|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 May, 2012

விமான விபத்தில் இந்தியர்கள் 15 பேர் பலி!

நேபாளத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 11 இந்தியர்கள் உள்பட15 பேர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 பேர் பயணித்த அந்த விமானம், நேபாளத்தின் வடக்குப்பகுதியில் உள்ள ஜாம்சாம் என்ற சுற்றுலாத்தல விமான  நிலையத்தில் தரை இறங்க முயன்றபோது, மலையில் மோதி விபத்துக்குள்ளானது..காயங்களுடன் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 5 பேர் இந்தியர்கள்;ஒருவர் அந்த விமானத்தின் விமானி ஆவார்.விபத்துக்குள்ளான விமானம் நேபாளத்தின் அக்னி ஏர் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சுற்றுலா ரக விமானம் ஆகும்.

பாதாளம் நோக்கி பணம்!

தீவிரவாதம், பட்ஜெட், கூடங்குளம், எம்.பி.க்கள் இலங்கை செல்வது, ஜெ -விஜயகாந்த் பிரச்னை, ஜெசசி இணைப்பு, தி.மு.க உள்கட்சி மோதல் இது போன்ற தேசிய, மாநில செய்திகளுக்கு இடையே யாருடைய கவனத்தையுமே பெறாமல் ஒரு பிரச்னை மெல்ல மெல்ல ஊதி பெரிதாகிக் கொண்டே வருகிறது. யார் கவனத்தையும் ஈர்க்காமல் போன செய்தி.. சரிந்து வரும் ரூபாயின் மதிப்பு தான்.பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள்.. இப்போது நம் இந்திய ரூபாயின் மதிப்பு பாதாளம் நோக்கி போய்க் கொண்டிருப்பது கவலைப்படவேண்டிய விஷயம்.கடந்த ஜனவரி மாதம் முதல் உயர்ந்து வந்த இந்திய ரூபாய், இப்போது (மே 02) மீண்டும் சரிந்து ஒரு டாலருக்கு நிகராக கிட்டத்தட்ட 53 ரூபாய் என்ற அளவில் வர்த்தகம் ஆகிறது. கடந்த வருடம் ஜூலை மாதத்தில் ஒரு டாலர் 44 ரூபாய் என்ற அளவில் தான் இருந்தது. இதை விட 2008 ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு டாலர் 40 ரூபாய்க்கு கீழே கூட இருந்தது.


ஏன் சரிகிறது ரூபாய்? எந்த ஒரு பொருளின் விலையையும் தீர்மானிப்பது சப்ளை மற்றும் டிமாண்ட் தான். பொருளின் வரத்து அதிகரிக்கும் போது அதன் மதிப்பு (விலை) குறைவதும், தேவை அதிகரிக்கும் போது உயர்வதும் இயல்பே. நாம் வாங்கும் பொருட்களுக்கு இதை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ரூபாயோடு ஒப்பிடும் போது குழப்பமாக இருப்பது போல தெரியும். ஆனால் எல்லாமே சப்ளை டிமாண்ட் தியரி தான்.இந்தியாவுக்கு வரும் டாலரின் மதிப்பைப் பொருத்து தான் இந்திய ரூபாய்க்கும் அமெரிக்க டாலருக்குமான மதிப்பு இருக்கிறது. இதே கதைதான் அனைத்து நாட்டு கரன்சிகளுக்கும் என்றாலும் டாலர் தான் பிரதானமான கரன்ஸியாக கொள்ளப்படுகிறது. நம்முடைய அரசு மற்றும் நம் நிறுவனங்களின் பெரும்பாலான வர்த்தகங்கள் டாலரில் நடப்பதால் தான் டாலர் அதிக கவனம் பெறுகிறது.ரூபாய் சரிய முதல் காரணம் நம்முடைய இறக்குமதி சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதாவது நாம் செய்யும் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம். நடந்து முடிந்த மார்ச் நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதியை விட இறக்குமதி 185 பில்லியன் டாலர்கள் அதிகமாக இருக்கிறது. ( ஒரு பில்லியன்  100 கோடி, 1 டாலர் சுமாராக 53 ரூபாய்) இவ்வளவு பில்லியன் டாலர் வெளியே செல்லும் போது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் சரிவடையத்தான் செய்யும்.


மூன்றாவது என்.ஆர்.ஐ.களின் பங்கு. இது சிறிதளவு தான் என்றாலும் கணிசமானது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முடியும். சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRI) டெபாசிட்களுக்கு சுமார் 10 சதவிகித வட்டி கிடைத்தது.  சில நாட்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 0.50 சதவிகிதம் குறைத்தது. (அதாவது வங்கிகள், ரிசர்வ் வங்கியிடம் இருந்து வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக வங்கிகளிடம் நாம் வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் குறையும், அதேபோல நாம் செய்யும் டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் குறையும்). இப்படி டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் குறையும் போது வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதை குறைத்துவிடுவார்கள்.


ஆக மொத்தம் இங்கிருந்து நிறைய டாலர் வெளியே செல்கிறது. டாலரில் உள்ளே வரும் முதலீடுகளும் குறைந்ததன் காரணமாக ரூபாய் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. தற்போது 53 ரூபாய்க்கு வர்த்தகமாகும் ஒரு டாலர், 55 ரூபாய்க்கு மேலே செல்லக் கூட வாய்ப்பிருக்கிறது.இறக்குமதி அதிகரித்ததன் காரணமாக ரூபாய் சரிகிறது. அதற்காக, நம் இறக்குமதியை நிறுத்த முடியாது. இறக்குமதி செய்து கொண்டேதான் இருக்கவேண்டும் அப்போது மேலும் ரூபாய் சரியும். நாம் இறக்குமதி செய்யும் பொருளின் விலை உயர்ந்து கொண்டே இருக்கும். இதில் முக்கிய பங்கு வகிப்பது, குரூட் ஆயில், தங்கம், நிலக்கரி போன்றவை தான். ரூபாய் மதிப்பு சரிய சரிய அதிக ரூபாய் கொடுத்து நாம் வாங்க வேண்டி இருக்கிறது.ரூபாய் சரிவு என்பது அரசாங்கத்தை மட்டுமல்ல, சாதாரண மக்களையும் வெகுவாக பாதிக்கிறது. ரூபாய் மதிப்பு சரிவதால் நன்மையே இல்லையா என்றால், இருக்கத்தான் செய்கிறது. உதாரணத்துக்கு நாம் ஏற்றுமதி செய்யும் பொருளுக்கு அதிக விலை கிடைக்கும். டெக்னாலஜி மற்றும் டெக்ஸ்டைல் துறையைச் சேர்ந்தவர் மற்றும் ஏற்றுமதியை நம்பிருக்கும் நிறுவனங்களுக்கு ரூபாயின் சரிவு சாதகமாக இருக்கும்.நம் நாட்டு நிலமை இப்படி இருக்க, மற்றொரு 'வளர்ந்து வரும்'  நாடான சீனாவில் இந்த பிரச்னை இருக்கிறதா? கரன்ஸி விஷயத்தில் சீனா எப்படி அதை அணுகுகிறது?இது குறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசியர் ஸ்ரீனிவாசனிடம் கேட்டோம். 



அதிக அளவு டாலர்கள் இங்கிருந்து வெளியே செல்வது ஒரு பிரச்னை என்றால், சாதாரணமாக உள்ளே வரும் வெளிநாட்டு முதலீடுகளும் இப்போது குறைந்து வருகிறது. பங்குச்சந்தை சமீபகாலத்தில் பெரிய வருமானத்தை கொடுக்கவில்லை என்பதால் அதிக முதலீடுகள் உள்ளே வருவதில்லை. மேலும் பங்குச்சந்தை சரி இல்லாததால் வெளிநாட்டு முதலீடுகளை இங்கிருந்து எடுத்து டாலராக மாற்றி வெளிநாடுகளுக்கு எடுத்து செல்கிறார்கள். இதன் காரணமாக டாலருக்கு தேவை அதிகரிக்கிறது.அவர், '' இந்திய கரன்ஸி 'டைனமிக்’கானது. அதாவது சப்ளை மற்றும் டிமாண்டுக்கு ஏற்ப மாறிக் கொண்டிருக்கிருக்கும். ஆனால் சீனா 'பிக்ஸட் கரன்ஸி சிஸ்டத்தை' வைத்திருக்கிறது. ஒரு டாலருக்கு 6.3 யூவான் என்ற நிலையில் தான் கடந்த சில மாதங்களாக வர்த்தகமாகிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் சீனா ஏற்றுமதியை அதிகளவு நம்பி இருக்கிறது. ஏற்றுமதியை அதிகளவு நம்பியிருக்கும் போது மற்ற நாட்டு கரன்சிகளுக்கு எதிராக பலவீனமாக இருந்தால் தான் அதிக வருமானம் கிடைக்கும். அதைத் தான் சீனா செய்துக்கொண்டிருக்கிறது.


ஆனால் பல நாடுகள் சந்தை மதிப்புக்கு மாறச்சொல்லி சீனாவை வற்புறுத்தி வருகிறது. ஆனால் சீனா மசியவில்லை. ஒரு வேளை சீனா அப்படி மாறி இருந்தால், அமெரிக்க டாலருக்கு நிகரான யூவானின் மதிப்பு தற்போதைய நிலையை விட அதிகமாகதான் இருக்கும். அதனால் இப்போதைக்கு சீனாவுக்கு பிரச்னை இல்லை" என்று விளக்கினார்.நம் ரூபாயின் மதிப்பு குறையாமல் இருக்க ஒன்று டாலர் வரத்து அதிகமாக இருக்க வேண்டும், இங்கிருந்து வெளியே செல்லும் டாலர் குறைவாக இருக்க வேண்டும்.வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்வதும், வெளிநாட்டு இந்தியர்கள் இங்கு முதலீடு செய்வதும் நம் கையில் இல்லை. ஆனால், நாம் நினைத்தால் இறக்குமதியை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம். தங்கம், அனைத்து கரன்சிகளுக்குமான மாற்று என்பதால் அதை இறக்குமதி செய்வது கூட தவறில்லை. ஆனால் குரூட் ஆயில் இறக்குமதியை நாம் நினைத்தால் குறைக்கலாம்.மேலும், பொதுப் போக்குவரத்தை மத்திய மாநில அரசுகள் ஊக்குவிக்கலாம். குஜராத்தில் ஒரு நகரத்தில் பேருந்துகள் செல்வதற்கென்று தனியாக ஒரு 'லேன்’ இருக்கிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் இல்லாமல் விரைவாக இலக்கை அடைய முடியும். இதை அனைத்து ஊர்களுக்கும் கொண்டுவந்து பொதுப் போக்குவரத்தை விரிவுபடுத்தி, பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க முயற்சியாவது செய்யலாம்.செய்யுமா நம் அரசு?

இதே நாள்...


  • பராகுவே ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது(1811)
  • பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்தினார்(1796)
  • குவைத் ஐநா.,வில் இணைந்தது(1963)
  • அமெரிக்காவின் முதல் விண்வெளி நிலையமான ஸ்கைலேப் உருவாக்கப்பட்டது(1973)

பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெற சென்ற 109 வாலிபர்கள்?

கடந்த 20 ஆண்டுகளில், காஷ்மீரில் ஆயுதப் பயிற்சி பெறச் சென்ற 109 பேர், ஜம்மு - காஷ்மீர் மாநில அரசு அறிவித்த மறுவாழ்வு கொள்கையால், அமைதியாக வீடு திரும்பியுள்ளனர்.இதுதொடர்பாக, உளவுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஜம்மு - காஷ்மீரில் உள்ள முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான அரசு, 2010 நவம்பரில், மறுவாழ்வுக் கொள்கை ஒன்றை, மத்திய அரசின் ஒப்புதலு<டன் அறிவித்தது. இதையடுத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு, ஆயுதப் பயிற்சிக்காக சென்றிருந்த, 1,300 வாலிபர்கள், தாங்கள் வன்முறைப் பாதையைக் கைவிட்டு, மாமூல் வாழ்க்கைக்கு திரும்ப விரும்புவதாக, பல்வேறு வழிகளில் தகவல் தெரிவித்தனர்.இவர்களில், 109 பேர், பல்வேறு வழிகளில் அமைதியாக வீடு திரும்பியுள்ளனர். அவர்களைப் பற்றிய விவரங்களை வெளியிட்டால், அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், விவரங்களை தெரிவிக்க முடியாது.இருந்தாலும், இவர்களில் பெரும்பாலானவர்கள் நேபாளம் வழியாக, இந்தியா திரும்பியுள்ளனர். பாகிஸ்தான் பாஸ்போர்ட்டில் நேபாளம் சென்ற அவர்கள், அங்கிருந்து இந்திய குடிமகன் என்ற பெயரில், நாடு திரும்பியுள்ளனர். இந்தியர்கள், நேபாளம் சென்று வர, பாஸ்போர்ட் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு, உளவுத் துறை அதிகாரி கூறினார்.

ஆங்கிரி பேர்ட்ஸை தொடர்ந்து...?


விளையாட்டினை விரும்பும் பெரியவர்களுக்கும் சரி, சுட்டிகளுக்கும் சரி அமேஸிங் அலெக்ஸ் என்ற புதிய கேமினை அறிமுகம் செய்ய உள்ளது ஆங்கிரி பேர்ட்ஸை உருவாக்கிய ரோவியோ நிறுவனம்.அதுவும் ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட எலக்ட்ரானிக் சாதனங்களில் இந்த கேமினை வழங்க உள்ளது ரோவியோ நிறுவனம். ரோவியோ நிறுவனத்தின் புதிய கேமான அமேஸிங் அலெக்ஸ் ஒரு குட்டி பையனை சுற்றி அமைக்கபட்டுள்ள ஒரு கதையாக உள்ளது.
ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டு எந்த அளவு மக்களின் ஆர்வத்தினை தூண்டியதோ அதே போல் இந்த புதிய கேமான அமேஸிங் அலெக்ஸ், கேமிங் உலகத்தில் புதிய ஆரவாரத்தினை ஏற்படுத்தும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.100 கோடி முறை டவுன்லோட் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது ஆங்கிரி பேர்ட்ஸ் கேம். இது போல் அமேஸிங் அலெக்ஸ் கேம் புதிய சாதனையை செய்ய உள்ளது.கொஞ்சம் காத்திருங்கள் இந்த விளையாட்டில் வரும் குட்டி பையன் கூடிய விரைவில் எல்லோரது எலக்ட்ரானிக் சாதனங்களிலும் காட்சி அளிக்க போகிறான்.

Satyameva Jayate : Child Sexual Abuse - 13th May 2012


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...