|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 August, 2012

NAAN Movie


Naan Movie Review



Attakathi Movie Review


பார்த்ததில் பிடித்தது!





இந்த ஆட்சியில் ஒரு நல்ல காரியமாவது நடக்கட்டுமே...!

புலிகள் சரணாலயங்களில் வணிகச் சுற்றுலாவுக்கு நீதிமன்றம் கடந்த ஜூலை 24-ம் தேதி விதித்த இடைக்காலத் தடை உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் விரிவான பரிந்துரைகளை அரசு அளித்தபிறகு இந்தத் தடை குறித்து மீண்டும் அறிவிக்கலாம் என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டுள்ளது.  "தடை விதிக்கப் பரிந்துரை கொடுத்தவர்களே நீங்கள்தானே' - என்று நீதிமன்றம் கேட்டால், "புலிகள் சரணாலயத்தில் வணிகச் சுற்றுலாவை நம்பியுள்ள உள்ளூர் மக்களின் வாழ்க்கை, வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்று மாநில அரசுகள் அச்சம் தெரிவிக்கின்றன' என்று நீதிமன்றத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நீதிமன்றம் ஏற்கெனவே விதித்த தடையை விலக்கிக்கொள்ளவில்லை.  இந்தியாவில் 17 மாநிலங்களில் 42 புலிகள் சரணாலயங்கள் உள்ளன. ஆனால், புலிகளின் எண்ணிக்கை 13,000-லிருந்து தற்போது 1,400 ஆக குறைந்துவிட்டது. இந்நிலையில், புலிகளைக் காக்க வேண்டும் என்ற இயற்கை ஆர்வலர்களின் குரல் ஒங்கியபோது, வேறு வழியில்லாமல், 2005-ல் அமைக்கப்பட்ட புலிகள் காப்புப் படையின் பரிந்துரைகளின் அடிப்படையில்தான், புலிகள் சரணாலயங்களின் புறப்பகுதியில் மட்டுமே வணிக நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்றும் மையப் பகுதியில் எந்த வணிக நடவடிக்கைகளும் கூடாது என்றும் நீதிமன்றம் தடை விதித்தது.  தடைவிதிக்கப்பட்ட நாள் முதலாய், சுற்றுலா நிறுவனங்களும், ஊடகங்களும் இந்தத் தடைக்கு எதிராக கருத்துருவாக்கம் செய்து வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்தால், புலிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிடும் என்று பீதி கிளப்புகின்றன.  தற்போதைய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில், குறிப்பாக புலிகள் சரணாலயத்திற்குள் "புலிகள் காணுலா' (டைகர் சபாரி) நடைபெறுவதால்தான் புலிவேட்டையாடுவோர் காட்டுக்குள் வருவதில்லை. எப்போதும் வனத்துறை அலுவலர்கள் சுற்றுலாப் பயணிகளைக் கண்காணிக்க காட்டுக்குள் வந்துகொண்டிருக்கின்றனர். புலிகள் சுற்றுலாவுக்குத் தடை விதித்தால், அங்கே யாரும் உள்ளே செல்ல மாட்டார்கள். அதன்பிறகு, புலிவேட்டையாடுவோருக்குக் கொண்டாட்டம்தான். இருக்கின்ற புலிகளையும் கொன்றுவிடுவார்கள். மேலும், வேலைவாய்ப்பை இழக்கும் உள்ளூர் மக்கள் பணத்துக்காகப் புலிகளைக் கொல்வார்கள். ஆகவே இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று சுற்றுலா நிறுவனங்கள் சொல்கின்றன.  வணிகச் சுற்றுலாவுக்குத் தடை விதித்தால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மையல்ல.  புலிகள் காப்பக வனப்பகுதிகளில் தங்குமிடங்கள், உணவுக்கூடங்கள், "புலிகள் காணுலா' ஆகியன அதிக வருவாய் தருவதாக இருக்கிறது. இத்தகைய "புலிகள் காணுலா' வெளிநாட்டவரை அதிகம் கவர்ந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் லாபம் அடைவோர் உள்ளூர் மக்கள் அல்லர். பெருநிறுவனங்கள்தான் அங்கே தங்குமிடம், உறைவிடம், உணவுக்கூடம், "புலிகள் காணுலா' போன்ற அனைத்தையும் நடத்துகின்றன. உள்ளூர் பழங்குடியினத்தவர்களால் நடத்தப்படுவதில்லை. வெளிநாட்டினரிடம் ஒட்டுமொத்தமாக ஒரு நாளைக்கு ரூ.40,000 வரை வசூலிக்கிறார்கள். இதில் வனத்துறைக்கு நுழைவுக்கட்டணம் மூலமாகக் கிடைக்கும் தொகை மிகவும் சொற்பம்.  உள்ளூர் மக்கள் இந்தத் தங்குமிடங்களில், சுற்றுலா ஏற்பாடு நிறுவனங்களில் மிகக் குறைந்த கூலிக்குப் பணிபுரிகிறார்கள். இந்த வேலையை இழந்தாலும் அவர்கள் வனத்தில் விளையும் பொருள்களை விற்று கௌரவமாகப் பிழைக்க முடியும் - வனஅதிகாரிகள் தொல்லை தராமல் இருந்தாலே போதும்.  வேலையில்லாமல் உள்ளூர்வாசிகள் புலிகளைக் கொல்வார்கள் என்பதும் தவறு. அவர்கள் உயிரைப் பணயம் வைத்து மையப்பகுதியில் வேட்டையாடி, அதை யாரிடம் விற்பார்கள்? புலிகளைக் கொல்லும்படி உள்ளூர் மக்களை நிர்பந்திப்பதே புலிவேட்டைக்காரர்கள்தானே ஒழிய ஆதிவாசிகளோ, உள்ளூர் மக்களோ அல்ல.  புலிகள் எண்ணிக்கை பெருக வேண்டுமானால், அவற்றின் இனப்பெருக்கத்துக்கு அமைதியான சூழல் வேண்டும். சிங்கங்கள்தான் குடும்ப சகிதமாக உலவும். புலிகள் அப்படியல்ல. அவை தனிமை விரும்பிகள். ஆகவே, தன் இணையைக் காண்பதும் இனப்பெருக்கமும் அரிதாகின்றன.  "புலிகள் காணுலா' அனுமதிக்கும்போது எப்போதும் ஆள்நடமாட்டமும், வாகன இரைச்சலும் அவற்றின் இயல்பான தனிமைக்குத் தடையாக அமையும். இனப்பெருக்கம் குறையும். மாறாக, மையப்பகுதியில் வணிகச் சுற்றுலாவைத் தடை செய்வதன் மூலம் புலிகள் இனப்பெருக்கம் அதிகம் நடைபெறும். எண்ணிக்கையும் கூடும்.  ஆகவே, சுற்றுலாப் பயணிகள் குறைந்தால், புலிகள் எண்ணிக்கையும் குறையும் என்பது ஏற்புடைய வாதம் அல்ல.  உலகளாவிய இயற்கை ஆர்வலர்கள் கடந்த சில வருடங்களாகவே, புலிகளின் எண்ணிக்கை அசுர வேகத்தில் குறைந்துவருவது குறித்து அச்சம் தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர். ஒருகாலத்தில் இந்தியாவின் "பெங்கால் டைகர்ஸ்', மத்தியப் பிரதேச ரேவா பகுதிகள் மற்றும் ஒடிசா மாநிலத்தில் மட்டுமே காணப்பட்ட வெள்ளைப்புலிகள் விரல் விட்டு எண்ணும் அளவுக்குக் குறையத் தொடங்கிய பிறகுதான் அரசு விழித்துக் கொண்டது. தடை விதிக்கப் பரிந்துரை செய்தது. இப்போது திடீரென்று ஏன் பின்வாங்குகிறது என்பதுதான் அதிர்ச்சியளிக்கிறது.  அழிந்துவரும் புலிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் காலம் தாழ்த்தி பாதுகாப்புக் கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் பிற சுயநல வியாபாரிகளின் நன்மைக்காக அரசு நழுவவிட்டுவிடலாகாது. இந்த ஆட்சியில் ஒரு நல்ல காரியமாவது நடக்கட்டுமே...!

நன்றி ; தினமணி.

22 August, 2012

சென்னைக்கு இன்று 373வது பிறந்தநாள்!


கிராமமாக இருந்து மாநகரமான சென்னை இன்று தனது 373வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.இன்று மாநகரமாக உள்ள சென்னை ஒரு காலத்தில் சிறு, சிறு கிராமங்களாக இருந்தது. அவற்றை பல்லவ, சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர மன்னர்கள் ஆண்டனர். மன்னர் ஆட்சி நடக்கையில் வெளிநாட்டு வர்த்தகர்களும், மதபோதகர்களும் கப்பல் மூலம் சென்னை கடற்கரையில் வந்திறங்கினர். அப்போது சென்னை, சென்னப்பட்டிணம் என்று அழைக்கப்பட்டது. 1639ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜெண்டுகளான பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் சென்னப்பட்டிணத்தில் ஆங்கிலேயர்களுக்கு குடியிருப்பு கட்ட முடிவு செய்தனர். பின்னர் ஓராண்டு கழித்து புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அதை மையமாக வைத்து தான் ஆங்கிலேயர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்த காரணத்தால் சென்னப்பட்டிணத்தை சுற்றி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு போன்ற கிராமங்கள் ஒன்றிணைக்கப்பட்டன.
தொடர்ந்து 1688ம் ஆண்டு சென்னையை முதல் நகரசபையாக அறிவித்தார் இரண்டாம் ஜேம்ஸ் மன்னர். இதன் மூலம் இந்தியாவின் முதல் நகரசபை ஆன பெருமை சென்னைக்கு கிடைத்தது.இந்நிலையில் 1746ல் ஜார்ஜ் கோட்டை மற்றும் சென்னை நகரை பிரான்ஸ்நாட்டினர் கைப்பற்றினர். பின்னர் 1749ம் ஆண்டு அவை மீண்டும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். இரண்டாம் முறை சென்னை ஆங்கிலேயர்கள் கைக்கு வந்த பிறகே அதீத வளர்ச்சி கண்டது. இந்தியாவின் முக்கிய நகரங்களை சென்னையுடன் இணைக்க ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. 

கிராமமாக இருந்த சென்னப்பட்டிணம் மதராஸ் மாகாணம் மற்றும் மதராஸ்பட்டிணம் என்று அழைக்கப்பட்டது. 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மகாணாத்தின் தலைநகரானது சென்னை.பின்னர் 1956ம் ஆண்டு இந்திய மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டன. அப்போது தமிழகத்தின் தலைநகரானது மதராஸ். கடந்த 1996ம் ஆண்டு மதராஸ் என்ற பெயரை மாற்றி சென்னை என்று அழைக்கப்பட்டது. பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழும் காஸ்மோபாலிடன் நகரமாக உள்ளது சென்னை. 

இந்தியாவிலேயே அதிகமாக வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் சென்னையில் தான் உள்ளன. ஜவுளி, பெட்ரோ கெமிக்கல்ஸ் என்று பல்வேறு துறைகளில் சென்னை சிறந்து விளங்கி வருகிறது.சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்ல ரயில் மற்றும் விமான போக்குவரத்து வசதி உள்ளது. மேலும் வெளிநாடுகளுக்கும் விமான சேவை உள்ளது. இது தவிர கப்பல் போக்குவரத்தும் உள்ளது. மேலும் மெட்ரோ மற்றும் மோனோ ரயில் திட்டங்கள் விரைவில் வரவிருக்கின்றன.

பண்டைய கால கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக சென்னை பல்கலைக்கழகம், உயர் நீதிமன்றம், எழும்பூர் அருங்காட்சியகம், ரிப்பன் மாளிகை, விக்டோரியா ஹால், மெமோரியல் ஹால், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள் ஆகியவை கம்பீரமாக காட்சியளிக்கின்றன.அந்த காலத்தில் கூவம் மற்றும் அடையாறு ஆகியவை தூய்மையாக இருந்தன. ஆனால் தற்போது சென்னையின் மக்கள் தொகையால் அவற்றில் சாக்கடை தான் ஓடுகிறது. கிராமமாக இருந்து நகரமாக மாறி தற்போது கிரேட்டர் சென்னையாக தரம் உயர்ந்துள்ள தமிழகத்தின் தலைநகரம் இன்று தனது 373வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.

20 August, 2012

நாள் ஒன்றுக்கு 5 எஸ்.எம்.எஸ்


வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் குறித்த வதந்தி செய்தியால் ஒரு நாளைக்கு 5 எஸ்.எம்.எஸ்.களுக்கு மேல் அனுப்ப தடை விதித்துள்ளது செல்போன் நிறுவனங்கள்.அசாம் இனக்கலவரங்களை தொடர்ந்து, தென் மாநிலங்களில் வசித்து வரும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் தாக்கப்பட கூடும் என்று செல்போனில் எஸ்.எம்.எஸ் மூலம் ஒரே நேரத்தில் பல பேருக்கு மொத்தமாக அனுப்பப்பட்டன. இதனால் தென் மாநிலங்களில் வசித்து வந்த வடகிழக்கு மாநிலத்தவர் அச்சமடைந்து கூட்டமாக வெளியேறினர்.இதனால் மொத்தமாக எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று தொலைத் தொடர்பு துறையை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டு கொண்டதை தொடர்ந்து அதற்கான தடை உத்தரவு 17ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.இதை உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டும் என்று சொல்போன் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதனை தொடர்ந்து செல்போன் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் ‘செல்போனில் ஒரு நாளைக்கு 5 எஸ்.எம்.எஸ்.களுக்கு மேல் அனுப்ப முடியாது, மத்திய அரசிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை இந்த நிலை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்கள் கொடுத்தால்போலீசில் புகார்!

"மொபைல் போன், "சிம்' கார்டு பெறுவதற்காக, வாடிக்கையாளர்கள் போலியான ஆவணங்களைக் கொடுத்தால், சம்பந்தபட்ட டீலர்கள், இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க வேண்டும்' என, தொலை தொடர்புத் துறையின் புதிய விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு சிலர், போலியான ஆவணங்களைக் கொடுத்து, மொபைல் போனுக்கான, "சிம்' கார்டுகளைப் பெற்று, அவற்றை, பயங்கரவாதச் செயல்களுக்காகப் பயன்படுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, "சிம்'கார்டுகள் வழங்குவதற்கு, புதிதாகக் கடுமையான விதிமுறைகளை, தொலை தொடர்புத் துறை உருவாக்கியுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள், நவம்பர் இரண்டாம் வாரத்திலிருந்து, அமலுக்கு வரவுள்ளன. 

அரசு விளம்பரங்களை நிறுத்துங்கள்?

மத்திய அரசு மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு, தங்களது ஆட்சி காலத்தில் செய்த சாதனைகள் குறித்து விளம்பரத்தையோ, கட்சித் தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் குறித்து விளம்பரத்தையோ வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தால் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓரிரு நாட்களிலேயே, ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் குறித்து மத்திய அரசு நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

03 August, 2012

இதுல ஒன்னும் கொறச்சலில்ல...


உலகளவில் செல்போன் உபயோகிப்பாளர்கள்  2வது நாடு இந்தியா!

உலக அளவில் செல்போன் உபயோகிப்பவர்களில் இந்தியா இரண்டாம் இடம் வகிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.லண்டனில் நடைபெற்ற செமினாரில் பங்கேற்றுப் பேசிய அவர், உலகம் முழுவதும் செல்போனின் பயன்பாடு அதிகரித்து வருவதாக கூறினார். இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2011 ம் ஆண்டை விட 2012 ம் ஆண்டு அதிகரித்துள்ளதாக கூறினார். இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 142 மில்லியன் அதிகமாகும். தற்போது உலக அளவில் செல்போன் பயன்படுத்துபவர்களில் இந்தியா இரண்டாவது இடத்தை வகிப்பதாக ஆசாத் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்ல ஒன்னத்தையும் காணோம்!  



பேசாம இவர தத்தெடுத்து இவரமட்டும் அனுப்பி வைத்தால் போதும்.எப்படியும் பதக்கம் நிச்சயம்.


ஒலிம்பிக்கில் 20 பதக்கங்களை வென்று மைக்கேல் பெல்ப்ஸ் வரலாற்றுச் சாதனை!


ஒலிம்பிக் போட்டிவரலாற்றிலேயே அதிகபட்சமாக 19 பதக்கங்களை பெற்று புதிய வரலாறு படைத்த அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ், நேற்று 200 மீட்டர் மெட்லி நீச்சல் போட்டியில் மற்றொரு தங்கப்பதக்கம் பெற்று தனது சாதனையை மேலும் வலுவாக்கி விட்டார்.
அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ். சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ள இவர், லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் தனது சாதனைகளைத் தொடர்கிறார். இது அவருக்கு 3வது ஒலிம்பிக் போட்டியாகும். இதற்கு முன்பு 2 போட்டிகளில் அவர் 17 பதக்கங்களைப் பெற்றிருந்தார். தற்போதைய லண்டன் போட்டியில் மேலும் 3 பதக்கங்களை வென்று புதிய ஒலிம்பிக் சாதனை படைத்து விட்டார்.
ரஷ்யாவை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான லெட்டினா, அதிகபட்சமாக 9 தங்கம் உட்பட 18 பதக்கங்களை வென்றிருந்ததே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. கடந்த 1956 முதல் 1964ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட 3 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு நிகழ்த்தப்பட்ட லெட்டினாவின் சாதனையை, நீண்ட காலத்திற்குப் பிறகு மைக்கேல் பெல்ப்ஸ் முறியடித்தார்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 200 மீட்டர் மெட்லி நீச்சல் போட்டியில் மைக்கேல் பெல்ப்ஸ் கலந்து கொண்டார். இதில் அசுர வேகத்தில் நீந்திய பெல்ப்ஸ் மீண்டும் தங்கப்பதக்கம் பெற்றார். இதன் மூலம் பெல்ப்ஸின் சாதனை பயணம் தொடர்கிறது. இதுவரை மைக்கேல் பெல்ப்ஸ் 3 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு 16 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என்று மொத்தம் 20 பதக்கங்களை வென்றுள்ளார்.

காட்டி பதவி வாங்குறது நம் நாடு காட்டுனதுனால பதவி போவது வெளிநாடு



கோஸ்டாரிகா நாட்டின் இளைஞர் நலத்துறை பெண் இணை அமைச்சர் ஒருவர் படு கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்த வீடியோ காட்சிகள் யூடியூபில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. இதையடுத்து அந்த அமைச்சர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.இளைஞர் நலத்துறை இணை அமைச்சராக இருந்தவர் கரீனா பொலனாஸ். இவர் கவர்ச்சிகரமாக தோன்றும் ஒரு வீடியோ காட்சி யூடியூபில் வெளியாகியுள்ளது. படு வேகமாக பரவி வரும் இந்த வீடியோ காட்சியை இதுவரை பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளன். கிட்டத்தட்ட 56 நிமிடங்களுக்கு இந்த வீடியோ காட்சி ஓடுகிறது.
அதில் ஒரு படுக்கை அறையில் படுத்துக் கிடக்கிறார் அமைச்சர் கரீனா. மேலே பிரா, கீழே பேண்டீஸ் மட்டும்தான் இருக்கிறது. தனது பிராவைத் தாண்டி வெளியே பிதுங்கிக் காணப்படும் மார்புகள் மீது கையை வைத்து ஒரு இளைஞனை படுக்கைக்கு அழைக்கிறார் கரீனா.இந்த வீடியோ காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து கோஸ்டாரிகாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. இதையடுத்து அமைச்சர் பதவியிலிருந்து கரீனாவை டிஸ்மிஸ் செய்து விட்டனர். கரீனாவின் செயலால் அதிபர் லாரா சின்சில்லாவுக்குப் பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டு விட்டதாம்.இதற்கிடையே, இந்த வீடியோ குறித்து கரீனா விளக்குகையில், இது பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இதை ஒரு கம்ப்யூட்டர் என்ஜீனியர் திருடி இப்படி யூடியூபில் போட்டு விட்டார். என்னிடம் பணம் பறிக்க முயன்றார். ஆனால் நான் பணியாததால் வீடியோவை வெளிப்படுத்தி விட்டார் என்று கூறியுள்ளார்.

இந்த பொம்பளைங்களே இப்படிதான் தண்ணிய பார்த்தவுடனே சண்ட போடா ஆரம்பிச்சிட வேண்டியது! LOL...


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...