|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 August, 2011

சரவணா ஸ்டோர் கடைகளில் கணக்கில் வராத ரூ. 150 கோடி பணம் நகைகள்!


சரவணா ஸ்டோராஸ், சரவணா செல்வரத்தினம் உள்ளிட்ட கடைகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது கணக்கில் வராத ரூ. 150 கோடி மதிப்புள்ள நகை, பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கு உரிய கணக்குகளை கடை உரிமையாளர்கள் காட்ட முடியாமல் திணறுகின்றனராம்.

சென்னையின் மிகப் புகழ் பெற்ற வர்த்தக நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ். பின்னர் உரிமையாளர்களான சகோதரர்களுக்குள் பிளவு வந்தது. இதையடுத்து புதிதாக சரவணா செல்வரத்தினம் என்ற பெயரில் தனிக் கடையும் முளைத்தது. தி.நகர் வர்த்தகத்தில் இவர்களின் பங்குதான் மிகப் பெரியது என்று கூறும் அளவுக்கு விஸ்வரூப வளர்ச்சியைக் கண்டனர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள்.

சென்னைக்கு வரும் பிற மாவட்டத்தினர், வெளிமாநிலத்தவர் பீச்சைப் பார்க்கிறார்களோ இல்லையோ, சரவணா ஸ்டோர்ஸுக்குப் போவதை வாடிக்கையாக வைத்துக் கொள்ளும் அளவுக்கு பிரபலமானது இந்த நிறுவனத்தின் கடைகள்.

இந்த நிறுவனம் தற்போது பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது. கடந்த வியாழக்கிழமை காலை கிட்டத்தட்ட 500 வருமான வரித்துறை அதிகாரிகள் சரவணா கடைகளின் அனைத்துக் கிளைகளையும் ஒரே நேரத்தில் முற்றுகையிட்டனர். அன்று காலை தொடங்கிய ரெய்டு கிட்டத்தட்ட 48 மணி நேரம் நீடித்தது. 2 நாட்கள் நடந்த இந்த அதிரடி சோதனையால் இரு நாடுகளும் சரவணா ஸ்டோர் கடைகள் அனைத்தும் விற்பனையை நிறுத்தின. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த அதிரடி ரெய்டு.

இந்த ரெய்டு குறித்து வருமானவரித்துறை தற்போது விவரங்கள் தெரிவித்துள்ளது. 2 நாட்கள், 27 இடங்களில், 500 அதிகாரிகள் சேர்ந்து இந்த சோதனையை நடத்தியுள்ளனர்.

சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் உள்ளிட்ட கடைகளில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. நிறுவனங்களில் உள்ள இருப்புகள் குறித்த கணக்கெடுப்பு மட்டும் தற்போது நடந்து முடிந்துள்ளது. இதில் ரூ. 150 கோடி மதிப்பிலான நகை, பணம் சிக்கியுள்ளது. இவற்றை ரகசியமாக பதுக்கி வைத்திருந்தனர். இதற்குக் கணக்குகள் இல்லை. இவை குறித்து கணக்கு கேட்டபோது கடை உரிமையாளர்களால் சரியான ஆவணங்களையோ அல்லது விளக்கத்தையோ தர முடியவில்லை. ஒரே இடத்தில் மட்டும் ரூ. 15 கோடி பணத்தையும், ரூ. .3.5 கோடி மதிப்புள்ள நகைகளையும் பதுக்கி வைத்திருந்தனர்.

சோதனைக்குப் பின்னர் நிறுவனத்தின் 15 குடோன்களை மூடி சீல் வைத்துள்ளோம். கடைகள் குறித்த முழுமையான ஆய்வை முடிக்க ஒரு மாத காலமாகும். அதற்குப் பின்னர் எந்த அளவுக்கு மோசடி நடந்துள்ளது என்பது தெரியும் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

கடை உரிமையாளர்களின் 7 வீடுகளையும் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். அடுத்து கடை உரிமையாளர்கள், கடைகளின் வங்கிக் கணக்குகளை சோதனையிடவும், வங்கி லாக்கர்களைத் திறந்து ஆய்வு செய்யவும் வருமானவரித்துறை திட்டமிட்டுள்ளது.

இதே நாள்...


  • ரஷ்ய கொடி நாள்
  •  ஜெனீவாவில் செஞ்சிலுவை சங்கம் ஆரம்பிக்கப்பட்டது(1864)
  •  மதராஸ் நகரம் (தற்போதைய சென்னை) அமைக்கப்பட்டது(1639)
  •  தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது(1926)
  •  தொலைக்காட்சி சேவையை முதன் முதலாக பிபிசி சோதித்தது(1932)
  • சச்சினை வீழ்த்திய திட்டம் அம்பலம்! பலித்தது கம்ப்யூட்டர் கணக்கு!

    சச்சின் விக்கெட்டை கைப்பற்ற இங்கிலாந்து அணி வகுத்த அதிரடி திட்டம் அம்பலமாகியுள்ளது. கணித நிபுணர் உதவியுடன் நவீன கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இவரது பலவீனங்களை கண்டறிந்துள்ளது. இதன் மூலம் சதத்தில் சதம் காணும் இவரது கனவை தகர்த்துள்ளது.
    இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டில் தோல்வி அடைந்த இந்திய அணி, தொடரை இழந்தது. இம்முறை இந்திய வீரர் சச்சின், சர்வதேச அளவில் தனது 100வது சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவரது ஆட்டம் படுமோசமாக இருந்தது. இங்கு 7 இன்னிங்சில்(34, 12, 16, 56, 1, 40, 23) சேர்த்து 182 ரன்கள்(சராசரி 26.00) மட்டுமே எடுத்துள்ளார். இவர் தொடர்ந்து தடுமாறியதற்கு, இங்கிலாந்து அணியின் தொழில்நுட்ப ஆலோசகர் நாதன் லியாமன் வகுத்த திட்டமே காரணம் என தெரிய வந்துள்ளது.

    கேம்பிரிட்ஜில் படித்த லியாமன் மிகச் சிறந்த கணித நிபுணர். இவர், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கம்ப்யூட்டர் "சிமுலேட்டரில்' கிரிக்கெட் ஆடுகளங்களின் தன்மை, வீரர்கள் விளையாடும் முறை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பதிவு செய்துள்ளார். உதாரணமாக, ஆடுகளத்தில் பந்து விழும் இடத்தை 100 * 15 செ.மீ., என்ற அளவில் 20 பகுதிகளாக பிரித்துக் கொண்டுள்ளார். இதன் மூலம் குறிப்பிட்ட பேட்ஸ்மேன்களுக்கு எந்த இடத்தில் பந்துவீசினால் நெருக்கடி ஏற்படும் என்பதை கண்டறிந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக டெஸ்ட் அரங்கில் வீசப்பட்ட பந்துகளை பதிவு செய்து வைத்திருக்கிறார். பேட்ஸ்மேன்களின் "புட் வொர்க்', "பேட்' பிடிக்கும் முறை போன்றவற்றையும் துல்லியமாக கணக்கிட்டுள்ளார்.

    லியாமன் கணக்குகளின்படி, சச்சின் 50 ரன்களை எட்டும் வரை பெரும்பாலும் "ஆன்' திசையில் தான் விளையாடுவாராம். இந்த பலவீனத்தை அறிந்து கொண்டு அவருக்கு "ஆப்- சைடில்' பந்துவீசச் சொல்லியுள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டி வரை அவருக்கு வீசப்பட்ட 261 பந்துகளில், 254 பந்துகள் "ஆப் சைடுக்கு' வெளியே செல்லும் வகையில் வீசப்பட்டன. 6 பந்துகள் "ஆப்-சைடு' திசையில் வீசப்பட்டன. ஒரு பந்து மட்டுமே "லெக்' திசையில் வீசப்பட்டது.
    இந்த திட்டத்தை அறிந்த கொண்ட சச்சின், மூன்றாவது டெஸ்டில் தனது அணுகுமுறையை மாற்றியுள்ளார். "மிடில் ஸ்டம்ப்பை' மையமாக வைத்து ஆட முயற்சி செய்துள்ளார். "கிரீசுக்கு' வெளியே நின்று "பேட்' செய்துள்ளார். இதற்கு பதிலடியாக, ஆண்டர்சன் பந்துவீசிய போது, விக்கெட் கீப்பர் மாட் பிரையரை "ஸ்டம்ப்ஸ்' அருகில் வந்து நிற்க சொல்லியுள்ளார் இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ். இதனை பார்த்த சச்சின் மீண்டும் "கிரீசுக்குள்' செல்ல நேர்ந்ததாம்.
    இது குறித்து லியாமன் கூறுகையில்,"வீரர்கள் பந்துவீசும் முறை, "பேட்' பிடிக்கும் விதம் போன்றவற்றை கண்டறிய வேண்டும். இதற்கு "ஹாக்-ஐ' தொழில்நுட்பம் உதவும். வீசப்படும் பந்துகளை பல்வேறு வகையாக பிரிக்கிறோம். இதனை பேட்ஸ்மேன்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதை "வீடியோ' ஆதாரங்களுடன் ஆய்வு செய்கிறோம். ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பந்துவீசும் போது நெருக்கடி ஏற்படும். இந்த பலவீனத்தை அறிந்து அந்த இடத்தில் ஒரு ஓவரில் இரு முறை பந்துவீசினால், எளிதாக விக்கெட்டை கைப்பற்றி விடலாம். இந்திய வீரர்களில் சச்சினுக்கு எதிராக இத்திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றிக் காட்டினோம். இவருக்கு எதிராக இங்கிலாந்து "வேகங்கள்' அபாரமாக பந்துவீசினர்,''என்றார்.


    கவாஸ்கர் கிண்டல்
    இங்கிலாந்தின் திட்டத்தில் புதுமை ஒன்றும் இல்லை என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து இவர் கூறுகையில்,"" ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஒவ்வொரு விதமான "பேட்டிங்' "ஸ்டைல்' இருக்கும். "பேட்' பிடிக்கும் விதத்தை பொறுத்து இது அமையும். உதாரணமாக கங்குலி பயன்படுத்தும் பேட்டின் பிடி அதிக எடை கொண்டதாக இருக்கும். இது "ஆப்-சைடில்' விளையாட எளிதாக இருக்கும். சச்சினை எடுத்துக் கொண்டால் "பேட்' பிடிக்கும் பகுதி உருண்டை வடிவில் இருக்கும். இதன் மூலம் "ஆன்-சைடில்' எளிதாக ரன் சேர்க்கலாம். எனவே, சச்சின் "பேட்டிங்' பற்றி புதிதாக ஒன்றும் கண்டுபிடித்து விடவில்லை,''என்றார். 

    ஊட்டச்சத்து நிறைந்த திராட்சை!

    கடவுளின் கனி என்று செல்லமாக அழைக்கப்படும் பெருமையுடையது கொடி முந்திரி எனப்படும் திராட்சைப்பழம். பண்டைய காலத்தில் ஒயின் எனப்படும் மதுபான கிப்து உள்ளிட்ட நாடுகளில் திராட்சை பயிரிடப்பட்டுள்ளது. பழங்காலத்தில் இருந்து உலகம் முழுவதும் பயிரிடப்படும் திராட்சைப்பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

    ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்றான திராட்சையில் வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12 மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. இவைத்தவிர பாஸ்பரஸ்,இரும்புச்சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன.

    மூளை இதயம் வலுவடையும்: இப்பழத்தை சாப்பிட்டால் பித்தம் தணியும், உடல் வறட்சியை நீக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தி, புதிய ரத்தத்தை ஊறவைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது. அதனால் மூளையும், இதயமும் வலிமை பெறும்.

    கல்லீரலின் பலவீனத்தால் உணவு செரிமானமாகாத தொல்லையை நீக்கும். உஷ்ணத்தினால் உடலில் ஏற்படும் நமைச்சல், சிறுநீர் கடுப்பை குணப்படுத்துகிறது.

    குழந்தைகளுக்கு திராட்சை: சிறுகுழந்தைகளுக்கு பல்முளைக்கும் காலங்களில் மலச்சிக்கல் உண்டாகும். ஒரு சிலகுழந்தைகளுக்கு வலிப்பு நோயும், உண்டாகும். இதற்கு திராட்சைச் சாறு அருமருந்தாகிறது.

    ஜலதோஷத்தினால் ஏற்படும் நீர்வடிதல், இருமல், தும்மல் போன்றவற்றை திரட்சை பலச்சாறு குணப்படுத்துகிறது. மார்புச்சளியை போக்குகிறது. நுரையீரலை பாதுகாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

    ரத்த சோகைக்கும் காமாலை நோய்க்கும் கூட இது சிறந்த மருந்தாகிறது. குடல் மற்றும் உடல்புண்ணையும் ஆற்றும் தன்மை கொண்டது. களைப்பைப் போக்கி ஆழ்ந்த உறக்கத்தைத் தரும்.அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம் போன்றவற்றிர்க்கு திராட்சை சிறந்த மருந்து.

    பெண்களுக்கு சிறந்த மருந்து: சீரற்ற மாதவிடாய் சீராடைகிறது. மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியை போக்குகிறது. இதயபலவீனமானவர்களுக்கு திராட்சை சிறந்த மருந்து. தலைவலி, காய்க்காய் வலிப்பு போன்றவற்றை குணப்படுத்தகிறது. பாலுணர்வை தூண்டுகிறது.

    புற்றுநோய் கட்டுப்படும்: சிறிய அளவில் எடுத்துக்கொள்ளப்படும் சிவப்பு ஒயினுக்கு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலும், இதயத்தை வலுப்படுத்தும் ஆற்றலும் உண்டு.திராட்சைப்பழத்தின் தோலில் இருந்து பெறப்படும் resveratrol என்னும் வேதிப்பொருள் சிவப்பு ஒயினில் அடர்ந்து காணப்படுகிறது. நாளும் சிறிதளவு சிவப்பு ஒயின் சாப்பிடுவதை வல்லுநர்கள் ஆதரிக்கிறார்கள்.

    யார் சாப்பிடக்கூடாது:  அதிகம் சளிப்பிடித்திருக்கும் போதும், ஆஸ்துமா நோயுள்ளவர்களும், வாதஉடம்புக்குள்ளானவர்களும், அதிக அளவில் திராட்சைப்பழத்தை சாப்பிடக்கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரை.

    தமிழக என்ஜீனியர் உள்ளிட்ட 21 இந்தியர்கள் சோமாலிய கடற் கொள்ளையர்களால் கடத்தல்!

    தேனி மாவட்டத்தைச் சேர்ந்த என்ஜீனியர் உதயக்குமார் உள்பட 21 இந்தியர்களுடன் எண்ணெய்க் கப்பலை சோமாலிய கடற் கொள்ளையர்கள் ஓமன் அருகே கடத்திச் சென்றுள்ளனர்.

    சோமாலிய கடற் கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதை ஒடுக்க பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. இந்த நிலையில் ஓமன் அருகே 21 இந்தியர்களுடன் ஒரு எண்ணெய்க் கப்பலை கடற் கொள்ளையர்கள் கடத்திக் கொண்டு போய் விட்டனர்.

    அந்தக் கப்பலின் பெயர் எம்.வி. பேர்கெம் போகி. சலாலா என்ற இடத்திலிருந்து இந்தக் கப்பல் கடத்தப்பட்டுள்ளது. அக்கப்பலில் உள்ள 21 இந்தியர்களில் ஒருவர் தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது பெயர் உதயக்குமார்.

    உதயக்குமார் கடத்தப்பட் தகவல் வந்ததும், அவரது குடும்பத்தினர் தேனி மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
    கடத்தல்காரர்களைத் தொடர்பு கொள்ளும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

    பீட்சா ஹட்டின் அனைத்து கிளைகளிலும் ஒயின், பீர்!

     பீட்சா ஹட்டின் அனைத்து கிளைகளிலும் இனி பீர், ஒயின் கிடைக்கும். இந்த திட்டம் முதலில் டெல்லி மற்றும் பெங்களூரில் தான் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

    இது குறித்து பீட்சா ஹட்டின் விளம்பரப் பிரிவு தலைவர் சுனய் பாசின் கூறியதாவது, நாங்கள் டெல்லியில் உள்ள 2 கடைகளில் பீர் மற்றும் ஒயினும், பெங்களூரில் உள்ள 5 கடைகளில் ஒயினும் அளிக்கிறோம். இது படிப்படியாக மற்ற கிளைகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும். அனைத்து கிளைகளிலும் இந்த சேவையை விரிவுபடுத்துவது தான் எங்கள் நோக்கம். சிறிய நகரங்களில் கிராக்கி அதிகரித்து வருவதால் வரும் 2015-க்குள் டயர் II, டயர் III நகரங்களில் பீட்சா ஹட் திறக்கப்படும்.

    வரும் 2015-க்குள் தற்போதுள்ளதைவிட 50 சதவீதம் அதிக கிளைகள் திறக்கவிருக்கிறோம். அதாவது 180 முதல் 200 கிளைகள் திறக்கவுள்ளோம் என்றார். ரூ. 9 ஆயிரம் கோடி மதிப்பிலான பீட்சா ஹட் 25 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    வரலாறு காணாத மக்கள் புரட்சி வெடிக்கும் !

    அன்னா ஹசாரே கூறுகையில்:


    அன்னா ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவாக, டெல்லி இந்தியா கேட்டில் இருந்து ராம்லீலா மைதானத்துக்கு பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. பேரணி உண்ணாவிரத பந்தலை அடைந்ததும், அவர்கள் மத்தியில் அன்னா ஹசாரே ஆவேசமாக பேசினார். 




    ஊழலுக்கு எதிராக கடந்த 20 ஆண்டுகளாக நான் பேராட்டம் நடத்தி வருகிறேன். லோக்பால் விவகாரத்தில், முதலில் கூட்டு குழு அமைத்து 2 மாத காலம் பேச்சு நடத்தி மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டது. இந்த அரசின் ஊழல் ஒழிப்பு நோக்கம் நேர்மையானது அல்ல. 

    வருகிற 30ந் தேதிக்குள் மக்கள் லோக்பால் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாவிட்டால், நாட்டில் வரலாறு காணாத மக்கள் புரட்சி வெடிக்கும். இந்த அரசு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்றார்.

    நூறு நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் பி.இ., எம்.எஸ்.சி படித்த பெண்கள் கலெக்டர் வேதனை!

    சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகாம் சார்பில் ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பொறியாளர்கள், மற்றும் பணியாளர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூசனம், இந்த பணி நடந்த இடங்களை நான் நேரில் சென்று ஆய்வு செய்தபோது பி.இ., படித்த ஒரு பெண்ணும், எம்.எஸ்.சி படித்த ஒரு பெண்ணும் 119 ரூபாய் கூலிக்கு வேலை செய்துகொண்டிருந்தார்கள்.

    கிராமப்புரத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் வேலைவாய்ப்பை பெரும் வகையில் தொடங்கப்பட்ட நூறு நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில், கிராமப்புரங்களில் உள்ள ஏறி, குளங்கள் தூர்வாரப்படுகிறது. இதனால் மழை நீர் சேகரிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. 

    படிப்பை பார்க்காமல் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் செய்த பணி மனதை உருக வைப்பதாக இருந்தது. அரசு ஊழியர்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றவேண்டும், ஆனால் பெரும்பாலான இடங்களில் அவர்கள் அப்படி நடப்பதில்லை... தாங்களுக்கு உரிய பணிகளையே முறையாக அதிகாரிகள் செய்வதில்லை என்று வேதனை தெரிவித்தார்.

    நம்ம இந்திய ஒளிர்கிறது !

    உண்ணாவிரதமிருந்தால் காந்தியாகிவிட முடியாது: நடிகை நமீதா !

    குறித்து அவர் கூறியதாவது: 


    அண்ணா ஹசாரேவின் போராட்டத்தால் எந்தப் பலனும் இல்லை என்று நடிகை நமீதா கருத்து தெரிவித்துள்ளார். அன்னா ஹசாரேவின் போராட்டம் பரபரப்பு செய்திக்குதான் இன்று உதவிக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. நாட்டில் இன்றைக்கு முக்கியப் பிரச்சினை தீவிரவாதம்தான். அதை ஒழிக்கத்தான் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.கொடுப்பதை நிறுத்தினால் வாங்குவதும் நின்று போகும். குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய மனிதர்கள் காரியம் சாதிக்க லஞ்சம் கொடுப்பதை நிறுத்தட்டும்.

    ஊழல் ஏதோ இன்று நேற்று வந்துவிடவில்லை. பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வேரூன்றிப் போன ஒன்று. அதை இந்த மாதிரி திடீர் போராட்டங்களால் ஒழிக்க முடியாது. ஹசாரே அரசியலமைப்புடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தவறு. லஞ்சம் தரக்கூடாது என்ற உணர்வை முதலில் மக்களிடம் உண்டாக்க ஹசாரே போன்றவர்கள் முயற்சிக்க வேண்டும். 

    நான் குஜராத் மாநிலத்தில் பிறந்தவள். காந்தி பிறந்த மண்ணில் பிறந்த எனக்கு காந்தீய போராட்டத்தின் அடிப்படை தெரியும். ஹஸாரேயின் போராட்டம் காந்தீய போராட்டமல்ல. உண்ணாவிரதமிருந்தால் காந்தியாகிவிட முடியாது. காந்தியுடன் மக்கள் இருந்தார்கள். 100 சதவீத வெற்றி அவருக்குக் கிடைத்தது. ஹசாரே போராட்டம் சிலரால் திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. இதற்கு 20 சதவீத பலன் கூட இருக்காது என நமீதா தெரிவித்துள்ளார்.

    * யாராவது இந்த கொசுவ அடிங்கலேன்! 

    எம்.பி.,க்கள், அமைச்சர் வீடு முன்பு தர்ணா!


    ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்றக்கோரி ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் வலுப்பெற்று வரும் நிலையில் நாடு தழுவிய கிளர்ச்சியாக மாற்ற ஹசாரே குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த பிரச்னையை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள எம்.பி.,க்கள் மற்றும் அமைச்சர்கள் வீடு முன்பாக தர்ணா போராட்டம் நடத்த வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர். இதற்கிடையில் இன்று ( 6 வது நாள் ) உண்ணாவிரத மேடையில் பேசிய ஹசாரே தமது போராட்டம் பேச்சுவார்த்தை கதவை மூடியதாக அர்த்தம் இல்லை. பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும், நாங்கள் திறந்த மனதுடன் இருக்கிறோம் லோக்பால் நிறைவேறும் வரை பின்வாங்கப்போவதில்லை, இது புரட்சி ஏற்படுத்துவதற்கான நேரம் என்றும் தெரிவித்தார். இவரது பேச்சு பிரதமர் நேற்று தெரிவித்த கருத்தின் அடிப்படையில் இருந்தது.

    டில்லி, மும்பை, கோல்கட்டா, கவுகாத்தி, பெங்களூரூ, சென்னை மற்றும் வெளிநாடுகளான லண்டன், அமெரிக்கா, ஜெர்மனி, மெல்போர்ன், கனடா என ஹசாரே போராட்டத்திற்கு உலகளாவிய ஆதரவு பெருகி வருகிறது. முக்கிய நகரங்களில் மாணவர்கள், குழந்தைகள் உள்பட உண்ணாவிரதம் , ஆர்ப்பாட்டம், பேரணி என சூடு பிடித்துள்ளது. டில்லி ராம்லீலா மைதானம் ஆர்வலர்களால் ( 70 ஆயிரம் பேர் வரை ) நிரம்பி வழிய துவங்கியது. இன்னும் பலர் குவிந்தால் மைதானம் தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

    ஹசாரே குழுவினர்அவசர ஆலோசனை இதற்கிடையில் ஹசாரே குழுவில் இடம் பெற்றுள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கிரண்பேடி, அர்விந்கெர்ஜ்வால், மேதாபட்கர் உள்ளிட்டோர் அவசர ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய அரவிந்த் கெர்ஜ்வால் கூறுகையில்; பேச்சுவார்த்தைக்குரிய முறையான அழைப்பு இதுவரை அரசிடம் இருந்து எங்களுக்கு வரவில்லை. வரும்பட்சத்தில் யாருடன், என்னவிவரம், எங்கே என்பது குறித்த விஷயங்கள் தொடர்பாக இன்று விவாதித்தோம் என்றார். மேலும் தங்களுக்கான ஆதரவு பெருகிவரும்வேளையில் அனைவரும் அனைத்து எம்.பி.,க்கள் வீடு முன்பாக தர்ணா போராட்டம் நடத்த கேட்டுக்கொண்டுள்ளோம். இந்த தர்ணா மூலம் அமைச்சர்கள் அனைத்து அரசியல்வாதிகள் கவனத்தை ஈர்க்க முடியும் என்றனர். மத்திய அரசுக்கு அனைவரும் ஜன்லோக்பால் வலியுறுத்தி கடிதமும் எழுத கோரியுள்ளோம்.

    அன்னாவின் மாரத்தானில் ஓட தயார் என்கிறது காங்.,இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்., செய்தி தொடர்பாளரும், பார்லி., நிலைக்குழு தலைவருமான அபிஷேக்சிங்வி ; அன்னா பரிந்துரைத்த அம்சங்கள் குறித்து லோக்பால் வரைவு மசோதா நகல் எங்களிடம் இருக்கிறது, இதனை நிலைக்குழு பரிசீலித்து வருகிறது. இந்தக்குழு வாய்பளித்தால் நாங்களும் மகிழ்ச்சி அடைவோம். ஊழலுக்கு எதிரான மக்கள் உணர்வில் நாங்களும் பங்கேற்கிறோம். இந்த விஷயத்தில் ஹசாரேவும், அரசும் ஒரே இலட்சியம்தான் கொண்டுள்ளது. ஆனால் முறைகளில்தான் வேறுபாடு உள்ளது. ஹசாரேயின் போராட்ட மாராத்தானில் நாங்களும் பங்கேற்க தயாராகத்தான் இருக்கிறோம் என்றார்.

    மும்பையில் பேரணி:ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் 
    ஹசாரேவுக்கு ஆதரவாக மும்பையில் பந்த்ராவிலிருந்து ஜூகு வரை பேரணி நடந்தது. இந்த பேரணியில் ஒருலட்சம் பேர் மழை பெய்தாலும் அதனை பொருட்படுத்தாமல் கலந்து ூகொண்டு ஹசாரேவுக்கு தங்களது தெரிவித்தனர். மும்பையில் நடந்த பேரணியில் இது மிகப்பெரியது ூஎன அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். கடைக்காரர்கள் அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்து தங்களது கடைகளை அடைத்தனர். இந்த பேரணி சுமார் 5 கி.மீ., நடைபெற்றது. இதே போல் ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து ஜெய்ப்பூர், கர்நாடகாவிலும் பேரணி நடந்தது. டில்லியில் இந்தியா கேட் பகுதியில் அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்து பல்லாயிரகணக்கான மக்கள் கூடியுள்ளனர். 

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...