|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 February, 2012

இதே நாள்...


  • சர்வதேச சமூகநீதி தினம்
  •  அருணாசலப் பிரதேசம், அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமானது(1987)
  •  ஹவாய் தீவில் முதல் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது(1901)
  •  தமிழறிஞர் கா.நமச்சிவாயம் பிறந்த தினம்(1876)

உண்மைகாதல் அழிவில்லை...


பனப்பாக்கம் அடுத்த கீழ்வெண்பாக்கம் கிராமத்தை சேர்ந்த துரைசாமி (98) தையல் தொழிலாளி. இவரது மனைவி வரதம்மாள் (92). துரைசாமி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் அவர் மரணம் அடைந்தார். நேற்று காலை முதல் உறவினர்களும், ஊர் பொதுமக்களும் வந்து துரைசாமியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி சடங்கு மாலை 5 மணிக்கு நடத்த ஏற்பாடுகள் நடந்தது.   பகல் 1 மணிக்கு துரைசாமியின் உடலைப் பார்த்து அவரது மனைவி வரதம்மாள், கதறினார்.
 
70 ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த என்னை விட்டு பிரிந்து சென்று விட்டீர்களே என்று தனது மார்பில் அடித்து கொண்டு கணவனின் காலடியில் சரிந்தார். அவரை உறவினர்கள் எழுப்ப முயன்ற போது வரதம்மாள் இறந்தது தெரியவந்தது. துரைசாமி பிணத்தின் அருகிலேயே வரதம்மாள் பிணத்தை வைத்து பெரிய மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.   மாலை 5 மணிக்கு கணவன்-மனைவி இருவரையும் ஒரேபாடையில் ஊர்வலமாக எடுத்து சென்று சுடுகாட்டில் ஒரே இடத்தில் வைத்து தகனம் செய்தனர். அவர்கள் சிதைக்கு மகன் ஜெயராமன் தீ மூட்டினார்.

பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி காலமானார்


அவருக்கு வயது 80. திரையுலகின் நடிப்பு தாகத்தால் இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று (19.02.2012) நள்ளிரவில் காலமானார். இவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இவரது சொந்த கிராமத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேரில் வந்திருந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் சங்கம் சார்பில் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர், விஜயகுமார் உள்பட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். 

ஜெமினி பட நிறுவனம் தயாரித்த சந்திரலேகா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை எஸ்.என்.லட்சுமி. தொடர்ந்து எம்ஜிஆர் நடித்த பாக்தாத் திருடன், மாட்டுக்கார வேலன், விவசாயி, சங்கே முழங்கு, தாய்க்கு தலைமகன், இதய வீணை, சிவாஜி நடித்த பாபு, தேவன் மகன், ரஜினி நடித்த படையப்பா, கமல் நடித்த மைக்கேல் மதன காமராஜன், மகாநதி மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். பாக்தாத் திருடன் படத்தில் படைத் தளபதி வேடத்தில் நடித்தவர் டூப் போடாமல் நிஜப் புலியுடன் சண்டையிட்டு எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் இரும்பு வீராங்கனை என்ற பாராட்டும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ 6 ஆயிரம் நாடகங்களுக்கு மேல் குறிப்பாக கலைவாணர் என்எஸ்கே நாடக மன்றத்திலும், கே.பாலச்சந்தர் நடத்திய நாடகத்திலும் நடித்து புகழ் பெற்ற எஸ்என் லட்சுமி, கார் ஓட்டுவதிலும் வல்லவராக இருந்தவர்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...