|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 February, 2012

பார்த்ததில் பிடித்தது!








இதே நாள்...


  • உலக தாய்மொழி தினம்
  •  இந்திய ஆன்மிகவாதி ஸ்ரீஅன்னை பிறந்த தினம்(1878)
  •  புரூசியக் கூட்டமைப்பு உருவானது(1440)
  •  நீராவியால் இயங்கும் முதல் ரயில் என்ஜின் சோதித்து பார்க்கப்பட்டது(1804)
  •  வங்காள மொழி இயக்கம், கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) உருவாக்கப்பட்டது(1952)

கோவை கமிஷனர் நகர்வலம்


கோவை மாநகர போலிஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள சுந்தரமூர்த்தி நேற்று முன்தினம் இரவு அவரது நண்பர் ஒருவரையும், பாதுகாப்புக்காக காவலர் ஒருவரையும் அழைத்துக்கொண்டு கோவை நகரில் காவல் துறையினரின் இரவு நேரத்தில் உள்ள பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்த சென்றுள்ளார்.கமிஷனர் வழக்கமாக பயன்படுத்தும் அரசு காரை எடுக்காமல், தனது நண்பர் ஒருவரின் காரை எடுத்துக்கொண்டு நகர்வலம் சென்றுள்ளார். இரவு இரண்டு மணிக்கு, சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு சென்றபோது, காவல் நிலையத்தின் வாயிலில் துப்பாக்கியுடன் பணியில் இருக்கவேண்டிய காவலர் பணியில் இல்லை.

உள்ளே என்ன நடக்கிறது என்று எட்டிபார்த்துள்ளார் கமிஷனர். உதவி ஆய்வாளரின் அறையில் இருந்த ஒரு உதவி ஆய்வாளர் எதையோ எழுதிக் கொண்டிருந்திருக்கிறார்.சாதாரண உடையில் கமிஷனர் உள்ளே வருவதை கவனித்துவிட்ட அந்த எஸ்.ஐ, போலிசுக்கே உரித்தான திமிரான பேச்சில் என்னய்யா...? என்று தலையை உயர்த்தி பார்த்தபடி கேட்டுவிட்டு தனது வேலையை கவனிக்க தொடங்கிவிட்டார். தன்னை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதை உறுதிப்படுத்திய கமிஷனர் ஒரு சாதாரண குடிமகனைப்போல பேசியுள்ளார். அய்யா நான் காளப்பட்டி பிரிவு கிட்ட வந்துகிட்டு இருந்தப்ப... நாலு ரவுடி பசங்க ஒண்ணா வந்து என்கிட்ட இருந்த பணத்தை புடுங்க வந்தாங்க நான் தப்பிச்சி ஒடியாந்துட்டேனுங்க... என்று சொல்லியுள்ளார்.

அப்படியா...? காளப்பட்டி பிரிவு கோவில்பாளையம் போலிஸ் ஸ்டேசனுக்கு சம்மந்தப்பட்ட எல்லை, அதனால் நீ அங்க போயி கம்பளைன்ட் குடு, நான் வாங்க முடியாது என்று சொல்லியுள்ளார்.அந்த நேரத்தில், கையில் இரத்தத்துடன் வந்த ஒருவர், நான் வேலை செய்யற கம்பெனியில எனக்கு சம்பளம் ஒழுங்கா குடுக்கறதில்லையிங்க.   அதுனால வெறுத்துப்போன நான் என்னுடைய கையை நானே அருத்துகிட்டேனுங்க என்று சொல்லியுள்ளார்.அப்படியா... இதுக்கெல்லாம் இங்க வரக்கூடாது, நேரா ஆஸ்பத்திரிக்குதான் போகணும்...  உன்னுடைய செல்போன் நம்பர இங்க குடுத்துட்டு, நேரா நீ ஜி.ஹச் சுல போய் அட்மிட் ஆகிக்கோ... நான் காலையில போலீச அங்கே அனுப்பறேன் என்று சொல்லிவிட்டு தனது எழுத்து வேலையை பார்த்து கொண்டிருந்திருக்கிறார்.எந்த கம்பெனியிலே நீங்க வேலைபார்க்கிறீர்கள்... என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று கையில் ரத்தத்துடன் வந்தவரிடம் கமிஷனர் விசாரித்துள்ளார்.

யோவ்... உங்கள கோவில்பாளையம் ஸ்டேசனுக்கு போங்கன்னு சொல்லி எவ்வளவு நேரம் ஆகுது.   இன்னும் இங்கே ஏன் நிக்கறீங்க... போங்க... போங்க... என்று விரட்டிக்கொண்டே தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து வந்துள்ளார் அந்த எஸ்.ஐ.சரியா... நாங்க கோவில்பாளையம் போறோம்... என்று சொல்லிவிட்டு கமிஷனர் காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்துள்ளார். பின்னாலேயே வந்த எஸ்.ஐ போர்டிகோவில் நின்ற கமிஷனர் வந்த காரை பார்த்துவிட்டு, இது என்னய்யா “கெஸ்ட் ஹவுசா” இங்கேயே கொண்டாந்து கார நிருத்தியிருக்கீங்க... போலிஸ் ஸ்டேசனுக்கு எப்படி வரணுமுன்னு தெரியாதா..? இப்படியா தோரணையா கொண்டாந்து கார நிருத்துவீங்க... என்று கமிஷனருக்கு அர்ச்சனை செய்துள்ளார் எஸ்.ஐ.

பணத்த புடுங்கற்றதுக்காக திருடனுக தொரத்துனதால பயத்துல இப்படி உள்ளே வந்துட்டேன்... தப்பா நெனைக்காதீங்க என்று எஸ்.ஐயை சமாதானப்படுதிவிட்டு வெளியே போனதும், சரவணம்பட்டி காவல் நிலையத்தை “மைக்”கில் கூப்பிட்டு, வாசல்லே நிறுத்தவேண்டிய “சென்றி”யை ஒழுங்க நிறுத்தி இருந்தா எதுக்கப்பா காரெல்லாம் போலிஸ் ஸ்டேக்குள்ள வருது..? இன்னைக்கு நைட் டியூட்டி பார்க்கவேண்டிய சென்றி யார்...? ஏன் அவர் வேலைக்கு வரலையா...? என்று கேட்ட பின்னர்தான் கொஞ்ச நேரம் முன்பு வந்தது கமிஷனர் என்று தெரிந்துகொண்டார் எஸ்.ஐ.அடுத்து, திருச்சி செல்லும் சாலையில் இருக்கும் ஒண்டிப்புதூர் சோதனை சாவடிக்கு சென்றுள்ளார் போலிஸ் கமிஷனர். அங்கும் வெளியில் இருந்துகொண்டு வாகனங்களை கண்காணிக்க வேண்டிய போலீசார் யாரையும் காணவில்லை.

திறந்திருந்த அறையை எட்டிபார்த்துள்ளார் கமிசான்ர். அங்கே ஒரு எஸ்.ஐ பாதி தூக்கத்தில் இருந்துள்ளார். ஸார்.. ஸார் என்று கமிஷனர் தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பியுள்ளார்.வெளியில் உட்கார்ந்தால் யாராவது வந்து தொல்லை செய்வார்கள் என்ற காரணத்தால், அறைக்கு உள்ளே சென்று தூங்கியவருக்கு கமிஷனரை பார்த்ததும் பயங்கர கடுப்பாகிவிட்டது.என்னய்யா...? தொறந்த வீட்டுக்குள்ளே நாய் பூந்த மாதிரி உள்ளே வந்துட்டீங்க... போங்கையா வெளியே என்று கத்தியுள்ளார். அமைதியாக நின்ற கமிஷனர். அங்கிருந்த வாக்கி-டாக்கியை எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு பேசியுள்ளார். அபோதுதான் வந்துள்ளது கோவை மாநகர போலிஸ் கமிஷனர் என்று அந்த எஸ்.ஐ.க்கு தெரிதுள்ளது. மரியாதையில்லாமல் பேசிய எஸ்.ஐகள் இருவரையும் நேரில் அழைத்து இனிமேல் இப்படி பொதுமக்களை மரியாதையில்லாமல் பேசக்கூடாது என்று அறிவுறை சொல்லி அனுப்பியுள்ளார் கோவை மாநகர போலிஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தி

இனிய தாய்மொழி தின வாழ்த்துக்கள்.

இன்று உலகத் தாய்மொழி தினம். அனைவருக்கும் தாய் மொழி தின வாழ்த்துக்கள் . உலகில் உள்ள அனைவரும் தங்கள் தாய் மொழியை பேணி பாதுகாக்க வேண்டும் . எந்த சூழ்நிலையிலும் தங்கள் தாய் மொழியை விட்டுக் கொடுக்கக் கூடாது . பல நாடுகள் மற்றும் இனங்களின் படையெடுப்பாலும் , உலகமயமாக்கலின் தாக்கத்தாலும் இன்று பல மொழிகள் அழிந்து கொண்டு வருகிறது. உலகின் தொன்மையான மொழியான தமிழ் மொழிக்கும் இன்று கடும் பாதிப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கிறது. தாய் மொழிக் கல்வியை இழந்த நகரத்து தமிழர்கள் இன்று இரண்டாம் பாடமாக கூட தமிழ் மொழியை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். ஹிந்தி மொழியின் திணிப்பால் அந்தமான் தீவில் உள்ள பழங்குடி மக்களின் மொழி முற்றிலும் அழிந்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மொழிக்கும் இத்தகைய சவால்கள் சூழ்ந்து இருப்பதால் , தமிழர்கள் மொழி உணர்வுடன் , தாயின் பால் கொண்ட பற்றினை வெளிப்படுத்துவது போல் தமிழ் மொழியின் மேலும் பற்றுதல் கொண்டு நமக்கு விடப்படும் சவால்களை முறியடித்து தமிழ் மொழியை சிறப்பாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும்.

Bimbilaaki Bilaapi ...Movie - Perumaan.


ஒரு கொலைக்களம் அறிந்துகொள்ளவேண்டியது


The actual version of Kadhal en kadhal song from Mayakkam enna.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...