|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 May, 2011

இதே நாள்

  • நைஜீரியா சிறுவர் தினம்

  •  பொலீவியா அன்னையர் தினம்

  •  இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இறந்த தினம்(1964)

  •  ஜெர்மனிய அறிவியலாளர் ராபர்ட் ஹூக் இறந்த தினம்(1910)

  •  கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்டது(1937)

  • தூதரக அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கெல்லாம் சலுகை காட்ட முடியாது-அமெரிக்கா

    தூதரக அதிகாரிகளுக்கு மட்டும்தான் தூதரக சலுகை தர முடியும். அவர்களது குடும்பத்தினர்களுக்கெல்லாம் தர முடியாது. அப்படி ஒரு விதிமுறையே இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.

    நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் துணைத் தூதராக இருக்கும் தேபஷிஸ் பிஸ்வாஸின் மகள் கிருத்திகா பிஸ்வாஸ். இவரை சமீபத்தில் அமெரிக்க போலீஸார் திடீரென கைது செய்தனர். அவர் படித்து வரும் பள்ளியில் ஆசிரியர்களுக்கு ஆபாச இமெயில் வந்தது. அதை அனுப்பியவர் கிருத்திகாதான் என்று கூறி பள்ளி நிர்வாகம் அவரை நீக்கியது. அதைத் தொடர்ந்து கிருத்திகா கைது செய்யப்பட்டு 24 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டார்.

    பின்னர்தான் அவரை விடுவித்தனர். மேலும் தவறு செய்தது கிருத்திகா இல்லை என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து அவரை மீண்டும் பள்ளியில் சேருமாறு நிர்வாகம் கடிதம் அனுப்பியது.

    இந்த நிலையில் தன்னை அவமானப்படுத்தி, கைது செய்ததற்காக நியூயார்க் நகர மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க் ரூ. 7.5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரி கிருத்திகா வழக்கு தொடர்ந்துள்ளார். இது அமெரிக்காவை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.

    மேலும், அமெரிக்க போலீஸாரின் மனிதாபிமானற்ற செயலையும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து கிருத்திகா கூறுகையில், நான் கைது செய்யப்பட்டு நீண்ட நேரமாகியும் என்னை கழிப்பறைக்குக் கூட செல்ல அனுமதிக்கவில்லை. நீண்ட நேரம் கழித்தே என்னை அனுமதித்தனர். அதுவும், பல கைதிகள் அடைக்கப்பட்டிருந்த சிறை அறையில் உள்ள கழிப்பறைக்குச் செல்ல பணித்தனர். இதனால் அத்தனை பேர் முன்னிலையிலும் நான் கழிப்பறையை பயன்படுத்த நேரிட்டது என்று குற்றம் சாட்டியிருந்தார்.

    இதற்கிடையே, கிருத்திகாவுக்கு தூதரக சலுகையை அமெரிக்க நிர்வாகம் தரவில்லை என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் கூறுகையில், தூதரக அதிகாரிகளுக்கு மட்டுமே சலுகைகள் செல்லும். அவர்களின் குடும்பத்தினருக்கு அது கிடையாது.

    தூதரக அதிகாரிகள் மீது கைது நடவடிக்கை, விசாரணை போன்றவற்றை எடுக்கக் கூடாது என்று வியன்னா மாநாட்டுத் தீர்மானம் கூறுகிறது. அதேசமயம், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த சலுகை கிடையாது என்பதையும் வியன்னா மாநாட்டுத் தீர்மானம் தெளிவாக குறிப்பிடுகிறது. தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினரிடம் தூதரக பாஸ்போர்ட் இருந்தாலும் கூட அவர்களுக்கு சலுகைகள் கிடையாது என்றார் அவர்.

    இங்க்லாந்தில் தேடப்பட்ட போர்க்குற்றவாளி போஸ்னிய மாஜி ராணுவத் தளபதி செர்பியாவில் கைது


    1995ல் நடந்த செரப்னிகா இனப்படுகொலைக்கு மூளையாக திகழ்ந்தவரான, முன்னாள் போஸ்னிய செர்பிய அரசின் ராணுவத் தலைமைத் தளபதியான ரட்கோ மிலாடிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

    உலக மக்களை நடு நடுங்க வைத்தது செரப்னிகா இனப்படுகொலையாகும். 1995ம் ஆண்டு நடந்த இந்த கொடூரப் படுகொலையில், ஆயிரக்கணக்கான போஸ்னியர்களைக் கொன்று குவித்தது போஸ்னியாவை அப்போது ஆண்டு வந்த செர்பிய ஆட்சியாளர்களின் ராணுவம்.

    ஈழத்தில் நடந்த மிகப் பெரிய படுகொலைச் சம்பவத்திற்கும், செரப்னிகா சம்பவத்திற்கும் இடையே நிறைய வித்தியாசம் கிடையாது. ஈழத்தில் நடந்ததைப் போலவே கொடூரமாக அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலைதான் செரப்னிகா சம்பவம்.

    இந்த சம்பவத்திற்கு முக்கியக் காரணகர்த்தாதான் இந்த மிலாடிக். இவரை கடந்த 16 ஆண்டுகளாக தேடி வந்தனர். இந்த நிலையில் தற்போது சிக்கியுள்ளார் மிலாடிக்.

    செர்பியாவில் வைத்து இவரைக் கைது செய்துள்ளனர். ஐரோப்பாவிலேயே அதிகம் தேடப்பட்ட நபர் இந்த காட்டுமிராண்டி மிலாடிக்தான். வடக்கு செர்பியாவில் உள்ள ஒரு கிராமத்தில் வைத்து மிலாடிக் கைது செய்யப்பட்டார். 69 வயதான இவரை பின்னர் கோர்ட்டில் நிறுத்தினர்.

    மிலாடிக் கைது செய்யப்பட்டதை செர்பிய அதிபர் போரிஸ் டாடிக் உறுதி செய்துள்ளார். அவரை யூகோஸ்லேவியாவுக்கான போர்க்குற்ற சர்வதேச டிரிப்யூனல் முன்பு விரைவில் ஆஜர்படுத்தி அவர்களிடம் ஒப்படைக்கவுள்ளனர். தி ஹேக் நகரில் இந்த கோர்ட் செயல்பட்டு வருகிறது. யூகோஸ்லேவிய போர்க்குற்றங்களுக்காகவே தனியாக அமைக்கப்பட்டது இந்த கோர்ட்.

    செரப்னிகாவில் நடந்தது என்ன?

    1992 முதல் 1995 வரை போஸ்னிய முஸ்லீம்களுக்கும், செர்பியர்களுக்கும் இடையிலான போர் அனைவரும் அறிந்ததுதான். 44 மாத சரயேவோ நகர முற்றுகை, இன அழிப்பு முகாம்கள், கைது மற்றும் சித்திரவதைப் படலங்கள் இந்த காலகட்டத்தில் போஸ்னியா-ஹெர்ஸகோவினா பகுதியில் அரங்கேறின.

    இதில் செரப்னிகா என்ற இடத்தில் கிட்டத்தட்ட 8000 முஸ்லீம் ஆண்கள் மற்றும் இளைஞர்களை மொத்தமாக குவித்து கொடூரமாக படுகொலை செய்தது போஸ்னியாவை தனது பிடியில் வைத்திருந்த செர்பிய ராணுவம். ஐரோப்பாவில் 2ம் உலகப் போருக்குப் பின்னர் நடந்த மிகப் பெரிய இனப்படுகொலை சம்பவம் இதுதான்.

    செரப்னிகா இனப்படுகொலைச் சம்பவத்தை திட்டமிட்டு அரங்கேற்றியவர்தான் இந்த மிலாடிக். இவரைத்தான் தற்போது செர்பியா கைது செய்துள்ளது.

    ராஜபக்சே கும்பலுக்கு எப்போது விலங்கு?

    ஈழத்தையும், செரப்னிகாவையும் ஒப்பிட்டுப் பார்த்தால் செரப்னிகாவை தூக்கிச் சாப்பிடும் வகையில் ராஜபக்சே, கோத்தபயா ராஜபக்சே, சரத் பொன்சேகா கும்பல் செய்த அட்டூழியங்கள், அநியாயங்கள், கொடூரக் கொலைகள், கற்பழிப்புகள், சித்திரவதைகள், கொலைகள் மிகப் பெரியவை.

    செரப்னிகாவுக்காக கதறித் துடித்த ஐரோப்பிய சமூகமும், பிற மேற்கத்திய நாடுகளும், அந்த சம்பவத்திற்காக போர்க்குற்ற டிரிப்யூனலையே அமைக்கும் அளவுக்கு உறுதியாக செயல்பட்டன.

    ஆனால் ஈழத்தில் நடந்த மிகப் பெரிய இனப்படுகொலை குறித்து எந்த நிவாரணத்திற்கும் இதுவரை வழி பிறக்கவில்லை. ஆயிரம் செரப்னிகாவுக்கு சமமான மகா கோரமான படுகொலை, இன அழிப்பை இலங்கை ராணுவம் சரத் பொன்சேகா தலைமையிலும், ராஜபக்சே தலைமையிலும் செய்து முடித்தது.

    இன்று மிலாடிக் கைது செய்யப்பட்டிருப்பது இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

    அரிசோனாவில் தறை இறங்கிய விமானம் (USA)


    பெண்ணை நிர்வானப்படுத்தி SEX LAP-DANCE ஆடவிட்ட MEXICAN போலீஸ்

    The Mexican border city of Tijuana is suspending 15 local police officers seen on a video forcing a young female detainee to perform a lap dance, purportedly in exchange for not arresting or charging her. Mayor Carlos Bustamante says the officers are being suspended for immoral behavior and loss of confidence. The officers had allegedly detained the woman and her boyfriend for drug possession. They can be seen laughing, joking and touching the woman in a video apparently filmed at a police station and made public by the newspaper El Mexicano. The officers seen on the tape are in uniform and include three women. City officials said Tuesday they are still deciding whether to fire or charge them.

    sex குற்றசாட்டால் துருக்கியில் பிரச்சனை !


    ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்து 200 k.m தூரம் புகை பரவியதால் விமானங்கள் ரத்து!


    காங்கிரஸ் முகத்திரையை கிழித்த சீமானை வாழ்த்துகிறேன் - மலேசிய துணை முதல்வர்



    காங்கிரஸ் கட்சியின் தமிழர் விரோதப் போக்கை மக்களிடம் கொண்டு சேர்த்து, அக்கட்சியின் முகத்திரையை கிழித்ததில் நாம் தமிழர் கட்சிக்கும், உங்களுக்கும் உள்ள பங்கை யாரும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது.


    ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர் புரிந்த ராஜபக்சே மற்றும் ராணுவ அதிகாரிகள் போர்க்குற்றவாளிகளே என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

    அத்தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு தாங்களும் நாம் தமிழர் கட்சியும் முயற்சி எடுப்பீர்கள் என்று நம்புகிறேன். தமிழகம் வரும் வாய்ப்பு கிடைத்தால், உங்களை கண்டிப்பாக நேரில் சந்திக்கிறேன்.   உங்கள் தமிழின சேவை என்றும் தொடர உள்ளம் நிறைந்த வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.

    நட்சத்திர கிரிக்கெட் போட்டி Chennai Rhinos Team Launch
























    இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் இந்தி திரையுல நட்சத்திரங்கள் இணைந்து டுவென்டி-20 கிரிக்கெட் விளையாடி ரசிகர்களை சந்தோசப்படுத்த இருக்கின்றனர். இப்போட்டிகள் ஜூன் மாதம் 4ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கிறது. நட்சத்திர கிரிக்கெட் லீக் எனும் பெயரில் நான்கு அணிகள் பங்கேற்கும், ஆறு லீக் போட்டிகள் நடைபெற சென்னை, பெங்களூரு, ஐதரபாத் போன்ற நரங்களில் நடக்க இருக்கின்றன.

    தமிழ், கன்னடம், இந்தி திரைப்பட நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி பெங்களூரில் வருகிற ஜுன் மாதம் 4ந் தேதி தொடங்குகிறது இதுகுறித்து சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் சரத்குமார், முக்கிய நட்சத்திர வீரர் சூர்யா உள்பட போட்டியில் பங்கேற்கும் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இவர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் அணியின் பெயர் சென்னை ரைனோஸ்.

    இந்த போட்டியில் நடிகர்கள் சரத்குமார், சூர்யா, மாதவன், ஆர்யா, விஷால், பரத், அபாஸ், விஷ்ணு, சாந்தணு, விக்ராந்த், ரமணா, மிர்ச்சி சிவா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர். அப்போது இந்த கிரிக்கெட் போட்டிக்கான டீசர்ட் மற்றும் லோகோ வெளியிடப்பட்டது.

    செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் சூர்யா, நிச்சயமாக சென்னை ரைனோஸ் அணி வெற்றி பெறும். அதற்கான பயிற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்று உரக்க சத்தம் போட்டு உற்சாகமாக சொன்னார்.

    அடுத்து பேசிய சரத்குமார், ஏற்கனவே இந்தி நடிகர்களுக்கும், தென்னிந்திய நடிகர்களுக்கும் நடந்த போட்டியில் தென்னிந்திய நடிகர்கள் வெற்றி பெற்றனர். அதேபோல் தென்னிந்திய நடிகர்களுக்குள் நடக்கும் போட்டியில் எங்கள் அணி வெற்றி பெறும். 4ஆம் தேதி பெங்களூரிலும், 5ஆம் தேதி சென்னையில், 11ஆம் தேதி ஹைத்ராபாத்தில் போட்டி நடைபெறுகிறது. இறுதிப்போட்டி ஹைத்ராபாத்தில் 12ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவோம் என்பது உறுதி என்றார்

    Top 5 Run scorers at the IPL

    வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த புலிகள் கொலை - கோதபயவுக்கு எதிராக பொன்சேகா சாட்சியம்

    வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை கொன்று விடுமாறு அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியும் பாதுகாப்புத்துறைச் செயலாளருமான கோதபய ராஜபக்சே உத்தரவிட்டிருந்தார் என்று அந் நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

    வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த புலிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் அவர் இவ்வாறு சாட்சியளித்துள்ளார்.

    வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொன்சேகா நீதிமன்ற விசாரணையின்போது கூறுகையில், வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்து விடுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபய ராஜபக்சே உத்தரவிட்டிருந்ததாக இறுதிக் கட்ட யுத்தத்தில் ராணுவத்தினருடன் தங்கியிருந்த பத்திரிக்கையாளர்கள் இருவர் மூலமாக நான் கேள்விப்பட்டிருந்தேன்.

    ஆனால் அதற்கு மேல் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. மேலும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் யாரும் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்ததாக நான் அறியவுமில்லை. மேலும் ராணுவத் தளபதி என்ற வகையில் அது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள எனக்கு கால அவகாசம் வழங்கப்படவில்லை.

    இந்த விவரங்களை நான் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரட்ரிக்கா ஜேன்ஸிடமும் தனிப்பட்ட முறையில் உரையாடும் போது தெரிவித்திருந்தேன். போர் காலத்தில் என்னால் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ராணுவத் தளபதியே என்னை கைது செய்தார்.

    முன்பு விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற போரில் பின்னடைவு ஏற்பட்டபோது, மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் இருந்த ஒரு அதிகாரி கோழைத்தனமாக கண்ணீர் விட்டு அழுதார். இதனால் படையின் கட்டளை பிறப்பிக்கும் பொறுப்பில் இருந்து அவரை நீக்கினேன். ஆனால், 2010 ஜனவரி மாதம் அந்த அதிகாரி மூலமாகவே என்னை கைது செய்ய வைத்தனர்.

    நாட்டுக்காக நான் ஏராளமான தியாகங்களைச் செய்துள்ளேன். ஆனால், என்னை கோதபய நம்பவே இல்லை. என் மீது அவருக்கு எப்போதுமே சந்தேகம் இருந்து வந்தது. மேலும் ராணுவ வீரர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை இலங்கை அரசு மதிப்பது தற்போது குறைந்துவிட்டது.

    மேலும் போரினால் இடம் பெயர்ந்த தமிழர்களையும் போரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் மறுவாழ்வு அளிக்க நான் முன் வைத்த திட்டத்தையும் அதிபர் ராஜபக்சேவும் கோதபயவும் ஏற்க மறுத்துவிட்டனர் என்று கூறியுள்ளார். மேலும் புலிகளுக்கு எதிராக தான் தலைமை தாங்கி நடத்திய தாக்குதல்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...