|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 May, 2011

இதே நாள்

  • கோவா தனி மாநிலமாகியது(1987)

  •  அல்பேனியா தனி நாடானது(1913)

  •  பிராக் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது(1635)

  •  லண்டனில் பிக்பென் மணி முதல் முறையாக இசைக்கப்பட்டது(1859)

  •  திரினிடாட் டொபாகோவுக்கு முதல் தொகுதி இந்தியர்கள் வந்திறங்கினர்(1845)

  • முத்தம்...!

    முத்தம் என்பது உப்புத் தண்ணீர் போல குடிக்க குடிக்க தாகம் அதிகமாகும்’ என்று சீனாவில் ஒரு சுவாரஸ்யமான பழமொழி உண்டு. அன்பின் அடையாளமாக திகழும் முத்தம் பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே முன்பு இருந்தது. இப்போது நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.

    முதல்முறை முத்தம் பெறும்போதோ அல்லது வழங்கும்போதோ மிக பரபரப்பாகத்தான் இருக்கும். ஆனால் அந்த பரபரப்பான கணங்கள் நம் வாழ்நாள் முழுதும் இனிதான நிகழ்வாக இருக்கும் என்பதை அனைவராலும் மறுக்க முடியாது.

    முத்தம் என்பது ஒரு தனி கலை. தனி நபர்களின் மொழி. ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு கருவி. இந்த கருவியை சரியாக கையாளத் தெரிந்தவர்கள்தான் காதல் வாழ்க்கையில் மன்னர்களாக முடிசூட்டிக்கொள்கின்றனர்.

    முத்தம் பற்றி ஆதிமுதல் அந்தம் வரைக்கும் பலரும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. முத்தத்தினால் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் உடலின் பல்வேறு நோய்களை குணப்படுத்துவதாக உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முத்தம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்

    மகிழ்ச்சிக்கான அளவுகோல் தம்பதிகள் இடையேயான நீண்டகால உறவு பலமாக இருப்பதற்கு அவர்களுக்குள் நடைபெறும் முத்த பரிமாற்றமும் ஒரு முக்கிய காரணம். தம்பதியர் இடையே இணக்கமான உறவு இருக்க வேண்டுமானால் அவர்களும் அடிக்கடி முத்தம் கொடுத்துக்கொள்ள வேண்டும்.

    தங்கள் வாழ்க்கைத்துணையுடன் முத்தத்தை பகிர்ந்து கொள்வதை வாழ்க்கையின் ஒரு அங்கமாக பெண்கள் கருதுகின்றனர். தங்களின் அன்பையும், மகிழ்ச்சியையும் முத்தத்தின் மூலமே பெண்கள் வெளிப்படுத்துகின்றனர்.

    உடலுக்கு புத்துணர்ச்சி ஒருவரையொருவர் கட்டி அணைத்துக் கொண்டு தரும் முத்தத்தினால் உடலில் ஹார்மோன் சுரப்பது அதிகரித்து உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சி கிடைக்கிறது. முத்தம் பெறுபவருக்கு மட்டுமல்லாமல் தருபவருக்கும் இன்பதை அளிக்கிறது.

    நீங்கள் உடல் நலத்தோடும், புத்துணர்ச்சியோடும், எதிலும் வெற்றியுடனும் வாழ விரும்பினால் தினமும் வீட்டில் இருந்து கிளம்பும்போது உங்களது வாழ்க்கைத் துணைக்கு முத்தமளித்துவிட்டு கிளம்புங்கள். அப்புறம் பாருங்கள் உங்களது நாள் இனிய நாளாக மட்டுமல்ல வெற்றிகள் கிட்டும் நாளாகவும் அமையும்.
    இளமை தோற்றம் அதிகரிக்கும் நீண்ட முத்தத்தினால் உங்கள் உடலில் தேவையற்ற காலோரிகள் அழிகின்றன. இதனால் உங்கள் உடலை எப்போதும் கச்சிதமாக வைத்துக் கொள்ளலாம். பிரெஞ்ச் முத்தத்தினால் உங்கள் வாய் தசைகளுக்கும், கன்னத்திற்கும் எளிதான உடற்பயிற்சி கிடைக்கிறது. இதனால் உங்கள் முகம் எப்போதும் இளமையான தோற்றத்துடன் இருக்கும்.

    அன்பானவர் அளிக்கும் எதிர்பாராத முத்தத்தினால் உங்கள் இதயம் படபடக்கும். அப்போது அதிகமான ரத்தம் உடலுக்குப் பாயும். அப்போது எல்லா நரம்புகளும் வேலை செய்து உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.

    கண்களை மூடிக் கொண்டு மூச்சை நிறுத்தி முத்தம் கொடுப்பதன் மூலம் கண்களுக்கும், இதயத்திற்கும் நல்ல உடற்பயிற்சியாகவும் அமைகிறது. டென்ஷனையும் குறைக்கிறது. எனவே நீங்கள் டென்ஷனாக இருக்கும்போது கிடைக்கும் முத்தத்திற்கு மதிப்பு அதிகம்.

    முத்தத்தில் கலக்கும் பெண்கள் ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதுபோல், முத்தம் கொடுப்பதும், பெறுவதும் நாளடைவில் ஆண்களுக்கு சலித்து போய்விடுவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால், பெண்கள் மட்டும் அதற்கு நேர்எதிராக இருக்கிறார்கள்.

    முத்தத்தை புத்துணர்வு தரும் விஷயமாக அவர்கள் கருதுவதுதான் அதற்கு காரணம். முத்தம் விஷயத்தில் ஆண்கள் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் முத்த இன்பத்தை அணுஅணுவாய் ரசிப்பதிலும் கொடுப்பதிலும் பெண்கள்தான் `டாப்.’

    தாம்பத்ய உறவில், தன் துணையை பலவாறு முத்தமிடுவதன் மூலமே அந்த உறவில் ஒரு திருப்தியான நிறைவை பெண்கள் பெறுகின்றனராம் இப்படி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை அள்ளித் தந்து இருக்கிறது, அமெரிக்க ஆய்வு

    இந்தியாவின் முதல் தலித் மில்லியனர்!

    இந்தியாவின் முதல் பெரும் பணக்காரர் என்ற பெயரையும், பெருமையும் பெற்றுள்ளார் ராஜேஷ் சரையா. டேராடூனில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் ராஜேஷ். ரஷ்யாவில் ஏரோநாட்டிகல் என்ஜீனியரிங் படித்தார். தற்போது உக்ரேனில் வசித்து வருகிறார். அங்கு பல கோடி மதிப்புள்ள ஸ்டீல்மான்ட் பிரைவேட் லிமிட்டெட் என்கிற ஸ்டீல் நிறுவனத்தை நிறுவி நடத்தி வருகிறார்.

    சமீபத்தில் டேராடூன் வந்திருந்த ராஜேஷ் கூறுகையில், மக்கள் முதலில் தங்களுக்குள் மாற வேண்டும். கொள்கைகளை மாற்ற வேண்டும். மனநிலையை மாற்ற வேண்டும். உலகைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். நமக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்பதை உணர வேண்டும் என்றார் ராஜேஷ். டேராடூனில் தலித் சிறு தொழிலதிபர்களின் வளர்ச்சி தொடர்பான கருத்தரங்கு நடந்தது. அதில்தான் கலந்து கொண்டு ராஜேஷ் பேசினார்.

    அங்கீகரிக்கப்படாத பிரிவுக்கான தேசிய ஆணையத்தின் கணக்குப்படி, 88 சதவீத தலித் மக்கள் ஆதிவாசி மக்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய்தான் செலவழிக்கிறார்களாம். தலித் மக்கள் சிறுதொழில் பிரிவில் பெரும் பணக்காரர்களாக என்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை அறியும் நோக்கில்தான் இந்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    மஞ்சள் துண்டுவில் இருந்து அடிக்கடி வெள்ளை துண்டுக்கு மாறும் கருணாநிதி!

    குருபெயர்ச்சி சாதகமில்லாமல் போனதால், மஞ்சள் நிறத்தில் இருந்து, அடிக்கடி வெள்ளை துண்டுக்கு கருணாநிதி மாறி வருகிறார். ஆரம்பம் முதல் கறுப்பு துண்டு அணிந்த கருணாநிதி, ஐந்தாண்டுகளுக்கு மேலாக மஞ்சள் துண்டுக்கு மாறினார். "கழுத்து பகுதியில் அதிக வலி ஏற்படுவதால், கனமான மஞ்சள் துண்டு அணிந்தால் கழுத்து பகுதியில் வெப்பம் ஏற்படும். வலியை அது கட்டுப்படுத்தும் என, மருத்துவர்கள் ஆலோசனைப்படி துண்டு மாற்றம் நடந்தது' என, தி.மு.க., தரப்பில்

    எந்திரன் படக்கதை திருட்டு தொடர்பாக ‌எந்திரன் பட தயாரிப்பாளர், டைரக்டருக்கு நோட்டீஸ்!

    எந்திரன் படக்கதை திருட்டு தொடர்பாக ‌தொடரப்பட்ட வழங்கில் படத்தின் டைரக்டர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் எந்திரன். இப்படத்தின் கதை தனக்கு சொந்தமானது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் உரிமை கோரி எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அதில் கூறியிருப்பதாவது

    நான் 1996ல் ஜுகிபா என்ற பெயரில் சிறுகதை எழுதினேன். அக்கதை இனிய உதயம் என்ற தமிழ் மாத இதழில் வெளியானது. இதே கதையை அந்த நிறுவனம் திக் திக் தீபிகா என்ற பெயரில் புத்தகமாக 2007ல் பிரசுரித்தது. அது புத்தக கண்காட்சிகளில் விற்பனையானது. அரசு நூலகங்களுக்கும் வாங்கப்பட்டன. அந்த கதையை தழுவி இயக்குனர் ஷங்கர் எந்திரன் என்ற படத்தை எடுத்து வெளியிட்டு உள்ளார். எந்திரன் படத்தை பார்த்த என்னுடைய வாசகர்களும், நண்பர்களும், உங்களுடைய ஜூபிகா கதைக்கும், எந்திரன் படத்திற்கும் சில ஒற்றுமை உள்ளது என தெரிவித்தனர். பிறகு நானும் அப்படத்தைப் பார்தது அதிர்ச்சி அடைந்தேன். என்னுடைய கதையை அப்படியே காப்பி அடித்து படம் எடுத்துள்ளனர். பாடல் காட்சிகளையும், கிராப்பிக்ஸ் காட்சிகளையும் சேர்த்துள்ளனர். எந்திரன் படத்தின் கதையை 1977 - 98ல் புத்தகத்தில் படித்துள்ளதாகவும், அதனை படமாக எடுக்க இருந்ததையும் இயக்குனர் ஷங்கர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதையடுத்து ஷங்கர் மீதும் தயாரிப்பாளர் மீதும் மோசடி காப்புரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் அளித்தேன். அந்த கதையின் காப்புரிமை என்னிடமே உள்ளதென்றும் என்னிடம் அனுமதி பெறாமல் படம் எடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தினேன். ஆனால் தயாரிப்பாளர் பெயரை புகாரில் இருந்து நீக்கினால்தான் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று வாய்மொழியாக என்னிடம் தெரிவித்தனர். நான் மறுத்து விட்டேன். இதனால் புகார் முடித்து வைக்கப்பட்டது. எனவேதான் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளேன்.

    என்னை கொல்ல ரூ.30 லட்சம் விலை பேசப்பட்டது ஹசாரே!

    ஏப்ரல் 5ம் தேதி, டில்லியில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில், பெங்களூரிலிருந்து ஏராளமான இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். என் உண்ணாவிரதத்திற்கு பெரும் ஆதரவாகச் செயல்பட்டனர். அவர்களின் எழுச்சி பாராட்டத்தக்கதாக உள்ளது. இளைஞர்கள் நினைத்தால் அனைத்தையும் செய்து முடிக்கலாம். என்னை கொல்வதற்கு, 30 லட்சம் ரூபாய் கொடுத்து வாடகை கொலையாளியை ஏற்பாடு செய்தனர். ஆனால், அந்த நபர் என்னை கொல்ல மறுத்துவிட்டார். இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.

    PM a good man, problem with remote control

    Prime Minister is a good person. Prime Minister is not bad. Problem comes because of remote control,’’ Hazare said during the course of a speech in Hindi that highlighted his own efforts in tackling corruption in Maharashtra. 

    At a mid-afternoon event at Bangalore’s National College grounds, with around 3,000 people in attendance, Hazare said that the campaign for the Jan Lokpal Bill would be scaled up if impediments are posed before it and that he would return to Jantar Mantar to launch a fresh stir.

    “The movement is committed to ensure that the Lokpal Bill is not only drafted and introduced in the monsoon session of Parliament in July, but also passed by Independence Day,

    பெரு நகரங்கள் அல்லாத நகரங்களுக்கும் விமான சேவையை துவக்க ஏர் இந்தியா நிறுவனம் திட்டம்!

    The national carrier is also considering introducing flights on the existing routes during non-peak hours connecting tier-II and tier-III cities with the metros.


    "At present, about 42 cities -- with more than one million population -- want air connectivity from metro cities. We are doing feasibility study about the possible load and ways to connect those towns," a senior Air India official told PTI.


    We are getting requests from small towns like Bhagalpur in Bihar, Deogarh in Jharkhand, Agra and Gorkhapur in Uttar Pradesh to begin air services.


    பெரு நகரங்கள் அல்லாத நகரங்களுக்கும் விமான சேவையை துவக்க ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தனது விமான சேவையை விரிவுபடுத்தவும் அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. மேலும் முக்கியமான சமயங்கள் அல்லாத நேரங்களிலும் அதிக விமானங்களை இயக்கவும் ஏர் இந்தியா தீர்மானித்துள்ளது. தற்போது 42 நகரங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பெருநகரங்களில் விமான சேவையை பயன்படுத்தி வருகின்றன. பீகாரின் பகல்பூர், ஜார்கண்ட்டின் டியோகார்க், உத்திரபிதேசத்தின் ஆக்ரா மற்றும் கோர்காபூர் உள்ளிட்ட சிறு நகரங்களில் இருந்து வந்த கோரிக்கையின்படி இந்நகரங்களில் விமான சேவையை அறிமுகம் செய்ய தீர்மானித்திருப்பதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. முதல்கட்டமாக வட இந்திய நகரங்களிலும், அதனைத் தொடர்ந்து தென்னிந்திய நகரங்கள் வரையிலும் தனது சேவை விரிவுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    புதிய வகை நானோ கார்களை அறிமுகப்படுகிறது டாடா மோட்டார்ஸ்


    he car is called the Tata Nano and its currently the world’s cheapest car. Amazingly it has four doors and five seats, but with a 33bhp 624cc engine I imagine it will be pretty slow going with 4 adults inside. The car is targeted at the developing countries and has been made with no air conditioning, power steering or electric windows, but, and you have to love this, “two deluxe models will be on offer.”
    At 50 miles per gallon it is pretty economical and (as you can see from the diagram above) has been made with very much with cost in mind.
    சிறிய வகை கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், தனது புகழ்பெற்ற சிறிய வகை காரான நானோ காரில் பல புதிய ரகங்களை 2011-12ம் நிதியாண்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய ரக நானோ கார்கள் டீசல் கார்களாக இருக்கும் என்பதை தவிர பிற விபரங்களை வெளியிட டாடா மோட்டார்ஸ் மறுத்துள்ளது. புதிய ரக நானோ கார்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அவைகள் நடப்பு நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள நானோ ரகங்கள் பெட்ரோல் வகையைச் சேர்ந்ததாக உள்ளது. இவைகள் ரூ.1.41 லட்சத்திலிருந்து ரூ.1.97 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.    

    Highlights: IPL 2011 Final - CSK vs RCB சென்னை கிங்ஸ் மீண்டும் சாம்பியன்!



    ஐ.பி.எல்., கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று சாதனை படைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நேற்று நடந்த பைனலில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முரளி விஜய், அஷ்வினின் அபார ஆட்டம் சென்னை அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...