|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 December, 2011

ஊர் கூடி தேர் இழுக்க தெரியாதா இவர்களுக்கு...

யாருக்காக போராட்டம் ? எதற்காக இந்த தனி தனி போராட்டம்?  நமர்க்காகவா ? இல்லை இவர்களின் அரசியல் செல்வாக்கை தெரிந்து கொள்ளவா ஏன் யாருக்கும் ஒற்றுமை இல்லை? ஊர் கூடி தேர் இழுக்க தெரியாதா இவர்களுக்கு...   காசுக்கும், ஓட்டுக்கும் கூட்டணி சேரும்பொழுது நம்ம உரிமைய மீட்டெடுக்க ஏன் ஒண்ணா  சேரல ? 

16ந் தேதி உண்ணாவிரதம்  இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன். 

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை காக்க வலியுறுத்தியும், மதுரையில் 17ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் திராவிடர் கழக பொதுச்செயலர் வீரமணி, 

 முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தி.மு.க., சார்பில் 12.12.2011 அன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது,   

முல்லை பெரியாறுஅணை விவகாரம் தொடர்பாக கேரள அரசின் நிலைப்பாட்டை கண்டித்து அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்ற முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். டிசம்பர் 1 

முல்லைப் பெரியாறு அணையைக் காப்போம் என வலியுறுத்தி (03.12.2011) மாலை, மதுரை காளவாசல் மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கு அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல்

முல்லைப் பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான கேரள அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்தக் கோரி பாமக போராட்டம் டிசம்பர் 7 

முல்லைப்பெரியாறு அணைக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ டிசம்பர் 8ஆம் தேதி தேனியில் உண்ணாவிரதம்


முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னி குயிக் படத்திறப்பு விழா தங்கர் பச்சன் ஆவேசம்.


முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கோர்ட்டு பணிகளை 12ந் தேதி (திங்கட்கிழமை) வக்கீல்கள் புறக்கணிக்கின்றனர்.

முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க கோரி மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் மறியல் மற்றும் மனித சங்கலி போராட்டம் நடத்தினர் டிசம்பர் 1

நூற்றாண்டு பழமை வாய்ந்த முல்லை பெரியாறு அணை ஒப்பந்தத்தை மதிக்காமல் கேரள அரசு தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை கண்டித்து சேலம் மாவட்ட பத்திரிகையாளர்கள் மன்றத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவளாகம் முன்னர் 08/12/2011 காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.


தமிழகம் முழுவதும் 12ந் தேதி நீதிமன்றம் புறக்கணிப்பு வக்கீல்கள் சங்கம் அறிவிப்பு 


கேரள அரசை கண்டித்து கோவையில் பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் நாடாளுமன்ற அவை உள்ளேயும் வெளியேயும் திருமா உள்ளிட்ட உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்!

பேச்சுவார்த்தை தீர்வு தராது தமிழக கவர்னர் ரோசய்யாவை சந்தித்து பேசிய பின் பேட்டியளித்த விஜயகாந்த்.


முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை நிலை நாட்ட வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் நடை பயணம்  சீமான்.

முல்லை பெரியாறு அணை பிரச்சினையை தீர்த்து வைக்கும் பொறுப்பை மத்திய அரசு ஏற்க வேண்டும் 16 ந்தேதி மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உண்ணாவிரத போராட்டம் தா.பாண்டியன்.

முல்லைப் பெரியாறு குறித்து விவாதிக்க டிச 15ம் தேதி தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம்-ஜெ. அறிவிப்பு

முல்லைப் பெரியாறு அணையை நோக்கி பல்லாயிரம் பேருடன் 16ம் தேதி நடைபயணம்-திருமா.

The Dirty Picture tamil Movie..


பார்த்ததில் பிடித்தது...


மிஷ்கினின் முகமூடி...


மிஷ்கினின் கனவுப் படம் என்று வர்ணிக்கப்படும் முகமூடியின் தொடக்க விழா பூஜையுடன் இன்று ஆரம்பமானது. ஜீவா - பூஜை ஹெக்டே ஜோடியாக நடிக்க, மிஷ்கின் இயக்கும் இந்த பெரிய பட்ஜெட் படம், இதுவரை தமிழில் யாரும் மேற்கொள்ளாத ஒரு பெரிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஆங்கிலத்தில் பேட்மேன், ஸ்பைடர்மேன், சூப்பர் மேன் போல ஒரு சாகஸப் படமாக உருவாகிறது முகமூடி. இன்று சாந்தோம் பள்ளி அரங்கில் அதிகாலையிலேயே படத்தின் பூடை நடந்தது. இதில் நடிகர் ஜீவா, நடிகை பூஜா ஹெக்டே உள்பட பலரும் பங்கேற்றனர். பின்னர் படப்பிடிப்பு தொடங்கியது.ஏராளமான துணை நடிகர்கள் குங்பூ சீருடையில் கலந்து கொண்டனர். பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் மிஷ்கின், "முகமூடி கதையை வைத்துக் கொண்டு கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேல் சரியான ஹீரோவைத் தேடி அலைந்திருக்கிறேன். கடைசியில் ஜீவாதான் அந்தக் கதைக்கு பொருத்தமாக அமைந்தார்.


இந்தப் படத்தில் நடிக்க குங்பூ கற்க வேண்டியிருக்கும் என்று நான் சொன்னபோது, ஏற்கெனவே 2 ஆண்டுகள் குங்பூ கற்றதாக அவர் தெரிவித்தார். அப்போதே இவர்தான் சரியான ஹீரோ என முடிவு செய்துவிட்டேன். ஜீவா மட்டும் 90 நாட்கள் எனக்கு தொடர்ந்து கால்ஷீட் கொடுத்தால் இந்தப் படத்தை வரும் கோடையில் நிச்சயம் வெளியிட்டுவிடுவேன்," என்றார். இதைத் தொடர்ந்து பேசிய ஜீவா, "சரியான திட்டமிடல், அதிகபட்ச ஒழுங்குடன் இயங்கும் மிஷ்கினிடம் பணியாற்றுவது பெருமையளிக்கிறது. 90 நாட்கள் என்ன 120 நாட்கள் கூடத் தருகிறேன். நினைத்தபடி படத்தை எடுங்கள்," என்றார். இந்தப் படத்துக்கு கே இசையமைக்கிறார். சத்யா ஒளிப்பதிவு செய்கிறார். சேகர் மாஸ்டர் குங்பூ காட்சிகளை அமைக்கிறார். இவர் ஒரிஜினல் குங்பூ மாஸ்டர். இவரிடம்தான் குங்பூ கற்றுக் கொண்டாராம் இயக்குநர் மிஷ்கின். யுடிவி நிறுவனத்தின் முதல் நேரடி பிரம்மாண்டத் தயாரிப்பு முகமூடி.

சத்துக்களும் சுவையும் நிறைந்த கொடி பசலை...


எண்ணற்ற சத்துக்களும் சுவையும் நிறைந்த கொடி பசலை தரையோடு கொத்து கொத்தாக சிறு செடி போல வளரும் இதுவும் பசலை வகையைச் சேர்ந்த்துதான். இலங்கையில் அதிகம் பயிரிடப்பட்ட இந்த கீரை தற்போது இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுகிறது. இந்த இலையுடன் தண்டையும் சமைத்து சாப்பிடலாம். இரண்டிலும் நீர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. கொடி பசலைக்கீரையில் வைட்டமின் ஏ,பி, போன்ற உயிர்ச்சத்துக்களும், சுண்ணாம்பு, இரும்புச்சத்துக்களும், காணப்படுகின்றன. இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள ரத்தம் சுத்தமாகும். புதிய ரத்தம் விருத்தியாகும். மலச்சிக்கல் நீங்கும்.

சிறுபசலைக்கீரை பசலைக்கீரையில் ஒன்றான சிறுபசலைக்கீரை தரையோடு தரையாக படர்ந்த இருக்கும். குளிர்ச்சியான இடத்திலும், காய்ந்த இடத்திலும் கூட இந்த பசலைக்கொடி படர்ந்திருக்கும். இதன் இலை எள்ளின் உருவத்தில் உருண்டு,திரண்டு, வெந்தயம் அளவில் பருமனாக இருக்கும். இலையும், கொடியும் சிவந்த நிறத்துடன் இருக்கும். சிறுபசலைக்கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து உண்ணலாம். இது தேகத்துக்கு நல்ல பலத்தை தரக்கூடியது. மலச்சிக்கல் உள்ளவர்கள் பசலைக்கீரையை சாப்பிட இளகி குணமாகும். பாலுணர்வை தூண்டக்கூடிய சக்தி இந்த கீரைக்கு உண்டு.

நீர்கடுப்பு குணமாகும் உஷ்ணம் காரணமாக சிறுநீர் சிவந்து அடிக்கடி இறங்குவது உண்டு. இந்த சமயம் சிறுநீர் துவாரத்தில் எரிச்சல் ஏற்படும். இதை நிறுத்த தரைப்பசலைக்கீரையை மூன்று வேளை சமைத்து சாப்பிட நீர்சுருக்கு குணமடையும். உஷ்ணம் காரணமாக வெட்டை, வெள்ளை ஒழுக்கு ஏற்பட்டு சிறுநீர் துவாரத்தில் சதா வெண்ணிறமான நீர் கசிந்து கொண்டிருக்கும். இந்த குறைபாடு உள்ளவர்கள் தரைப்பசலைக்கீரையை மூன்று நாட்கள் சமைத்து சாப்பிட குணமாகும். இது அதிக குளிர்ச்சி தரக்கூடியது என்பதால் சீதாள தேகம் உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது. சளி, கபம் இருக்கும் போது கீரையை சாப்பிட்டால் அதிகமாகும்.

பருவநிலை மாற்றம் குறித்து உலகநாடுகளிடையே புதிய உடன்பாடு!


தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற உலகப் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் உலக நாடுகளிடையே புதிய உடன்பாடு ஒன்று எட்டப்பட்ட நிலையில் முடிவுக்கு வந்துள்ளது. அடுத்த ஆண்டோடு முடிவடையும் கியோட்டோ மாநாட்டின் ஒப்பந்தத்தின் காலவரையறை, 2017 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உலக பருவநிலை மாற்றத்திற்கான, 17 வது சர்வதேச மாநாடு மற்றும் கியோட்டோ மாநாட்டின், 7 வது தொடர் மாநாடு ஆகியவை தென்னாப்ரிக்காவின், டர்பன் நகரில், கடந்த நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 11ம் தேதிவரை நடைபெற்றன. உலகளவில் நாடுகள் வெளியிடும், கரியமில வாயுவின் அளவை குறைப்பதன் மூலம், உலக வெப்பமயமாதலை தணிப்பது தான் இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். 194 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் இந்தியா சார்பில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கலந்து கொண்டார். இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா இடையே, கடந்த இருநாட்களாக காரசாரமான விவாதம் நடந்தது. இதனால் திட்டமிட்டபடி, 9ம் தேதி முடிய வேண்டிய மாநாடு, ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது.

சரித்திர முக்கியத்துவம் மாநாட்டின் இறுதியில் பேசிய, மாநாட்டுத் தலைவரும், தென்னாப்ரிக்காவின் வெளியுறவு அமைச்சருமான மைட் கோவானா மஷாபனே, "வரும் 2015க்குள் கார்பன் வெளியிட்டைக் குறைப்பதற்கான, சட்டப்பூர்வ முன்வரைவு தயாரிக்கப்படும். இந்த முன்வரைவு இறுதி செய்யப்பட்டு, 2020 முதல் அமல்படுத்தப்படும். இந்த முடிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது' என்றார். வரும் 2015ல் தயாரிக்கப்படும் ஒப்பந்தத்தில், இந்தியா, அமெரிக்கா, சீனா கையெழுத்திடுவதாக ஒப்புக் கொண்டன. இந்த ஒப்பந்தம் பற்றி கருத்து வெளியிட்ட மாநாட்டின் தலைவர், "நாளைய தினத்தை காப்பற்றியிருக்கிறது இன்றைய தினம்" என்று கூறியுள்ளார். ஐ.நா. பருவநிலை மாநாட்டின் செயல் இயக்குநரான கிறிஸ்டியானா ஃபிகியுவர், இந்த ஒப்பந்தத்தை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா ஏற்றுக்கொள்ளும் இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன், இந்தியா மீது இவ்விவகாரத்தில் தேவையில்லாத நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன என்றார். எனினும் இதில், பிற நாடுகள் தங்கள் ஊக்கத்தைக் காண்பிக்கும் போது, நாங்களும் காண்பிப்போம். அதனால் அந்த ஒப்பந்தத்தை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம்' என்றார்.

பசுமை பருவ நிதி காடுகள் அழிக்கப்படுவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலும், பருவநிலை மாற்றத்தால் ஏற்படுகின்ற பாதிப்புகளை ஏழை நாடுகள் சமாளிக்க உதவுவதற்கென வழங்கப்படுகின்ற நிதியுதவி கைமாறுவதிலும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. ஏழை நாடுகள் தாங்கள் வெளியிடும், கார்பன் அளவைக் குறைப்பதன் மூலம் எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்னையைச் சமாளிக்க, அந்நாடுகளுக்கு நிதியுதவி வழங்கும் விதத்தில், "பசுமை பருவ நிதி' என்ற பெயரில், 100 பில்லியன் டாலர் கொண்ட, ஓர் நிதியமைப்பை இன்னும் ஓராண்டிற்குள் உருவாக்க வேண்டும் எனவும், முடிவு செய்யப்பட்டது.அதைவிட முக்கியமாய் தாம் வெளியிடக்கூடிய கரியமில வாயுவின் அளவைக் குறைக்க வேண்டும் என உலகின் எந்த ஒரு நாட்டையும் சட்டப்படி வலியுறுத்த முடியும் என்ற நிலை எதிர்காலத்தில் ஏற்படுவதற்குரிய ஒரு வாய்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




மாணவ-மாணவியருக்கு பள்ளிக் கல்வி உதவித்தொகை...


பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ-மாணவியருக்கு பள்ளிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் உதவித் தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா ரூ.11 கோடியே 32 லட்சம் வழங்கியுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,  பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவ-மாணவியருக்கு பள்ளிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், விடுதியில் தங்காமல் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு மாதம் ரூ.25/- வீதம் 10 மாதங்களுக்கும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு மாதம் ரூ.40/-வீதம் 10 மாதங்களுக்கும், 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு மாதம் ரூ.50/- வீதம் 10 மாதங்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

இதேபோன்று விடுதியில் தங்கி 3ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு மாதம் ரூ.200/- வீதம் 10 மாதங்களுக்கும், 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவியர்களுக்கு மாதம் ரூ.250/- வீதம் 10 மாதங்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இது தவிர தனி மானியமாக ஆண்டொன்றுக்கு ரூ.500/- வழங்கப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த மாணவ/மாணவியர் இதனால் பயனடைவார்கள். இதற்கென ரூ.11 கோடியே 32 லட்சம் ஒப்பளிப்பு வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்திரவிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் ராணுவத் தளத்தை அமைக்கும் சீனா!


இந்தியப் பெருங்கடலில் உள்ள ஷெசல்ஸ் தீவில் தனது ராணுவத் தளத்தை அமைக்கப் போவதாக சீனா அறிவித்துள்ளது. கடற்படைக்கு எரிபொருள், ஆயுத சப்ளை செய்ய இந்தத் தளத்தை அமைக்கவுள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தனது தென் சீனக் கடல் பகுதியிலிருந்தும், இலங்கையின் வட பகுதியில் அமைத்துள்ள கடற்படைத் தளத்தின் மூலமூம் ஏற்கனவே இந்திய நீர்மூழ்கிகள், போர்க் கப்பல்களை சீனா கண்காணித்து வருகிறது. இப்போது ஆப்பிரிக்க கண்டத்துக்கு கிழக்கே உள்ள இந்த ஷெசல்ஸ் தீவிலும் தனது ராணுவத் தளத்தை அமைப்பதன் மூலம் இந்தியாவை மூன்று பக்கத்தில் இருந்து சீனா கண்காணிக்க முடியும். 

ஏற்கனவே இந்தியப் பெருங்கடலில் சீனா காலை வைத்துவிட்டது. இந்தக் கடல் பரப்பில் சுமார் 10,000 சதுர கி.மீ. பரப்பளவில் பாலிமெடாலிக் சல்பைட் கனிமங்களை (polymetallic sulphide deposits) தோண்டியெடுக்க உள்ளது சீனா. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீனாவுக்கு இதற்கான அனுமதியை ஐ.நா.வின் சர்வதேச கடல்படுகை ஆணையம் (International Seabed Authority) வழங்கிவிட்டது. இதனால் அடுத்த 15 ஆண்டுகளுக்கு தென் மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனக் கப்பல்கள் எந்த் தடையும் இல்லாமல் வந்து போகலாம். போர்க் கப்பல்கள், உளவு பார்க்கும் கப்பல்களைக் கூட சீனா இந்தப் பிராந்தியத்தில் தடையில்லாமல் இயக்கலாம். கேட்டால், இது கனிமத்தை தோண்டியெடுக்க உதவும் ஆய்வுக் கப்பல் என்று சீனா சொல்லிவிடும்.

இந் நிலையில் இந்தியாவை மேற்குப் பகுதியிலிருந்தும் கண்காணிக்க ஷெசல்ஸ் தீவில் அமைக்கப்படும் ராணுவத் தளம் சீனாவுக்கு உதவும். இந்த மாதத் துவக்கத்தில் ஷெசல்ஸ் நாட்டுக்கு 'நல்லெண்ணப் பயணமாக' சென்ற சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங் லீ, இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டுத் திரும்பியுள்ளார். ராணுவத் தளம் மட்டுமின்றி, ஷெசல்ஸ் நாட்டு பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சி அளிக்கவும் சீனா ஒப்புக் கொண்டுள்ளது. சேமாலியாவை ஒட்டியுள்ள இந்தப் பகுதியில் கடற்கொள்ளையர்களைக் கட்டுப்படுத்த சீனாவின் இந்தத் தளம் உதவும் என ஷெசல்ஸ் கூறியுள்ளது. 

இதே நாள்...


  •   கென்யா விடுதலை தினம்(1963)
  •  இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிறந்த தினம்(1981)
  •  இந்திய தலைநகர் கல்கத்தாவில் இருந்து டில்லிக்கு மாற்றப்பட்டது(1911)
  •  ரொடீசியா நாடு, ஜிம்பாப்வே என பெயர் மாற்றப்பட்டது(1979)
  •  ரஷ்யா, சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது(1991)

மதுரை மேயர் ராஜன் செல்லப்பா டில்லி பயணம்!

டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் நடத்தும் கூட்டத்தில், மதுரை மேயர் ராஜன் செல்லப்பா பங்கேற்கிறார். இந்தியாவில் 63 நகரங்களில் ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகள், இத்திட்டத்தில் இடம்பெற்றன. இத்திட்டம் மூலம் மதுரைக்கு, 2006 ஜூன் 20ல் 2,496.98 கோடி ரூபாய் வழங்க மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் இரண்டாவது பாகத்தை தொடங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நாளை, டில்லியில் பிரதமர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், 63 நகரங்களின் மக்கள் பிரதிகள் பங்கேற்கின்றனர். நிதி ஆதாரமின்றி தவிக்கும் மதுரை மாநகராட்சிக்கு, ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத்திட்டத்தின் இரண்டாம் பாகம் கிடைத்தால், கிடப்பில் கிடக்கும் பலதிட்டங்கள் உயிர் பெறும். 

தானம் மிகச் சிறந்த விசயம்...


தானம் செய்வது மிகச் சிறந்த விஷயமாகும். இருப்பவன் இல்லாதவனுக்கு கொடுக்கும் போது இறைவனாகவே மதிக்கப்படுகிறான். அவ்வாறு தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்...  
1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும் 
2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும் 
3. தங்கம் தானம் தர தோஷம் விலகும் 
4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும் 
5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும் 
6. நெய் தானம் தர நோயைப் போக்கும் 
7. பால் தானம் தர துக்கநிலை மாறும் 
8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும் 
9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும் 
10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும் 
11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும் 
12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும் 
13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும் 
14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும் 
15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.

62வது பிறந்த நாள் கொண்டாடும் ரஜினிகாந்த்...


வீரபாண்டி கட்ட பொம்மன் படத்தில் வசனம் வருமே

எங்களுடன் நாத்து நட்டாய? களை புடுங்கினாய? 

அந்த வசனம் தான் ஞாபகம் வருது...ஏன் ஏன் மக்களே 

இந்த நடிகனுக்காக இவளவு பெரிய ஆர்பாட்டம்? நமக்காக 

எந்த ஆணிய இவர் புடுங்குனார்? பத்திரிக்கைல போட்ட

விற்பனை அதிகமாகும்னு அவனுங்க போடுறாங்க நீங்க? 

யோசிங்க எந்த நடிகனாவது இதுவறை முல்லை பெரியாருக்கு 

வாய் திறந்தான்களா? இல்ல செத்து மடிந்த 

நம்ப இலங்கை சகோதரனுக்காவது ஒரு ஆணி, 

ஒரே ஒரு ஆணி புடிங்கியது உண்டா?  

அவன் நடிகுறான் பணம் வாங்குறான். 

எந்திரன் என்னோட கதைன்னு ஒருத்தர் கேஸ்

போட்டு இருக்கார் தயாரிப்பாளரும், டைரக்டரும், 

கோர்ட்டுல வாய்த மேல வாய்த வாங்கிட்டு 

இருக்காங்க இவர் HERO தானே? இவர் வாங்கின 

காச குடுக்கவேண்டாம். தயாரிப்பாளர் 

கிட்ட  பேசி ஒரு தொகை வாங்கி கொடுக்க கூடாது?

இதுவறை கண்டுக்கவே இல்லை! ஏன்னா இவர்தான் 

அடுத்த படத்துக்கு போய்ட்டாரே! அதுலதான் இப்ப காசு!! 

நாமதான் அவர் கட்டவுட்ட பாலு உத்தி கழுவுறோம்

அவர் நம்மள பின்னாடி உத்தி கழுவுறதா கூட நினைக்கல! 

கட்சி ஆரம்பிக்கப்போரரார்னு நம்ல உசுப்பேத்தி உசுப்பேத்தி 

நாமதான் ரணகளம் ஆகிப்போனோம் இன்னும் நம்ம்பி 

ஏமாற வேண்டாம் இலங்கை தமிழருக்கு ஒன்னும் பன்னால,

கரண்டுக்கு எந்த தீர்வும் இல்ல, குடும்பமே 

எல்லாத்துலையும் கொள்ளை அடிக்குதுன்னு கலைங்கர

தூக்கி இந்த அம்மாவை கொண்டுவந்தோம். இவங்களால 

நம்ப மீனவர்கள கூட  இன்னும் காப்பாத்த முடியல 

இந்த அம்மா உக்காந்து இப்ப கடிதம் எழுதுது...!!! 

மின்சாரம் 3 மணிலேர்ந்து 7 மணிநேரமாய் ஆகிப்போனதே

மிச்சம். தமிழகத்தில் தேடப்படும் குற்றவாளி இலங்கையில் 

இருந்து இங்க வந்து போறான் உடல் நலக்குறைவால் 

வந்த பிரபாகரன் அம்மாவை விமானத்துல இருந்து 

கிழ இறங்க விடல? இன்னும் இன்னும் 

காவடி துக்கி கொண்டுதான் இருக்கிறோம். இவன் 

செத்துபோனால் அடுத்து விஜயகாந்த், விஜய்ன்னு, 

இருக்காங்களே பாஸ்... நாம செத்துப்போனால்? 

நம்ம புள்ள குட்டி இருக்காங்க பாஸ்... கவலைபடாமல் 

நானும்... பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரஜினி SIR.                      

ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்த்த இந்திய அணி உறுதியாக உள்ளது தோனி!


ஆஸ்திரேலியா அணியை சந்திக்க தயாராக உள்ளோம். இந்த தொடர் இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த பேட்டிங், பீல்டிங் மற்றும் பவுலிங் என அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக உழைக்க வேண்டும். ஆஸ்திரேலியா தொடரில் வெற்றி பெறுவோம் என்பதில் இந்திய அணி உறுதியாக உள்ளது. சர்ச்சைகளை தவிர்க்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ளோம். ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிக்க முடியும். இந்த தொடர் கடினமானது. இதனை முன்னிட்டு மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது என கூறினார்.  இதன் பின்னர் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் கூறுகையில், தொடருக்கு முன் நடைபெறும் பயிற்சி போட்டிகள் மிகவும் முக்கியமானது. ஆஸ்திரேலியா தொடரில் இடம்பெற்றுள்ள ஜாகிர்கான் நல்ல உடல்நிலையுடன் உள்ளார். அவர் ரஞ்சி தொடரில் சிறப்பாக பந்து வீசியுள்ளார். ஆஸ்திரேலிய அணி மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது கடினம் என கூறினார்.


முல்லைப் பெரியாறு விவகாரத்தை தூண்டிவிட்டு கூடங்குளம் பிரச்னையை மத்திய அரசு திசைதிருப்புகிறது சீமான்!


உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்று உத்தரவிட்டு உள்ளதே அந்த அணை பலமாக உள்ளதை காட்டுகிறது. ஆனால் கேரள அரசும் அங்குள்ள கட்சிகளும் சுயலாபத்துக்காக முல்லைபெரியாறு அணை பிரச்னையை கிளப்பி உள்ளனர். கேரள அரசும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தமிழகத்துக்கு தரவேண்டிய நீரையும் தரமறுக்கிறது.முல்லைப் பெரியாறு அணை தமிழர்களால் தமிழ்நாட்டுக்காக கட்டப்பட்டது. ஆனால் கேரள அரசு நமது உரிமையில் தலையிட்டு அதுவும் உரிமை கொண்டாடுகிறது. முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் தமிழக அரசின் அணுகுமுறை சரியாக உள்ளது. 

ராஜபட்சே போர்குற்றவாளி என்று தமிழகத்தில் அனைவரும் கூறி வந்தனர். மேலும் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறிய போது மத்திய அரசு கூடங்குளம் பிரச்னையை ஆரம்பித்து மக்களை திசை திருப்பியது. தற்போது கூடங்குளம் பிரச்னை பெரிதானவுடன் முல்லைபெரியாறு அணை பிரச்னையை தூக்கி விட்டு கூடங்குளம் பிரச்னையை திசை திருப்புகிறது என தெரிவித்தார்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...