|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 April, 2011

இதே நாள்


  • அமெரிக்க அணுசக்தி கழகம் அமைக்கப்பட்டது(1945)

  •  ஜார்ஜியா, சோவியத் ஒன்றியத்திலிருந்து விடுதலையை அறிவித்தது(1991)

  •  வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முதல் 3டி படத்தை வெளியிட்டது(1953)

  •  சூயஸ் கால்வாய் சீரமைக்கப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்டது(1957)

  • Man vs. Volcano


    Demonstrators Killed in Syria


    அமெரிக்காவில் கரை ஒதுங்கும் ஜப்பான் சுனாமி கழிவுகள் !


    mourned in Syrian flashpoint city


    ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும், வாங்கினாலும் 1 வருடம் ஜெயில் தண்டனை: பிரவீன்குமார்!


    1000 Ways To Die -அமெரிக்காவில் அதிகம் பார்க்கப்படும் தொடர் !


    Highlights: IPL 2011 MATCH01 - CSK vs KKR,


    தேர்தல் களம் - தமிழ்நாடு

     

    லோக்பால் கமிசனின் முக்கியமான பத்து அம்சங்கள் !


    ஜன லோக்பால் என்பது எந்த ஒரு அரசியல் தலையீடுமின்றி தனித்து இயங்கும் ஒரு கமிசன். ஊழல் , லஞ்சம் போன்ற வேலைகளில் ஈடுபடும் நபர் யாராக இருந்தாலும் ( உச்ச நீதிமன்ற நீதிபதி , இந்திய பிரதமர், முதலமைச்சர் என யாரும் விதி விளக்கு அல்ல) வெறும் ஒரு ஆண்டில் விசாரணையை முடித்து , அடுத்த ஆண்டில் சிறையில் அடைப்பதே இவர்களின் பணியாகும் .
    இப்போது தெரிகிறதா ஏன் காங்கிரஸ் அரசு இதனை ஆதரிக்கவில்லை என்று . இனி மேற்சொல்லிய பத்து அம்சங்களையும் பார்ப்போமா?

    1 ) மத்தியில் லோக்பால் என்ற அமைப்பும் , ஒவ்வொரு மாநிலங்களில் லோகயுக்ட எனும் அமைப்பும் அமைக்கப்படும் (இவை இரண்டின் பணியும் ஒன்றே )

    2 ) தேர்தல் கமிசன் , உச்ச நீதிமன்றம் போன்று இதுவும் யாருடைய தலையீடும் இன்றி இயங்கும் அமைப்பாகும். எந்த அமைச்சரோ அல்லது அரசு நிறுவனங்களோ இதனை கட்டுபடுத்த முடியாது.

    3 ) யார் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தாலும் ஒரு வருடத்தில் அதனை விசாரித்து , இரண்டு வருடங்களுக்குள் அவர்கள் சிறையில் அடைக்கபடுவார்கள் (இதன் தீர்ப்பில் எவரும் தலையிட முடியாது )

    4 ) ஊழலால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு , குற்றம் நிருபிக்கப்பட்ட உடன் இழப்பீடு செய்யப்படவேண்டும்.

    5 ) சாதாரண குடிமகனுக்கு அரசு அலுவலகங்களிலோ அல்லது அரசு தலையீடு உள்ள நிறுவனங்களிலோ ஏதேனும் சேவை பெறும்போது காலதாமதம் ஆனால் அதற்கு பொறுப்பான அலுவலர் மீது அபராதம் விதிக்கப்பட்டு அந்த தொகை பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக அளிக்கப்படும்.

    6 ) ஒவ்வொரு குடிமகனும் தனக்கு தேர்தல் அடையாள அட்டை, ரேசன் அட்டை,

    7 ) அரசு ஊழல் பேர்வழிகளை லோக்பால் கமிசனில் தலைவர்களாக பதவி கொடுத்தால் ? இந்த கேள்விக்கே இடமில்லை , ஏனெனில் இதன் ஊழியர்களும் தலைவர்களும் நீதிபதிகளாலும் மக்களின் நம்பிக்கை பொருந்திய பிரதிநிதிகளாலும் தேர்ந்தேடுக்கபடுவர். எந்த ஒரு அரசியல்வாதியும் இதில் தலையிட முடியாது.

    8 ) லோக்பால் ஊழியரே ஊழலில் ஈடுபட்டால் ? இது நடக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் இந்த கமிசனின் அனைத்து செயல்பாடுகளும் நன்றாக ஒவ்வொரு ஊழியர் மட்டுமல்லாமல் மக்களாலும் கண்காணிக்கப்படும். ஏதேனும் புகார் என்றால் அந்த ஊழியர் மீது விசாரணை நடத்தப்பட்டு இரு மாதங்களில்
    தண்டிக்கப்படுவார்.

    9 ) தற்போது இருக்கும் அனைத்து ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை (சிபிஐ, vigilence ) லோக்பால் கமிசனுடன் இணைக்கப்பட்டு முழு சுதந்திரம் அளிக்கப்படும்.

    10 ) புகார் அளிப்பவரின் பாதுகாப்பை உறுதி செய்வது லோக்பலின் பொறுப்பாகும்.சும்மா அதிருதுல்ல .. இப்போ தெரியுதா ஏன் அரசியல் கட்சிகள் இதை எதிர்குதுன்னு…. மிகமோசமாக போடப்பட்ட சாலைகள் போன்ற சேவைகளை பெறும்போது தாமதம் அடைந்தாலோ அல்லது ஊழல் நடந்தாலோ லோக்பல்க்கு ஒரு மனு கொடுத்தால் ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். காரணமான அலுவலர் வெகு விரைவில் சிறையில் அடைக்க படுவார் (அதிகபட்சம் 2 ஆண்டுக்குள் தண்டிக்கப்படுவார்).


    அண்ணா ஹஸாரே=4-வது நாளை எட்டியுள்ளதால், மக்கள் பெரும் கவலை!


    பொருளாதார நெருக்கடி... பெய்ல் அவுட் கேட்கும் போர்ச்சுகல்!

    கடந்த நான்கு ஆண்டுகளாக சர்வதேச பொருளாதாரம் நிலையில்லாமல் காணப்படுகிறது. ஒரு பக்கம் நிலைமை சரியாகிவிட்டதுபோலத் தெரிந்தாலும், உண்மையில் இன்னும் நெருக்கடி தொடர்கிறது.

    ஐரோப்பாவில் ஏற்கெனவே இரு முக்கிய நாடுகள் பெரும் பொருளாதார சரிவுக்குள்ளாகித் தவிக்கின்றன.முதலில் வீழ்ச்சியைச் சந்தித்த நாடு அயர்லாந்து. அடுத்து கிரீஸ். இந்த வரிசையில் இப்போது சேர்ந்துள்ளது போர்ச்சுகல்.

    இப்போதைய நிலையில் அந்நாட்டுக்கு 80 பில்லியன் யூரோ அல்லது 114.3 பில்லியன் டாலர் அளவுக்கு நிதி தேவைப்படுவதாகவும், இல்லையேல் சரிசெய்ய முடியாத பெரும் வீழ்ச்சியில் போர்ச்சுகள் தவிக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    இந்தியக் கேப்டன் டோணி ஒரு சூப்பர் ஹிட் சினிமா இயக்குநர் மாதிரி, ரமீஸ் ராஜா

    பாகிஸ்தான் அணி முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜாகூறுகையில், "உலககோப்பையை இந்தியா வெல்ல டோணி தலைமைதான் காரணம். வீரர்கள் தேர்வு செய்வதில் அவர் கையாண்ட விதம் சிறப்பானது.

    ஒரு சூப்பர் ஹிட் சினிமா படத்துக்கு ஏற்ற நட்சத்திரங்களை இயக்குநர் தேர்வு செய்வதைப் போலவே டோணியும் வீரர்களை தேர்வு செய்துள்ளார். வீரர்கள் தேர்வில் அவர் எடுத்த துணிச்சலான முடிவுதான் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தது.

    அஸ்வினுக்கு 2 ஆட்டத்தில் வாய்ப்பு கொடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதியில் அவருக்கு பதிலாக நெஹ்ரா சேர்க்கப்பட்டார். தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நெஹ்ரா மோசமாக பந்து வீசியதால் அவரது தேர்வை விமர்சனம் செய்தார்கள். ஆடுகளம் வேகப் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் அவர் துணிச்சலாக நெக்ராவை தேர்வு செய்தார்.

    அதற்கு ஏற்றவாறு அவரும் சிறப்பாக வீசினார். இதே போல யூசுப் பதான் லீக் ஆட்டங்களில் சரியாக ஆடாததால் ரெய்னாவுக்கு வாய்ப்பு கொடுத்தார். அவர் தனது முடிவுப் படி வீரர்களை தேர்வு செய்கிறார்.

    அதேபோல வீரர்களிடம் அவர் நடந்து கொள்ளும் விதமும் சிறப்பாக இருக்கிறது. டெண்டுல்கர், ஷேவாக்கிடம் அவர் தனது எல்லையை தாண்டிப் பேசுவதில்லை. இதுதான் அவர் மீது எல்லோருக்கும் புதிய மரியாதையை வரவழைத்துள்ளது," என்றார்.

    Online ipl watch- live cricket

    http://www.youtube.com/indiatimes#g/p
    http://www.rajtamil.comhttp://
    www.youtube.com/

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...