|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 March, 2012

வந்தாறை வாழ வைக்கும் தமிழகம் இனி...


ஆந்திரா மாநிலம் ஓங்கோலைச் சேர்ந்தவர் ஜி.கருணைராஜ் (வயது 47). இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது: நான் 21.8.10 அன்று எனது மனைவி ஜெயந்தி மற்றும் குழந்தைகள் ஷியாமளா (19), திகா தேவன் (6) பூமிபுத்ரி (5) ஆகியோருடன் சென்னைக்கு வந்தேன். ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள அரவிந்த் ரெசிடன்சி என்ற ஓட்டலில் தங்கியிருந்தோம். அன்றிரவு கோவை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் சிலருடன் வந்து வலுக்கட்டாயமாக எங்கள் அறைக்குள் நுழைந்தனர்.

எனது மனைவி, குழந்தைகள் முன்னிலையில் அவர்கள் என்னை நிர்வாணப்படுத்தினர். எனது மனைவியை போலீஸ் அதிகாரி ஒருவர் தனது உடலோடு சேர்த்து இணைத்து பிடித்துக் கொண்டு செக்ஸ் தொல்லைகள் கொடுத்தார். என் கண் முன்னாலேயே எனது மகள் ஷியாமளாவும் செக்ஸ் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டாள். அதன் பின்னர் அதிகாலையில் நாங்கள் அனைவரும் சந்திரசேகரின் தலைமையில் வந்திருந்த அதிகாரிகளால் காரில் கடத்தப்பட்டோம். சேலம் செல்லும் வரையில் காரில் என் மனைவியையும் மகளையும் தொடர்ந்து அவர்கள் பலவிதங்களில் செக்ஸ் தொல்லைக்கு உட்படுத்தி வந்தனர். சேலத்தில் ஒரு லாட்ஜில் எனது மனைவி மற்றும் மகள் ஷியாமளாவை அழைத்துச் சென்றனர். அங்கு எனது மகளை மட்டும் குளித்து உடைமாற்றச் செய்தனர். இதை போலீசார் முன்னிலையில் செய்யச் சொன்னார்கள். எனது மனைவியை அடித்து உதைத்தனர்.

என் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் நான் ஜாமீன் பெற்றிருக்கிறேன். கடைசி வழக்கிலும் ஜாமீன் பெற்ற பிறகு என்னை வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறப்பு முகாமில் அடைத்துவிட்டனர். என்னை சிறப்பு முகாமில் அடைப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு: இந்த வழக்கு தொடர்பாக பொதுத்துறை செயலாளர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கருணைராஜ் மலேசியாவில் தேடப்படும் குற்றவாளி என்றும், அவர் ஜி.கே.ராஜ், ராஜசேகரன், தர்மதேவன், மைக்கேல்ராஜ், மைக்கேல் சூசை என்ற பல பெயர்களில் மோசடி குற்றங்களில் ஈடுபட்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இவர் மீது கோவை, செய்ழூர், சென்னை விமானநிலையம், கிருஷ்ணகிரி ஹட்கோ போலீஸ் நிலையம், மங்களூர், உடுப்பி உள்ளிட்ட இடங்களில் வழக்குகள் உள்ளன என்றும் பதில்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரிகள் மீது பல குற்றச்சாட்டுகளை மனுதாரர் கருணைராஜ் கூறுகிறார். ஆனால் அவர்களை வழக்கின் பிரதிவாதியாக அவர் சேர்க்கவில்லை. அவர்களை பிரதிவாதியாக சேர்த்திருந்தால், இந்த கோர்ட்டில் அவர்கள் பல்வேறு பதில்களை அளிக்க வேண்டியதிருந்து இருக்கும்.ஆனால் மனுதாரர் அவர்களை பிரதிவாதியாக சேர்க்காததால், அந்த கொடுமைகளைப் பற்றி நான் விசாரிக்காமல் விட்டுவிட வேண்டியதுள்ளது.அப்போதைய கோவை போலீஸ் கமிஷனர் மற்றும் பல போலீஸ் அதிகாரிகள் மீது மனுதாரர் இவ்வளவு செக்ஸ் குற்றச்சாட்டுகளை கூறியும், அதுபற்றி விசாரணை நடத்தப்பட்டதா என்று, ஒரு பதிலைக் கூட பதில்மனுவில் பொதுத்துறை செயலாளர் குறிப்பிடவில்லை.

கடைசி வழக்கிலும் கருணைராஜ் ஜாமீன் பெற்றுவிட்டு, 8.11.11 அன்று புழல் ஜெயிலை விட்டு வெளியே வந்தார். அப்போது அவரை செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைப்பதற்கான உத்தரவை ஐ.ஜி. பிறப்பிக்கிறார். உடனடியாக கைது செய்யப்பட்ட அவர் மறுநாளில் சிறப்பு முகாமில் அடைக்கப்படுகிறார்.முகாம் என்பது மிகவும் பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதி. ஆனால் அங்கும் ஐ.ஜி.யின் உத்தரவுப்படி மனுதாரர் தாக்கப்பட்டு இருக்கிறார் என்பதை மட்டுமல்ல, அதையும் தாண்டி பல சம்பவங்கள் நடந்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. இதையெல்லாம் கோர்ட்டு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.எனவே கருணைராஜை சிறப்பு முகாமில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்கிறேன். அவர் உடனடியாக முகாமில் இருந்து வெளியே அனுப்பப்பட வேண்டும். போலீஸ் உயர் அதிகாரிகள் மீது மனுதாரர் கூறியுள்ள புகார்கள் குறித்து பொதுத்துறை செயலாளர் விசாரணைக்காக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...