|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 August, 2011

நம்ம ஊரு தறுதளைங்க!


இனிமை பொங்கும் ஈத் பெருநாள்!



பிறையும் ... திருமறையும் ...
மேகத்திரை
பிரிந்தது....
வானில் பிறை
தெரிந்தது....
மனதில் குறை
பறந்தது...
இரவெல்லாம்
பிரார்த்திக்க
விழித்திருந்தோம்...
பகலெல்லாம்
நோன்புக்காகப்
பசித்திருந்தோம்...
இறைவன்
பார்க்கிறான் என்கிற
பயத்தில்....
இந்த பயம்
ஒரு மாதம் மட்டுமின்றி
ஆயுள் வரை
ஆட்டிப் படைக்க
வழிகாட்டு இறைவா....
நல்வழிகாட்டு...

இஸ்லாம் என்ற அரபு வார்த்தைக்கு, அமைதி, சமாதானம் என்ற பொருள்கள் உண்டு. இஸ்லாம் பிறந்து 1389 வருடங்கள் ஆகிவிட்டன. மூடநம்பிக்கைகளையும், மூடப்பழக்க வழக்கங்களைப் பற்றி பின்பற்றி வந்த ஆதி அரபு மக்களை தனியாக நின்று எதிர்த்து போராடி, இறைவன் ஒருவன், அவன் உருவமற்றவன் என்ற கொள்கையை வகுத்து இஸ்லாம் என்று பெயரிட்டு இவ்வுலகத்திற்கு தந்தவர் முகமது நபி (ஸல்) ஆவார். இன்று இக்கொள்கையை உலகத்தின் பல்வேறு பாகங்களில் இருக்கின்ற 157 கோடி மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். உலகத்தின் மொத்த ஜனத்தொகை 680 கோடியில். 23 சதவீதம் முஸ்லிம்கள். இந்தியாவின் மொத்த ஜனத்தொகையில் 18 கோடி மக்கள் இஸ்லாமியர் என்று நீதியரசர் சாச்சார் கமிட்டியின் அறிக்கை கூறுகிறது. இஸ்லாம் ஒரு பெரிய மாளிகை. இந்த  மாளிகையை ஐந்து கொள்கைகள், ஐந்து தூண்களாக நின்று தாங்கிக் கொண்டிருக்கின்றன. அவையாவன 1. ஆண்டவன் ஒருவன். அவனை அல்லாஹ் என்று அழைக்கிறோம். அல்லாஹ்வின் திருத்தூதர் முகமது நபி (ஸல்)
2. ஐந்து நேரம் தொழ வேண்டும்.
3. ரம்ஜான் மாதம் 30 நாட்களும் நோன்பு வைக்க வேண்டும்.
4. ஒவ்வொரு முஸ்லிமும் தன் வருமானத்தில் இரண்டரை சதவீதம் ஆண்டுதோறும் கண்டிப்பாக தர்மம் செய்ய வேண்டும்.
5. முஸ்லிம்களில் முடிந்தவர்கள் வாழ்நாளில் ஒரு தடவையாவது மெக்கா சென்று காபாவை தொழுது வரவேண்டும்.

இஸ்லாத்திலும், மற்ற சமயங்களைப் போல 12 மாதங்கள் உண்டு. ஒரு மாதம் 29 இரவுகளைக் கொண்டது. சந்திரனின் சுழற்சியை வைத்து கணக்கிடப்பட்டிருக்கிறது. மேற்சொன்ன சந்திர இயக்க மாதங்களில் 9வது மாதமான ரம்ஜான் மிகச் சிறந்த மாதமாகும். இந்த மாதத்தில் தான் இஸ்லாமியர்களின் திருமறையான புனித குர்ஆன் சொர்க்கத்திலிருந்து பூமிக்கு மனிதனின் வழிகாட்டியாக இறங்கியது என்பர். ரம்ஜான் என்றால் எரி என்று பொருள்.  ரம்ஜான் மாதம் மிகவும் சூடான (காய்ந்து எரியும்) மாதம். அதுமட்டுமல்லாது மனிதர்கள் அதுவரைக்கும் செய்த பாவங்களை எரித்துவிடும் என்றும் சொல்வர். ரம்ஜான் மாதத்தை ரமலான் என்றும் ரமதான் என்றும் சொல்லலாம். இந்த மாதத்தின் கடைசி 10 நாட்கள் சிறப்புடையதாகக் கருதப்படும். ஏனென்றால் இந்த 10  நாட்களில் ஏதோ ஒரு இரவில் தான் திருக்குர் ஆனை அல்லாஹ் சொர்க்கத்திலிருந்து பூமிக்கு இறக்கினான் என்பர்.குர்ஆன் என்ற அரபு வார்த்தைக்கு படி என்று பொருள். ரம்ஜான் நோன்பு முடிந்த அடுத்த பெருநாள் என்றும், ஈத் பெருநாள் என்றும் சொல்வர். புத்தாடை உடுத்தி, பலகாரங்களும், உணவு வகைகளும் செய்து, நண்பர்களுடன் கூடி உண்டு மகிழ்வர். உற்றார் உறவினர், நண்பர்கள் ஒன்று சேர்ந்து கட்டி அணைத்து (முலாக்கத்) மகிழ்வர். ஏழை எளியவர்களுக்கு தர்மம் செய்வர். மாற்று மதத்தினரையும் இனத்தவரையும் வீடுகளுக்கு அழைத்து விருந்து கொடுப்பர். அரபு நாடுகளில் முஸ்லிம் அல்லாதவர்களும் கூட, இன்னொருவரைப் பார்க்கும்போது சலாம் அலைக்கும் என்பர். அதன் பொருள் உங்களிடம் அமைதி உண்டாகட்டும்என்பதாகும். இஸ்லாம் அமைதிக்காகவும்,

சமாதானத்திற்காகவும் சகோதரத்துவத்திற்காகவும் நிற்கின்ற மார்க்கம். இங்கே வன்முறைக்கும் பயங்கரவாதத்திற்கும் இடமில்லை. இவ்விதச் செயல்களில் இஸ்லாத்திற்கு உடன்பாடில்லை. மார்க்கத்தில் இஸ்லாமியர், தேசத்தில் இந்தியர், இந்தியா நமது நாடு என்ற உணர்வோடும், குர்ஆனில் வலியுறுத்தி சொல்லப்படுகின்ற லக்கும் தீனுக்கும் வலியதீன் அதாவது அவர்களுக்கு அவரவர் வழி என்ற இலக்கணத்திற்கு உதாரணமாக இஸ்லாமியர்கள் திகழ்கிறார்கள்.

வாய்குள்ளே ஒரு வாட்டர் பால்ல்ஸ்!


ராகுல் ஒரு தத்தி !


வால் டிஸ்னியின் குறும்படம்! PRESTO...


உறவு இனிக்க பேசுங்க!

வகிக்கிறது பேச்சு. குறிப்பாக ஆண் - பெண் காதல் உறவில் அன்பை பெருக்குவது மட்டுமல்ல... வெறுப்பை அடர்த்தியாக்குவதும் அதே பேச்சுதான்.

ஒருவரை 'விமர்சனம் செய்யும்போது அதை அவரது மனம் புண்படாதவாறு இனிமையுடன் கூறவேண்டும் என்பதையே வள்ளுவர் 'கடிதோச்சி மெல்ல எறிக’ என்று கூறியுள்ளார். இனிய உறவுகளுக்கான தாரக மந்திரமாகவும் இதைச் சொல்லலாம். கனி போல இருக்கும் இனிய சொற்களை விடுத்து காய்போல பேச்சுக்களை பேசுவதாலே திசைக்கொருவராக சிதைந்து கடைசியில் யாருமற்றவர்களாக நிற்க நேரிடுகிறது.

அன்பை விதைக்கலாம்: பேச்சு என்பது உறவுகளுக்குள் அன்பை விதைக்க வேண்டும். ஆனால் ஒருசில குடும்பங்களில் உறவை சிதைக்கிறது. எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவது, குதர்க்கமாகப் பேசுவது, குத்திக்காட்டுவது, எரிச்சல் வரவழைக்கும்படி பேசுவது என்பது பல தம்பதிகளுக்கு இயல்பான குணமாக இருக்கிறது. அதுவும் ஆணாதிக்க சிந்தனை கொண்ட பல ஆண்களுக்கு, 'பெண்கள் நம் அடிமைகள்' என்கிற நினைப்பு இருப்பதால்... பெண்களிடம் கனிவுடனோ, அன்புடனோ பேசுவதே இல்லை. இத்தகையோரிடம் பெண்களுக்கு பயம் ஏற்படுமே தவிர... உன்னதமான அன்பு இருக்கவே முடியாது!

பெண்களும் இதற்கு விதி விலக்கு இல்லை முள் குத்துவது போல் பேசும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் அன்பின் ரகசியம் அறியாதவர்கள். காதலின் மகத்துவம் தெரியாதவர்கள். இயந்திரம் போல் வாழ்க்கை நடத்தும் ஜீவன்கள் இவர்கள்.

இதயங்கள் பேசவேண்டும்: இதயங்கள் பேசிக் கொள்ளாமல் வெறும் உதடுகள் மட்டும் பேசிக் கொண்டால்... விளைவுகள் மோசமாகத்தானே இருக்கும்! பொதுவாகவே கணவன்-மனைவி இருவரிடையேயான உரையாடல்கள், ஆண்டுகள் செல்லச் செல்லக் குறைகின்றன என்றுதான் ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.

பேச வேண்டிய எல்லாவற்றையுமே முதல் சில ஆண்டுகளிலேயே பேசி முடித்து விடுகிறார் களாம். அதற்குப் பின் பேசுவதற்கு பொதுவாக ஏதுமில்லாமல் போகிறது. குடும்பப் பொறுப்புகள், குழந்தைகள் கடமை, சொத்து வாங்குவது, உறவினர்களுடன் பழகுவது, விழாக்களில் கலந்து கொள்வது, முதலீடுகளில் ஈடுபடுவது என்று நடுத்தரப் பருவத்தில் வாழ்க்கை இயந்திரமயமாகிப் போகிறது. அதற்குப் பின் வெறும் பாதுகாப்புக்காகவே இணைந்து வாழ்வதாகச் சொல்கிறது அந்த ஆராய்ச்சி முடிவு.

சுவாரஸ்யமான உரையாடல்கள்தான் தம்பதியர்களுக்கிடையே நாளுக்கு நாள் உறவை செம்மைப்படுத்துகின்றன. வீடு, குடும்பம் இவற்றைத் தவிர பிற உலக நடப்புகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தால் பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் கிடைக்கும். இசை, இலக்கியம், சினிமா, அரசியல், விளையாட்டு, சமூகம் என்று ஆயிரம் விஷயங்கள் பேசுவதற்கு இருக்கின்றன. ஆனால், அதைப் பற்றி எல்லாம் பேச பெரும்பாலானோருக்கு விருப்பம் இல்லை. இன்கிரிமென்ட் பற்றியும், நகை வாங்குவது பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டு, பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு பேச்சுவார்த்தை என்பதே நாளடைவில் போரடித்துப் போகிறது.

அன்பை புரியவைக்கும் பேச்சு: அளவுக்கு மீறின அன்பு தான் எப்போதும் சந்தேகங்களை உருவாக்கும். எனவே சந்தேக விதை உருவாகாமல் தடுப்பது இருவரின் கடமை. அலுவலகத்தில் இருக்கும் நட்பு வட்டாரத்தை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்வது சிறந்தது. இல்லையென்றால் சாதாரண தொலைபேசி உரையாடல் கூட இருவரின் பிரிவுக்கு காரணமாக அமைந்துவிடும்.

புரிதலின்மையால் தோன்றும் சிக்கல்: புரிதல் என்பது தம்பதியருக்கிடையே இருக்கக் கூடிய மிக முக்கியமான ஒன்று. ஒருவருக்கொருவர் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும்போது பேச்சின் விபரங்களை சரியாக புரிந்து கொண்டாலே பாதி பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம். இன்றைய சூழலில் எதையுமே அரைகுறையாக புரிந்து கொண்டு விடுவதே பிரிவினைக்கு காரணமாகிறது. வாழ்க்கை இப்படித்தான் செல்ல வேண்டுமா? கணவன் - மனைவி உறவு என்பது வெறும் கடமை போல் ஏன் குறுகி ஒரு கட்டத்தில் அது முறிந்து விடுகிறது. எனவே மனம் விட்டு பேசுவோம். வீண் மன உளைச்சல்களையும், கண்ணீரையும் தவிர்ப்போம்.

சட்ட பாடத்திட்டத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு கோரிக்கை!


சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட நீதிபதி மார்கண்டேய கட்ஜு, சட்டப் பல்கலையில் பயிலும் மாணவர்களிடம் சில படிப்பு சார்ந்த கேள்விகளைக் கேட்டார். அதற்கு மாணவர்கள் சரியான பதில்களை அளிக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து பேசிய கட்ஜு, இந்தியாவில் உள்ள சட்டக் கல்வி மிகவும் பழமையானதாக உள்ளது. அதை மாற்றும்படி அகில இந்திய பார் கவுன்சில் தலைவரிடம் கூறியுள்ளேன். ஆனால் இன்னும் அதை மாற்றவில்லை.
நடைமுறைக்கு உதவும் வகையில் படிப்பு இருக்க வேண்டும். புத்தகத்தை வைத்துப் படித்து தேர்வு எழுதும் கல்வி முறை வாழ்க்கைக்கு உதவாது.
அமெரிக்காவில் பல சட்ட முகாம்கள் நடததப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜராகும் தகுதியை உருவாக்கிய பிறகே மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியேறுகின்றனர்.சட்ட நடைமுறைக்குத் தேவையான சில அடிப்படை விஷயங்கள் கூட இங்குள்ள சட்ட மாணவர்களுக்கு தெரியவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். 

கலியுகம் எப்போது முடியும்?

கலியுகம் முடிய இன்னும் 4,26,896 ஆண்டுகள் உள்ளன. அப்போது உலகம் முழுமையாக இருக்காதாம். இப்போது கலியுகத்தின் 5104ம் ஆண்டு தான் நடக்கிறது. மொத்தம் 4,32,000 ஆண்டுகள். இப்போதே கலியுகத்தின் கொடுமை எல்லை மீறி போய் விட்டது. இனி காட்டுவாசிகள் போல நாகரீகமற்று போய் விடும் அந்த பழைய காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த யுகத்தின் முடிவில் தர்மத்தை நிலைநாட்ட திருமால் கல்கி அவதாரம் எடுப்பாரென்று புராணங்கள் கூறுகின்றன. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்.

இதே நாள்...


  • இந்திய தேசிய விளையாட்டு தினம்
  •  செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் வார்க்கப்பட்டது(708)
  •  மைக்கேல் ஃபாரடே,மின்காந்தத் தூண்டலை கண்டுபிடித்தார்(1831)
  •  கோட்லீப் டாயிம்லர், மோட்டார் சைக்கிளுக்கான காப்புரிமத்தை பெற்றார்(1885)
  •  குட்இயர் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது(1898)
  • நாளைய அரசே! விஜய் ரசிகர்கள்!!


    கருணை மனு மேதகு குடியரசுத் தலைவர் அவர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்த வித அதிகாரமும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை ஜெயலலிதா!


    29.8.2011 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண். 110 ன் கீழ் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் அளிக்கப்பட்ட அறிக்கை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனையை  ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இருப்பது போலவும், அந்த அதிகாரத்தை நான் பயன்படுத்தி அவர்களை காப்பாற்ற முடியும் என்பது போலவும் பேசப்படுவது சட்டத்தின்படி சரியானது அல்ல. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் சட்டங்களைத் தெரிந்து கொண்டு வேண்டுமென்றே இவ்வாறு எனக்கு அதிகாரம் இருப்பது போல சொல்லி வருகிறார்களா? அல்லது சட்டங்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் முதலமைச்சருக்கு இத்தகைய அதிகாரம் இருப்பதாக கூறுகிறார்களா? என்பது தெரியவில்லை.  

    எனவே சட்ட நிலைமை என்ன என்பதை இந்த மாமன்றத்தின் வாயிலாக பொது மக்களுக்கு தெரிவிப்பது எனது கடமை ஆகும் எனக் கருதுகிறேன்.  மரண தண்டனை குறித்த நிகழ்வுகளில் அதன் தொடர்பான கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டம் 72 ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161 ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு கூறு 257 (1) ன்படி கட்டளையிடுகிறது. 

    இருப்பினும் சூழ்நிலைகள் மாறுபட்டிருந்தாலோ அல்லது புதியதாக ஏதாவது ஆதாரம் இருந்தாலோ, மரண தண்டனை பெற்ற நபரோ அல்லது அவர் சார்பாக வேறு ஒருவரோ, குடியரசுத் தலைவரின் முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு புதியதாக ஒரு மனுவினை குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கலாம். குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னர், அது தொடர்பாக பின்னர் தாக்கல் செய்யப்படும் அனைத்து மனுக்களும் குடியரசுத் தலைவருக்கு தான் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; இது குறித்து நடவடிக்கையை குடியரசுத் தலைவர் தான் எடுப்பார்.   எனவே, பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் கருணை மனு மேதகு குடியரசுத் தலைவர் அவர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்த வித அதிகாரமும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை என்பதை வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நிலையில் எனக்கு இதற்கான அதிகாரம் இருக்கிறது என்ற பிரச்சாரத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தப் பேரவையின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.  

    குடியரசுத் தலைவர் அவர்களால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த மூவரின் உயிரைக் காப்பாற்ற தற்கொலை செய்து கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, மக்கள் மன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்த செங்கொடி என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. உணர்ச்சி வயப்பட்டு, இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் நான் கேட்டுக் கொண்டு அமைகிறேன்

    ஜிரோ கிலோமிட்டேர் குறும் படம்!

      படத்தின் ஆரம்பத்தில் இருக்கும் ஜோர் முடிவு வரை தொடர்ந்தது ஜோரான விஷயம். கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமான படமாய் அமைந்து இருக்கும்!   

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...