|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 June, 2011

பிரான்ஸில் 11வது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு!

உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய பிரான்ஸ் கிளை நடாத்தும் 11 வது உலகத் தமிழ்ப்பண்பாட்டு மாநாடு செப்டம்பர் 24ஆம், 25ஆம் திகதிகளில் பிரான்ஸில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய மாநாட்டு அமைப்பாளரும் செயலாளர் நாயகமுமாகிய துரை கணேசலிங்கம், உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய செயலாளரும் மாநாட்டின் துணைத்தலைவருமாகிய இ.ராஜசூரியர், உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய பிரான்ஸ் கிளைத்தலைவரும் மாநாட்டு தலைவருமாகிய விசு செல்வராசா, உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய பிரான்ஸ் கிளை செயலதிபரும் மாநாட்டின் செயலாளருமாகிய ம.இரவீந்திரநாதன் ஆகியோர் இணைந்து ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த அறிக்கையில் இதனைத்தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விபரங்கள்……

உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரான்ஸ் கிளையினால் இவ் ஆண்டு புரட்டாதி மாதம் 24, 25 ம் திகதிகளில் திருவள்ளுவர் ஆண்டு 2042 சனி ஞாயிறு இரு தினங்களில் பிரான்ஸில் எவ்றி மாநகரில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

இவ் இயக்கம் தென் ஆபிரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயற்பட்டு வருவதோடு உலகத்தமிழ் மக்களை ஒன்றிணைப்பதில் பெரும் வெற்றியும் கண்டுள்ளது.

இவ் இயக்கத்தின் கிளைகள் 42 நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 1977ல் சென்னையிலும், 1980ல் மொரீஸிசியசிலும், 1985ல் சேலத்திலும்இ 1989ல் மலேசியாவிலும், 1992ல் அவுஸ்ரேலியாவிலும், 1996ல் கனடாவிலும், 1999ல்சென்னையிலும், 2001ல் தென் ஆபிரிக்காவிலும், 2004ல் புதுவையிலும், 2007ல் மலேசியாவிலும் ஆக பத்து உலகத்தமிழ் மாநாடுகளை நடத்திய பெருமையோடு 11வது வரலாற்று சிறப்பு மிக்க மாநாடு பிரான்ஸ் தலைநகரில் நடைபெற உள்ளது.

“உலகத்தமிழர் மொழி, பண்பாட்டு, வாழ்வியல் மேம்பாடு“ என்ற கருப்பொருளில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதுவரை இவ் இயக்கம் உலகளாவிய மாநாடுகளின் மூலம் தமிழர் கலைகள் பண்பாடு ஊக்குவிப்பு, தமிழ் ஆண்டு, தமிழ் மொழிக்கல்வி, தமிழர் வரலாற்று ஆவண சேமிப்பு, தூய தமிழ் வழக்கு.

தமிழ் செம்மொழி உருவாக்கம், உலகத்தமிழர் ஒற்றுமை பேணல் முதலான விடயங்களில் பல சாதனைகளை நிலை நாட்டியுள்ளது. இந்த நோக்கத்துடன் தமிழ் வழி இறை வழிபாடு, தமிழ் மரபுகளை நிலைப்படுத்துதல், தமிழர் இறையாண்மை, தமிழ்ப்பாதுகாப்பு, தமிழ்க்கலை மீட்பு, தமிழ்க்கல்வி, தமிழர் நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு, மறைந்த மறைக்கப்பட்ட தமிழர் வரலாற்றுத்தேடல்கள், எதிர்காலத்தமிழினம் எதிர்நோக்கும் சவால்கள், தமிழ் ஊடகங்கள் போன்ற விடயங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்.

மாநாட்டு ஆய்வுகளும் தமிழ் அறிஞர்கள் துறைசார் புத்தாய்வுகளும் கொண்ட மாநாட்டு மலர் வெளியிடப்படவுள்ளது. மாநாட்டில் தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்ப்பண்பாடு, தொடர்பான ஆவணக்காட்சியும் தமிழர் வாழ்வியல் வரலாறு மொழி இலக்கியம் சார்ந்த நூல்கள், இறுவெட்டுக்கள், ஒலி இழை நாடாகள், நிழற்படங்கள் முதலியன கண்காட்சிக்கு வைக்கப்படும்.

அத்துடன் மாநாட்டுக்கருப்பொருளை ஒட்டி உலகளாவிய கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி என்பன இடம் பெறுவதுடன் உலகளாவிய அளவில் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.

உலகளாவிய தமிழர் சமூகத்தை மொழியாலும் பண்பாட்டாலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனும் இலங்கை, இந்திய நாடுகளின் தேசிய இனமாகிய தமிழர்கள் சம உரிமையுன் வாழ வேண்டும் குறிக்கோளுடனும், அரசியல் சார்பற்று இன மத பேதங்களைக்கடந்து தமிழ்ப்பண்பாட்டாளர் என்ற ஒரே குடையின் கீழ் செய்ற்ப்படுவதற்கும் தமிழ் மொழியை மறந்தவர்களை மொழி உணர்வாழர்களாக மாற்றும் நேர்த்தியான கொள்கைகளுடனும் 1974 ம் ஆண்டு தை திங்கள் 8ம் நாள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பல நாட்டு அறிஞ்ஞர்கள் ஒன்றிணைந்து உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தை உருவாக்கினார்கள்.

எனவே வரலாற்று சிறப்பு மிக்க இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புவோர்கள், மாநாட்டு மலருக்கு ஆக்கங்களைத்தர விரும்புவோர்கள், கண்காட்சிகளில் இணைந்து கொள்ள விருபுவோர்கள் அனைவரும்வரும் 31.07.2011 க்கு முன்பாக மாநாட்டுப்பணிமனையுடன் தொடர்பு கொள்ளு மாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தங்களது செலவு கணக்கை தேர்தல் கமிஷனிடம், கடந்த 13ம் தேதிக்குள் தாக்கல்!


தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தங்களது செலவு கணக்கை தேர்தல் கமிஷனிடம், கடந்த 13ம் தேதிக்குள் தாக்கல் செய்தனர். சுயேச்சைகள் 223 பேர் மட்டும் கணக்கு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் இரண்டாவது, மூன்றாவது இடங்களை பிடித்த வேட்பாளர்களின் செலவு கணக்கை, தேர்தல் கமிஷன் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், தி.மு.க., சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின், வெறும், 3 லட்சத்து 32 ஆயிரத்து 709 ரூபாய் மட்டுமே செலவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் சைதை துரைசாமி, 6 லட்சத்து 11 ஆயிரத்து 659 ரூபாய் செலவழித்ததாக கணக்கு காட்டியுள்ளார். தி.மு.க.,வின் பொதுச் செயலர் அன்பழகன், தான் போட்டியிட்ட வில்லிவாக்கம் தொகுதியில், 8 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவழித்ததாக குறிப்பிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதி, தான் போட்டியிட்ட திருவாரூர் தொகுதியில் 4 லட்சத்து 47 ஆயிரத்து 615 ரூபாய் 97 காசு செலவழித்ததாக கணக்கு காட்டியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் தொகுதியில் 9 லட்சத்து 60 ஆயிரத்து 52 ரூபாய் செலவழித்ததாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ரிஷிவந்தியம் தொகுதியில் 7 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செவழித்ததாக குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ், தே.மு.தி.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர், தேர்தல் செலவுக்கு கட்சி சார்பில் பணம் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தங்களுக்கு கட்சி சார்பில் பணம் தரப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். தி.மு.க., வேட்பாளர்கள் மட்டும், தங்களுக்கு கட்சி சார்பில் பிரசார பொருட்கள் வழங்கப்பட்டதாகவும், இதற்கு மதிப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். போஸ்டர்கள், தொப்பி, ஸ்டிக்கர்கள், "சிடி'க்கள், தேர்தல் அறிக்கை, மப்ளர், பேட்ஜ், பனியன் போன்ற பிரசார பொருட்களை, கட்சித் தலைமை வழங்கியதாக இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தே.மு.தி.க., வேட்பாளர்களை பொறுத்தவரை, கட்சி சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இதுதவிர, இவர்கள் வாங்கிய நன்கொடையையும் குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக, சென்னை எழும்பூர் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் நல்லதம்பி, அபிராமி மால் நிறுவனத்திடம் இருந்து, 50 ஆயிரம் ரூபாய் வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார். இவர் மொத்தம் 3 லட்சத்து 43 ஆயிரத்து 262 ரூபாய்க்கு செலவு கணக்கு காட்டியுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்கள், தங்களுக்கு கட்சித் தலைமையிடம் இருந்து தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இதில், ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்ட சிவராஜ், கட்சியில் இருந்து 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், இவர் செலவு செய்தது, 7 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் தான். இதேபோல, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, தனக்கு கட்சித் தலைமை 10 லட்சம் ரூபாய், கார்த்திக் கிரானைட்ஸ் நிறுவனம் ஐந்து லட்சம் ரூபாய் என பணம் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், இவரது செலவு கணக்கு மொத்தமே 4 லட்சத்து 4,809 ரூபாய் தான். காங்கிரஸ் வேட்பாளர்களில் பெரும்பாலானோர், கட்சித் தலைமை வழங்கிய தொகையை கூட செலவழிக்கவில்லை என்று தெரிகிறது.

சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் அன்பழகன், சோனியா கலந்து கொண்ட பொதுக் கூட்டத்துக்காக 74 ஆயிரத்து 850 ரூபாய் செலவழித்ததாக கணக்கு காட்டியுள்ளார். பா.ம.க., வேட்பாளர்களில் சிலர், உண்டியல் வசூல் மூலம் பணம் வந்ததாக கணக்கு காட்டியுள்ளனர். கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை பொறுத்தவரை, கட்சியில் இருந்து பணம் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக, மதுரவாயல் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் பீமாராவ், மொத்தம் 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவழித்ததாக கணக்கு காட்டியுள்ளார். ஆனால், தனக்கு கட்சியில் இருந்து 8 லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டதாகவும், இதுதவிர, மற்றவர்களிடம் 30 ஆயிரம் ரூபாய் வசூலித்தது, டாக்சி டிரைவர்கள் சங்கத்திடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய், விமான நிலைய குடியிருப்போர் நலச் சங்கத்திடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் என வாங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள், தங்களுக்கு கட்சித் தலைமை பணம் வழங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதே நாள் ...


  •  கனடாவில் மரண தண்டனை தருவது நிறுத்தப்பட்டது(1976)
  •  புளூட்டோவின் சாரண் என்ற துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது(1978)
  •  சுவீடன் நாட்டு கொடி பெறப்பட்டது(1906)
  •  சோவியத் யூனியன் முதன் முறையாக ஆர்-12 என்ற செய்மதியை வெளியிட்டது(1957)

கனிமொழிக்கு ஜாமின் இல்லை...


2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகியுள்ள தி.மு.க., எம்.பி., கனிமொழி மற்றும் கலைஞர், "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமார் தாக்கல் செய்த ஜாமின் மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், சி.பி.ஐ., கலைஞர், "டிவி' பங்குதாரர்களான தி.மு.க., எம்.பி., கனிமொழி, நிர்வாக இயக்குனர் சரத்குமாரை இரண்டாவது குற்றப் பத்திரிகையில் சேர்த்தது. இவர்கள், கடந்த ஒரு மாதமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும், பாட்டியாலா சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் மற்றும் டில்லி ஐகோர்ட்டில் ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இவர்களது கடைசி நம்பிக்கையே இந்த ஜாமின் மனு தான். இதற்கிடையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில், சி.பி.ஐ., சார்பில் 17ம் தேதி தாக்கலான பதில் மனுவில், "2ஜி' ஊழல் வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட் இவர்களுக்கு ஜாமின் வழங்கக் கூடாது. இவர்களை விடுவித்தால், சாட்சிகளை கலைத்து விடுவர் என, தெரிவித்தது.

இந்நிலையில், கனிமொழி, சரத்குமார் ஜாமின் மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் முன் நேற்று நடைபெற்றது. சி.பி.ஐ., மற்றும் இரு மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகினர். காலை, 10.30 மணி முதல், மதியம் 12 மணி வரை, வாதம் நடைபெற்றது. சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கலைஞர் "டிவி'க்கு வழங்கப்பட்ட பணம் லஞ்ச பணம் தான். இதை, கடனாக கருதமுடியாது. பணப் பரிமாற்றம் நடந்தது தொடர்பான ஆவணங்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை. எனவே கனிமொழிக்கும், சரத்குமாருக்கும் ஜாமின் வழங்கக் கூடாதுஎன்றார். கனிமொழி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "விசாரணைக்காக கோர்ட்டில் தினமும் ஆஜராகி வருகிறோம். ஆதாரங்களை அழித்துவிடுவோம் என கூறுவது பொருந்தாத வாதம். இந்த வழக்கில் நான்கு சாட்சிகள் உள்ளனர். இதில், ஒருவரது வாக்குமூலம் நீதிபதி முன் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மூன்று சாட்சிகள் உள்ளனர். ஆதாரங்களை அழித்துவிடுவார்கள் என்ற வாதத்திற்கே இடமில்லை. மனுதாரர்களில் ஒருவரான கனிமொழி, ஒரு குழந்தைக்கு தாய். ஜாமினுக்காக எந்த நிபந்தனை வேண்டுமானாலும் விதியுங்கள்' என்றார்.

மதியம், 12.30 மணிக்கு கோர்ட் மீண்டும் கூடியதும். நீதிபதிகள் சிங்வி, சவுகான் அளித்த தீர்ப்பில் கூறியதாவது: இந்த வழக்கில், சிறப்பு கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் முழுமையாக பதிவு செய்யப்படும் வரை மனுதாரர்கள் காத்திருக்க வேண்டும். அதன்பின், சிறப்பு கோர்ட்டிலேயே ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யலாம். தான் பெண் என்பதற்காக, ஜாமின் வழங்க வேண்டும் என கனிமொழி கருதினால், அவரது வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில், குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு, 437ன் கீழ், சட்ட நிவாரணம் பெறலாம். குற்றச்சாட்டுகள் தாக்கலான பின், இருவரும் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தால், இந்த வழக்கில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களோடு இணைத்து பார்க்காமல், புது மனுவாக ஏற்று விசாரிக்கும்படி சிறப்பு கோர்ட்டை கேட்டுக்கொள்கிறோம். எனத் தீர்ப்பில் கூறினர்.

கடைசி வாய்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதன் மூலம், வெளியே வருவதற்கான கடைசி வாய்ப்பையும் கனிமொழி இழந்தார். குற்றச்சாட்டுகள், அடுத்த மாதம், இரண்டாம் வாரத்திலிருந்து பதிவு செய்யப்படும் என, தெரிகிறது. ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில், கனிமொழி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் பட்சத்தில், இதன்பின், ஜாமின் மனு தாக்கல் செய்யவேண்டும் என்பதால், கனிமொழி, இன்னும், 45 நாட்களுக்கு சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என, சட்ட வல்லுனர்கள்

அகத்தியரின் வரலாறு...


படித்தவர், பாமரர் அனைவரும் அகத்தியரை அறிவார்கள். ஆறுவகைச் சமயத்தினரும் அகத்தியரைப் போற்றுகின்றனர். குடுவையில் பிறந்தது, தென்புலம் தாழ்ந்த பொழுது பூமியைச் சமன் செய்தது, பார்வதி திருமணத்தைப் பொதிகையில் கண்டது, காவிரி கொணர்ந்தது போன்ற அகத்தியர் தொடர்பான வரலாறுகள் அனைத்திலும் அறிவியல் கூறுகள் பொதிந்துள்ளன.


சோதனைக்குழாய் குழந்தை உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான் ! குடுவையில் கருத்தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவரை, கலயத்தில் பிறந்தோன் (கும்பசம்பவர்) என்றும், குடமுனி என்றும் கூறுவர். உயிர்கள் தாயின் கருப்பைக்கு வெளியே கருத்தரித்து வளர இயலும் என்ற அறிவியல் உண்மை, அகத்தியரின் பிறப்பிலேயே பொதிந்துள்ளது. அவ்வாறு, செயற்கை முறையில் உருவாக்கப்படும் உயிரினங்கள், தொடக்க நிலையில் இயல்புக்கு மாறான உருவத்தைப் பெற்றிருக்கும் என்பதும், இயல்பான வளர்ச்சி, மேம்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே சாத்தியமாகும் என்பதும் அறிவியல் உண்மை. முதல் சோதனைக் குறைவானே உயரமே பெற்றிருந்தார் என்பது இந்த உண்மையை நிரூபிக்கிறது.


தொலைக்காட்சி பார்த்தவர் முதன்முதலில் தொலைக்காட்சி பார்த்தவரும் அகத்தியரே ! பார்வதி - பரமசிவன் திருமணத்தைக் காண அனைவரும் இமயத்தில் கூடியதால் வடபுலம் தாழ்ந்தது. அதனைச் சமன்செய்ய, சிவபெருமான், அகத்தியரை தென்னாட்டிற்கு அனுப்பினார். அனைவரும் காணப்போகும் தங்கள் திருமண நிகழ்ச்சிகளை அடியேன் மட்டும் பார்க்க முடியாமல் போகுமே ? என்று வினவினார். அகத்தியர், இமயத்தில் நடைபெறும் எமது திருமண நிகழ்வுகளை உமக்குப் பொதிகையில் காட்டியருள்வோம் என்றார் ஈசன். அவ்வாறே, அகத்தியர் பார்வதி - பரமசிவன் திருமணக் காட்சியைப் பொதிகையில் கண்டு களித்தார். ஓரிடத்தில் நிகழும் நிகழ்ச்சியைப் பிறிதோர் இடத்தில் காணக்கூடிய சிந்திக்கத் தூண்டும் அறிவியல் கூறு இதில் அமைந்துள்ளது. அகத்தியர் கண்டது நேரடி ஒளிபரப்பு ! (லைவ் டெலிகாஸ்ட்). ஈசன் திருமணம் நடந்து பலநாட்கள் கழித்து அதனை மீண்டும் காண விரும்பினார். திருமால் ! சீர்காழியை அடுத்த ஒரு தலத்தில் சிவ பெருமான், திருமாலுக்குத் தனது திருமணக் கோலத்தை மீண்டும் காட்டியருளினான் ! திருமணத் திருக்கோலம் காட்டிய அந்தத் தலமே, திருக்கோலக்கா என்று பெயர் பெற்றது. இது பதிவு செய்த மறுஒளிபரப்பு!.


அணுவுருவில் நதிகள் அகத்தியர் தென்னாட்டிற்குப் புறப்பட்டபொழுது, காவிரியை, அணுவுருவாக்கிக் கமண்டலத்தில் அடைத்து எடுத்து வந்தார் என்பது வரலாறு. மனிதன் தண்ணீர் இல்லாத வேறு கோள்களில் குடியேறும் காலத்தில், தண்ணீரை அணுவுருவாக்கி எடுத்துச் சென்று அங்கு, மீண்டும் தண்ணீரை உற்பத்தி செய்துகொள்ள வேண்டியிருக்கும் என்பது நவீன அறிவியல். நானோ - டெக்னாலஜி என்னும் தற்போதைய மூலக்கூறு தொழில் நுட்பத்திற்கு, இந்த சம்பவம் புராண ஆதாரம்.

முதல் தலைமுறை பொறியியல் மாணவர்களுக்கான கல்வி கட்டண சலுகை தொடரும்!


பொறியியல் கல்விக்கான பொதுப் பிரிவு கவுன்சிலிங், அடுத்த மாதம் 8ம் தேதி துவங்கும். முதல் தலைமுறை பொறியியல் மாணவர்களுக்கான கல்வி கட்டண சலுகை தொடரும் என, உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார். அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், 2011-12ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, 10 இலக்க, ரேண்டம் எண் வெளியிடும் நிகழ்ச்சி, சென்னை அண்ணா பல்கலை, தேர்வு மைய வளாகத்தில் நடந்தது. கணினிவழி, ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சியை, உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் துவக்கி வைத்து, இரண்டு மாணவர்களுக்கு, ரேண்டம் எண்ணை வழங்கினார். இணையதளத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்ப எண்ணை, டைப் செய்து, தங்களின், ரேண்டம் எண்ணை பெறலாம்.

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள அனைவருக்கும், ரேண்டம் எண் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை செயலர் கண்ணன், தொழில்நுட்ப கல்வி கமிஷனர் குமார் ஜெயந்த், அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர், பொறியியல் கல்வி சேர்க்கை பிரிவு இயக்குனர் நாகராஜ், செயலர் ரேமண்ட் உத்தரியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இந்நிகழ்ச்சிக்கு பின், அமைச்சர் பழனியப்பன், நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஆண்டு பொறியியல் கல்விக்கு, 1 லட்சத்து, 63 ஆயிரத்து, 509 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில், 1 லட்சத்து, 48 ஆயிரத்து, 353 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில், அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், மொத்தம், 494 உள்ளன. இவற்றில், அரசு ஒதுக்கீடான, 1 லட்சத்து, 25 ஆயிரம் இடங்களுக்கான கவுன்சிலிங்கிற்கு, வரும் 24ம் தேதி, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இப்பட்டியலின்படி, வரும் 30ம் தேதி துவங்கும் கவுன்சிலிங், 35 நாட்கள் வரை நடைபெறும். சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மட்டும் கவுன்சிலிங் நடக்கும்.

முதல் தலைமுறை பொறியியல் மாணவர்களுக்கு கல்வி கட்டண சலுகை வழங்கும் திட்டம் தொடரும். புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகளை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். அன்னை தெரசா, மதுரை காமராஜர் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் ஆகிய பல்கலைகளுக்கு விரைவில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த நியமனம் வெளிப்படையான முறையில் இருக்கும். கலை, அறிவியல் கல்லூரிகளின் பாடத்திட்டத்தை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக வெளியிட ஆவன செய்யப்படும். இவ்வாறு பழனியப்பன் கூறினார்.

ஸ்மார்ட்போனை இந்தாண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்துகிறது நோக்கியா ...

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் தொழில்நு‌ட்பத்தை அடிப்படையாகக் கொண்ட முதல் ஸ்மார்ட்போனை இந்தாண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சிங்கப்பூரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நோக்கியா நிறுவன தலைமை நிர்வாகி ஸ்டீபன் எலாப் கூறியதாவது, தங்கள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன், விண்டோஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தாண்டு இறுதிக்குள், இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும், 2012ம் ஆண்டுவாக்கில் அதிகளவிலான இந்த போன்களை வர்த்தகப்படுத்த தங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நோக்கியா நிறுவனம் தற்போது மீகோ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு என்9 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், இதுதான் இந்த தொழில்நுட்பத்திலான முதல் மற்றும் கடைசி ஸ்மார்ட்போன் என அவர் கூறினார். ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில், நோக்கியா நிறுவனத்திற்கு போட்டியாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனும் மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் உபகரணங்களும் பெரும் சவாலாக உள்ளன. அடிபப்டை மொபைல்போன்கள் வர்த்தகத்தில், ஆசிய அளவில், இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனமும், சீனாவின் இசட்டீஈ நிறுவனமும் போட்டியாக உள்ளதாக அவர் கூறினார். இந்த மாதத்தில் ஸ்மார்ட்போன் வர்த்தகம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில், முதலிடத்தில் சாம்சங் எலெக்ட்ரானிக்சும், இரண்டாம் இடத்தில் ஆப்பிள் நிறுவனமும் உள்ளது. மூன்றாம் இடத்தில் நோக்கியா நிறுவனம் உள்ளது. இமெயில், டேட்டா, ஃபேக்ஸ் என பல்வேறு சிறப்பம்சங்களை உட்புகுத்தி 1996ம் ஆண்டில் முதலிடத்த்தில் இருந்த நோக்கியா நிறுவனம், தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பி்ப்ரவரி மாதம் வரை மீகோ தொழில்நுட்பத்தை அடிப்படையிலான ஸ்மார்ட்போன்களை வர்த்தகம் செய்து வந்த நோக்கியா நிறுவனம், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்திற்கு பிறகு, விண்டோஸ் தொழில்நுட்ப அடிப்படையிலான ஸ்மார்ட்போன்களை வர்த்தகம் செய்ய தி்ட்டிமிட்டு அதற்கான நடவடிக்கைகளும் துரிதகதியில் நடைபெற்று வந்தன. இந்தாண்டு இறுதிக்குள் விண்டோஸ் தொழில்நுட்ப அடிப்படையிலான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய பிறகு, மக்களுக்கு இதற்கு இருக்கும் வ‌ரவேற்பை பொறுத்து, 2012ம் ஆண்டில் அதிகளவிலான விண்டோஸ் ஸ்மார்ட்போன்களை அதிகளவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நோக்கியா நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...