹ்ராவுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.

பின்னர் ஆட வந்த இந்தியா அதிரடியாக ஆடி வருகிறது. இதில் முக்கிய அம்சமாக சச்சின் டெண்டுல்கர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளில் 2000 ரன்களைப் பூர்த்தி செய்து புதிய சாதனை படைத்தார்.

குறும்படம் - வில்பர்ட் சர்குனராஜ்- இந்தியன் TOILET.

.

மகளிர் தினத்தை முன்னிட்டு

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை - மும்பை - சென்னை வழித்தடத்தில் ஏஐ 569/ ஏஐ 671 என்ற விமானத்தை இயக்கிய கேப்டன் தீபா, துணை கேப்டன் தீப்ஷிகா மற்றும் சேவிகா, கோஷ், சாந்தீபிகா, உபாசனா, சேத்னா

பார்வையில்லை என்றாலும்

எங்கள் உயர்வுக்கு பார்வை தேவையில்லை...: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் இரண்டாவது அறிவுக்களஞ்சிய விருதுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பார்வையில்லை என்றாலும் சொந்த பாட்டில் அனைவரையும் கவர்ந்த இந்த சீனியர் மாணவி

இலவச கிரைண்டரா? மிக்ஸியா? எதிர்பார்ப்பில் வாக்காளர்கள்

கடந்த சட்டசபை தேர்தலை போல், இம்முறையும் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஏதாவது ஒரு பொருள் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு நிச்சயம் இடம்பெறும் என பெண் வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த சட்டசபை தேர்தலில் அனைவருக்கும் இலவச கலர் "டிவி' என்ற தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி வாக்காளர்களை வசியம் செய்தது; தி.மு.க., கூட்டணிக்கு வெற்றியையும் தந்தது. இம்முறையும் பொதுமக்களிடம், குறிப்பாக பெண்களிடம், ஒவ்வொரு கூட்டணியும் என்ன இலவசமாக வழங்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக, கிரைண்டர், மிக்ஸி, வாஷிங்மிஷன் என ஏதோ ஒரு பொருள் இலவசமாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில், பெண்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தை, வயல்வெளி, ஆடு, மாடு மேய்க்கும் இடங்களில் இலவச பொருட்கள் குறித்து பரபரப்பாக பட்டிமன்றமே நடத்தி வருகின்றனர்.

கோபத்தை அறவே குறையுங்கள்

அடக்கம் இன்றி ஒழுக்கம் கெட்டு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும், தியானம் செய்து ஒழுக்கத்துடன் ஒருநாள் வாழ்பவனின் வாழ்வு சிறப்புடையது.
* வழி தவறிச் செல்லும் ரதம் போலப் பொங்கி வரும் கோபத்தினை அடக்கி ஆள்பவனையே நான் சரியான சாரதி என்று சொல்வேன், மற்றவர்கள் கடிவாளக் கயிற்றைக் கையில் வைத்திருப்பவர்களே.
* எவன் ஒருவன் அடக்க அரிதான கொடிய ஆசையை அடக்கி வெல்கிறானோ, அவனுடைய துயரங்கள் தாமரை இலை மீது விழுந்த தண்ணீர் துளிகள் போல, அவனை விட்டு அகலும்.
* வயது முதிர்ந்த பெரியோரை வணங்கி மரியாதை செய்துவருபவனுக்கு ஆயுள், அழகு, இன்பம், வலிமை என்னும் பயன்கள் அதிகரிக்கும்.
* உடம்பின் எரிச்சலை அடக்கிக் காக்க வேண்டும். உடலை அடக்கிப் பழக வேண்டும். ஆசையை அடியோடு
வேரறுத்து, நல்லொழுக்கத்தை பேணி வரவேண்டும்.
* பொறாமை, பேராசை, தீய ஒழுக்கம் இவைகளை எவன் அழித்துவிட்டானோ, அவனே குற்றமற்ற மேதாவி. அவனே உண்மையான அழகு உடையவன்.
- புத்தர்

தாமஸ் மீதான புகார் எனக்கு தெரியாது: பிரதமர் வெளிப்படை

புதுடில்லி: "மத்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையராக தாமஸ் நியமிக்கப்பட்டதற்கு, நான் பொறுப்பேற்கிறேன்' என, பிரதமர் மன்மோகன் சிங், ராஜ்யசபாவில் நேற்று விளக்கம் அளித்தார்.

ராஜ்யசபாவில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: "மத்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையராக தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது' என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை ஏற்றுக் கொள்கிறேன். சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு மதிப்பளிக்கிறேன். தவறான கணிப்பின்படி, அவர் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையராக தேர்வு செய்யப்பட்டு விட்டார். பணியாளர் நலத் துறை அமைச்சர் தான், லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையர் பட்டியலை இறுதி செய்தார். தாமசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு இருப்பது, ஆரம்பத்தில் எனக்கு தெரியாது. இதற்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். புதிய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையரை நியமிக்கும்போது, சுப்ரீம் கோர்ட் அளித்த அறிவுரைகள் பின்பற்றப்படும். இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...