|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 February, 2013

புத்தரும், மகாத்மா காந்தியும் பிறந்த பூமி...

 
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் கொடூரக் கொலையால் இதயம் படைத்த அத்தனை பேரும் பதறிப் போய் நிற்கும் நிலையில் இலங்கையர்கள் நமது நண்பர்கள், பார்ட்னர்கள், பங்காளிகள் என்று மனிதாபிமானம் சற்றும் இல்லாமல் கருத்து தெரிவித்துள்ளார் மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித். ராஜபக்சே கும்பல் என்ன செய்தாலும் அதை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பது என்பதை கொள்கையாகவே வைத்துக் கொண்டுள்ளது இந்தியா. ஆனால் மிகக் கொடூரமான கோரக் கொலைகளையும் கூட அது கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் அதிர்ச்சியாக உள்ளது. லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது குறித்த புகைப்படங்கள் உள்ளிட்டவை வெளியானபோதும் கூட இந்தியா அதைக் கண்டுகொள்ளவில்லை. இலங்கை நமது நட்பு நாடு, அதன் நட்பு நமக்குத் தேவை என்றுதான் தொடர்ந்து கூறி வருகிறது. தற்போது சின்னஞ்சி சிறுவனான பாலச்சந்திரன் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டதாக புகைப்பட ஆதாரங்கள் வெளியாகி அனைவரையும் பதறடிக்க வைத்துள்ளது. 
 
பாவமாக இருக்கிறது அந்த சிறுவனின் முகம். சட்டை கூட போடாமல் உட்கார வைத்து கையில் பிஸ்கட் கொடுத்து சாப்பிட வைத்துள்ளனர். அதன் பிறகு அவனே எதிர்பாராத நேரத்தில் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிகிறது. உலகிலேயே மிகப் பெரிய அசிங்கம் பிடித்த கோழைகளாக மாறிப் போயுள்ள சிங்கள காடையர்கள், அந்த சிறுவனின் நெஞ்சில் தங்களது புல்லட்களை இறக்கி தங்களது வெறியைக்காட்டியுள்ளனர். இந்த சம்பவத்திற்கும் மத்திய அரசு ஈரமே இல்லாமல் பதிலளித்துள்ளது. வெளியுறவு அமைச்சராக இருக்கும் சல்மான் குர்ஷித் இதுகுறித்துக் கூறுகையில், இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை தொடர்ந்து நாங்கள் தொடர்பில் உள்ளோம். இலங்கை நமது நட்பு நாடு, அண்டை நாடு,முக்கிய நாடு, நல்ல நண்பர்கள். மக்களின் கவலைகள் குறித்து நாங்கள் இலங்கையிடம் உரிய முறையில் எடுத்துரைத்துள்ளோம். சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. அது நம்பகமானதா என்பதை சொல்ல முடியாது. இதற்கு முன்பும் கூட புகைப்படங்கள் வெளியாகின. எனவே இதுகுறித்தெல்லாம் கருத்துக் கூற முடியாது என்றார் குர்ஷித். எவ்வளவு கேவலமான பதில் பாருங்கள்...? புத்தரும், மகாத்மா காந்தியும் பிறந்த பூமி இது... நம்மால் ஒரு பச்சைக் கொலையைக் கண்டிக்கக் கூட முடியவில்லை!

இது நாடா சுடுகாடா?

 
மகாராஷ்டிராவில் பசியால் வாடிய ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் உணவு வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் பந்தரா மாவட்டத்தில் உள்ளது லக்னி கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த ஏழை பெண் ஒருவருக்கு 11, 9 மற்றும் 5 வயதில் மூன்று மகள்கள் இருந்தனர். அவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி இரவு தனது மகள்களைக் காணவில்லை என்று அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தார். மறுநாள் காலை 3 சிறுமிகளின் உடல்கள் கிரமாத்தின் எல்லையில் ரோட்டோரம் உள்ள தாபா அருகே உள்ள கிணற்றில் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். 
 
அந்த தாபா அருகே மதுபாட்டில்களும், சிறுமிகளின் செருப்புகளும் கிடந்தன. அந்த 3 உடல்களைப் பார்த்த அப்பெண் கதறி அழுதார். ஆனால் போலீசாரோ சிறுமிகளுக்கு போதிய உணவு கிடைக்காமல் பசியால் வாடியதால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். இதை எதிர்த்து ஊர் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்த பிறகு உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் அவர்கள் 3 பேரும் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து போலீசார் கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறுமிகளுக்கு போதிய உணவு கொடுக்கும் அளவுக்கு அவர்களின் தாய் சம்பாதிக்காததால் அவர்களுக்கு உணவு வாங்கித் தருவதாக யார் வேண்டுமானாலும் அழைத்துச் செல்வது எளிது என்று ஊர் மக்கள் தெரிவித்தனர். மேலும் தாபாக்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

உலக தாய் மொழி தின வாழ்த்துக்கள்!

International Mother Language Day is an observance held annually on 21 February worldwide to promote awareness of linguistic and cultural diversity and multilingualism. It was first announced by UNESCO on 17 November 1999. Its observance was also formally recognized by the United Nations General Assembly in its resolution establishing 2008 as the International Year of Languages.[1]
International Mother Language Day has been observed every year since 2000 February to promote linguistic and cultural diversity and multilingualism. The date represents the day in 1952 when students demonstrating for recognition of their language, Bangla, as one of the two national languages of the then Pakistan, were shot and killed by police in Dhaka, the capital of what is now Bangladesh.

International Mother Language Day was proclaimed by the General Conference of the United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) in November 1999 (30C/62).On 16 May 2009 the United Nations General Assembly in its resolution A/RES/61/266 called upon Member States "to promote the preservation and protection of all languages used by peoples of the world". By the same resolution, the General Assembly proclaimed 2008 as the International Year of Languages, to promote unity in diversity and international understanding, through multilingualism and multiculturalism.

Languages are the most powerful instruments of preserving and developing our tangible and intangible heritage. All moves to promote the dissemination of mother tongues will serve not only to encourage linguistic diversity and multilingual education but also to develop fuller awareness of linguistic and cultural traditions throughout the world and to inspire solidarity based on understanding, tolerance and dialogue.

விதைக்குள் அகப்பட்ட ஆலமரம் கண் விழிக்கும்?

”பவர் பாசம் காட்டுனா பம்மிப் போவான்! வேஷம் போட்டா வேட்டையாடுவான்!” - பவர்ஸ்டார் பஞ்ச்!
’ஆளே இல்லாத தியேட்டர்ல யாருக்குபா படம் ஓட்டுற’ என்று பலரும் பவர்ஸ்டாரைப் பார்த்து ஒரு காலத்தில் கிண்டலடித்தார்கள். அன்று அனைத்து விமர்சனங்களையும் சிரித்த முகத்துடன் கேட்டுக்கொண்டிருந்த பவர்ஸ்டார் இன்று விமர்சித்தவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறார். எப்படி என்றெல்லாம் தெரியாது ஆனால் பவர்ஸ்டாரும் இப்போது கோடம்பாக்கத்து நட்சத்திரம். கால்ஷீட் கேட்டு அவர் வீட்டு வாசலிலும் சிலர் காத்துக்கிடக்கிறார்கள். இந்த அபரீத வளர்ச்சி பற்றி பவர்ஸ்டாரே மனம் திறந்து பேட்டி கொடுத்திருக்கிறார். சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த பவர்ஸ்டார் “ அன்பு, பாசம் என்று என்மேல் உயிரையே வைத்திருக்கும் என் கோடிக்கணக்கான ரசிகர்களை விட்டுவிட்டு நான் எங்கே செல்வது. 

நான் இந்த இடத்திற்கு வர பல கோடிகளை இழந்திருக்கிறேன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த பணம் எவ்வளவு, யார் கொடுத்தார்கள் என்பதெல்லாம் தேவையில்லாதது.   லத்திகா படத்தை நான் ஓட்டியது பெருமையான விஷயம். பெரிய தயாரிப்பாளர்களே தியேட்டர் இல்லாமல் கஷ்டப்படும் போது, நான் 250 நாட்கள் ஓட்டினேன். அதற்காக எத்தனை தியேட்டர் முதலாளிகளை காக்கா பிடித்து வைத்திருந்தேன் என்பது எனக்கு தான் தெரியும். என் படங்களை முடக்க எத்தனையோ பேர் திட்டம் போட்டார்கள். ஆனாலும் லத்திகாவை 250 நாட்கள் ஓட்டினேன்.  ரஜினியோட கோச்சடையானுக்கு போட்டியா ‘தேசிய நெடுஞ்சாலை’ ரிலீஸ் செய்யப்படும். சினிமாவிற்கு நல்லது செய்யாமல் ஓயமாட்டேன். விதைக்குள் அகப்பட்ட ஆலமரம் கண் விழிக்கும்” என்று பஞ்ச் டையலாக்குகளுடன் பேசி முடித்திருக்கிறார் பவர்ஸ்டார்.

பொறுத்திரு மகனே... காலமிருக்கு!

ஒரு போராளியின்
மகனின் மரணத்தை
மற்றொரு பதிப்பாக
கண்ட கோலம் ...
நெஞ்சுக்குள்
எரிமலையை வெடிக்கச் செய்தது.
மனிதநேயம் செத்தவர்கள்
செய்கின்ற படுகொலைகளில்
இதுதாம் உச்சகட்டம்.போகட்டும்.
அணையப் போகும் விளக்கு
பிரகாசமாகத்தானே எரியும்?
தமிழ்க்குடிகளுக்கு நேர்ந்த
கொடுமைகளுக்கெல்லாம்
நிச்சயம் பதிலடி உண்டு.
ஒரு பாலகனை அழைத்து
வைத்துக்கொண்டு
உணவுகொடுத்து
நெஞ்சில் சுட்டுக் கொல்வதற்கு
எப்படி மனம் வந்தது?மிருகம் கூட
அப்படி எண்ணாதே?
சிறிது நேரத்தில்
தாம் கொல்லப்படுவோம் என
அறியாது
பசியாறிக்கொண்டிருக்கும்
அந்தப் பிஞ்சைக் கொல்ல
எப்படி ஐயா துணிச்சல் பிறந்தது?
மனிதனுக்குப் பிறந்தவர்
செய்கிற காரியமா இது?
இந்திய தூக்குத் தண்டனைக்
குற்றவாளிகளுக்குக் கூட
கடைசி நிமிடம்
ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்
அதிர்ஷ்டம் கிட்டுமே?
அச்சிறுவன் என்ன
குற்றம் செய்தான்?
ஒரு போராளிக்கு மகனாய்ப்
பிறந்தது குற்றமா?
கொத்துக் கொத்தாய்
கொல்லப்பட்ட இனப் படுகொலைகளுக்கு
எதிர்ப்பு தெரிவித்து
பாதுகாத்து வந்தது
ஒரு போராளியின் குற்றமா?
குடும்பத்தில் ஒன்றுவிடாமல்
அழிப்பதுதாம் வீரமா
கோழைகளே...தமிழன் மீது
வெளிநாட்டான் கொண்டிருக்கும்
பற்றில் கால்வாசி கூட
இந்தியா வைக்கவில்லையா?
அந்தக் கொலையாளிகள்
நாட்டுக்குள் பதவியோடு
வருவார்கள்
இவர்கள் மாலை மரியாதை செய்து
உணவுபோட்டு அனுப்புவார்கள்.
இது எத்தனை நாட்களுக்கு?
பூனையும் ஒருநாள்
புலியாக மாறும் என்பது
தெரியாதா?

ஓன்று, இரண்டு,இருபத்தைந்து, நூறு!

 
பொதுவாக இருபத்தைந்து வருடம் நிறைந்தால் வெள்ளி விழா, ஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழா என்ற பெயருடன் கொண்டாடுவது அனைவருக்கும் தெரியும், இவை தவிர பிற வருடங்களுக்குரிய விழாக்களுக்கும் பெயர் உண்டு அவை ..
ஒரு வருடம் நிறைந்தால் காகித விழா
ஐந்து வருடம் நிறைந்தால் மர விழா
பத்து வருடம் நிறைந்தால் தகரம் அல்லது அலுமினிய விழா
பதினைந்து வருடம் நிறைந்தால் படிக விழா
இருபது வருடம் நிறைந்தால் பீங்கான் விழா
இருபத்தைந்து வருடம் நிறைந்தால் வெள்ளி விழா
முப்பது வருடம் நிறைந்தால் முத்து விழா
நாற்பது வருடம் நிறைந்தால் மாணிக்க விழா
ஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழா
அறுபது வருடம் நிறைந்தால் வைர விழா
எழுபத்தைந்து வருடம் நிறைந்தால் பவள விழா
நூறு வருடம் நிறைந்தால் நூற்றாண்டு விழா.
 
Anniversary Preferred Term Other Terms Comments
1/2 yearly Biannual

1 year Annual Paper
2 years Biennial Cotton
3 years Triennial Leather
4 years Quadrennial Linen
5 years Quinquennial Wood
6 years Sexennial Iron
7 years Septennial Wool
8 years Octennial Bronze
9 years Novennial Copper
10 years Decennial Tin/Aluminium
11 years Undecennial Steel
12 years Duodecennial Silk
13 years Tredecennial Lace
14 years Quattuordecennial Ivory
15 years Quindecennial Crystal
20 years Vigintennial / Vicennial China/Porcelain
25 years Quadranscentennial Silver Jubilee Probably a modern coined term.
50 years Semicentennial / Quinquagenary Golden Jubilee
60 years Sexagennial / Sexagenary Diamond Jubilee of monarchs
70 years Septuagennial Platinum Jubilee of monarchs
75 years Dodranscentennial Diamond Jubilee Dodrans is a Latin contraction of de-quadrans which means "a whole unit less a quarter" (de means "from"; quadrans means "quarter". 75 years is a quarter century less than a whole century or 75 = (-25 + 100).[1]
Dodracentennial Alternative Latin form of Dodranscentennial
Dequascentennial Alternative Latin form of Dodranscentennial
Semisesquicentennial Probably[attribution needed] a modern coined term. Demisesquicentennial or Hemisesquicentennialis are other similar variants.
100 years Centennial Centenary / platinum jubilee
125 years Quasquicentennial
Term is broken down as quasqui- (and a quarter) centennial (100 years). Quasqui is a contraction from quadrans "a quarter" plus the clitic conjunction -que "and". The term was coined by Funk and Wagnalls editor Robert L. Chapman in 1961.[2]
150 years Sesquicentennial
Term broken down as sesqui- (one and a half) centennial (100 years)
175 years Dodransbicentennial - Dodrans is a Latin contraction of de-quadrans which means "a whole unit less a quarter" (de means "from"; quadrans means "quarter". 175 years is a quarter century less than the next whole (bi)century or 175 = (-25 + 200).[1]
Dodrabicentennial Alternative Latin form of Dodransbicentennial
Dequasbicentennial Alternative Latin form of Dodransbicentennial
Dosquicentennial Dosquicentennial has been used in modern times[3] and this is perhaps a modern contraction of "de-quadrans". However, it seems inappropriate to combine the terms que and de when dealing with such Roman fractions. In any event, if such a conjunction was appropriate then it would perhaps more likely have been "Dosquibicentennial" (but the result is little shorter anyway).[1]
Demisemiseptcentennial Probably[attribution needed] a modern coined term: demisemiseptcentennial; literally one-half (demi-) x one-half (semi-) x seven (sept-) x 100 years (centennial)—also demisemiseptcentenary.[4][5]
Quartoseptcentennial Probably[attribution needed] a modern coined term: quartoseptcentennial; literally one-quarter (quarto-) x seven (sept-) x 100 years (centennial)—also quartoseptcentenary.[6]
Terquasquicentennial First used by Bell Laboratories in celebrating its 175th anniversary as a corporation.[citation needed] Is a coined word for an anniversary of 175 years, but the elements of the word literally refer to an anniversary of 375 years, as follows: ter- (3) × quasqui- (1¼) × centennial (100 years)
Septaquintaquinque-
centennial
Suggested by lexicographer Robert L. Chapman to William Safire; first appeared in Safire's column, "On Language" (The New York Times Magazine, February 12, 1995). It is a coined word for an anniversary of 175 years, but the elements of the word literally refer to an anniversary of 35,000 years, as follows: septaquinta- (70) × quinque- (5) × centennial (100 years)
200 years Bicentennial

250 years Sestercentennial - To express 2½ in Latin it would be expressed as "half-three". The term relates to being halfway [from the second] to the third integer. In Latin this is "Sestertius" which is a contraction of semis (halfway) tertius (third) - hence Sestercentennial.[1]
Semiquincentennial Probably[attribution needed] a modern coined term: semi- (half) × quin (5) × centennial (100 years) = 250 years
Bicenquinquagenary Used by Princeton University in 1996, Reading, Pennsylvania in 1998, and Washington and Lee University in 1999.[7] It is a coined word for an anniversary of 250 years, but the elements of the word literally refer to an anniversary of 10,000 years, as follows: bi- (2) × cen(t)- (100) × quinquagenary (50 years)
Quarter-millennial Meaning one fourth of one thousand years.[8]
300 years Tercentennial Tricentennial
350 years Sesquarcentennial - A modern coined term; sesquarcentennial for 350 years is deduced here from the "Sestertius" definition for 250 years above. For 350 years it relates to being halfway from the third to the fourth integer; thus a contraction of semis (halfway) and quartus (fourth); hence Sesquarcentennial.
Semiseptcentennial Probably[attribution needed] a modern coined term: semi- (half) × sept(7) × cen(t)- (100) × centennial (350 years)
400 years Quadricentennial Quatercentenary
500 years Quincentennial

600 years Sexcentennial

700 years Septcentennial Septuacentennial Probably[attribution needed] a coined term; earliest known use in March 1988.[9] Chiang Mai Septcentennial Stadium (Chiang Mai, Thailand) was completed in 1991.[10]
800 years Octocentennial

900 years Nonacentennial

1000 years Millennial

2000 years Bimillennial

22 ஆண்டு கால போராட்டத்தி்ற்கு கிடைத்த வெற்றி!


மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையேயும், கடும் சட்ட போராட்டத்திற்கும் இடையே இன்று காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியானது. மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதையடுத்து அரசாணை நகல் தமிழகத்திற்கு வழங்கப்பட உள்ளது. தனக்கு ம‌னநிறைவை தருவதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார். தமிழகம் - கர்நாடகம் இடையேயான, காவிரி நதி நீர் பிரச்னையை தீர்க்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 1989ல், காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம், 1990ல், இடைக்கால தீர்ப்பை வழங்கியது.அதை, உடனடியாக அரசிதழில் வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதன்பின், 2007ல், நடுவர் மன்றம், தன் இறுதித் தீர்ப்பை வழங்கியது. ஆனால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து, உடனடியாக, சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டன.
 
இந்தப் பிரச்னையால், இறுதித் தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடாமல், ஆறு ஆண்டுகளாக, மத்திய அரசு காலம் கடத்தி வந்தது.இந்நிலையில், இந்த விவகாரத்தில், சமீபத்தில் தலையிட்ட, சுப்ரீம் கோர்ட், "இன்றைக்குள், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிட வேண்டும்' என, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.உடன், இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளில், மத்திய சட்ட அமைச்சகமும், நீர்வளத்துறை அமைச்சகமும் தீவிரம் காட்டின. அதனால், சில நாட்களுக்கு முன்னதாகவே, இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியாகலாம் என, நம்பப்பட்டது. ஆனால், பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த வாய்மொழி உத்தரவால், அரசிதழில் வெளியிடுவது தடைபட்டது.இந்நிலையில் இன்று காவிரி நடுமன்ற தீர்ப்பு அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதற்கான அரசாணை நகல் தமிழகம், புதுச்சேரி, கேரள ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.இனி தமிழகத்திற்கு தடையின்றி 419 டி.எம்.சி. தண்ணீர் தடையின்றி கிடைக்‌கும்.
 
நீர்பங்கீடு எவ்வளவு அரசிதழில் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து தமிழகத்திற்கு 419 டி.எம்.சி. ,கர்நாடகாவிற்கு 270 டி.எம்.சி., கேரளாவிற்கு 30 டி.எம்.சி. , புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி., தண்‌ணீர் த‌டையின்றி கிடைக்கும்.இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அளித்த பேட்டியில், கூறியிருப்பதாவது: காவரி நடுமன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியானது எனக்கு மன நிறைவை தருகிறது. 22 ஆண்டு கால போராட்டத்தி்ற்கு கிடைத்த வெற்றி .இது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி,தமிழக மக்களின் போராட்டத்திற்கு நீதி கிடைத்துள்ளது .இனி கர்நாடகா தண்ணீர் இல்லை என கைவிரிக்க முடியாது என்றார்.

கர்நாடகாவில் போராட்டம் காவிரி நடுவர்மன்ற குழுவின் தீர்ப்பை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கர்நாடகா ரட்சக வேதிக அமைப்பின் சார்பில் பெங்களூரு ரயில் நிலையம், மைசூர் ரயில் நிலையம் ஆகியவற்றில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போலீசார் அவர்களை கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...