|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 May, 2012

Jakkamma movie.




ஒரு நிமிடத்தில் உலக இணைய பயன்பாடு.


நெரிப்பில் போட்டாலும் எரியாத கனொன் கமெரா.


சரத்குமார் பேச்சால்...



தமிழக சட்டப்பேரவையில் இன்று அதிமுக முதல்வர் பொறுப்பேற்ற ஓராண்டுச்சாதனை குறித்து பல்வேறு கட்சியின் பாராட்டி பேசினர்.அகில இந்திய சமத்துவ மக்கள்கட்சித்தலைவர்,  அதிமுக கூட்டணியில் இருக்கும் எம்.எல்.ஏவுமான சரத்குமார் பேசும்போது, ஒரு பழமொழியைச்சொல்லி, அதற்கு உதாரணம் சொன்னார். அதாவது, எதிர்கட்சியினர் மக்கள் குறைகளை வெளியே சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.வாக்களித்த மக்களுக்கு கடமையாற்றும் விதமாக எங்கே வந்து பேசவேண்டுமோ அங்கே வந்து அவர்கள் பேசவில்லை என்று கூறினார்.சரத்குமார் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே விஜயகாந்த் கட்சியான தேமுதிக எம்.எல்.ஏக்கள் எழுந்து கூச்சல் போட்டனர். சரத்குமாரை நோக்கி கையை நீட்டி ஆவேசமாக கத்தினர். இதனால் அவையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.தேமுதிக எம்.எல்.ஏ. சந்திரகுமார் ஆவேசமாக கத்தினார். அவரை நோக்கி பேரவைத்தலைவர் ஜெயக்குமார் சமாதானம் செய்து பேசினார். ஆனால், சந்திரகுமார் தொடர்ந்து கூச்சல் எழுப்பினார். இதையடுத்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, பேரவை உறுப்பினர் சரத்குமார், ஒரு பழமொழியைச்சொல்லி பெயர் குறுப்பிடாமல்தான் பேசினார். 

இதற்காக தேமுதிகவின ஏன் கொந்தளிக்கின்றனர் என்று தெரியவில்லை. எதிர்க்கட்சி என்றால் இங்கே தேமுதிக மட்டும்தான் உள்ளதா? எத்தனையோ கட்சிகள் உள்ளது.  அப்படியிருக்க, தேமுகவினர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்று சொன்னார்.
  இதையடுத்து உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி எழுந்து, ‘’எதிர்க்கட்சி என்றால் தேமுதிக மட்டும் இல்லை.5 முறை ஆண்டவரும் இருக்கிறார், அவர் மகனும் இருக்கிறார்.   அப்பயிருக்க தேமுதிகவினரின் செய்கை மோசமானது’’ என்று கூறிவிட்டு அமர்ந்தார்.அப்போதும் தேமுதிகவினர் கூச்சல் எழுப்பியதால், சபாநாயகர் ஜெயக்குமார், நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.நீங்கள் ஒவ்வொரு முறையும் தேவையில்லாமல் பிரச்சனை செய்கிறீர்கள். இது சரியல்ல சந்திரகுமார் என்று கூறினார்.பின்னர் பேசிய சரத்குமார், ‘’நான் யாரையும் பெயர் குறிப்பிட்டுச்சொல்லவில்லை. அப்படியிருந்தும் கொந்தளிக்கிறார்கல் என்றால் குற்றம் உள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் என்பார்கள். அப்படி எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். என்னை நோக்கி கை நீட்டி பேசுகிறார்கள். அதனால் எனக்கு கோபம் வராது. நான் மனிதாபிமான பண்பு உள்ள மனிதன்’’ என்று கூறினார்.இதையடுத்து ஜெயக்குமார், உறுப்பினர் சரத்குமாரே சொல்லிவிட்டார். யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லையாம் என சமாதானம் செய்தார்.

ஓட்டுவதற்குத்தான் உரிமம் தரப்படுகிறதே தவிர, பயணிகளையும் பாதசாரிகளையும் கொல்வதற்கு அல்ல!


வாகனங்களை ஓட்டுவதற்குத்தான் உரிமம் வழங்கப்படுகிறதே தவிர யாரையும் கொல்வதற்கு உரிமம் வழங்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.2002-ம் ஆண்டு ராசிபுரத்தில் இருந்து சேலம் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த பேருந்தை ஓட்டிய ராஜன் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் ராஜனோ தாம் விபத்துக்குக் காரணம் அல்ல எந்திரக் கோளாறால்தான் விபத்து ஏற்பட்டது என்றும் தம்மை டிஸ்மிஸ் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்றும் தொழிலாளர் நீதிமன்றத்தைஅவர் நாடினார். தொழிலாளர் நீதிமன்றத்தில் ராஜன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி பால்வசந்த்குமார் விசாரித்தார். ராஜனின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி கூறியதாவது:பேருந்தை ஓட்டியபோது ஸ்டியரிங் திடீரென்று சுற்றாமல் போய்விட்டதால்தான் விபத்து நேரிட்டது. எனவே ஏற்பட்ட அந்த எந்திரக் கோளாறுக்கு நான் காரணமாக முடியாது. எனவே என்னை பணிநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் வேலை தருவதற்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கில் கோரியிருந்தார். எந்திரக் கோளாறு காரணமாகத்தான் விபத்து ஏற்பட்டது என்ற வாதத்தை ராஜன் வாக்குமூலமாகவோ, ஆவணங்கள் மூலமாகவோ நிரூபிக்கவில்லை.

மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த அறிக்கையில், பேருந்தில் விபத்து நேரிடுவதற்கு முன்பு எந்திரக் கோளாறு எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. விபத்து ஏற்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்புதான் அந்த பேருந்துக்கு எப்.சி. (தகுதிச் சான்றிதழ்) கொடுக்கப்பட்டதாகவும், எனவே அந்த பேருந்தில் எந்திரக்கோளாறு ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும் விசாரணை அதிகாரி கூறியுள்ளார் என்று தொழிலாளர் நீதிமன்றம் கூறியுள்ளது.எந்திரக்கோளாறு என்பதை நிரூபிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட டிரைவரின் கடமை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. விபத்துகள் கடவுளின் செயல் என்றும், எனவே தன்னை தண்டிக்கக் கூடாது என்றும் ராஜன் கூறியுள்ளார். ஆனால் அதை கீழ்நீதிமன்றம் ஏற்கவில்லை. அதிக வேகமாக பேருந்தை ஓட்டியதாலும், கவனக்குறைவாலும்தான் விபத்து நேரிட்டு, 8 பேர் சாவுக்கு காரணமாகிவிட்டது என்று தொழிலாளர் நீதிஅம்ன்றம் தெரிவித்துள்ளது. இதை சரியான தீர்ப்பு அல்ல என்று கூறமுடியாது. எனவே அந்த தீர்ப்புக்குள் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை.

விபத்துகளும் ஓட்டுநர்களும் தற்போது விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. விபத்துகளை தடுப்பதற்கு அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விபத்துகளை ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்கு சாதகமாக செயல்பட்டால், மற்றவர்களுக்கு அது தவறான சிக்னல் கொடுத்ததுபோல் ஆகிவிடும். இதை தீர்ப்பாயங்கள், கீழ்நீதிமன்றங்கள் மனதில் வைத்துக் கொண்டு, விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்குக் கருணை காட்டக்கூடாது.வாகனத்தை ஓட்டுவதற்குத்தான் டிரைவர்களுக்கு உரிமம் தரப்படுகிறதே தவிர, பயணிகளையும் பாதசாரிகளையும் கொல்வதற்கு அல்ல. எனவே ராஜன் வழக்கில் தொழிலாளர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு சரிதான் என்று முடிவு செய்து, ராஜனின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்கிறேன் என்றார் அவர்.

ஐசில் ஆஃப் மேன் தீவுக்கு போன யூனிடெக் நிறுவனத்தின் ரூ. 250 கோடி?


2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் யூனிநார் செல்போன் சேவையை வழங்கும் நார்வே நாட்டின் யூனிடெக் நிறுவனம் ஐசில் ஆஃப் மேன் நாட்டில் ரூ. 250 கோடியை (51 மில்லியன் டாலர்) முதலீடு செய்தது குறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.இந்த பணப் பரிமாற்றத்துக்கும் முன்னாள் மத்தியத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுக்கும் தொடர்புள்ளதா என்ற விசாரணை நடந்து வருகிறது.ஏற்கனவே கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உசேன் பல்வா ரூ. 200 கோடியை வழங்கிய விவகாரத்தில் ராசா, திமுக எம்பி கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சரத் குமார் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

அதே போல மொரீசியசில் உள்ள டெல்பி நிறுவனத்துக்கு ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் தனது கோடிக்கணக்கான மதிப்புள்ள பங்குகளை வழங்கியது குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த டெல்பி நிறுவனத்துக்கும் ராசாவுக்கும் உள்ள தொடர்பு குறித்த விசாரணை நடந்து வருகிறது.இந் நிலையில், யூனிடெக் நிறுவனம் ஐசில் ஆஃப் மேன் தீவுகளில் யூனிடெக் ஓவர்சீஸ் லிமிட்டெட் என்ற துணை நிறுவனம் மூலமாக 'one yield enhancement certificate' என்ற வகையிலான பங்கு பத்திரத்தில் ரூ. 250 கோடி முதலீட்டைச் செய்துள்ளது.கடந்த 2007ம் ஆண்டு டிசம்பரில் யூனிடெக் நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் மொரீசியஸ் நாட்டைச் சேர்ந்த சில நிறுவனங்கள் மூலமாக செய்யப்பட்டுள்ளது.ஆனால், 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் யூனிடெக் நிறுவனம் இந்த முதலீட்டை நஷ்டமாகக் காட்டி கணக்கை முடித்துவிட்டது.

இது 2ஜி லைசென்ஸ் கிடைத்ததற்கு பிரதிபலனாக யாருக்கோ தரப்பட்ட பணமாக இருக்கலாம் என்று சிபிஐ கருதுகிறது. இது குறித்து விசாரணை நடத்தவும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டது. இந்த பணப் பரிவர்த்தனை குறித்து விவரம் கேட்டுஸ விரைவில் அந்த நாட்டுக்கு நீதிமன்றம் மூலமாக கடிதம் அனுப்பவும் சிபிஐ திட்டமிட்டுள்ளது.அதே போல இந்த விவகாரம் குறித்து அமலாக்கப் பிரிவும் விசாரணை நடத்தி வருகிறது.Mann என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஐசில் ஆஃப் மேன் தீவு, இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையே ஐரிஷ் கடலில் உள்ளது. இது ஒரு சுதந்திரமான தீவு என்றாலும், இதன் வெளிவிவகார விஷயங்கள் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன.

12 லட்சத்துக்கு ஏலம் போன மடோனா

பிரபல கவர்ச்சி பாப் பாடகி மடோனாவின் கறுப்பு வெள்ளை நிர்வாணப் படம் ரூ 12 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த பாப் பாடகி, நடிகை மடோனா. இவருக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தற்போது செக்ஸ் புக் என்ற ஆல்பம் தயாரித்துள்ளார். அதிலிருந்து தனது ஒரு நிர்வாண போட்டோவை நியூயார்க்கில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் ஏலம் விட்டார். அந்த போட்டோ ரூ.12 லட்சத்துக்கு ஏலம் போனது. அதை விலைக்கு வாங்கியவர் யார்? என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. அதிக விலைக்கு ஏலம் போன இந்த போட்டோ கடந்த 1990-ம் ஆண்டில் அவர் 30 களில் உச்சத்தில் இருந்தபோது எடுக்கப்பட்டது. கருப்பு, வெள்ளையில் எடுக்கப்பட்ட இந்த போட்டோவில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் மடோனா படு கவர்ச்சியாக உள்ளார்.படுக்கையில் படுத்து சிகரெட் பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ 55 செ.மீட்டர் உயரமும் 48.செ.மீட்டர் அகலமும் கொண்டது.இதை போட்டோ கிராபர் ஸ்டீவன் மிசெல் எடுத்துள்ளார்.

வாழ்க்கை என்பது நமக்கு நாமே கட்டிக் கொள்ளும் வீடு.!


பல வருடங்களாக தச்சர் பணி செய்து வந்த தொழிலாளி ஒருவன் தன் பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பினான். எஜமானனிடம், தான் தன் குடும்பத்துடன் அமைதியாகக் காலம் கழிக்க விரும்புவதைத் தெரிவித்தார். எஜமானனுக்குத் தன் தொழிலாளியை விட மனமில்லை. இருந்தாலும், கடைசியாக ஒரே ஒரு வீடு கட்டித் தந்துவிட்டு ஓய்வு பெறுமாறு கேட்டுக் கொண்டார். தச்சர், சரி என ஒப்புக் கொண்டாலும், அவர் மனம் வேலையில் ஆழ்ந்து ஈடுபடவில்லை. ஏனோ தானோவென்று மட்டமான பொருள்களைக் கொண்டு வீடு கட்ட ஆரம்பித்தார். தன் கடைசிப் பணியை அப்படி அசிரத்தையுடன் செய்தது துரதிர்ஷ்டம்தான். எப்படியோ ஒரு வழியாக வீடு கட்டி முடிந்ததும், வீட்டை வந்து பார்த்தார் எஜமானன். அமைதியாக வீட்டின் சாவியைத் தச்சரிடம் கொடுத்து, இதோ, இந்த வீடு உனக்காக நான் அளிக்கும் பரிசு என்றார். அதிர்ச்சி! வெட்கம்! அடடா, இது தனக்கான வீடு என்று முன்பே தெரிந்திருந்தால் நன்றாகக் கட்டியிருக்கலாமே? தான் மோசமாகக் கட்டிய வீட்டில், தானே வாழ வேண்டிய நிலைமை அந்தத் தச்சருக்கு. மனிதர்களும் இப்படித்தான். தங்கள் வாழ்க்கையை ஏனோ தானோ வென்று வாழ்ந்து கழிக்கிறார்கள். தங்களுடைய திறமையை முழுமையாகப் பயன்படுத்தாமல் சோம்பி வாழ்கிறார்கள். திறமை காட்ட வேண்டிய சந்தர்ப்பங்களைக் கோட்டைவிட்டு விடுகிறார்கள். நம் வாழ்க்கையும் அந்த வீடைப் போன்றதுதான். ஒவ்வொரு ஆணி அடிக்கும் போதும், மரத்துண்டுகளைச் சேர்க்கும் போதும் புத்திசாலித்தனத்தோடு செயல்படுங்கள். இந்த வாழ்க்கை உனக்காகத் தான், உனக்கு தான் அளிக்கப்பட்டுள்ளது. அதை நீயே உருவாக்குகிறாய். ஒரு நாள் நீ வாழ்ந்தாலும் அமைதியோடும் கவுரவத்தோடும் வாழ வேண்டும். வாழ்க்கை என்பது நமக்கு நாமே கட்டிக் கொள்ளும் வீடு. வாழ்க்கை என்பது நமக்கு நாமே கட்டிக் கொள்ளும் வீடு.!

இதே நாள்...


  • மலேசியா ஆசிரியர் தினம்
  • சிக்கிம், இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது(1975)
  • ஜூன்கோ டபெய், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் ஆனார்(1975)
  • முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம், ராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது(1667)

ஆதீன சொத்துகளை கைப்பற்ற தாக்கலானது சட்ட திருத்த மசோதா!


ஆதீனங்களை குறிவைக்கும் வகையில், சமாதி, பிருந்தாவனம் மற்றும் சமய நோக்கத்துக்காக பேணி வரப்படும் பிற நிறுவனங்களையும், அரசு கட்டுப்படுத்தும் வகையில், சட்ட திருத்த மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தை, மேலும் திருத்தும் வகையிலான மசோதாவை, சட்டசபையில் அமைச்சர் ஆனந்தன் நேற்று, தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது: இச்சட்டப்படி, சமய நிறுவனம் என்றால், ஒரு மடம், கோவில் அல்லது திட்டவட்டமான அறநிலைக் கொடை என்று பொருள்படும். சமாதி, பிருந்தாவனம் ஆகிய இடங்கள், இச்சட்டத்தின் வகைமுறையில் உள்ளடங்கவில்லை. புகழ் வாய்ந்த குரு, சாது அல்லது புனிதரின் நினைவைப் போற்றும் வகையில், தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சமாதி, பிருந்தாவனம் ஆகிய இடங்கள், மக்கள் சமய வழிபாடு செய்வதற்கான இடங்களாக வழிபடப்படுகின்றன.

சட்டத்தின் கீழ் இல்லை: இத்தகைய நிறுவனங்கள், சமய நிறுவனங்கள் என்ற தகுதியைப் பெற்றுள்ளன. இந்நிறுவனங்கள் பெரும் எண்ணிக்கையில் பக்தர்களை ஈர்ப்பதோடு, பெருமளவிலான சொத்துகளையும் சொந்தமாக வைத்துள்ளன. ஒரு சிலவற்றைத் தவிர, பெரும்பாலான சமாதிகளும், பிருந்தாவனங்களும், எந்த சட்டத்தின் கீழும் அடங்கியிருக்கவில்லை. எனவே, அந்த நிறுவனங்களை திறம்பட கண்காணிக்க, அவற்றை இந்து சமய அறநிலைக் கொடைகள் துறையின் கீழ் கொண்டு வரும் வகையில், இச்சட்டத்தில், "சமய நிறுவனம்' என்பதன் கீழ், சமாதி, பிருந்தாவனம் ஆகிய இடங்களையும், சமய நோக்கத்துக்காக நிறுவப்படும் அல்லது பேணிவரப்படும் பிற நிறுவனங்களையும் உள்ளடக்கும் வகையில், சட்ட திருத்தத்தைக் கொண்டு வர, அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இம்மசோதா, இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட உள்ளது.குறி வைத்து...: இந்த மசோதா நிறைவேறினாலும், ஆதீனங்கள் போன்றவற்றின் சொத்துகளை கைப்பற்றுவதில் சிக்கல் இருந்த போதிலும், ஆதீன சொத்துகளையும் குறிவைத்தே, மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சட்டத்தைப் பொறுத்தவரை, கடந்த அ.தி.மு.க., ஆட்சியிலேயே 2004ம் ஆண்டு, இதே திருத்தம் அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து, திருவான்மியூர் பாம்பன் சுவாமி சமாதி நிர்வாகத்தினர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த பின்னணியில் ஆட்சி மாறிய பின், 2008ல் இச்சட்டத்தை தி.மு.க., அரசு வாபஸ் பெற்றது.

கட்டுக்குள் கொண்டுவர...: தற்போது, பாம்பன் சுவாமிகள் நிர்வாகத்தினர் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் மனுவாக உள்ளது. இந்த சட்டத் திருத்தத்தை மீண்டும் அமல்படுத்தினால் தான், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கு பிடிக்கும். எனவே தான், இச்சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆதீனங்கள் பற்றி சட்ட மசோதாவில் குறிப்பிடப்படவில்லை என்ற போதிலும், சமாதி, பிருந்தாவனம் மற்றும் இதர சமய நிறுவனங்கள் என்ற வார்த்தை, மசோதாவில் இடம் பெற்றுள்ளது. இதை வைத்து, ஆதீன சொத்துகளையும் அரசு குறி வைத்துள்ளதோ என்ற சந்தேகம், பலருக்கு எழுந்துள்ளது. ஆனால், தமிழக அரசைப் பொறுத்தவரை, திருவான்மியூர் பாம்பன் சுவாமி நிர்வாகத்துக்குச் சொந்தமான இடங்கள் (குறிப்பாக, சென்னை திருவான்மியூரில் கடற்கரையை ஒட்டி பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 3.2 ஏக்கர் நிலம் இந்த நிர்வாகத்தின் வசம் இருப்பதாகக் கூறப்படுகிறது) மற்றும் பழநி முருகன் சிலையை மூலிகையால் வடிவமைத்த பழைய போகர் சமாதிக்குச் சொந்தமான இடங்கள் ஆகியவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, இந்த சட்டத்தை அமல்படுத்துவதாக, ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.சிவன் கோவில் சொத்துகள்: இந்த சட்டப்படி, பழமையான சிவன் கோவில்களுக்குச் சொந்தமான சொத்துகளையும் கைப்பற்ற திட்டமிட்டிருப்பதாக, மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர். அதாவது, சமாதி மீது சிவன் கோவில் அமைக்கப்பட்ட பல கோவில்கள், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லை. அவற்றை இந்த சட்டம் மூலம், தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, அரசு முயற்சித்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். தற்போது, மதுரை ஆதீனம் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த சட்ட மசோதாவை, தமிழக அரசு நேற்று தாக்கல் செய்திருப்பது, புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...