|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 March, 2011

இதே நாள் 25 மார்ச் 2011

  •  
  • கிரேக்க விடுதலை தினம்
  •  லியோன் ஸ்காட், ஒலியை பதிவு செய்யும் கருவிக்கான காப்புரிமம் பெற்றார்(1857)
  •  பெலாரஸ் மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது(1918)
  •  ஆந்திர மாநில அமைப்பு குறித்த அதிகாரபூர்வ பிரகடனம் ஜவஹர்லால் நேருவால் வெளியிடப்பட்டது(1953)
  •  முதலாவது வண்ணத் தொலைக்காட்சி பெட்டியை ஆர்.சி.ஏ., நிறுவனம் வெளியிட்டது(1954)

ஈயத்தைப் பார்த்து இளித்ததாம்...

சாலையோரம் கடை விரித்த ஒருவர், "ரெண்டு வாங்கினா ஒண்ணு இலவசம்' என்று கூவி நுகர்வோரைக் கவர முயன்றால், எதிரே அதே பொருள்களைக் கடை விரித்திருக்கும் மற்றொருவர் "ஒண்ணு வாங்கினா ஒண்ணு இலவசம்' என்று கூவினால் எப்படி இருக்கும்? அதுபோலத்தான் இருக்கிறது அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை!  அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைப் பற்றிச் சொல்வதென்றால், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் முதல்வர் கருணாநிதி சொல்லியிருப்பதைவிட அதிகமாக நான் இலவசங்களை அள்ளித் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார் என்று ஒரே வரியில் முடித்துவிடலாம்.  தி.மு.க. மிக்சி அல்லது கிரைண்டர் வழங்குவதாகச் சொன்னதா? இந்தா பிடி, கூடுதலாக ஒரு மின்விசிறி. கர்ப்பிணிப் பெண்களுக்கு தி.மு.க. ரூ.10,000 தருவதாகச் சொல்லியிருக்கிறதா? இந்தா பிடி, ரூ.12,000. அத்துடன் கர்ப்பிணிப் பெண்களுக்கு சம்பளத்துடன் 6 மாத விடுமுறையும் தரப்படும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினியா? நான் பள்ளி மாணவர்களுக்கே மடிக்கணினி கொடுப்பேன். ஒரு ரூபாய் அரிசி 20 கிலோ திட்டமா, நான் இலவசமாக 20 கிலோ அரிசி தருகிறேன்....இப்படியாகப் போட்டி போட்டுக்கொண்டு இலவசங்களை அறிவித்திருக்கிறார்.  2006 தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இலவச டி.வி., சமையல் எரிவாயு பற்றிக் குறிப்பிட்டபோது, இத்தகைய இலவசங்களை முழுமையாக எதிர்த்தவர் அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா. ஆனால், அந்தத் தேர்தலில் அவர் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. அதனால், இந்த இலவச டி.வி. வாக்குறுதிதான் தனக்குத் தோல்வியை அளித்தது என்ற எண்ணம் ஜெயலலிதாவின் மனதில் மிகவும் ஆழமாகப் பதிந்துவிட்டிருக்கக்கூடும். இலவசப் போதையை இப்போதைய தேர்தலில் கருணாநிதி மேலும் கூட்டுவார் என்றால், அதற்கு நானும் விதிவிலக்கல்ல என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.  இந்த இலவசங்கள் இல்லாமலேயே மக்களைக் கவரும் அம்சங்கள் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இருக்கின்றன. உதாரணமாக, அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் கேபிள் டி.வி. அரசுடைமையாக்கப்படும் என்கிறார்.  ஒரு தனியார் கேபிள் நிறுவனத்தின் மொத்தக் குத்தகையை ஒழிப்பது என்கிற வகையில் பார்த்தால் வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு இது. குடும்பப் பிரச்னை ஏற்பட்டபோது அரசுப்பணம் பல கோடியை வாரி இறைத்து அரசு கேபிள் டி.வி.யை உருவாக்கி,சமரசம் ஏற்பட்டவுடன் அதைக் குப்பைத் தொட்டியில் வீசியெறிந்த தி.மு.க. அரசின் பொறுப்பற்றதனத்துக்குத் தரப்படும் சரியான பதில் இது.  கேபிள் டி.வி.யை இலவசம் என்று அறிவித்துவிடலாமே! ஒரு மாதத்துக்கு ரூ.150 என்றால் 5 ஆண்டுகளுக்கு ஒரு குடும்பத்துக்கு இலவச கேபிளால் மிச்சமாகும் பணம் ரூ. 9,000. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இலவச மிக்சி அல்லது கிரைண்டர் இவற்றின் விலை அதிகபட்சம் ரூ. 2,000 மட்டுமே. அதிலும் இவற்றை மொத்தமாகக் கொள்முதல் செய்யும்போது இதன் விலையும் (தரமும்கூட) குறையும். ஆனால், சட்டப்படியாக இலவச கேபிள் சாத்தியமானால், ஒரு குடும்பத்துக்கு மிச்சமாகும் தொகை இந்த இலவச மிக்சியைவிட நாலரை மடங்கு அதிகம். இதைச் சொல்லி வாக்குக் கேட்க ஏன் ஜெயலலிதாவால் முடியவில்லை.  அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சம் என்று கூறுவதாக இருந்தால் "சோலார் எனர்ஜி' என்று அழைக்கப்படும் சூரியசக்தி மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்தும் திட்டம்தான். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் சிறப்புத் திட்டமாக மழைநீர் சேகரிப்புத் திட்டம் பேசப்படுவதுபோல, சூரியசக்தி மூலம் மின்சாரம் எல்லா வீடுகளுக்கும் கிடைக்க அரசு இலவசமாகவோ, மானியம் மூலமாகவோ உதவுமேயானால், ஓர் ஆக்கப்பூர்வ முன்னோடித் திட்டமாக அமையும். தினசரி மூன்று, நான்கு மணிநேரங்கள் மின்வெட்டால் அவதிப்படும் தமிழக மக்களின் வயிற்றில் பாலை வார்க்கும். ஏனைய மாநிலங்கள் இதைப்பின்பற்றி ஒரு முன்னோடித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் பெருமை ஜெயலலிதாவையே சாரும்!  கிராமங்களுக்குச் சூரிய விளக்குகள் கொண்டுசேர்க்கும் திட்டம் போன்ற நல்ல சில வாக்குறுதிகள் இருந்தாலும், அவை அனைத்தும் ஜெயலலிதாவின் போட்டி இலவச அறிவிப்பால் தனித்துவத்தை இழந்துவிட்டன.  அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தி.மு.க.வின் இலவசங்களால் இந்தத் தேர்தலிலும் வாய்ப்பை இழந்துவிடுவோமோ என்கிற அச்சத்தால் ஜெயலலிதா நிறையவே பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை வெளிக்காட்டுகிறது.  ஒரு வெற்றிப் படத்தில் இடம்பெற்ற அதே ஆபாசம், அதே வன்முறைக்காட்சி இருந்தால்தான் படம் ஓடும், அதுதான் இப்போதைய "டிரென்ட்' என்று நியாயம் பேசும் திரையுலகத்தின் ஏற்க இயலாத அதே நியாயம்தான் தேர்தலிலும் இப்போது அரங்கேறியிருக்கிறது.  இந்தத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. இருவரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைவிட, தமிழக அரசியலை ஒரு அங்காடித் தெரு தரத்துக்கு இறக்கிய பெருமையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் அவர் காட்டிய வழியில் நடந்த அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கும் சமபங்கு உண்டு.  பாவம் மக்கள். எந்த வாக்கு வியாபாரியை நம்புவது, எந்த இலவசம் தரமானது என்று குழம்பிக் கிடக்கிறார்கள். விலை சொல்ல முடியாத தங்கள் வாக்கு, வியாபாரிகளால் விலை பேசப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  அரசு அறிவிக்கும் எந்தத் திட்டமானாலும், எந்த வருவாயை வைத்து, அரசு எப்படி இந்த இலவசத்தை அளிக்கப்போகிறது என்பதையும் தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என்பதைத் தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கினால் மட்டுமே, இந்த மூன்றாம்தர அரசியலுக்கு முடிவு கட்ட முடியும். இப்படியே போனால், அடுத்த தேர்தலில் தினமும் ஒரு குவார்ட்டர் மதுபானம் இலவசம் என்று அறிவித்தாலும் அறிவிப்பார்கள் போலிருக்கிறது. என்ன கூத்து இது?  ஒருகாலத்தில் உலகுக்கே வழிகாட்டியாகவும், முன்னுதாரணமாகவும் நல்ல பல காரணங்களுக்காக இருந்த தமிழகம் இப்போது வாக்காளர்களை அதிகாரப்பூர்வமாக விலைபேசுவதில் முன்னணியில் நிற்கிறதே இது தமிழனுக்கும், தமிழகத்துக்கும் ஏற்பட்டிருக்கும் தலைக்குனிவு!

சேதுசமுத்திரத்தை மறந்த தி.மு.க

தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அக்கட்சி கொண்டு வந்த சேது சமுத்திரம் திட்டத்திற்கு முக்கியத்துவம் தராமல் போனது வியப்பளிக்கும் வகையில் உள்ளது.

இந்திய கப்பல் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், மத்திய அமைச்சராக டி.ஆர்.பாலு (தி.மு.க.,) இருந்த போது 2430 கோடி ரூபாய் மதிப்பில் சேதுசமுத்திரம் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கான துவக்க விழா 2005 ஜூலை 2ல் மதுரையில் நடந்தது. பிரதமர் மன்மோகன், காங்., தலைவர் சோனியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதற்கட்டமாக தொடங்கிய கடல் அகலப்படுத்தும் பணியில் "ராமர் பாலம் சர்ச்சை' எழுந்தது. இதைத்தொடர்ந்து திட்டம் வழக்காக சுப்ரீம் கோர்ட்டு வசம் சென்றது. "யார் மனதையும் புண்படுத்தாத வகையில் மாற்றுப்பாதையில் திட்டத்தை அமல்படுத்தும் முறையை கண்டறிய,' கோர்ட் வலியுறுத்தியது. இதற்காக பச்சோரி என்பவர் தலைமையில் மத்திய அரசு கமிட்டி ஒன்றை அமைத்து, மாற்றுப்பாதை ஆய்வு பணியை துவங்கியது. அதுநாள் வரை திட்டத்திற்காக 600 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்திருந்தனர். தேக்கத்தில் இருந்த ஆய்வுப்பணி குறித்து கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தது. "2011ன் தொடக்கத்தில் மாற்றுப்பாதை அறிக்கையை சமர்ப்பிக்க,' உத்தரவிட்டது. அதன் பின், மன்னார் வளைகுடா பகுதியில் மாற்றுப்பாதை ஆய்வுப்பணிகள் நடந்தன. திடீரென சில வாரங்களுக்கு முன், " ஆய்வுப்பணிகள் நிறைவுப்பெற்றதாக,' கூறி, அதற்கான கருவிகளை கரை சேர்த்தனர். இன்று வரை ஆய்வின் முடிவுகள் குறித்த அம்சங்களை தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில், 2011ம் ஆண்டிற்கான தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சேதுசமுத்திரம் திட்டம் குறித்த அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தி.மு.க., அறிமுகப்படுத்தி பாதியில் நிற்கும், சேதுசமுத்திர திட்டம் குறித்த அம்சங்கள் விடுபட்டது தென்மாவட்ட மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. "புல்லட்' ரயிலுக்கு கொடுத்த முக்கியத்துவம் சேது சமுத்திரம் திட்டத்திற்கு தராமல் போனது கவலையளிப்பதாக உள்ளது. இதனால், இனி இத்திட்டம் செயலுக்கு வருமா என்ற சந்தேகமும், இதுவரை இத்திட்டத்திற்கு செலவான 600 கோடி ரூபாயும் வீணானதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

டாக்டர் பட்டம் ஏற்க சச்சின் மறுப்பு

மைசூர் பல்கலைக்கழகம் வழங்கவிருந்த கௌரவ டாக்டர் பட்டத்தை ஏற்க இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் மறுத்துவிட்டார்.  இதுதொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தருக்கு சச்சினின் மனைவி அஞ்சலி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  அதில் சச்சினுக்கு டாக்டர் பட்டம் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துள்ள அஞ்சலி, சச்சின் கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் எந்தவொரு டாக்டர் பட்டத்தையும் ஏற்பதில்லை என முடிவு செய்துள்ளார். அதனால் தாங்கள் வழங்கவிருந்த டாக்டர் பட்டத்தை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.  மைசூர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று அப்பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

Cricket World Cup: India knock Aussies out of World Cup


நடப்பு சாம்மியன் ஆஸ்திரோலியாவை வீல்தி அறையிருதிக்கு தகுதி பெற்றது
யுவராஜ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.பேட் செய்த இந்திய அணியில் சேவாக் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். சச்சின் 53 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். விராட் கோலி 24 ரன்களில் வெளியேறினார். கம்பீர் 50 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ரன்அவுட் ஆனார்.  தோனி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். யுவராஜும், ரெய்னாவும் இணைந்து சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றித் தேடித்தந்தனர். யுவராஜ் சிங் 57 ரன்களுடனும், ரெய்னா 34 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
Ricky Ponting's 104, his first century for 13 months, guided a misfiring Australian batting line-up to 260-6.
It was a target that looked within India's compass, and Sachin Tendulkar's 53 set the hosts off in fine style.
Gautam Gambhir added 50 before Yuvraj (57 not out) saw India to a five-wicket win with 14 balls to spare.
The result ended an extraordinary run of success for the Aussies in the World Cup. Beaten finalists in 1996 when Ponting was a junior player, they won the next three tournaments, an imposing run that included a run of 34 matches without defeat.
But their fallibility was shown up by Pakistan, who beat them in their final group match of this tournament, and India's strong batting line-up proved too powerful for Ponting's men

The co-hosts did come under pressure when tossing away middle order wickets two-thirds of the way through their chase. But Yuvraj and Suresh Raina (34) pushed India across the line with a terrific partnership of 74 from just 61 balls.
India's next match is sure to be a huge occasion - a semi-final in Mohali against Pakistan next week.

   


போர்ச்சுகல் பிரதமர் ஜோஸ் ராஜிநாமா

போர்ச்சுகல் பிரதமர் ஜோஸ் சாக்ரெட்டீஸ் தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்துள்ளார். இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.போர்ச்சுகல் பொருளாதாரத்தை சீர்படுத்த, நாடாளுமன்றத்தில் பிரதமர் கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்தது. 230 எம்.பி.,க்களில் 97 பேர் மட்டுமே அத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, பிரதமர் ராஜிநாமா செய்துள்ளார்.இந்நிலையில், நாளை அனைத்து அரசியல் கட்சிகளுடன் அதிபர் அனிபால் கவாகோ சில்வா ஆலோசனை நடத்துகிறார். அடுத்த ஆட்சி அமையும் வரை தற்போதைய அரசு பதவியில் இருக்கும் என்று அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.பிரதமரின் ராஜிநாமா காரணமாக, போர்ச்சுகலில் இன்னும் 2 மாதங்களில் பொதுத்தேர்தல் நடத்த அதிபர் திட்டமிட்டுள்ளார்.நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்தால், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச நிதியமைப்பின் உதவியை நாட வேண்டிய சூழல் ஏற்படலாம் என்று ஓரிரு நாட்களுக்கு முன்னர் நிதியமைச்சர் பெர்னாண்டோ சான்டோஸ் கூறியிருந்தார். இந்நிலையில், பிரதமர் திடீரென ராஜிநாமா செய்துள்ளதால் அந்நாட்டில் அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதுடன் பொருளாதாரமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா சென்றால் புத்துணர்வு ஏற்படும் : இறையன்பு ஐ.ஏ.எஸ்


சென்னை : ""சுற்றுலா செல்வதால், மன அழுத்தம் நீங்கி புத்துணர்வு ஏற்படும்,'' என, சென்னை பல்கலை கருத்தரங்கில் இறையன்பு பேசினார். சென்னை பல்கலையின் இந்திய வரலாற்றுத் துறை சார்பில், சுற்றுலா குறித்த கருத்தரங்கு நடந்தது. வரலாற்றுத் துறை தலைவர் பேராசிரியர் வெங்கடராமன், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் இறையன்பு ஐ.ஏ.எஸ்., பெங்களூர் நேஷனல் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் பரினீதா பங்கேற்றனர்.

இதில், சுற்றுலாவின் இனிமைகள் என்ற தலைப்பில், இறையன்பு ஐ.ஏ.எஸ்., பேசியதாவது: இன்ப சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, கலாசார சுற்றுலா, உணவு சுற்றுலா, வணிக சுற்றுலா, கல்வி சுற்றுலா என சுற்றுலாவில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான சுற்றுலா பயணத்தை மேற்கொள்கின்றனர். தமிழகத்தில் மருத்துவ சுற்றுலா வரும் பயணிகள் இன்பச் சுற்றுலா செல்லும் அளவுக்கு மாறுகின்றனர். ரஷ்யர்கள் தஞ்சைக்கு வந்து தமிழ் கற்றுக் கொள்கின்றனர். அங்குள்ள கோவில்களில் உள்ள ஓவியங்கள், கல்வெட்டுகளை ஆய்வு செய்கின்றனர். ஆனால், நம்மவர்கள் அதனருகில் நின்று புகைப்படம் எடுத்து சென்று விடுகின்றனர். சுற்றுலா என்பது மிக முக்கியமானது. ஒவ்வொருவரும் பயணம் செய்தால் தான் மன அழுத்தம் நீங்கி, புத்துணர்வு ஏற்படும். எனவே, அனைவரும் பயனுள்ள சுற்றுலா செல்லுங்கள். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் குறைந்தது 10 ஆயிரம் மைல்கள் பயணம் செய்ய வேண்டும். 10 ஆயிரம் புத்தகங்களை படிக்க வேண்டும். இவ்வாறு இறையன்பு பேசினார்.

காங்கிரசை தோற்கடிக்க நாம் தமிழர் கட்சி சபதம்

நாம் தமிழர் கட்சியின் மாநிலத்தலைவர்  சீமான் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்,   ‘’சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவது இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.   ஆனால் தமிழ் தேசிய இனத்தின் உடமைக்கு, உயிருக்கு உணர்வுக்கு எதிராக செயல்பட்டு இலங்கை தமிழ் இனத்தை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தோற்கடிக்கும் பணியில் ஈடுபடுவோம்

இதற்காக 17 நாள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 63 தொகுதிகளிலும் எதிர்த்து பிரச்சாரம் செய்வோம்.

நாளை எனது பிரச்சாரத்தை நெல்லை மாவட்டம் திசையன்விளையில் தொடங்குகிறேன். ஏப்ரல் 11-ந்தேதி வரை பிரச்சாரம் செய்வேன்.  

தமிழரால் உருவெடுத்து உள்ளோம். காங்கிரசை கறுவறுப்போம். அரசியல் சமுதாய மாற்றம் ஏற்படுத்தும் வகையில் எங்கள் பிரச்சாரம் அமையும்.

 இலவச திட்டங்கள் வழங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். காங்கிரசை பழிவாங்க அரசியல் களத்தில் குதித்து உள்ளோம். வைகோவை அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற்றியது வருத்தம் அளிக்கிறது. அவர் அனுபவம் மிக்க தலைவர் அவர் எடுத்த முடிவு சரியாக இருக்கும்.

எங்கிருந்தாலும் அவரது வாழ்த்து எங்களுக்கு கிடைக்கும்.   காங்கிரசை தோற்கடிக்கக் கூடிய வலுவான சின்னம் இரட்டை இலையாக இருந்தாலும், மொட்டை இலையாக இருந்தாலும் அதை ஆதரிப்போம்.

காங்கிரசை அழிப்பது தான் எங்களது நோக்கம்’’ என்று கூறினார்

சினிமாவுக்கு போகலாம் வாங்க! சேலம் விழாவில் கமல்,வைரமுத்து,சிறப்பு பேச்சு.





ரஜினி பேச்சு இந்தோ=ஜப்பான் சேம்பர்.


தி பெஸ்ட் ஆப் தமிழ் சினிமா' புத்தக வெளியீட்டு விழா




தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் பேசாவிட்டால் வேறு எங்கு போய் நாம் தமிழ் பேசுவது?


சென்னை: தாய் மொழியான தமிழ்மொழிக்குப் பிறகுதான் மற்ற மொழிகளை மாணவ மாணவியர் கற்க வேண்டும். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தமிழ் பேசாவிட்டால் வேறு எங்கு போய் தமிழ் பேசுவது, என்றார் கவிஞர் வைரமுத்து.


சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவை நிறைவு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் மு.தவமணி தலைமை தாங்கினார். கல்லூரி அறக்கட்டளை தலைவர் சுவாமிநாதன் ஐ.ஏ.எஸ். முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு ஆய்வு நூலை வெளியிட்டார்.

இந்த விழாவில் வைரமுத்து பேசியதாவது:

தமிழ் மணக்கும் இந்த மேடையில் ஆண்டறிக்கை ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்டது. இனிமேல், ஆண்டறிக்கையையும் தமிழிலேயே வாசிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் பேசாவிட்டால் வேறு எங்கு போய் நாம் தமிழ் பேசுவது? எந்த மொழிக்கும் நான் எதிரி அல்ல. ஆனால், தாய்மொழியை கற்றுக்கொண்ட பிறகு எந்த மொழியை கற்றுக்கொள்வதிலும் எனக்கு முரண்பாடு கிடையாது.

இன்னும் சொல்லப்போனால் உலகில் அதிக மக்களால் பேசப்படுகிற சீன மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். ஆங்கிலத்துக்கு அடுத்து அமெரிக்காவை ஆளப்போகும் ஸ்பானிஷ் மொழியை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

எத்தனை அறிவு பெற்றாலும், எத்தனை கண்டங்கள் கடந்தாலும் தாய்வழி பண்பாடு, தாய்மொழி நாகரிகம் என்ற இரண்டையும் மறந்து விடாதீர்கள்.

மேல்நாட்டுக்காரர்கள் இந்தியாவுக்கு வந்து வியப்பது பனி படர்ந்த இமயமலையை அல்ல. பளிங்கு தாஜ்மகாலை அல்ல. மூன்று கடல்கள் கூடிக் கும்மி அடிக்கும் குமரி முனையை அல்ல. இந்திய பண்பாட்டின் குடும்பம் என்ற கட்டமைப்பைத் தான் அவர்கள் வியந்து பார்க்கிறார்கள்.

ஐம்பது வயது மகளை எழுபது வயது தாய் அணைத்துக் கொள்வதும், நாற்பது வயது பேரனை எண்பது வயது பாட்டன் தழுவிக்கொள்வதும் நமது பண்பாட்டில் மட்டுமே காணக்கூடிய சிறப்பம்சமாகும்.

நமது பண்பாட்டின் உறவுகளின் வழியே உரிமைகளும், கடமைகளும் தொடர்கிற ஒரு மனிதச் சங்கிலி அமைப்பு முறை பேணப்படுகிறது. இந்த பண்பாட்டிற்கு அடிநாதமாக இருப்பவர்கள், பெண்களாகிய நீங்கள் (கல்லூரி மாணவிகள்).

வேலையே உடற்பயிற்சி...

எங்கள் பாட்டிமார்களும், எங்கள் அன்னைமார்களும் தனியாக எந்த உடற்பயிற்சியும் மேற்கொண்டது இல்லை. உலக்கை பிடிப்பதும், அம்மி அரைப்பதும், கோலமிடுவதும், வீட்டுக் கடமையாற்றுவதும் அவர்களுக்கு எப்போதுமே உடற்பயிற்சிகளாக அமைந்தன.

கம்ப்யூட்டர் முன்பும், டி.வி. முன்பும் வாழ்வின் பெரும்பகுதியை செலவிடுகிற இந்த கால பெண்கள், உடலுக்கு பயிற்சி இல்லாமல் போனார்கள். உங்கள் வேலையை உடற்பயிற்சியாக மாற்றிக்கொண்டால் தனியாக உடற்பயிற்சி தேவையில்லை.

உழைக்கும் பெண்கள் அதிகமாக உள்ள தேசம் இந்தியாதான் என புள்ளி விவரம் கூறுகிறது. ஆனால், ஆண்டுக்கு 39 ஆயிரம் கற்பழிப்புகளும், 42 ஆயிரம் வரதட்சணை சாவுகளும், 27 ஆயிரம் பாலியல் கொடுமைகளும் இந்த மண்ணில்தான் நிகழ்கின்றன என அதே புள்ளி விவரம் கூறுகிறது. எனவே, இன்னும் முழுமையான முன்னேற்றத்தை நோக்கி பெண் குலம் முன்னேற வேண்டும்.

உங்களில் யாரோ ஒரு இந்திரா காந்தி, யாரோ ஒரு கல்பனா சாவ்லா, யாரோ ஒரு மேடம் கியூரி, யாரோ ஒரு சானியா மிர்சாவாக இருக்கலாம். உங்களுக்குள் உள்ள ஆற்றலை தட்டியெழுப்புங்கள். இன்னும் பத்து, பதினைந்து ஆண்டுகள் கழித்து என்னை எங்கே சந்தித்தாலும் தேடி வந்து பேசுங்கள், 'நீங்கள் விதைத்த லட்சிய விதையில் முளைத்தவள் நான்' என்று உங்களில் யாராவது வந்து என்னிடம் சொன்னால் அதுவே எனது பேச்சால் விளைந்த பெரும் பேறாக கருதுவேன்...", என்றார்.

முதல்வர் கோபப்படுவானேன்?

தேர்தல் ஆணையம் தனது கடமையைச் சிறப்பாக, பாரபட்சமின்றிச் செய்கிறது என்று பாராட்ட வேண்டிய தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் அதிகப்படியான கெடுபிடிகள் காட்டுவதாகக் கண்டனம் தெரிவித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.  இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்குப் போலீஸ் டிஜிபி முதல் மாவட்ட ஆட்சியர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள்வரை பல பேரை தேர்தல் ஆணையம் பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்கள் நேர்மையாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள் என்பதற்காக- தமிழக அரசிடம்கூட கேட்காமல்- இவர்களை மாற்றியிருக்கிறார்கள் என்பது தமிழக முதல்வரின் மிகப்பெரிய வருத்தம்.  தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்களிலும்கூட காவல்துறை உயர் அதிகாரிகள் வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மாவட்ட ஆட்சியர்கள் கூட, தேர்தல் முடியும்வரை வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்பட்ட சம்பவங்களும் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது எதற்காக அதிகாரிகள் மாற்றத்துக்காக முதல்வர் இவ்வளவு கோபம் கொள்ள வேண்டும்?  தேர்தல் ஆணையம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சிறப்பாகவும், பாரபட்சமின்றியும், ஆளும்கட்சியாக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமலும் நடவடிக்கையை முடுக்கியிருப்பது பொதுமக்களிடம் தேர்தல் ஆணையத்தின் மீது பெரும் மதிப்பையும் நம்பிக்கையையும் உண்டாக்கி வருகிறது.  வெறுமனே எதிர்க்கட்சிகள் கூறியதால் இந்த நடவடிக்கை என்று முதல்வர் கூறினாலும், தேர்தல் ஆணையம் மிக எச்சரிக்கையாகவும், இது தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டால் பதில் சொல்லக்கூடிய ஆதாரங்களுடனும்தான் செயல்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதலாக, அரசு இலவச கலர் டி.வி. வழங்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், பல இடங்களில் டி.வி. கிடைக்கப்பெறாதவர்களுக்கு டோக்கன் கொடுத்து, மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு டி.வி. கொடுப்போம் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தடையுத்தரவுக்குப் பிறகும் இத்தகைய நடவடிக்கை ஒரு மாவட்டத்தில் நடக்கும் என்றால் அது அந்த மாவட்ட வருவாய்த்துறையின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மாவட்ட ஆட்சியரின் இணக்கம் இல்லாமல் இயலாது.  இத்தகைய ஆட்சியாளர்கள் தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கு எத்தகைய ஒத்துழைப்புத் தர முடியும்? ஆகவே தேர்தல் முடியும் வரை அவர்களை வேறு பணிக்கு மாற்றுவதில் என்ன தவறு?  இத்தகைய புகார்களை எதிர்க்கட்சிகள் கூறியதால் மட்டுமே தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அவர்கள் பல இடங்களில் ஆய்வு செய்தும், விசாரித்தும், விடியோ பதிவுகள் மூலம் "ஷேடோ ரிஜிஸ்டர்' எனப்படும் நிழல்பதிவு மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் கிடைக்கும் செய்திகளையும் வைத்துத்தான் இந்த இடமாறுதல்களைச் செய்துள்ளனர்.  நியாயமாகப் பார்த்தால், தேர்தல் அறிவிப்புக்குப் பிறகும் ஆளும்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்ட ஆட்சியாளர்கள் மீதும் மற்ற அலுவலர்கள் மீதும் துறைவாரி நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் அதைச் செய்யாமல் வெறுமனே இடமாற்றம் மட்டுமே செய்துள்ளது என்பதை முதல்வர் ஏன் ஏற்க மறுக்கிறார் என்று தெரியவில்லை.  கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் ரூ.17 கோடி வரை, கணக்கில் காட்டப்படாத பணம் சிக்கியுள்ளது. கடந்த ஒரு மாதமாக இதுபற்றிப் பேசாத முதல்வர், இப்போது சில அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டபோது குரல் கொடுக்கிறார்.  தேர்தல் ஆணையம் நடத்தும் இத்தகைய வாகனச் சோதனைகள் சாதாரணப் பயணிகளுக்கும்கூட சில நேரங்களில் இடையூறாகவும் காலதாமதப்படுத்துவதாகவும் அமைகிறது என்பது உண்மையே. ஆனால் இந்த நடவடிக்கைகள், கருப்புப் பணத்தைக் கொண்டு செல்வோருக்கு மட்டுமே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நியாயமான கணக்கு உள்ள பணத்தைக் கொண்டு செல்வோர் தினமும் வங்கிகளுக்குக் கொண்டு செல்லவும் பணம் செலுத்தவும் தடை எதுவும் இல்லை.  அரசுக்குத் தெரியாமல், வருமான வரித்துறைக்குத் தெரியாமல் வியாபாரம் செய்வோர் மட்டுமே, காசோலைகளை, வரைவோலைகளைப் பயன்படுத்தாமல் ரொக்கமாக எடுத்துச் செல்கின்றனர் என்பதுதான் பல சோதனைகள், பணப்பறிமுதல்கள் மூலம் தெரியவந்துள்ள உண்மை. எதற்காக அந்தப் பணம் கொண்டு செல்லப்பட்டது என்பதற்குச் சரியான காரணமும் விளக்கமும் அளித்தவர்களுக்கு அந்தப் பணம் திரும்ப வழங்கப்பட்ட செய்திகளும் பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கின்றன.  தேர்தலுக்காக மட்டும் இது நடத்தப்படாமல், எல்லா நாள்களிலும் நடத்தப்பட்டால் கருப்புப் பணப் புழக்கம் மிகவும் குறையும் என்று அரசுக்கு யோசனை சொல்ல வேண்டிய முதல்வர், இந்த நடைமுறையைக் கண்டிப்பது ஏன் என்று புரியவில்லை.  தேர்தல் ஆணையம் இப்போது மிகத்தெளிவாக ஒன்றைத் தெரிவித்துள்ளது. வாக்குப் பெறுவதற்காகப் பணம், பொருள் கொடுக்கும் அரசியல் கட்சி மீது வழக்குப் பதிவு செய்வதோடு, அதை வாங்கிக்கொள்ளும் வாக்காளர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும். லஞ்சம் கொடுப்பதும் குற்றம், லஞ்சம் பெறுவதும் குற்றம்.  இந்தக் குற்றத்தை நிரூபிக்க கைப்பேசியில் பதிவு செய்த புகைப்படங்கள்கூடப் போதுமானது. நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  தேர்தல் ஆணையத்தின் சிறப்பான செயல்பாடுகள் கெடுபிடிகள் என்றே வைத்துக்கொண்டாலும் இது அடுத்துவரும் ஐந்தாண்டு கால ஆட்சிக்கானது என்பதைக் கருதினால் இந்த இரு வார கெடுபிடிகள் பெரிய விஷயமல்ல. சோதனையிடும்போது நேர்மையாளர்கள் சில சிரமங்களை அனுபவிக்கக்கூடும்தான். மக்களாட்சி முறையாக நடைபெறுவதற்காக கொஞ்சம் சிரமம் அனுபவித்தால்தான் என்ன?  வாக்குக்குப் பணம் கொடுக்கும் கட்சிகள்தான் இந்த நடவடிக்கையை எதிர்க்கும், கண்டிக்கும், கூக்குரலிடும். எதிர்க்கட்சிகளின் குரல் கேட்கவில்லை. ஆளும் கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகளின் குரலும் கேட்கவில்லை. ஆனால் முதல்வர் குரல் அல்லவா கேட்கிறது, ஏன்?தேர்தல் ஆணையம் தனது கடமையைச் சிறப்பாக, பாரபட்சமின்றிச் செய்கிறது என்று பாராட்ட வேண்டிய தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் அதிகப்படியான கெடுபிடிகள் காட்டுவதாகக் கண்டனம் தெரிவித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.  இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்குப் போலீஸ் டிஜிபி முதல் மாவட்ட ஆட்சியர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள்வரை பல பேரை தேர்தல் ஆணையம் பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்கள் நேர்மையாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள் என்பதற்காக- தமிழக அரசிடம்கூட கேட்காமல்- இவர்களை மாற்றியிருக்கிறார்கள் என்பது தமிழக முதல்வரின் மிகப்பெரிய வருத்தம்.  தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்களிலும்கூட காவல்துறை உயர் அதிகாரிகள் வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மாவட்ட ஆட்சியர்கள் கூட, தேர்தல் முடியும்வரை வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்பட்ட சம்பவங்களும் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது எதற்காக அதிகாரிகள் மாற்றத்துக்காக முதல்வர் இவ்வளவு கோபம் கொள்ள வேண்டும்?  தேர்தல் ஆணையம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சிறப்பாகவும், பாரபட்சமின்றியும், ஆளும்கட்சியாக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமலும் நடவடிக்கையை முடுக்கியிருப்பது பொதுமக்களிடம் தேர்தல் ஆணையத்தின் மீது பெரும் மதிப்பையும் நம்பிக்கையையும் உண்டாக்கி வருகிறது.  வெறுமனே எதிர்க்கட்சிகள் கூறியதால் இந்த நடவடிக்கை என்று முதல்வர் கூறினாலும், தேர்தல் ஆணையம் மிக எச்சரிக்கையாகவும், இது தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டால் பதில் சொல்லக்கூடிய ஆதாரங்களுடனும்தான் செயல்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதலாக, அரசு இலவச கலர் டி.வி. வழங்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், பல இடங்களில் டி.வி. கிடைக்கப்பெறாதவர்களுக்கு டோக்கன் கொடுத்து, மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு டி.வி. கொடுப்போம் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தடையுத்தரவுக்குப் பிறகும் இத்தகைய நடவடிக்கை ஒரு மாவட்டத்தில் நடக்கும் என்றால் அது அந்த மாவட்ட வருவாய்த்துறையின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மாவட்ட ஆட்சியரின் இணக்கம் இல்லாமல் இயலாது.  இத்தகைய ஆட்சியாளர்கள் தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கு எத்தகைய ஒத்துழைப்புத் தர முடியும்? ஆகவே தேர்தல் முடியும் வரை அவர்களை வேறு பணிக்கு மாற்றுவதில் என்ன தவறு?  இத்தகைய புகார்களை எதிர்க்கட்சிகள் கூறியதால் மட்டுமே தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அவர்கள் பல இடங்களில் ஆய்வு செய்தும், விசாரித்தும், விடியோ பதிவுகள் மூலம் "ஷேடோ ரிஜிஸ்டர்' எனப்படும் நிழல்பதிவு மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் கிடைக்கும் செய்திகளையும் வைத்துத்தான் இந்த இடமாறுதல்களைச் செய்துள்ளனர்.  நியாயமாகப் பார்த்தால், தேர்தல் அறிவிப்புக்குப் பிறகும் ஆளும்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்ட ஆட்சியாளர்கள் மீதும் மற்ற அலுவலர்கள் மீதும் துறைவாரி நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் அதைச் செய்யாமல் வெறுமனே இடமாற்றம் மட்டுமே செய்துள்ளது என்பதை முதல்வர் ஏன் ஏற்க மறுக்கிறார் என்று தெரியவில்லை.  கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் ரூ.17 கோடி வரை, கணக்கில் காட்டப்படாத பணம் சிக்கியுள்ளது. கடந்த ஒரு மாதமாக இதுபற்றிப் பேசாத முதல்வர், இப்போது சில அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டபோது குரல் கொடுக்கிறார்.  தேர்தல் ஆணையம் நடத்தும் இத்தகைய வாகனச் சோதனைகள் சாதாரணப் பயணிகளுக்கும்கூட சில நேரங்களில் இடையூறாகவும் காலதாமதப்படுத்துவதாகவும் அமைகிறது என்பது உண்மையே. ஆனால் இந்த நடவடிக்கைகள், கருப்புப் பணத்தைக் கொண்டு செல்வோருக்கு மட்டுமே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நியாயமான கணக்கு உள்ள பணத்தைக் கொண்டு செல்வோர் தினமும் வங்கிகளுக்குக் கொண்டு செல்லவும் பணம் செலுத்தவும் தடை எதுவும் இல்லை.  அரசுக்குத் தெரியாமல், வருமான வரித்துறைக்குத் தெரியாமல் வியாபாரம் செய்வோர் மட்டுமே, காசோலைகளை, வரைவோலைகளைப் பயன்படுத்தாமல் ரொக்கமாக எடுத்துச் செல்கின்றனர் என்பதுதான் பல சோதனைகள், பணப்பறிமுதல்கள் மூலம் தெரியவந்துள்ள உண்மை. எதற்காக அந்தப் பணம் கொண்டு செல்லப்பட்டது என்பதற்குச் சரியான காரணமும் விளக்கமும் அளித்தவர்களுக்கு அந்தப் பணம் திரும்ப வழங்கப்பட்ட செய்திகளும் பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கின்றன.  தேர்தலுக்காக மட்டும் இது நடத்தப்படாமல், எல்லா நாள்களிலும் நடத்தப்பட்டால் கருப்புப் பணப் புழக்கம் மிகவும் குறையும் என்று அரசுக்கு யோசனை சொல்ல வேண்டிய முதல்வர், இந்த நடைமுறையைக் கண்டிப்பது ஏன் என்று புரியவில்லை.  தேர்தல் ஆணையம் இப்போது மிகத்தெளிவாக ஒன்றைத் தெரிவித்துள்ளது. வாக்குப் பெறுவதற்காகப் பணம், பொருள் கொடுக்கும் அரசியல் கட்சி மீது வழக்குப் பதிவு செய்வதோடு, அதை வாங்கிக்கொள்ளும் வாக்காளர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும். லஞ்சம் கொடுப்பதும் குற்றம், லஞ்சம் பெறுவதும் குற்றம்.  இந்தக் குற்றத்தை நிரூபிக்க கைப்பேசியில் பதிவு செய்த புகைப்படங்கள்கூடப் போதுமானது. நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  தேர்தல் ஆணையத்தின் சிறப்பான செயல்பாடுகள் கெடுபிடிகள் என்றே வைத்துக்கொண்டாலும் இது அடுத்துவரும் ஐந்தாண்டு கால ஆட்சிக்கானது என்பதைக் கருதினால் இந்த இரு வார கெடுபிடிகள் பெரிய விஷயமல்ல. சோதனையிடும்போது நேர்மையாளர்கள் சில சிரமங்களை அனுபவிக்கக்கூடும்தான். மக்களாட்சி முறையாக நடைபெறுவதற்காக கொஞ்சம் சிரமம் அனுபவித்தால்தான் என்ன?  வாக்குக்குப் பணம் கொடுக்கும் கட்சிகள்தான் இந்த நடவடிக்கையை எதிர்க்கும், கண்டிக்கும், கூக்குரலிடும். எதிர்க்கட்சிகளின் குரல் கேட்கவில்லை. ஆளும் கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகளின் குரலும் கேட்கவில்லை. ஆனால் முதல்வர் குரல் அல்லவா கேட்கிறது, ஏன்?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...