|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 March, 2012

இந்தவாரம் 2-3-12 முதல் 8-3-2012 வரை

மேஷம் பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்க்கும் நற்செய்தி உங்களைத் தேடி வந்து மகிழ்விக்கும். உடல் நலனில் கவனம் தேவை. பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறி மகிழக்கூடும்.

ரிஷபம் பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். திறமை மேம்படும். மனம் உற்சாகமாக இருக்கும். வீண் செலவுகளைக் குறைக்கவும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வேலைக்கு போகும் பெண்களுக்கு ஊதிய உயர்வு கிடைத்து மகிழக்கூடும். பேச்சில் நிதானம் தேவை. உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கவும். எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து மகிழக்கூடும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

மிதுனம் பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியயங்கள் எளிதில் முடியும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உடல் நலம் நன்றாக இருக்கும். மனம் நிம்மதியாக இருக்கும். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். உறவினர்களால் நன்மை உண்டு. வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளால் சில சலுகைகள் பெறக்கூடும். வேலை பளு அதிகரிக்கும். உங்கள் ரகசியங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம்.

கடகம் பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு சீராக இருக்கும். உடல் நலனில் கவனம் தேவை. யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். அரசு வழியில் உதவிகள் கிடைத்து மகிழக்கூடும். பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும். அதனால் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வெளியூரில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். அலுவலகத்தில் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம்.

சிம்மம் பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். திறமை மேம்படும். பண வரவுக்கு குறைவிருக்காது. மனம் குதூகலமாக இருக்கும். பயணங்களால் நன்மை உண்டு. வீடு, மனை வாங்கும் போது கவனமாக இருக்கவும். பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். கடன் தொல்லைகள் தீர்ந்து வசதி அதிகரிக்கலாம். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குல தெய்வ வழிபாடு மேற்கொள்ள திட்டமிடுவீர்கள். வேலை பார்ப்போருக்கு: பதவி உயர்வு பெறுவதற்கான அறிகுறி தென்படும். கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.

கன்னி பொது: குதூகலமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மனம் நிம்மதியாக இருக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வீண் செலவைக் குறைக்கவும். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். நீண்ட காலமாக வராத உறவினர் வந்து மகிழ்விப்பார். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழக்கூடும். கணவரிடம் பாராட்டு பெறுவீர்கள். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு அலுவலகத்திலேயே செல்வாக்கு அதிகமுள்ள பொறுப்புகள் வந்து சேரும். வேலை பளு அதிகரிக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது. பணி நிமித்தமாக வெளியூர் செல்ல நேரலாம்.

துலாம் பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்களில் பலவற்றில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் நலம் நன்றாக இருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். இருப்பினும் அவர்களை நம்பி உங்கள் ரகசியங்களைக் கூற வேண்டாம்.

விருச்சிகம் பொது: சுமாரான வாரம். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். யாரிடமும் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். பண வரவு அதிகரிக்கும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழக்கூடும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைத்து மகிழக்கூடும். சிறப்பாக பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறக்கூடும். சிலருக்கு விருதுகள் கிடைக்கும்.

தனுசு பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். பண வரவு தாமதமாகலாம். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். உடல் நலம் நன்றாக இருக்கும். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். குல தெய்வ வழிபாடு மேற்கொள்ளத் திட்டமிடக்கூடும். உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். வீண் செலவுகளைக் குறைப்பது நல்லது. வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.

மகரம் பொது: திருப்திகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். உடன் பிறப்புகளால் நன்மை அடையக்கூடும். பண வரவு நன்றாக இருக்கும். எதிரிகளும் நேசக்கரம் நீட்டுவார்கள். பெண்களுக்கு: குடும்பம் சந்தோஷமாக நடக்கும். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். பேச்சில் நிதானம் தேவை. குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்களின் குடும்ப விஷயங்களில் தலையிட வேண்டாம். வேலையில் கூடுதல் கவனம் தேவை. உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டு.

கும்பம் பொது:சந்தோஷமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு அதிகரிக்கும். சிலருக்கு புதிய வீடு வாங்கும் யோகம் உண்டு. நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பார்கள். வேலைக்குப் போகும் பெண்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது. கணவரை அனுசரித்துச் செல்லவும். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். எதிர்பார்த்த கடன்தொகை கிடைத்து மகிழக்கூடும். கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறக்கூடும்.

மீனம் பொது: சுமாரான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு மந்தமாக இருக்கும். பேச்சில் நிதானம் தேவை. இல்லையென்றால் நண்பர்களும் எதிரிகளாகலாம். உடல் நலனில் கவனம் தேவை.பெண்களுக்கு: குடும்பம் சிறப்பாக நடக்கும். இல்லத்தில் சுப காரியங்கள் நடத்தி மகிழக்கூடும். உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்லவும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கக்கூடும். வேலை பளு அதிகரிக்கும். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கவும். இல்லையென்றால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகலாம்.

"புனித ஜெகோவா விழித்தெழு'


இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் நகரில் ஒரு மிகப் பழமையான கல்லறையை அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். இது கிபி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது. இது இயேசுநாதர் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையாக இருக்கலாம் என்றும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இயேசுநாதரின் உடல் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் உறுதியாக கூறுகின்றனர். ஒரு நவீன அடுக்குமாடி வளாகத்தின் அடியில் அமைந்திருக்கிறது இந்தக் கல்லறை, கி.பி. 70-ம் ஆண்டுக்கு முந்தையதாகக் கருதப்படுகிறது. இயேசு நாதரின் ஆரம்ப கால சீடர்கள் இதை அமைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

கல்லறையில் இருக்கும் சுண்ணாம்புக் கல்லால் ஆன பெட்டியில் "புனித ஜெகோவா விழித்தெழு' என்று கிரேக்க மொழியில் குறிப்பிடப்பட்டிருப்பதை ரிமோட் கன்ட்ரோல் கேமரா உதவியுடன் ஆய்வாளர்கள்  கண்டுபிடித்திருக்கின்றனர். இதேபோன்ற மற்றொரு பெட்டியில் பெரிய மீனின் வாயில் மனிதன் சிக்கியிருப்பதைப் போன்ற உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இது பைபிளில் கூறப்பட்டிருக்கும் ஜோனா என்கிற தேவதூதரின் கதையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஜோனாவை விழுங்கிய பெரிய மீன் அல்லது திமிங்கலம், பிறகு அவரை விட்டுவிட்டதாக பைபிளில் கூறப்பட்டிருக்கிறது. மீனின் உருவத்தை கணினியின் உதவியுடன் பெரிதாக்கிப் பார்த்தபோது, அது ஜோனாவின் கதையைப் பிரதிபலிப்பதாக இருப்பது தெரியவந்தது.

கல்லறைப் பெட்டிகளில் செதுக்கப்பட்டிருக்கும் வாசகம், மீனின் உருவம் ஆகியவை "உயிர்த்தெழுதல்' என்கிற கிறிஸ்தவ நம்பிக்கையைக் காட்டும் வகையில் அமைந்திருப்பதாக "லைவ் சயின்ஸ்' பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது. பெரும்பாலான கிறிஸ்தவர்களின் கல்லறைகளில் ஜோனாவின் கதை பொறிக்கப்படுவது வழக்கமானதுதான் என்றாலும், அவற்றில் எதுவும் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையல்ல. முதலாம் நூற்றாண்டுக் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பற்றிய தகவலை இணையதளத்தில் "பைபிளும் விளக்கமும்' என்கிற தலைப்பில் அகழ்வாராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். "இயேசுவின் கல்லறை' என்பது பற்றிய தங்களது விளக்கம் சர்ச்சைக்கு இடமாகக்கூடும் என்பதையும் அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

இருப்பினும் இப்போது ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் இந்தக் கல்லறை 1981-ம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாகும். ஆனால், கல்லறைகளைத் தோண்டுவதை எதிர்க்கும் யூதக் குழுக்கள் அதை ஆய்வு செய்வதை எதிர்த்தனர். இதனால், ஆய்வாளர்கள் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் அந்தக் கல்லறை சீலிடப்பட்டு இப்போது இருக்கும் இடத்தில் புதைக்கப்பட்டது.

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய அகழ்வாராய்ச்சிக் குழுவின் தலைவரான தபோரும் அவரைச் சேர்ந்தவர்களும் கல்லறையைத் தோண்டுயெடுப்பதற்கு அனுமதி பெற்றனர். யூத அமைப்புகளின் கடும் எதிர்ப்பையடுத்து, கல்லறையைத் தோண்டுவதற்குப் பதிலாக ரிமோட் கண்ட்ரோல் உதவியுடன் இயங்கும் இயந்திரக் கைகள் பொருத்தப்பட்ட கேமராக்களை துளைகள் வழியாக கல்லறைப் பகுதிக்குள் அனுப்பி ஆய்வு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இயேசு நாதர் வாழ்ந்த வீடு என்று கூறி ஒரு மிகப் பழமையான வீட்டை பெத்லகேமில் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர் என்பது நினைவிருக்கலாம். தற்போது இயேசுநாதரின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை

நாம் தமிழர் கட்சி பேரணியும், பொதுக்கூட்டமும்...


ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை தீர்மானம் கொண்டு வரும்போது அதை இந்தியா ஆதரித்திடக் கோரி நாம் தமிழர் கட்சி தலைவர் சார்பில் நாளை சென்னையில் பேரணியும், பொதுக்கூட்டமும் நடக்கின்றது. இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இலங்கையின் மனித உரிமைகளுக்கான சிறப்புத் தூதர் மகிந்த சமரசிங்கே, ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தில் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணைத் தீர்மானம் கொண்டு வரப்படும்போது அதனை எதிர்த்தும், இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் இந்தியா வாக்களிக்கும் என்று கூறியுள்ளார். இதற்கு மத்திய அரசோ அல்லது ஐ.நா. மனித உரிமை மாமன்றத்திற்கான இந்தியப் பிரதிநிதியோ எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காதது ஐயத்தை ஏற்படுத்துகிறது.

2009ம் ஆண்டு இலங்கையில் தமிழருக்கு எதிரான போர் முடிந்த கையோடு கூடிய ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தில் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் இலங்கைப் போரில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து இலங்கையே விசாரிக்க வேண்டும் என்று கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து இந்தியப் பிரதிநிதி கோபிநாத் அச்சங்குளங்கரே வாக்களித்தார். இதனால் தீர்மானம் தோற்றது. அதுபோல் இப்போதும் இலங்கை அரசைக் காப்பாற்ற இந்திய அரசு திட்டமிட்டுள்ளதா? என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். 

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை இந்தியா ஆதரித்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது. இந்திய அரசுக்கு இதையே கோரிக்கையாக வைத்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் நாளை (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு சென்னையில் மாபெரும் பேரணி நடத்தப்படவுள்ளது. இந்த பேரணி எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானத்தில் இருந்து புறப்பட்டு காந்தி இர்வின் பாலத்தில் முடிவடையும்.

இந்தப் பேரணியை இயக்குனர் மணிவண்ணன் தொடங்கி வைக்கிறார். பேரணிக்குப் பிறகு மாலை 6 மணிக்கு புரசைவாக்கம், தாணா தெருவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் கோரிக்கை உரை நிகழ்த்துகிறார். பேரணியிலும் பொதுக் கூட்டத்திலும் தமிழின உணர்வாளர்கள் பெருமளவில் கலந்து கொள்ளவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

All Over- Body Painting


























இதே நாள்...


  • இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு இறந்த தினம்(1949)
  •  யாஹூ நிறுவனம் தொடங்கப்பட்டது(1995)
  •  மொராக்கோ பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1956)
  •  டெக்சாஸ், குடியரசு மெக்சிக்கோவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1836)
  •  மகாத்மா காந்தி தண்டி யாத்திரை துவக்கினார்(1930)

எனக்கு எதுவும் தெரியாது...


சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில், முக்கிய கட்டமாக, சொத்துகள் குறித்து நீதிபதி நேற்று அதிரடியாக கேள்விகளை எழுப்பினார். சொத்தின் மதிப்பீடு குறித்த பெரும்பாலான கேள்விகளுக்கு, தனக்கு எதுவும் தெரியாது, என்று சசிகலா, மழுப்பலான பதிலையே தெரிவித்தார். கேள்வி பதில் விவரம் வருமாறு:

ஈக்காட்டு தாங்கலில் ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் கட்டடத்தின் மதிப்பீடு செய்யப்பட்டது தெரியுமா?

ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் வாடகைக் கட்டடத்தில் தான் இயங்கி வந்தது. கட்டடம் யாருடையது என்றுகூட தெரியாமல், மதிப்பீடு செய்தது தவறு.

சென்னை. 36, போயஸ் கார்டன் கட்டடத்தின் மொத்த மதிப்பு, 7 கோடியே 24 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் என மதிப்பீடு கொடுக்கப்பட்டது தெரியுமா?

தெரியாது.

சிறுதாவூர் பங்களா மதிப்பீடு, 5 கோடியே 40 லட்சம் ரூபாய் என்பது தெரியுமா?

தெரியாது.

பையனூர் பங்களா மதிப்பீடு, ஒன்றே கால் கோடி ரூபாய் என்பது தெரியுமா?

தெரியாது.

ஐதராபாத் திராட்சைத் தோட்டத்தின் மதிப்பு, 6 கோடியே 40 லட்சம் ரூபாய் என்று தெரியுமா?

தெரியாது.

இதே போன்று, நமது எம்.ஜி.ஆர்., நாளிதழ் கட்டடம், நீலாங்கரை ராஜா நகரிலுள்ள பிளாட்கள், ஈ.வி.கே., தொழில்பேட்டையில் உள்ள நான்கு ஷெட்கள், தி.நகர், பத்மநாபநகரில் உள்ள வீடுகள், வேல்ஸ் கார்டன் ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள பிளாட்கள், சென்னை நந்தனம் பகுதியில் வாங்கிய சொத்துகள், சாந்தோம் ஆர்.ஆர்.நகரில் வாங்கிய சொத்துகளின் மதிப்பு உட்பட சென்னையில் பல இடங்களில் வாடகைக்கு விடப்பட்டுள்ள கடைகளின் வாடகை ஒப்பந்தங்கள் என பல கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு சசிகலா, சில கேள்விகளுக்கு மதிப்பீடு அதிகம் போட்டுள்ளதாகவும், சில கேள்விகளுக்கு மதிப்பீடு செய்யும் அதிகாரிகள் தன்னிடம் எதுவும் கேட்கவில்லை என்றும், சில கேள்விகளுக்கு, விசாரணை அதிகாரிகள் சாட்சிகளை பொய் சொல்ல வைத்துள்ளனர் என்றும், சில கேள்விகளுக்கு தெரியாது என்றும் பதிலளித்தார்.

காலை 11மணியிலிருந்து மதியம் 2.20 மணி வரை, 36 கேள்விகளுக்கும், மதியம் மூன்று மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை, பத்து கேள்விகளுக்கும் என, 46 கேள்விகளுக்கு பதிலளித்தார். இதுவரை ஐந்து நாள் விசாரணையில் மொத்தம், 286 கேள்விகளுக்கு பதில் பெறப்பட்டுள்ளது. இன்னும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியுள்ளது. விசாரணை முடிந்து சசிகலா, இளவரசி தனியாக ஒரு காரில் புறப்பட்டு பெங்களூருவில் தாங்கள் தங்கியுள்ள கேபிட்டல் ஸ்டார் ஓட்டலுக்கு சென்றனர். விசாரணையின்போது, சசிகலா பதிலளிக்க, நீதிபதி அதிக நேரம் கொடுப்பதில்லை என அவரது வழக்கறிஞர்கள் நிருபர்களிடம் தெரிவித்தனர். சுதாகரன் மாதக் கணக்கில் பெங்களூருவில் தங்கவுள்ளதால், சிவாஜிநகர் பாலே குந்திரி சர்க்கிள், இந்தியன் எக்ஸ்பிரஸ் சர்க்கிள் அருகேயுள்ள, "குயின்ஸ் பாரடைஸ்' என்ற அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.

குடியேற்றம், குடிபெயர்தல் உள்ளிட்ட விஷயங்களில் அமெரிக்கா NO 1


ஒரு நாட்டில் பிறந்து மற்றொரு நாட்டில் வாழும் குடியேற்ற மக்கள் அதிகம் வாழும் பட்டியலில் உலக அரங்கில் இந்தியா 9 வது இடத்தை பிடித்துள்ளது. சமீப காலமாக இந்த மக்கள் ஒரளவு கணிசமாக குறைந்து வந்தாலும் , டாப் 10 பட்டியலில் இந்தியா தொடர்ந்து இருந்து வருகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்று குடியேறும் உலக குடிபெயர்வோர் கணக்கு விவரத்தில் இந்தியா 4 வது இடத்தில் இருக்கிறது . அமெரிக்க பொருளாதார விவகாரங்களுக்கான மக்கள் தொகை டிவிஷன் தரப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா வில் குடியேறும் மக்கள் தொகை கடந்த 7.5 மில்லியன் மக்கள் கடந்த 1990 ல் வசித்து வந்தனர். 2000 ஆயிரமாவது ஆண்டில் 6. 4 மில்லியனாக குறைந்தது. நாடு வாரியாக எத்தனை பேர் இருக்கின்றனர் என்ற பட்டியல் கிடைக்காவிட்டா<லும் . 2001 சென்சஸ் படி தெற்காசிய மக்கள் தான் அதிகம் இந்தியாவில் குடியேறுகின்றனர். இதில் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் மும்பையிலும், பிரிட்டன் நாட்டை சேர்ந்த தொழில் நுட்ப வல்லுநர்கள் பெங்களூரிலும் அதிகம் வசிக்கின்றனர்.

வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் 3 மில்லியன், வங்க தேசத்தில் இருந்து பலர் ரிக்க்ஷா தொழிலாளிகளாக கிழக்கு டில்லியில் குடியேறுகின்றனர். ஆனால் இதில் பலர் முறையான ஆவணங்கள் இருப்பதில்லை. பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ஒரு மில்லியன், நேபாள் நாட்டை சேர்ந்தவர்கள் 6 லட்சம் அடங்குவர். அமெரிக்கா குடியேற்றம் , ‌குடிபெயர்தல் உள்ளிட்ட விஷயங்களில் எப்போதுமே முதலிடத்தில் இருக்கிறதாம் !

இங்கள்ள இங்கிலாந்தில்!

பணம், செல்வத்தை சேர்ப்பதற்கு பல்வேறு வழிமுறைகளை கையாளுகிறார்கள். இங்கிலாந்து நாட்டிலோ கல்லூரியில் படிக்க கல்வி கட்டணம் செலுத்துவதற்காக மாணவ, மாணவிகள் செக்ஸ் தொழிலில் ஈடுபடும் பரிதாப நிலை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரத்தின்படி 10 பேரில் ஒருவர் இந்த தொழிலில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 4 சதவீதமாக இருந்த இத்தகைய போக்கு தற்போது இரண்டரை மடங்கு அதிகரித்து இருக்கிறது. பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் தான் இந்த வழியை தேர்ந்தெடுத்து இருக்கிறோம் என 93 சதவீதம் பேர் ஒப்புக் கொள்கிறார்கள்

டைட்டானிக் 100-வது ஆண்டு நினைவு தினம்!


டைட்டானிக் கப்பல் இங்கிலாந்தில் உள்ள சவுத் ஆம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ந்தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் தனது பயணத்தை தொடங்கியது. கடலில் மூழ்கியது பிரமாண்டமான அந்த அதி நவீன சொகுசு கப்பலில் 2200 பயணிகளும், ஊழியர்களும் இருந்தனர். 4 நாள் பயணத்துக்கு பின் அதாவது ஏப்ரல் 14-ந்தேதி இரவு 11.40 மணியளவில் இக்கப்பல் ஒரு ராட்சத பனிப்பாறையின் மீது மோதியது. இதனால் கப்பல் 2 துண்டுகளாக பிளந்து கடலில் மூழ்கியது. உடனே அதில் அவசர கால தேவைக்கு பயன்படுத்தப்படும் 20 சிறிய படகுகள் மற்றும் உயிர் காக்கும் கவச உடைகள் உதவியின் மூலம் பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இருந்தும் கப்பலில் இருந்த 705 பேரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. 1,522 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். இச்சம்பவம் இன்னும் மறையாத அழிக்க முடியாத வடுவாக உள்ளது. இக்கப்பல் கடலில் மூழ்கி தற்போது 100 ஆண்டுகள் ஆகிறது. அது கடலில் மூழ்கிய நினைவு தினம் வருகிற ஏப்ரல் 15-ந்தேதி கடை பிடிக்கப்படுகிறது. அது குறித்த குறிப்புகள் வருகிற 15-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

வந்தாறை வாழ வைக்கும் தமிழகம் இனி...


ஆந்திரா மாநிலம் ஓங்கோலைச் சேர்ந்தவர் ஜி.கருணைராஜ் (வயது 47). இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது: நான் 21.8.10 அன்று எனது மனைவி ஜெயந்தி மற்றும் குழந்தைகள் ஷியாமளா (19), திகா தேவன் (6) பூமிபுத்ரி (5) ஆகியோருடன் சென்னைக்கு வந்தேன். ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள அரவிந்த் ரெசிடன்சி என்ற ஓட்டலில் தங்கியிருந்தோம். அன்றிரவு கோவை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் சிலருடன் வந்து வலுக்கட்டாயமாக எங்கள் அறைக்குள் நுழைந்தனர்.

எனது மனைவி, குழந்தைகள் முன்னிலையில் அவர்கள் என்னை நிர்வாணப்படுத்தினர். எனது மனைவியை போலீஸ் அதிகாரி ஒருவர் தனது உடலோடு சேர்த்து இணைத்து பிடித்துக் கொண்டு செக்ஸ் தொல்லைகள் கொடுத்தார். என் கண் முன்னாலேயே எனது மகள் ஷியாமளாவும் செக்ஸ் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டாள். அதன் பின்னர் அதிகாலையில் நாங்கள் அனைவரும் சந்திரசேகரின் தலைமையில் வந்திருந்த அதிகாரிகளால் காரில் கடத்தப்பட்டோம். சேலம் செல்லும் வரையில் காரில் என் மனைவியையும் மகளையும் தொடர்ந்து அவர்கள் பலவிதங்களில் செக்ஸ் தொல்லைக்கு உட்படுத்தி வந்தனர். சேலத்தில் ஒரு லாட்ஜில் எனது மனைவி மற்றும் மகள் ஷியாமளாவை அழைத்துச் சென்றனர். அங்கு எனது மகளை மட்டும் குளித்து உடைமாற்றச் செய்தனர். இதை போலீசார் முன்னிலையில் செய்யச் சொன்னார்கள். எனது மனைவியை அடித்து உதைத்தனர்.

என் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் நான் ஜாமீன் பெற்றிருக்கிறேன். கடைசி வழக்கிலும் ஜாமீன் பெற்ற பிறகு என்னை வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறப்பு முகாமில் அடைத்துவிட்டனர். என்னை சிறப்பு முகாமில் அடைப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு: இந்த வழக்கு தொடர்பாக பொதுத்துறை செயலாளர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கருணைராஜ் மலேசியாவில் தேடப்படும் குற்றவாளி என்றும், அவர் ஜி.கே.ராஜ், ராஜசேகரன், தர்மதேவன், மைக்கேல்ராஜ், மைக்கேல் சூசை என்ற பல பெயர்களில் மோசடி குற்றங்களில் ஈடுபட்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இவர் மீது கோவை, செய்ழூர், சென்னை விமானநிலையம், கிருஷ்ணகிரி ஹட்கோ போலீஸ் நிலையம், மங்களூர், உடுப்பி உள்ளிட்ட இடங்களில் வழக்குகள் உள்ளன என்றும் பதில்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரிகள் மீது பல குற்றச்சாட்டுகளை மனுதாரர் கருணைராஜ் கூறுகிறார். ஆனால் அவர்களை வழக்கின் பிரதிவாதியாக அவர் சேர்க்கவில்லை. அவர்களை பிரதிவாதியாக சேர்த்திருந்தால், இந்த கோர்ட்டில் அவர்கள் பல்வேறு பதில்களை அளிக்க வேண்டியதிருந்து இருக்கும்.ஆனால் மனுதாரர் அவர்களை பிரதிவாதியாக சேர்க்காததால், அந்த கொடுமைகளைப் பற்றி நான் விசாரிக்காமல் விட்டுவிட வேண்டியதுள்ளது.அப்போதைய கோவை போலீஸ் கமிஷனர் மற்றும் பல போலீஸ் அதிகாரிகள் மீது மனுதாரர் இவ்வளவு செக்ஸ் குற்றச்சாட்டுகளை கூறியும், அதுபற்றி விசாரணை நடத்தப்பட்டதா என்று, ஒரு பதிலைக் கூட பதில்மனுவில் பொதுத்துறை செயலாளர் குறிப்பிடவில்லை.

கடைசி வழக்கிலும் கருணைராஜ் ஜாமீன் பெற்றுவிட்டு, 8.11.11 அன்று புழல் ஜெயிலை விட்டு வெளியே வந்தார். அப்போது அவரை செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைப்பதற்கான உத்தரவை ஐ.ஜி. பிறப்பிக்கிறார். உடனடியாக கைது செய்யப்பட்ட அவர் மறுநாளில் சிறப்பு முகாமில் அடைக்கப்படுகிறார்.முகாம் என்பது மிகவும் பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதி. ஆனால் அங்கும் ஐ.ஜி.யின் உத்தரவுப்படி மனுதாரர் தாக்கப்பட்டு இருக்கிறார் என்பதை மட்டுமல்ல, அதையும் தாண்டி பல சம்பவங்கள் நடந்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. இதையெல்லாம் கோர்ட்டு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.எனவே கருணைராஜை சிறப்பு முகாமில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்கிறேன். அவர் உடனடியாக முகாமில் இருந்து வெளியே அனுப்பப்பட வேண்டும். போலீஸ் உயர் அதிகாரிகள் மீது மனுதாரர் கூறியுள்ள புகார்கள் குறித்து பொதுத்துறை செயலாளர் விசாரணைக்காக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எம்.கே. தியாகராஜபாகவதரின் பிறந்தநாள்!


ஏழிசை மன்னர் என்று அழைக்கப்படும் எம்.கே. தியாகராஜபாகவதரை இன்றைய தலைமுறையினர் மறந்திருப்பார்கள். ஆனால் அவரது ரசிகர்கள் இன்னும் அவரை மறக்கவில்லை. அவரது பிறந்த நாளை இன்று கொண்டாடினர். தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகரும், பாடகருமான தியாகராஜபாகவதரை, இன்றும் அவரது ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகிறார்கள். அவரது 102வது பிறந்த நாளையொட்டி நாமக்கல் மணிக்கூண்டு அருகே அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. இனிப்புகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அவரது பாடல்களை பாடி நினைவு கூர்ந்தனர்.

க ஐ.நாவில் வல்லரசுகளின் சதிக்கூட்டணி!


தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 
ஈழத்தமிழர் இனச்சிக்கல் குறித்து ஐ.நா.மன்றத்திலிருந்து கசிந்து வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன. உலக வல்லரசுகளின் சதி வலைக்குள் தமிழீழச் சிக்கலை சிக்கவைப்பதற்கான சூழ்ச்சிகள் நடக்கின்றனவோ என்ற ஐயம் எழுகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களும் உலகம் முழுவதும் பரவி வாழும் புலம்பெயர்த் தமிழர்களும் இனப்படுகொலை குற்றவாளி, போர்க்குற்றவாளி, மனிதக் குலப் பகைவன் இராசபட்சே குழுவினர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும் என ஒற்றைக்குரலில் ஐ.நா. மன்றத்தைக் கோருகின்றனர்.
 
ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த வல்லுநர் குழு பரிந்துரைத்தவாறு சிங்கள இனவாத இலங்கை ஆட்சியாளர்களை மேற்கண்ட குற்றங்களுக்காக பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தமிழீழ தாயகப்பகுதியிலிருந்து இலங்கைப் படைகள் திரும்பப் பெறப்பட்டு அங்கு இயல்பு நிலையைக் கொணரவேண்டும், தமிழீழத் தாயகத்திலும் புலம்பெயர்ந்தும் வாழக்கூடிய ஈழத்தமிழர்களிடம் அவர்களது அரசியல் விழைவை அறிய கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இலங்கைச் சிறைகளிலுள்ள விடுதலைப்புலிகள் உள்ளிட்ட தமிழீழ அரசியல் சிறையாளிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை ஐ.நா. மனித உரிமை மன்றத்திடம் முன்வைத்து உலகம் முழுவதும் பல லட்சம் தமிழர்கள் கையெழுத்திட்டு விண்ணப்பம் அனுப்பி வருகின்றனர்.
 
உறைபனிக்கிடையில் வேலுப்பிள்ளை மகேந்திரராசா, லோகநாதன் மருதையா, ஜாக்கோமுத்து கிரேசியன் ஆகிய மூன்று வீரத்தமிழர்கள் ஐரோப்பக் கண்டத்தின் ஊடாக நடைப்பயணம் மேற்கொண்டு இக்கோரிக் கைகளுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமை மன்ற முன்றிலில் பல இலட்சம் தமிழர்கள் கூடி உலகநாட்டு பேராளர்கள் முன்பு இக்கோரிக்கைகளை முழங்கி விண்ணப்ப மனுக்களை அளிக்க இருக்கிறார்கள்.உலகத் தமிழர்களின் இந்த அடிப்படை மனித உரிமை வேண்டுகோளை புறந்தள்ளிவிட்டு சிங்கள இனவாத இலங்கை அரசே தனது ஆட்சியாளர்களும் படைத் தளபதிகளும், உலகச் சட்டங்களுக்கு எதிராக இழைத்த குற்றங்களை விசாரித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளட்டும் என்ற சொத்தைத் தீர்மானத்தை நிறைவேற்ற ஐ.நா.வில் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் சதி செய்து வருவதாக கசிந்து வரும் செய்திகளிலிருந்து தெரிகிறது.


பெற்ற படிப்பினைகள்  மற்றும் இணக்கத்திற்கான ஆணையம் (ககதஈ) என்ற பெயரில் இலங்கை அரசு நியமித்த விசாரணைக்குழு அறிக்கையின் மீது குறிப்பிட்ட காலவரம்புக்குள் நடவடிக்கை எடுத்து தொடர்புடையவர்கள் மீது குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு இலங்கை அரசை கேட்டுக்கொள்வதாக ”அத்தீர்மானம்” கூறுகிறது. குற்றவாளியே தன்னை விசாரித்து ஒரு கால வரம்புக்குள் நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கோருகிற கொடிய தீர்மானம் இது. ஐ.நா. பொதுச்செயலாளரின் வல்லுநர் குழு அளித்த ஆய்வறிக்கை இலங்கையின் நீதித்துறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் சிங்கள இனவாதத்தில் தோய்ந்திருப்பதையும் தமிழினத்திற்கெதிரான போர் வெறி ஊட்டப்பட்டிருப்பதையும் சான்றுகளுடன் எடுத்துக் காட்டியது. இலங்கைக்குள் நடக்கிற எந்த வகை விசாரணையிலும் தமிழர்களுக்கு ஞாயம் கிடைக்காது என்பதை எடுத்துக்காட்டியது. இதனால்தான் பன்னாட்டு நீதிமன்றத்தில் இராசபட்சேயும் படை அதிகாரிகளும் நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஐ.நா பொதுச்செயலாளர் இதற்கென்று சிறப்பு ஆணையம் அமைத்து நடந்துள்ள போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பரிந்துரைத்தது.


கசிந்து வரும் செய்திகள் உண்மையாய் இருக்குமானால் ஐ.நா மனித உரிமை மன்றத்தின் இப்போதைய 19 ஆவது அமர்வின் இத்தீர்மானம் ஐ.நா. வல்லுநர் குழுவின் பரிந்துரையையே துச்சமென தூக்கியெறியும் செயலாகும். இலங்கை அரசும் அதற்குத் துணையாக இந்திய அரசும் வலியுறுத்தும் அநீதிக்கு அமெரிக்காவும் பிற ஐரோப்பிய நாடுகளும் துணைபோவதையே இது எடுத்துக்காட்டுகிறது. ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலைப் போரில் சிங்கள அரசோடு இந்தியாவும் சீனவும் இணைந்து நடத்திய இன அழிப்பு குறித்து வல்லரசுகளுக்கு கவலை இல்லை.
 
தமிழின அழிப்புப் போரின் ஊடாக இலங்கைத் தீவில் சீனாவின் கைமேலோங்குவதை மட்டுபடுத்தும் அளவுக்கு இலங்கையை மிரட்டிவைத்தால் அமெரிக்க ஐரோப்பிய வல்லுரசுகளுக்கு போதுமானது. இந்திய  ஏகாதிபத்தியத்திற்கும் அது ஏற்புடையதே. இலட்சக்கணக்கில் மாண்டு போன ஈழத்தமிழர்களின் பிணங்களின் மீது இந்த வல்லரசு காய் நகர்த்தல்கள் நடக்கின்றன. மற்றபடி இனப்படுகொலைக்கு உள்ளான ஈழத்தமிழர்களுக்கு ஞாயம் கிடைக்கவேண்டும்,  உலகச்சட்டங்களுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோர்கள் மீது ஐ.நா. சட்டங்களின் படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என்பதெல்லாம் உலக வல்லரசுகளுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஐ.நா. சட்டங்களின் வரையறுப்புப் படியே ஈழத்தமிழர்கள் சிங்களர்களிடமிருந்து வேறுபட்ட தனி தேசிய இனம் என்பதோ, ஈழத்தமிழர்கள் இலங்கை அரசால் திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்பட்டவர்கள். என்பதோ எனவே உலகச் சட்டங்களின் படி ஈழத்தமிழர்கள் தனித்தேசிய அரசு நிறுவிக்கொள்ள உரிமைப்படைத்தவர்கள் என்பதோ உலக வல்லரசுகளுக்கு ஒரு பொருட்டே அல்ல. தங்களது ஆதிக்க நலன்களுக்கு ஏற்ற காய்நகர்த்தல்களில் ஒன்றாகவே ஏதோ சில வாய்ப்புகளில் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கு ஆதரவாக வல்லரசுகள் குரல் கொடுக்கின்றன. 


ஆயினும் 2009 ஆம் ஆண்டு இதே இலங்கை அரசை பயங்காரவாதத்தை முறியடித்த நாடு என பாராட்டிய மேற்குலக நாடுகள் நடந்துள்ள குற்றங்கள் குறித்து இலங்கை அரசே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று இலேசாக முணுமுணுக்கின்றன என்பது மட்டுமே வேறுபாடு. ஈழத்தமிழர்களின் இடைவிடாத போராட்டங்களினால்தான் இந்த சிறிய மாற்றமும் நடைபெற்றுள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தமிழினத்திற்கெதிராக வல்லரசுகள் மேற்கொள்ளும் சதிச் செயல்களைக் கண்டு தமிழர்கள் தங்கள் கோரிக்கைகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த வல்லுநர்குழு பரிந்துரைத்தபடி இராசபட்சேக் கும்பலை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இக்கோரிக்கைகளை தொடர்ந்து, விடாமல் வலியுறுத்துவோம். உலக மனசாட்சியின் கதவுகளை அது திறக்குவரை தமிழர்கள் நாங்கள் தட்டுவோம். உலக நாடுகள் எங்கும் இயங்கும் மனித உரிமை அமைப்புகளும் சனநாயக இயக்கங்களும் தமிழினத்திற்கு இழைக்கப்பட்டுள்ள இக்கொடிய அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் எனக் கோருகிறோம். இத்திசையில் தெளிவோடும் உறுதியோடும் உலகத் தமிழர்கள் தங்கள் முயற்சியை தொடரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

போர்க்குற்றம் ஐநாவில் நடந்த விவாதம்...


இலங்கை போர்க்குற்றம்  குறித்து ஐநா மனித உரிமை ஆணையத்தில் விவாதம் நடைபெறுகிறது.  ஐநாவின் மனித உரிமை ஆணையக்கூட்டம் சுவிஷ் நாட்டின் ஜெனீவா நகரில் நடக்கிறது.  மனித உரிமை ஆணையக்கூட்டத்தில்,  அமெரிக்க பிரதிநிதி மரியா ஒட்டேரோ, இலங்கையின் மனித உரிமை மீறல் பற்றி பேசினார். அவர்,  மனித உரிமை மீறல் பற்றிய இலங்கை அரசு ஆணைய பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும்.   காலம்ஓடிக்கொண்டிருக்கிறது.   இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கருத்து தெரிவித்தார்.

ஐநா மனித உரிமை ஆணைய நவிபிள்ளை,   இலங்கை பிரச்சனை பற்றி கருத்து தெரிவித்தார்.    அவர்,    இலங்கை அரசு நியமித்த கமிஷன் அறிக்கை மட்டும் பிரச்சனைக்கு தீர்வாகாது.  எனினும் கமிஷனின் பரிந்துரைகளை இலங்கை உடனேநிறைவேற்ற கோரிக்கை விடுத்தார்.இலங்கையின் மனித உரிமை மீறல் பற்றி மனித உரிமை மன்றத்தில் எகிப்து கருத்து தெரிவித்தது.   அணி சாரா நாடுகள் அமைப்பு சார்பில் எகிப்து நாடு இலஙகி பற்றி பேசியது.    இலங்கை தாம் நியமித்த கமிஷன் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எகிப்து கூறியது.  இலங்கை நடவடிக்கை எடுக்கும் வரை ஐநா தலையிடக் கூடாது என்றும் எகிப்து கருத்து தெரிவித்தது. எகிப்து தெரிவித்த கருத்து இலங்கைக்கு ஆதரவானது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  எகிப்து இடம் பெற்றுள்ள அணி சாரா நாடு அமைப்பில்தான் இந்தியாவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

பார்த்ததில் பிடித்தது!


 Photographed at Just the Right Moment

How to Correctly Hold Onto Train?
Impressive shadow art!

Beauty of Hairstyle


















LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...