|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 August, 2011

சட்ட பாடத்திட்டத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு கோரிக்கை!


சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட நீதிபதி மார்கண்டேய கட்ஜு, சட்டப் பல்கலையில் பயிலும் மாணவர்களிடம் சில படிப்பு சார்ந்த கேள்விகளைக் கேட்டார். அதற்கு மாணவர்கள் சரியான பதில்களை அளிக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து பேசிய கட்ஜு, இந்தியாவில் உள்ள சட்டக் கல்வி மிகவும் பழமையானதாக உள்ளது. அதை மாற்றும்படி அகில இந்திய பார் கவுன்சில் தலைவரிடம் கூறியுள்ளேன். ஆனால் இன்னும் அதை மாற்றவில்லை.
நடைமுறைக்கு உதவும் வகையில் படிப்பு இருக்க வேண்டும். புத்தகத்தை வைத்துப் படித்து தேர்வு எழுதும் கல்வி முறை வாழ்க்கைக்கு உதவாது.
அமெரிக்காவில் பல சட்ட முகாம்கள் நடததப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜராகும் தகுதியை உருவாக்கிய பிறகே மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியேறுகின்றனர்.சட்ட நடைமுறைக்குத் தேவையான சில அடிப்படை விஷயங்கள் கூட இங்குள்ள சட்ட மாணவர்களுக்கு தெரியவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...