|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 May, 2013

மாத்தியோசி! குளுகுளு' பயணி நிழற்குடை!!

 
இந்தியாவிலேயே முதன்முறையாக, குளிர் சாதன வசதி செய்யப்பட்ட பயணிகள் நிழற்குடை, கும்பகோணத்தில் திறக்கப்பட்டுள்ளது.கும்பகோணம் நகரில், 20க்கும் மேற்பட்ட இடங்களில், பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடைகள் நகராட்சியால் பாராமரிக்கப்படுகிறது. கும்பகோணம் மொட்டைகோபுரம், ரயில்வே ஸ்டேஷன் மேம்பாலம், நால்ரோடு உள்ளிட்ட, பத்து இடங்களில் உள்ள நிழற்குடைகளை, குளிரூட்டப்பட்ட நிழற்குடையாக மாற்ற கடந்த நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இதில், முதற்கட்டமாக, கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில், நால்ரோடு அருகே, அதிக அளவில் பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்து பயணம் செய்வதால், அந்த இடத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி சார்பில், 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குளிரூட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையில், கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுளளது. நகராட்சி அலுவலகத்தில் இருந்தபடி, இந்த நிழற்குடையை கண்காணிக்க முடியும்.மேலும், பொது தொலைபேசியில் காசு போட்டு பேசும் வசதி, கணினி மூலம், பிறப்பு, இறப்பு சான்றிதழை டவுன்லோடு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளன. பயணிகள் நிழற்குடையின் ஒரு பகுதியில், சிட்டி யூனியன் வங்கியின், ஏ.டி.எம்., பொருத்தப்பட்டுள்ளது.

பயணிகளை கவரும் வகையில், கும்பகோணத்தில், "ஏசி' வசதியுள்ள நிழற்குடை அமைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில், சாதாரண நிழற்குடைகளை கூட, தேவைக்கேற்ப அமைக்காமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது.சென்னை மாநகராட்சி பகுதியில், மெட்ரோ ரயில் பணி, சாலை விரிவாக்கம் உள்ளிட்ட, பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக, பெரும்பாலான நிழற்குடைகள் அகற்றப்பட்டன. இதையடுத்து, சென்னை முழுவதும், 1,035 நவீன நிழற்குடைகள் அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டது.இதற்காக, கட்டுதல், பராமரித்தல், ஒப்படைத்தல் முறையில், நவீன நிழற்குடைகள் அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது. கோடையை கருத்தில் கொண்டு, பொது நிதியில் இருந்து, 200 நிழற்குடைகளை அமைக்க, மாநகராட்சி முடிவு செய்து, அந்த பணியும் பெரிதாக துவங்கவில்லை.இதனால், பெரும்பாலான பயணிகள், "வானமே நிழற்குடை' என, சுட்டெரிக்கும் வெயிலில் தவிக்கின்றனர். சாதாரண நிழற்குடைகளை விரைவில் அமைப்பதோடு, மற்ற மாவட்டங்களுக்கு வேண்டும் என, பயணிகள் தரப்பில் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

1,21,653 சஹாரா ஊழியர்கள் கின்னஸ் சாதனை!1,21,653 இந்திய ஊழியர்கள் இணைந்து தேசியகீதம் பாடி கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர். இதற்கு முன்னர் 42,813 பேர் ஒன்று கூடி தேசீய கீதம் பாடப்பட்ட பாகிஸ்தான் சாதனை இதனால் முறியடிக்கப்பட்டுள்ளது. சகாரா நிறுவனத்தின் தலைவர் சுப்ரதோ ராய் தலைமையில், உத்திரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் முன்தினம் சகாரா நிறுவனத்தாரின் சாதனை முயற்சியாக 1,21,653 ஊழியர்கள் இணைந்து இந்தியாவின் தேசியகீதத்தை ஒருங்கிணைந்து பாடினார்கள். நமது தேசிய கீதத்தை உருவாக்கிய ரபிந்தரநாத் தாகூரின், 152ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நோக்கில் நடைபெற்றது இந்த முயற்சி. இதுவரை 42,813 பாகிஸ்தானியர்கள் சேர்ந்து தங்கள் நாட்டின் தேசியகீதத்தை இசைத்ததுதான் கின்னஸ் சாதனையாக இருந்து வந்தது. தற்போது நடந்த இந்த நிகழ்ச்சியை கின்னஸ் சாதனைக் குழு மேற்பார்வையிட்டு கின்னஸில் இடம்பெற சம்மதம் தெரிவித்துள்ளது. எனவே, இனி இந்த நிகழ்ச்சியே சாதனை நிகழ்ச்சியாக அறிவிக்கப் பெறும். இந்த சாதனை குறித்து சகாரா நிறுவனத் தலைவர் சுப்ரதோராய் கூறியது  'தேசிய கீதத்தை ஒருங்கிணைந்து பாடுவதில் பாகிஸ்தான் நாடு முன்னணியில் இருக்கிறது என்பதனை அறிய வந்தபோது, நமது நாட்டினர் இந்த சாதனை முயற்சியில் முதலிடத்தில் இருக்கவேண்டும் என்று எண்ணி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம். மேலும், இதற்காக ஒரு குழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியபோது எங்களின் சாதனை நிகழ்ச்சி எந்தத் தடையுமில்லாமல் நிறைவேற்றப்பட்டது என  கூறினார்.


கருப்பை வெளுப்பாக்கலாம்!


எலுமிச்சை சாறு சாதாரணமாகவே எலுமிச்சை சாறு ப்ளீச்சிங் தன்மை நிறைந்தது. அத்தகைய எலுமிச்சை சாற்றினை சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவி, ஏதேனும் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இல்லையெனில் அவை வறட்சியை உண்டாக்கிவிடும். குறிப்பாக, இந்த முறை சிலருக்கு அழற்சியை ஏற்படுத்தும். எனவே பரிசோதித்து பின்னர் செய்வது நல்லது. 


வெள்ளரிக்காய் குளிர்ச்சியைத் தரும் பொருட்களில் ஒன்று. மேலும் இது ஒரு ப்ளீச்சிங் பொருளும் கூட. இதனை சாறு எடுத்து, அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து, சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், அழகான சருமத்தைப் பெறலாம்.

ஓட்ஸ் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், 1 டேபிள் ஸ்பூன் தயிர், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து, வேண்டுமெனில் தண்ணீரையும் சேர்த்து, முகத்தில் தடவி காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவி, மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.

தயிர் சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்களுக்கு, ப்ளீச் செய்வதற்கு தயிர் ஒரு சிறத்த பொருள். அதற்கு தயிரை சருமத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனை தினமும் செய்தால், சருமம் அழகாக இருப்பதோடு, வெள்ளையாக பொலிவோடும் காணப்படும்.

பால் பாலை ஒரு பஞ்சில் நனைத்து, முகத்தில் தடவி, காய வைத்து, கழுவி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவோடு ஜொலிக்கும்.

தக்காளி சென்சிட்டிவ் சருமத்திற்கு தக்காளி ஒரு சிறந்த ப்ளீச்சிங் பொருள். அதற்கு தக்காளியை அரைத்து, அதனை சருமத்தில் தடவி, காய வைத்து, குளிர்ச்சியான நீரில் அலச வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

ஆரஞ்சு தோல் மற்றும் பால் ஆரஞ்சு பழத்தின் தோலை காய வைத்து, பொடி செய்து, அதனை பாலுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கருப்பாக இருக்கும் உடலின் பிற பகுதிகளில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமமும் பொலிவோடு காணப்படும்
.


பிரீமியர் ஷோவுக்கு கலக்கல் கவர்ச்சியாக வந்த மிஸ் யுனிவர்ஸ்!இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த ஹாலிவுட் படமான தி கிரேட் காட்ஸ்பி படத்தின் பிரீமியர் ஷோவுக்கு பிரா கூட போடாமல் கலக்கல் கவர்ச்சியாக வந்து பரபரப்பை ஏற்படுத்தினார் 2012ம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றவரன ஒலிவியா கல்போ. லியானோர்டோ டி காப்ரியா நாயகனாக நடித்துள்ள படம்தான் தி கிரேட் காட்ஸ்பி. இப்படத்தில் அமிதாப்பும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பிரிமீயர் ஷோ நியூயார்க்கில் நடந்தது. அதில்தான் மிஸ் யுனிவர்ஸ் ஒலிவியோ செம கலக்கலான டிரஸ்ஸில் வந்திருந்தார்.


மே 8ம் தேதி ஆஸ்துமா நோய் விழிப்புணர்வு தினம்.பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் அவர்களை ஆஸ்துமா நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம் என்று ஆய்வு ஒன்றின் மூலம் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். சின்னஞ்சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை தாக்கும் நோயாக ஆஸ்துமா உள்ளது. தூசு, குப்பை, காற்றுமாசு போன்றவைதான் ஆஸ்துமாவிற்கு காரணமாக கூறப்படுகிறது. நம்முடைய சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் ஆஸ்துமாவில் இருந்து குடும்பத்தை பாதுகாக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். ஆஸ்துமா நோய் விழிப்புணர்வு தினம் மே 8ம் தேதி உலக அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் ஆஸ்துமாவினால் ஏற்படும் ஆபத்துக்களையும், அதை தவிர்க்கும் வழிமுறைகளையும் தெரிந்து கொள்வோம்.

ஆஸ்துமா என்பது கிரேக்க வார்த்தையாகும். இந்த நோயை இரண்டாம் நூற்றாண்டில் அரேசியஸ் என்ற மருத்துவர் கண்டுபிடித்தார். இதன் பொருள் மூச்சுவிடுவதற்கு சிரமம் என்பதாகும். மனிதனுக்கு ஏற்படும் பல்வேறு கொடிய நோய்களுள் ஆஸ்துமாவும் ஒன்று. மூச்சிறைப்பு நோய் என்று வர்ணிக்கப்படும் ஆஸ்துமா மிகுந்த சிரமத்தை தரக்கூடியது. குளிர்காலங்களில் இந்த நோயின் தாக்கம் இரட்டிப்பாகும். மூச்சுக்குழல் பாதையில் உள்ள மூச்சுக் குழாய்கள் சுருங்கி சுவாசிப்பதற்கு சிரம்படுவதே ஆஸ்துமா. பல்வேறு காரணிகளால் இந்நோய் ஏற்பட்டாலும் பெரும்பான்மையாக கூறப்படும் காரணம் அலர்ஜிதான். உலக அளவில் 10 கோடி பேர் ஆஸ்துமா நோய் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். பெரியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளையும் ஆஸ்துமா நோய் அதிக அளவில் தாக்குகிறது. இந்தியாவில் 10 சதவீத குழந்தைகள் ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டுள்ளனர். 51 சதவீத மக்கள் இந்த பிரச்சனையால் வேதனையை அனுபவித்து வருகின்றனர்.

உடலுக்கு ஏற்றுக்கொள்ளாத உணவுப் பொருட்கள் , தூய்மையற்ற காற்று , புகை போன்றவை உள்ளே செல்வதால் திசுக்களில் இருந்து புரோகைடின் , கைமின் போன்ற பொருட்கள் வெளிப்பட்டு மூச்சுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்துக்கின்றன. மூச்சுக்குழாயில் ஏற்படும் அடைப்பு காரணமாக மூச்சு விடுவதில் மனிதர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இந்த நோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களை தவிர்த்தல் வேண்டும். தூய்மையான காற்றை சுவாசித்தல், நீரை காய்ச்சி குடிக்க வேண்டும், பருத்தி ஆடைகளை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.படுக்கை அறை தலையணைகளில், போர்வைகளில் அலர்ஜி ஏற்படுத்தும் நுண்ணியிரிகள் இருக்கலாம். எனவே அவற்றை அடிக்கடி நன்றாக அலசி, துவைத்து காயப்போட்டு உபயோகிக்கவேண்டும்.

வாக்குவம் கிளீனர் கொண்டோ அல்லது தூசியை நீக்கும் பொருட்களைக் கொண்டோ நன்றாக வீட்டை சுத்தம் செய்வது அவசியம். இதனால் தூசி, அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களை வெளியேற்றலாம். நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் மூலம் அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு அதிகம் எனவே செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்ப்பதை தவிர்க்கலாம். அதேபோல் ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிகரெட் புகை அலர்ஜி ஏற்படுத்தக்கூடியது. எனவே வீட்டில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா பாதிப்பு இருந்தால் புகைப்பதை தவிர்ப்பது நலம். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. குறைந்த பட்சம் 6 மாதம் வரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பு குறைவு என்கின்றனர் மருத்துவர்கள். எனவே உங்கள் செல்லங்களை ஆஸ்துமா நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க தாய்ப்பால் கொடுப்பது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள். சரியான நேரத்தில் தவறாமல் மருந்துகளை எடுத்துக் கொள்வதும், அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்களை தவிர்ப்பது போன்றவை நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயல்முறைகள் ஆகும். எனவே கொடிய நோயான ஆஸ்துமாவில் இருந்து வருங்கால சமுதாயத்தை காக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதும் அவசியமாகும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...