|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 February, 2012

ஒரு பல்கலையின்கீழ் 100 கல்லூரிகள் மட்டுமே இயங்கப் பரிந்துரை!


ஒரு பல்கலையின் கீழ், 100 கல்லூரிகள் மட்டும் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுத்தால், நிர்வாகம் சிறப்பாக இருக்கும் என, யு.ஜி.சி -க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் தலைமையிலான நிபுணர் குழு இப்பரிந்துரையை அளித்துள்ளது.நாடு முழுவதும், உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி மற்றும் நிர்வாகத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆராய, தியாகராஜன் தலைமையில், 12 பேர் அடங்கிய நிபுணர் குழுவை, 2008 ஆகஸ்ட்டில், பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) அமைத்தது. இக்குழு, நாடு முழுவதும் உள்ள பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுசெய்து, 80 பக்கங்கள் கொண்ட பரிந்துரை அறிக்கையை, சமீபத்தில் யு.ஜி.சி.,யிடம் சமர்ப்பித்தது. இந்த பரிந்துரையை கொள்கை அளவில், யு.ஜி.சி., ஏற்றுக்கொண்டதுடன், 12வது ஐந்தாண்டு திட்ட செயல்பாடுகளில் சேர்த்தும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பரிந்துரை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் எடுத்துக்காட்டு எந்த பல்கலையாக இருந்தாலும், ஒரு பல்கலை கட்டுப்பாட்டின் கீழ், 100 கல்லூரிகள் மட்டுமே இயங்க வேண்டும். இந்த அளவிற்கு இருந்தால்தான், பல்கலையின் நிர்வாகம் சிறப்பாக இருக்கும். மத்திய, மாநில அரசுகள், புதிய பல்கலையை ஆரம்பிக்கும்போது, பல்கலைகள் இல்லாத மாவட்டங்களில் ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும், குறைந்தது 10 தன்னாட்சிக் கல்லூரிகளை, தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் நடத்த வேண்டும். இந்த கல்லூரிகளை, தனியார் கல்லூரிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் நடத்த வேண்டும். இவ்வாறு, பல அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. முக்கியத்துவம் இல்லை இதுகுறித்து, தியாகராஜன் கூறியதாவது: பல்கலைக்கழகங்களில், எந்த ஒரு முடிவை எடுத்தாலும், அதை உடனடியாக அமல்படுத்துவதற்கு ஏற்ப, நிர்வாக விதிமுறைகள் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளோம்.
பல்கலைக்கழகங்களில், செனட், சிண்டிகேட் உட்பட பல அமைப்புகள் உள்ளன. இதில், தொழில்துறை பிரதிநிதிகளுக்கோ, கல்வியாளர்களுக்கோ, விஞ்ஞானிகளுக்கோ, உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை. இவர்களை கட்டாயம் நியமனம் செய்யவும், சட்ட விதிமுறைகளில் இடம் இல்லை. இவர்கள் குழுவில் இருந்தால்தான், காலத்திற்கு ஏற்ப பாடத் திட்டங்களை மாற்றுவதிலும், வேலை வாய்ப்பு மிக்க புதிய பாடத் திட்டங்களை கொண்டு வருவதிலும் கவனம் செலுத்த முடியும். எனவே, இவர்கள் உறுப்பினர்களாக இடம் பெறுவதை, சட்ட ரீதியாக உறுதிசெய்ய வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளோம். ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு, முறையாக பயிற்சி அளிப்பது, இணையதள நிர்வாக முறையை முழுமையாக அமல்படுத்துவது உள்ளிட்ட, பல்வேறு கருத்துகளை வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு தியாகராஜன் கூறினார்.
அண்ணா பல்கலையின் கீழ் 500 கல்லூரிகள்! தமிழகத்தில், 500 பொறியியல் கல்லூரிகள், சென்னை அண்ணா பல்கலையின்கீழ் இருந்து வந்த நிலையை மாற்றி, நிர்வாக வசதிக்காக, முந்தைய தி.மு.க., அரசு, நெல்லை, மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட, ஐந்து இடங்களில் புதிய பல்கலைக்கழகங்களை ஏற்படுத்தியது. புதிய பல்கலைக்கழகங்களில், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என்றும், கல்வித்தரம் சரியாக இல்லை என்றும் கூறி, 500 கல்லூரிகளையும், மீண்டும் சென்னை அண்ணா பல்கலையின் கீழே, தற்போதைய அரசு கொண்டு வந்துள்ளது. இது, நிர்வாகச் சுமையை ஏற்படுத்தும் என்பது, கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.

மிருகசீரிடம் நட்சத்திரமா?

மிருகசீரிடம் நட்சத்திரமா! ஆதிசங்கரர் சிரகசன் என்னும் காபாலிகனுக்கு (நரபலி கொடுப்பவன்) நட்சத்திரக் கதை ஒன்றைச் சொன்னார். வேடன் ஒருவன் மானை விரட்டினான். பாய்ந்து சென்ற மானின் கொம்பு, கொடி ஒன்றில் சிக்கியது. வேடன் அதைக் கொல்ல முயன்ற போது கொஞ்சம் பொறு! என் மனைவியிடம் சொல்லி விட்டு வந்து உனக்கு உணவாகிறேன், என்றது. இரக்கம் கொண்ட வேடனும் அனுப்பி வைத்தான். சற்று நேரத்தில் ஆண் மானுடன் பெண் மானும் அதன் இருகுட்டிகளும் அவன் முன் வந்து நின்றன. ஒருவரை விட்டு ஒருவர் வாழ்வதில் அர்த்தமில்லை. எங்கள் நால்வரையும் ஒரே நேரத்தில் கொன்றுவிடு, என்று பெண்மான் வேடனிடம் சொன்னது. மிருகஜாதியிலும் கூட நாணயமும், பாசபந்தமும் இருப்பதை அறிந்த வேடன் மலைத்தான். அவனுள் இரக்கம் ஊற்றெடுத்தது. அம்பும், வில்லும் நழுவி விழுந்தன. இதைக் கண்ட சிவன், அம்பிகையோடு எழுந்தருளி வேடனுக்கு மோட்சமளித்தார். மான்களுக்கு நட்சத்திரப் பதவி அளித்தார். அவை வானமண்டலத்தில் மிருகசீரிடம் என்னும் நட்சத்திரமாகும் பேறு பெற்றன. இந்நட்சத்திரத் தொகுதியில் நான்கு நட்சத்திரங்கள் உள்ளன. மிருகசீரிட நட்சத்திரத்தினர் தங்களை வாக்குத் தவறாதவர்கள், எக்காரணத்தாலும் உயிருக்கு பயப்படாதவர்கள், பாசத்திற்கு கட்டுப்படுபவர்கள் என்பதை எண்ணி பெருமைப்படலாம்.

இதே நாள்...


  • குவைத் தேசிய தினம்
  •  மாதிரி அணு ஆயுதத்தை சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணையான ப்ருத்வி ஏவப்பட்டது(1988)
  •  சாமுவேல் கோல்ட், சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்க காப்புரிமத்தை பெற்றார்(1836)
  •  தாமஸ் டெவன்போர்ட், மின்சாரத்தில் இயங்கும் மோட்டருக்கான காப்புரிமத்தை பெற்றார்(1837)

வெறும் 8,000 பேரை தான் கொன்றோம் இலங்கை!

ஒரு இனத்தையே அளித்துவிட்டு வெறும் 8000 நா கூசவேண்டாம் இந்த நாய் அரசாங்கத்துக்கு...  தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக 2009ம் ஆண்டு இலங்கை அரசு நடத்திய இறுதிப் போரின் போது சுமார் 8,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையின் மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறை நடத்திய ஆய்வின் இறுதியில் இந்த தகவலை இலங்கை கூறியுள்ளது. இந்த கணக்கெடுப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவர்களைத் தவிர்த்து பொதுமக்கள் மட்டுமே கணக்கெடுக்கப்பட்டுள்ளனர்.சர்வதேச உரிமைக் குழுவின் ஆய்வறிக்கையில், இலங்கையில் இறுதிப் போரின் போது சுமார் 11,172 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளது

போலியோ பாதிப்பு இந்தியா நீக்கம். போலியோ பாதிப்புள்ள நாடுகளின் பட்டியல்: இந்தியா நீக்கம்

விழிப்புணர்வு காரணமாக போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயை ஒழிக்க மத்திய அரசு விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதன் எதிரொலியாக நாட்டிலிருந்து போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டது. மேலும், உலக சுகாதார நிறுவனத்தின் போலியோ பாதிப்புள்ள நாடுகளின்  பட்டியலில்  இருந்து இந்தியாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு மற்றும் மக்களின் ஒத்துழைப்பு மூலமே இந்த வெற்றி பெற முடிந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த இழப்பு உங்களுக்கே ...

 அரசியல் கட்சிகளே வெற்றி பெறும், ஒட்டுமொத்த இழப்பு உங்களுக்கே என்று பொதுமக்களைப் பார்த்து எச்சரிக்கை செய்தார் அண்ணா ஹசாரே. சனிக்கிழமை உ.பி.மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற பொதுமக்கள் விழிப்பு உணர்வு  பொதுக்கூட்டத்தில் பேசிய போது அவர் இவ்வாறு பேசினார்.
இந்த உ.பி. தேர்தலுக்குப் பின் எல்லாம் அடியோடு மாறி விடும் என்றெல்லாம் யாரும் கனவு காண முடியாது. எப்படி இருந்தாலும் இதன் முழு வெளிப்பாடு, பொதுமக்கள் தோற்பதும் அரசியல்வாதிகள் வெற்றி பெறுவதும்தான். ஜன்லோக்பால் என்பதன்மூலம் இப்போது ஒரு போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்தை எட்டியிருக்கிறோம். இது முழுமை அடையுமானால், இந்தப் போக்கில் ஒரு மாறுதல் வரலாம் என்றார் அண்ணா ஹசாரே.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...