|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 November, 2015

சிவலிங்கம் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு.

சிவலிங்கங்களைப் பற்றிய டாக்டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது. அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, இல்லை அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோ முயலவில்லை. இவற்றுக்கப்பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கருதினார்.

அதில் முதலாவது, ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற, லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பதுதான். உண்மையில் லிங்க சொரூபமானது மூன்று மதத்திற்கும், புத்த ஜைனர்களுக்கும் கூட பொதுவானது என்பதையும் அவர் கண்டுபிடித்தார். ஒரு மலை உச்சி! அதில் பௌர்ணமி இரவில் கரிய நிழல் உருவாய் கண்ணுக்குத் தெரிந்த லிங்க உருவத்தை ஒரு கிருத்தவன் சிலுவைச் சின்னமாகப் பார்த்தான். ஒரு இஸ்லாமியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவதாக கருதினார். புத்த ஜைன சன்யாசிகள் தங்கள் குருமகாங்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதாகக் கருதினார்கள். ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று திடமாக கருதி இருந்த இட்த்தில் இருந்தே வில்வ இலைகளை வாரி வாரி அர்ச்சித்தான். உருவம் ஒன்று. ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப்திப்படுத்தியது என்றால் சிவம்தான் முதலும் முடிவுமான அனைவருக்கும் பொதுவான இறை ஸ்வரூபமா? டாக்டர் விளாதிமீர் இப்படிதான் கேட்கிறார். மேலும் அவர் புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிவம் பற்றி சொன்னதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து.

ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் அவருக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக அவர் கூறுகிறார். லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒருள் பொருள் தருவதாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்து. குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால், அது மழை தரும், நெருப்புத் தரும், காற்று தரும் கேட்ட எல்லாம் தரும், என்றும் நம்புகிறார். அப்படி என்றால் சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் மகத்தான ஒரு எந்திரமா? டாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியதாம்.

இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளமாம்! அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறதாம். ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்த கூட்டுறவோடும் செயல்படுகிறதாம். சுருக்கமாகச் சொன்னால், அந்த மூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார். இப்படிப்பட்ட ஆராதனைக்குறிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார். அதாவது சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்று கூறும் விளாதிமீர், மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார். சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார்!.

இந்த பூமியானது சூரியன் உதிர்ந்த ஒரு சிறிய அக்னித் துளி என்கிறது விஞ்ஞானம். மெல்லக் குளிர்ந்த இதில் அடுக்கடுக்காய் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. அந்த உயிரினங்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தும் கூட அப்போது தோன்றின. இதுதான் பல கோடி ஆண்டுகளைக் கண்டு விட்ட இந்த பூமியின் சுருக்கமான வரலாறு. மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறாத ஒன்றாக என்றும் இருப்பது. அந்த மாற்றங்களால் வந்ததே இந்த மனித சமூகம். இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன், நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்பமுடியவில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப் புராணங்கள்.

இதில் புராணவழி அறியப்பட்ட சிவமானது தனித்து நிற்கிறது. “புராணம், விஞ்ஞானம் இரண்டையும் கடந்து மூன்றாவதாய் ஒன்றும் உள்ளது. அதுதான் நான்! மானுடமே முடிந்தால் என்னைப் புரிந்துகொள் என்பதுபோல் இருக்கிறது அது” என்கிறார் டாக்டர் விளாதிமீர்! இ ந்த பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆப்பிரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதிமீரின் கருத்து. அமெரிக்காவில் “ கிராண்ட் கன்யான் “ என்னும் வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் “ சிவம், விஷ்ணு, பிரம்மன் “ மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றனவாம். ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார்.

உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் {கிட்டதட்ட} காணப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது. அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது. இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட {அ} உணர்ந்து விட ஏதுவாகிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து!

18 November, 2015

மனிதஇனம் ஆரோக்கியமின்றி அலைந்து கொண்டிருக்கிறது.


உயிர்கள் வாழ இன்றியமையாதது காற்று. தாவரங்கள் உணவு தயாரிக்க கார்பன் டை ஆக்ஸைடு எனும் கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராணவாயுவான ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. உயிரினங்கள் பிராணவாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளியிடுகின்றன. இதுதான் காற்றின் சுழற்சி.பிராணவாயுவை உற்பத்தி செய்யும் காடு எனும் தொழிற்சாலைகளை அழித்ததன் விளைவு, காற்றில் கரியமில வாயுவின் ஆதிக்கம் அதிகரித்தது. தொழிற்சாலை, வாகனங்களின் புகையால் காற்று மேலும் மாசடைந்து, மனிதஇனம் ஆரோக்கியமின்றி அலைந்து கொண்டிருக்கிறது.

புகையால் அலர்ஜிபெட்ரோலியம், இரும்பு, பிளாஸ்டிக், காகித தொழிற்சாலைகளாலும் வாகன புகையாலும் கார்பன் மோனாக்ஸைடு காற்றில் அதிகம் கலந்து, சரும பாதிப்பு, அலர்ஜி ஏற்படுகிறது. நிலக்கரியை எரிப்பதால் கந்தக ஆக்ஸைடு உருவாகிறது. மரங்கள் பட்டுப்போகின்றன. மனிதர்களுக்கு மூச்சுக்குழல் நோய்கள்  உருவாகின்றன. ஆஸ்துமாவுக்கு அடித்தளமாகிறது. நிலக்கரி, எண்ணெய், இயற்கை எரிவாயுவை எரிப்பதால் நைட்ரஜன் ஆக்ஸைடு காற்றில் கலக்கிறது. இதை சுவாசித்தால் மூச்சுத்திணறலும், சிலநேரங்களில் மரணமும் ஏற்படுகிறது. 

காட்டுத்தீ, நிலக்கரி, குப்பைக் கழிவுகள், எலக்ட்ரானிக் கருவிகள் எரிக்கும் போது நுண்துகள்கள் காற்றில் கலக்கின்றன. இவை நுரையீரல் தந்துகிகளில் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தி அடைப்பை உண்டாக்குகிறது. 1984ல் மத்திய பிரதேசம் போபாலில் இருந்த யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் வாயு கசிவால் (மித்தைல் ஐசோ சயனைட்) 20ஆயிரம் பேர் 
இறந்தனர். 5000 பேர் அதிகம் பாதிப்படைந்தனர். ஒன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். தொழிற்சாலையை சுற்றி 100 கிலோமீட்டர் சுற்றளவிற்கு, மண்பரப்பு முழுவதும் அடர்த்தியான துகள்களால் மூடப்பட்டதால், விவசாயம் செய்ய முடியவில்லை. இன்றளவும் அப்பகுதி மக்கள் பலவகையான நோயின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். குறைபாடுள்ள குழந்தைகளே பிறக்கின்றன.

காற்று மாசு நோய்கள்காற்று மாசுபாட்டால் உடல் மட்டுமல்லாது, மனதிலும், நடத்தையிலும் சீர்குலைவு ஏற்படுகிறது. நுரையீரல் செயல்பாட்டை குறைக்கிறது. கண், மூக்கு, வாய், தொண்டையில் எரிச்சல் ஏற்படு
கிறது. ஆஸ்துமா, இருமல், சுவாசம் தொடர்பான நோய்களின் அறிகுறிகள் ஏற்படுகின்றன. மாசுபட்ட காற்று மனிதனை பாதிக்கும் போது வரும் நோய்களில் முதன்மையானது, நுரையீரல் நோய். சிகரெட் புகைப்பதாலும், மாசுபட்ட காற்றை சுவாசிப் பதாலும் வருகிறது. COPD(Chronic Obstructive Pulmonary Disease) என்பது நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய். 
மூச்சு திணறல், மார்பு இறுக்கம், சளியுடன் கூடிய இருமல், சி.ஓ.பி.டி.,யின் முக்கிய அறிகுறிகள். இந்தியாவில் சி.ஓ.பி.டி., ஏற்பட சிகரெட் புகை முக்கிய காரணம். புகையிலை, ரசாயன புகையும் இந்நோய்க்கு முக்கிய காரணம். புகைப்பவர்களிடம் இருந்து 
மற்றவர்களுக்கு பரவும் புகை, காற்று மாசுபாடு, ரசாயன தீப்பொறி அல்லது துாசியை 
சுவாசிப்பதால் சி.ஓ.பி.டி., வரலாம். பெரும்பாலும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் இந் நோய் அறிகுறிகள் காணப்படும். மிக குறைந்தளவு வாய்ப்பாக, 
மரபியல் கூறு காரணமான கல்லீரலில் உற்பத்தியாகும் புரதமான, ஆல்பா - 1 'ஆன்டி டிரிப்சின்' பற்றாக்குறையால், இளம் வயதினருக்கும் நோய் வரலாம்.

அறிகுறிகள் இருமல், சளியுடன் கூடிய இருமல், மூச்சு திணறல், மூச்சு விடும் போது விசில் போன்ற சத்தம் வருதல், மார்பு இறுக்கம் வரலாம். புகைபிடிப்பவர்கள் இந்த அறிகுறி இருந்தால், புகை 
பிடிப்பதை நிறுத்த வேண்டும்.மூச்சுக்காற்று நுரையீரலுக்குள் உள்ளே, வெளியே எவ்விதம் செயல்படுகிறது என்பதை, நுரையீரல் செயல்பாட்டு பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது. நோய்க்கு முழுமையான தீர்வு இல்லை என்றாலும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தலாம். புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும்; நுரையீரல் எரிச்சலுாட்டிகள், துாசியை தவிர்க்க வேண்டும். 
சிகிச்சை என்ன நோயின் தீவிரத்தை பொறுத்து, 'பிரான்கோ டைலேட்டர்' மருந்துகள் கொடுக்கலாம். இவை குறுகிய காலமாக 6 முதல் 12 மணி நேரம் வரை செயல்படும். அறிகுறிகள் ஏற்படும் போது மட்டும் இவற்றை பயன் 
படுத்தலாம். தீவிரமாக இருந்தால் 'இன்ஹேலர்' அடங்கிய மருந்துகளை பரிந்துரைக்கலாம். இந்நோயாளிகளுக்கு காய்ச்சல் பிரச்னையை ஏற்படுத்தலாம் என்பதால், அதை தடுக்க தடுப்பூசி, நிமோனியாவை தடுக்கும் தடுப்பூசியும் பரிந்துரைக்கப்படுகிறது. இந்நோயாளிகளின் சுவாச பிரச்னைகளை கட்டுப்படுத்த, நுரையீரல் புனர்வாழ்வு உதவுகிறது. முறையான உடற்பயிற்சி திட்டம், நோய் மேலாண்மை பயிற்சி, ஊட்டச்சத்துடன், உளவியல் ஆலோசனையும் அவசியம். ஆக்ஸிஜன் சிகிச்சை நோயாளிகளின் ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைந்தஅளவு இருந்தால், ஆக்ஸிஜன் சிகிச்சை 
உதவுகிறது. தீவிர நோயுள்ளவர்களுக்கு, கூடுதல் ஆக்ஸிஜன் பயன்படுத்தி, இருதயம் மற்றும் மற்ற உறுப்புகள் சேதமடையாமல் பாதுகாக்கப்படுகிறது. எதிர்கால சந்ததியினருக்கு சுத்தமான, சுகாதாரமான காற்றை கொடுப்பது நமது கடமை. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், ஆவியாகும் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தவும் மலேசிய அரசு, தனிப்பட்ட நபர்களின் போக்கு 
வரத்தில் பல்வேறு நடைமுறைகளை கொண்டு வந்துள்ளது. பாதாள ரயில்களை பயன்படுத்தி வெளியேறும் வாயுக்களின் அளவை குறைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இவை நம் நாட்டில் அமலாக வேண்டும்.

சைக்கிள் நல்லதீர்வு இயந்திரங்கள், வாகனங்களின் பராமரிப்பை உறுதிசெய்து, உதிரி பாகங்களை மாற்றுவது. தீங்கு விளைவிக்கக்கூடிய இயந்திரங்களின் பயன்பாட்டை தவிர்ப்பது அவசியம். எளிமையான முறையில் காற்று மாசு கட்டுப்பாடு அவசியம். தீங்கற்ற வாயுக்களில் இருந்து மாசுக்களை பிரித்தெடுக்க வேண்டும். வளிமண்டலத்தில் வாயுக்கள் வருவதற்கு முன், மாசுக்களை மாற்ற வேண்டும். கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடை 
தக்கவைக்கும் தாவர வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும். தனி நபர் பயன்பாட்டிற்கு, முடிந்தவரை சைக்கிளை பயன்படுத்த வேண்டும்.என்ன செய்ய வேண்டும் மலைகளையும், காடுகளையும் அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். நிலம், காற்று, நீரை மாசுபடுத்தும் வேலிக்கருவை, யூகலிப்டஸ் வளர்ப்பதற்கு தடைவிதிக்க வேண்டும். பசுமையாக, அடர்ந்து வளரும் மரங்களை நடவேண்டும். மரங்களை வெட்டக்கூடாது. தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் விஷ வாயுக்களை கட்டுப்படுத்த, 
அப்பகுதியில் அதிகளவு மரங்களை நடவேண்டும். வாகனங் களுக்கு ஈயமில்லாத பெட்ரோலை பயன்படுத்த வேண்டும். மரபுசாரா எரிசக்தி அல்லது காற்று, சூரிய ஒளி மூலம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாடுகளை மறுசுழற்சி செய்யும் முறையை ஊக்குவிக்க வேண்டும். அரசு கடுமையான சட்டங்களை நடைமுறைபடுத்தினால் தான், காற்று மாசுபாட்டை குறைக்கமுடியும். துாய காற்றின் அவசியம் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

நம் எதிர்கால சந்ததியினர் பிராணவாயுவை, பைகளில் விலைக்கு வாங்கி சுவாசிக்கும் நிலைக்கு தள்ள வேண்டுமா... இயற்கையின் பொக்கிஷங்கள் தான் எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும் செல்வங்கள். முடிந்தவரை, காற்றை மாசுபடுத்தக்கூடாது என ஒவ்வொருவரும் சபதம் மேற்கொண்டால், மாசில்லா காற்றை சுவாசித்து ஆரோக்கியமாக வாழலாம்.

15 November, 2015

இரவு நேரங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

“The single greatest risk factor is, by far, the time that people eat dinner,” says Koufman. She recommends having supper no later than three hours before bed. But even if you manage to do that, be aware that late-night snacking can have the same ruinous effect. If you are going to hit the fridge or pantry before you hit the sack, here are eight things you should never, ever grab.
Alcohol
It relaxes the valves that connect the stomach and esophagus. When this happens, your body is unable to keep food where it belongs. “If you have alcohol just before bed, you’re pretty much asking to have reflux,” says Koufman.
Soda
It doesn't get much more acidic than soda. In fact, soda is actually more acidic than anything found in nature, says Koufman. The acid damages those same valves. Plus, carbonation increases stomach pressure.
Chocolate
Certain flavors are high in fat—which comforts and relaxes the valves, too—and it contains caffeine and a lesser-known stimulant called theobromine, essentially making it a triple whammy.
Cheese
It's another fatty food, but if you must indulge, hard varieties such as Parmesan and Swiss have less of a reflux effect than softer types such as feta and mozzarella. (Yes, that means no pizza.)
Nuts
When it comes to reflux, fat is fat, whether saturated or unsaturated. So despite the fact that nuts generally contain a healthy dose of the latter, they should be avoided before bed. Cashews, walnuts, macadamias and peanuts are the worst, says Koufman, while pistachios and almonds aren’t quite so bad.
Citrus
It’s also highly acidic. A glass of orange juice or a green apple are your worst choices, but some people can eat red apples without problems—it depends on the person.
Coffee
Not only is it inherently acidic, but the caffeine it contains also generates additional stomach acid. If you must sip, decaf generally has lower acid levels than regular.
So what options are left when the midnight munchies strike? Koufman suggests anything that’s low in acid, such as bananas, a bowl of low-sugar cereal with low-fat milk or, her favorite, chamomile tea. “It’s soothing,” she says. “It sort of fills you up and settles the stomach.”

International Day for Tolerance, November 16



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...