|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 February, 2013

திருமணத்தையே கேலி! கனிமொழி!!


காதலர் தினத்தில் நாய்க்கும், நாய்க்கும் திருமணம் செய்து வைப்பதன் மூலம், திருமணத்தையே கேலி செய்கின்றனர்,'' என, தி.மு.க., ராஜ்யசபா, எம்.பி., கனிமொழி பேசினார்.சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கத்தின் சார்பில், "வன்மத்தில் கறைபடுமோ காதல்' என்ற தலைப்பில், திறந்தவெளி கவியரங்கம், சென்னையில் நேற்று நடந்தது.கவியரங்கத்திற்கு, கவிஞர் வாலி தலைமை வகித்து பேசியதாவது:காதல் திருமணத்தால் தான், ஜாதி ஒழிக்க முடியும். நானும் காதல் திருமணம் செய்தவன் தான். காதல் எதிர்ப்பு என்பது, அர்த்தமற்ற செயல். இஷ்டப்பட்டு கஷ்டப்படுவது தான், காதல். உடல் கவர்ச்சியில் வருவது, காதல் அல்ல; ஆன்மாவை தொடுவது தான், காதல். என் அண்ணனின் மகள், ஒரு பையனை காதலித்தாள். அண்ணன் குடும்பத்தினர், காதலை எதிர்த்தனர். அந்த பையன் என்னிடம் வந்து, "நீங்கள் தான் எங்கள் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும்' என்றான். "அந்த பையன், நல்ல பையனாக இருக்கும் போது, ஏன் எதிர்க்க வேண்டும்' என, அண்ணனிடம் கேட்டேன். ஒரு வழியாக அவரை சம்மதிக்க வைத்து, அந்த திருமணத்தை, நான் தான் நடத்தி வைத்தேன்.இன்னொரு திருமணத்தில், மணப்பெண், பிராமணர் குடும்பத்தை சேர்ந்தவர். மணமகன் யார் என்றால், இளையராஜா மகன் யுவன் சங்கர்ராஜா. இளையராஜா என்ன ஜாதி என, எல்லாருக்கும் தெரியும். காதலுக்கு ஜாதி இல்லை என்பதை, என் குடும்பத்தில் நடந்த திருமணமே ஒரு எடுத்துக்காட்டு.இவ்வாறு வாலி பேசினார்.
 
தி.மு.க., ராஜ்யசபா கனிமொழி பேசியதாவது: காதலர் தினத்தை, போர்க்களமாக, அரசியல் கட்சிகள் மாற்றியுள்ளன. ஆனால், காதலர் தினத்தை, கவிஞர்கள் ஒன்று சேர்ந்து, சமூக நீதி களமாக மாற்றியுள்ளனர். ஜாதியை பார்க்காமல் வருவது தான், காதல். காதலர் தினத்தில் நாய்க்கும், நாய்க்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். மிருகங்கள் என்ன பாவம் செய்தன? காதலை கொச்சைப்படுத்துவதாக கூறி, திருமணத்தையே கேலி செய்கின்றனர்.எதற்காக போராட்டம் நடத்துகிறோம் என்ற தெளிவு இல்லாமல், சில அரசியல் கட்சிகள், குழப்பத்தோடு போராட்டத்தை நடத்துகின்றன. அந்தக் கட்சிகளின் கொள்கைள் நீர்த்துப் போய்விட்டன. விலை போவதற்கு பையில் ஒன்றுமில்லை. அதனால் தான் இளைஞர்களுக்கு எதிராக காதல் எதிர்ப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். தமிழகத்தை கூறு போட நினைக்கும் கட்சிகளை இந்த சிறுகுரல் பற்றி எரிந்து பொசுக்கும். ஜாதி வேண்டும் என, குறிப்பிட்ட பெரிய சக்திகள் தலை தூக்கியுள்ளது. அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

சமையலும் யாகம் செய்வது போலதான்!


வீட்டில் உணவு சமைக்கும் போது சுகாதாரத்துடன் மட்டுமின்றி, பக்தி உணர்வுடன் சமைக்க வேண்டியதும் அவசியம். உணர்வு அலைகளுக்கு அதிக சக்தி உண்டு என்பதால், சமைக்கும்போது ஒரு யாகம் செய்வதுபோல, பக்தி உணர்வோடு- நல்ல எண்ணங்களோடு சமைக்க வேண்டும் ஏனென்றால் சாப்பிடும் உணவுதான் குருதியாகி பின் உணர்வுகளுக்கும் காரணமாகிறது. பொது இடங்களிலும் வீட்டிலும் எங்கு சமைத்தாலும் இதைக் கடைப்பிடித்தால் நல்லது இப்படி சமைக்கும்போது உணவில் உள்ள தோஷங்களை, பக்தி உணர்வு நீக்கிவிடும். அதுவும் திருமணம் மற்றும் பலபேருக்கு சமைக்கும் இடங்களை ஒரு யாகசாலைபோலதான் கருதவேண்டும் சமைப்பவர்களும் ஒரு ஹோமத்தை நடத்துபவர்கள் போலத்தான். உணவு விடுதிகளில் நல்ல உணர்வுகளுடன் சமைப்பவர்கள் சமைத்தால், உண்பவர்களது உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். மனஉணர்வுகளும் சீராக இருக்கும். சிலர் சமைப்பதை ஆயிரம் பேர் சாப்பிடுகிறார்கள் என்றால் எவ்வளவு புண்ணிய காரியம். எனவே சமையல் மூலமாகவும் உணவு மூலமாகவும் பக்தி உணர்வை வளர்க்க முடியும். நல்ல குணத்தோடு பக்தி உணர்வை வளர்க்க வளர்க்க, அது நம்மை எப்போழுதும் நல்லவனாக இருக்கச் செய்யும் யுத் பாவம் தத் பவதி நீ எதை நினைக்கிறாயோ, உணர்கிறாயோ அதுவாய் ஆகிறாய் என்பது வேதக்கூற்று.

இப்ப எல்லாருமே வருங்கால முதல்வர் தான்!

 
நண்பர்களுக்குள் போஸ்டர் அடித்து வாழ்த்து தெரிவிப்பது என்பது இன்றைய கலாச்சாரமாகி விட்டது. அடிக்கும் போஸ்டரில் தவறாமல் வருங்கால முதல்வரே என்று வாசகம் இடம் பெறுவதும் வாடிக்கையாகி விட்டது.

ரஷ்யாவில் எரி நட்சத்திரம் விழுந்து 500 பேர் படுகாயம்!



மிகப் பெரிய விண்கல் (asteroid) ஒன்று இன்று பூமியை கடக்க இருக்கும் நிலையில் ரஷ்யாவின் வான்வெளியில் எரி நட்சத்திரம் (meteorite) ஒன்று விழுந்தது. இதன் அதிர்வலைகளால் வீட்டு கண்ணாடிகள் உடைந்தும் மேற்கூரைகள் விழுந்தும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1,500 கிலோ மீட்டர் தொலைவில் யுரால் பகுதியில் உள்ள ஒன்று செல்யபின்ஸ்க் என்ற இடத்தில் இன்று மிகப் பெரிய எரிநட்சத்திரம் விழுந்து வெடித்துச் சிதறியது. அப்போது நிலநடுக்கத்தைப் போல மிகப் பெரிய அதிர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. வானிலிருந்து பயங்கர வேகத்தில் தரையை நோக்கி பாய்ந்து வந்த இந்த நட்சத்திரம் தரையை நெருங்கும்போதே வெடித்துச் சிதறியது. அப்போது மிக பயங்கரமான வெடிச் சத்தம் எழுந்தது. அதைத் தொடர்ந்து பெரிய அளவில் தீப் பிழம்பு எழுந்ததோடு கடும் அதிர்வும் உண்டானது. இந்த வெடிப்பின்போது பல வீடுகளின் கூரைகள் நொறுங்கி விழுந்தன, ஏராளமான வீடுகளின் ஜன்னல்கள் வெடித்துச் சிதறின. தொலைத் தொடர்பு சேவைகளும் அறுந்துவிட்டன.


முயற்சி திருவினையாக்கும்!

இந்த காலத்தில் நம் கீழ் வேலை பார்ப்பவர்கள் யாராவது அந்த நிலையை விட்டு உயர்ந்தாலே பொறாமைப்படும் நம்மைப் போன்றவர்களுக்கு மத்தியில் , தன் வீட்டில் வேலை பார்த்த ஒரு செக்யூரிட்டி,  ஹீரோவாக உயர்ந்ததை பாராட்டினார் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர்.செக்யூரிட்டியாக இருந்து இன்று ஹீரோவாக உயர்ந்து பாலசந்தரால் பாராட்டப்பட்டவர் ‘கல்லாப்பெட்டி’ படத்தின் ஹீரோ அஸ்வின் பாலாஜி.கல்லாப்பெட்டி படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. இசையை வெளியிட்டு பாராட்டிப் பேசிய பாலசந்தர் தான் மேற்சொன்ன ஆச்சரியமூட்டும் தகவலை தெரியப்படுத்தினார்.

என் வீட்டில் 6 ஆண்டுகளுக்கு முன் செக்யூரிட்டியாக வேலை பார்த்தவர்தான் இந்த அஸ்வின் பாலாஜி. நான் வரும் போதெல்லாம் எழுந்து நின்று வணக்கம் வைப்பார், எப்போதும் எதையாவது எழுதிக் கொண்டேயிருப்பார். அப்படி என்னதான் எழுதுகிறார் என்று வாங்கிப் பார்ப்பேன். கவிதைகள் எழுதியிருப்பார். அப்படி அவருக்குள் ஒரு திறமை இருந்ததை நானும் பார்த்தேன். அதன் பின் அவர் என் வீட்டில் வேலை செய்யவில்லை. என்னை விட  திறமைசாலியான கமல் வீட்டிற்குச் சென்று விட்டார். என் உடல் நிலை சரியில்லாத நிலையிலும் இந்த விழாவிற்கு நான் வந்ததற்கே காரணம் அவர்தான். அப்படி ஒரு திறமைசாலியானவர் இன்று  ஹீரோவாக அறிமுகமாவது மகிழ்ச்சியான ஒன்று. இன்று பல புதியவர்கள் வருகிறார்கள். நல்ல படங்களைத் தருகிறார்கள். அவர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ஆனால், நான் வந்த புதிதில் எங்களுகெல்லாம் அப்படியில்லை. பல படங்கள் எடுத்த பிறகே எனக்கு அங்கீகாரம் கிடைத்தது.

இந்த படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள், படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொள்ள ஆசை, அது வரை நான் இருந்தால் வந்து கலந்து கொள்கிறேன் ” என உணர்வு பூர்வமாக பேசி விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் கலங்க வைத்து விட்டார் இயக்குனர் பாலசந்தர். ‘முயற்சி திருவினையாக்கும்’ என்பதற்கு ‘கல்லாப்பெட்டி’ படத்தின் ஹீரோ அஸ்வின் பாலாஜி ஒரு உதாரணம்.

இன்னொரு மணியம்மையா குஷ்பு ?

"குஷ்பு இன்னொரு மணியம்மை"? கொந்தளிக்கும் உறவுகள்! என்ற தலைப்பில் திமுக தலைவர் கருணாநிதியும் நடிகை குஷ்பு மணியம்மையார் வேடத்தில் இருக்கும் படத்தை இணைத்து அட்டைப்பட கட்டுரையாக குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்ட கட்டுரை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கருணாநிதி மற்றும் குஷ்பு பற்றிய இந்த கட்டுரையால் திமுகவினரும் திகவினரும் கடும் கொந்தளிப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து குமுதம் நிறுவனத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மணியம்மையார் யார்? தந்தை பெரியார் முதுமை காலத்தில் அவருக்கு நம்பிக்கைக்குரிய உதவியாளர் ஒருவர் தேவைப்பட்டார். இதனால் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வேலூர் கனகசபை தமது மகளான அரசியல் மணியை பெரியாரிடம் உதவியாளராக சேர்த்தார். அவரே மணியம்மையார் என அழைக்கப்பட்டார். பின்னர் மணியம்மையை பெரியார் திருமணம் செய்து கொண்டார். பெரியார்- மணியம்மை திருமணத்தை ஆதரிக்காத பேரறிஞர் அண்ணா, நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறி ‘திராவிட முன்னேற்றக் கழகத்தை' 1949-ம் ஆண்டு தொடங்கினர். திமுக தொடங்கும்போது பல மூத்த திமுக தலைவர்களில் ஒருவராக கருணாநிதியும் இருந்தார். பெரியார் மறைவுக்குப் பிறகு மணியம்மையாரே திராவிடர் கழகத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அப்போதும் திராவிடர் கழகத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அண்மையில் திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலின்தான் இல்லை என்று குஷ்பு கருத்து தெரிவித்து கல்லடி வாங்க நேரிட்டது. திருச்சியில் அப்போதே குஷ்புவிடம் ‘கோபாலபுரம் வீட்டுக்கு வரக் கூடாது என்று உங்களை சொல்லியிருக்கிறார்களாமே?" என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்ப, உங்க இஷ்டத்துக்கு கேட்கிறதுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்று குஷ்புவே கூறியிருந்தார். ஸ்டாலினை குஷ்பு ஏன் எதிர்க்கிறார்? அவரை ஏன் கருணாநிதியின் வீடு இருக்கும் கோபாலபுரத்துக்கு வரக் கூடாது என்பதன் அடிப்படையில் இந்த அட்டைப் படக் கட்டுரையை குமுதம் ரிப்போர்ட்டர் 'இன்னொரு மணியம்மை?' என்று கேள்விக்குறியோடு வெளியிட்டிருக்கிறது. பெரியார் பற்றிய திரைப்படத்தில் மணியம்மையார் வேடத்தில் நடித்தவர் குஷ்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. தி.க. கடும் கண்டனம்: குமுதம் ரிப்போர்ட்டரின் இந்த கட்டுரைக்கு திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளிதழான விடுதலையில் கடும் கண்டனம் தெரிவித்து பதிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அக்கட்டுரையின் சாரம்சம்: இந்த வார 'குமுதம் ரிப்போர்ட்டர்' (21.2.2013) எனும் அக்கப் போர் இதழில், "கொந்தளிக்கும் குடும்ப உறவுகள்" என்று தலைப்பிட்டு கலைஞர் அருகில் குஷ்பு இருப்பதாக அட்டைப் படம் போட்டு "இன்னொரு மணியம்மை?" என்றும் தலைப்பிட்டுள்ளது. உள் பக்கத்தில் 3 பக்கங்களில் க(கா)ட்டுரை தீட்டப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளவைகளுக்கு தி.மு.க.- அதன் தோழர்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் அன்னை மணியம்மையாரைக் கொச்சைப்படுத்தும் "குக்கல்கள்" மரியாதையாக மன்னிப்புக் கோர வேண்டும். வாழ்வின் வசந்தங்களையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, தந்தை பெரியார் ஒருவரே இந்த இனத்தினைக் காக்கும் மீட்பர்- அவருக்குத் தொண்டு செய்து கிடப்பதே என் பணி என்று தம் வாழ்வை முற்றிலும் ஒப்படைத்த அன்னையைக் கேவலப்படுத்தும் கயமையை பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் கிஞ்சிற்றும் இல்லை. பெரியார் திரைப்படத்தில் குஷ்பு அவர்கள் மணியம்மையாராக நடித்ததால், அவர் மணியம்மை ஆகிவிட மாட்டார்- நினைவில் இருக்கட்டும்! அன்னை மணியம்மையாரை சட்டப்படிக்கான ஒரு நிலையாக திருமணம் என்ற பெயரில் இயக்கத்திற்கு ஓர் ஏற்பாட்டினைச் செய்தார் தந்தை பெரியார் என்பது நாடறிந்த உண்மை! அவரின் தந்தையாரும் திராவிடர் கழகத்தவர்- பெரியார் பெருந்தொண்டர் என்பதும் சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும். தொடக்கத்தில் அம்மா பற்றி எதிர் விமர்சனம் செய்த அறிஞர் அண்ணாவே, பிற்காலத்தில் அந்தக் கருத்தினை மாற்றிக் கொண்டார். அய்யா அவர்களிடம் நான் வந்து சேரும்போது, எனக்கு என்ன வயதோ, அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு. இப்பொழுது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன. அப்படியிருந்த அய்யாவை, கடந்த முப்பது ஆண்டுகளாகக் கட்டிக் காத்து அவரை நோயின்றி உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை மணியம்மையாரையே சேரும் என்று அண்ணா அவர்களே சொன்ன வரலாறெல்லாம் இந்தக் "கத்துக்குட்டி"களுக்குத் தெரியுமா?. "என் காயலா சற்றுக் கடினமானதுதான். எளிதில் குணமாகாது. மூத்திர வழியிலே கற்கள் இருக்கின்றன. அவை கரைய மாதக் கணக்கில் காலமாகும். ஒரு சமயம் ஆபரேஷன் (அறுவைச் சிகிச்சை) தேவையிருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் நான் பயப்படவில்லை. எதற்கும் தயாராக இருக்கிறேன். மணியம்மையார் கவனிப்பும், உதவியும் அளவிடற்கரியது என்றார் தந்தை பெரியார். (விடுதலை தந்தை பெரியார் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் 17.9.1967). அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழ வல்லோம்?- என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இத்தகைய தொண்டின் தூயத் தாயை சம்பந்தமில்லாமல் முடிச்சுப் போட்டு, மானமிகு கலைஞர் அவர்களின் குடும்பம் மற்றும் கழகத்தில் குழப்பம் ஏற்படுவதற்கு உவமானமாகக் கூறுவதைக் கழகத்தவர்கள் மட்டமல்ல; தன்மானத் தமிழர்களும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று எச்சரிக்கிறோம். நடிகைகளின் அந்தரங்க வாழ்வையெல்லாம் அலசி, பிழைப்பு என்ற ரீதியில் பத்திரிகை நடத்தவோர் யாரைப்பற்றி எழுதுகிறோம்? அவர்களின் உயர் பண்பு- பெற்றி என்னஎன்பதைப் பற்றியெல்லாம் கவனம்- கவலை கொள்ளாமல் நாய் விற்றக் காசு குரைக்காது என்ற தன்மையில் கீழ்த்தரத் தொழிலில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம். பெரியார் தொலை நோக்கோடு செய்த ஏற்பாடு நூற்றுக்கு நூறு சரிதான் என்பதை, தந்தை பெரியார் அவர்களின் மறைவுக்குப் பிறகு கழகத்திற்கு, இயக்கத்திற்கு அறக்கட்டளைக்குத் தலைமையேற்று சிறப்பாகச் செயல்பட்டு நிரூபித்துக் காட்டியவர் அன்னை மணியம்மையார். தந்தை பெரியார் நலனைக் காப்பதிலும், அவர்களின் மறைவிற்குப்பின் கழகத்தைக் கட்டிக் காப்பதிலும் கருத்துச் செலுத்தி உழைத்த அன்னையார், தன் உடல் நலம் பேணாது, 59 வயதிலேயே தன் வாழ்வை முடித்துக் கொண்ட தியாகத் தலைவரை, தொண்டின் இலக்கணத்தை- வகை தொகை அறியாமல், வக்கிரப் புத்தியோடு பொருத்தமற்ற இடத்தில் இணைத்து எழுதியது கண்டிக்கத்தக்கது. அறிவு நாணயம் இருந்தால், பண்பாடு பற்றி அக்கறை இருந்தால் குமுதம் ரிப்போர்ட்டர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். கழகத் தோழர்களே அமைதி காப்பீர்களாக! என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது.

பார்த்ததில் பிடித்தது...

எதை முதலில் தடை செய்யலாம் ஜாதி வெறியர்களே மத வெறியர்களே பதில் சொல் காதலர் தினத்தால் கற்பு கெட்டுப் போய் விடுகிறது _ ஒழுக்கம் ஓடி ஒளிந்து விடுகிறது. நமது கலாச்சாரம் சீரழிகிறது! கூடாது! கூடவே கூடாது - _ அதனைத் தடுத்து நிறுத்தியே தீர வேண்டும் என்று தண்டால், பஸ்கி எடுக்கும் ஜாதி வெறியன் ராமதாஸ் ராம்சேனா, இந்து முன்னணி வகையறாக்களுக்கு ஒரு கேள்வி?

. நவராத்திரி நவராத்திரி என்று இந்து மதத்தில் ஒன்பது நாள்கள் விழா கொண்டாடப்படுகிறதே தெரியுமா?
மூன்று நாள் சக்திக்கு (பார்வதிக்கு), மூன்று நாள் லட்சுமிக்கு, மூன்றுநாள் சரஸ்வதிக்கென்று கொலு வைத்துக் கும்மாளம் அடிக்கிறார்களே -_ அந்த ஒன்பது நாள்களில் நடக்கும் அசிங்கம், ஆபாசம் பற்றி அறியுமா இந்த இந்து முன்னணி சங்பரிவார் வட்டாரம்? மும்பையையே கதிகலங்க வைக்கும் இந்தக் கொண்டாட்டங்கள் மாலையில் தொடங்கி நள்ளிரவில் களை கட்டும். இவற்றில் 50 லட்சம் பேர் பங்கேற்று ஆட்டம் பாட்டத்தில் ஜமாய்ப் பார்கள். இவர்களில் 90 சதவிகிதம் பேர் இளை ஞர்கள், இளம் பெண்கள். வழக்கமாக இரவில் நீண்ட நேரத்துக்கு வெளியே இருக்க இளம் பெண்களைப் பெற்றோர் அனுமதிப்பதில்லை. ஆனால் தசரா கொண்டாட்ட சீசன் முழுதும் இந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவதால் நள்ளிரவு இரண்டு அல்லது மூன்று மணி வரைகூட இளம்பெண்கள் வெளியே நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுண்டு.

இந்தக் கொண்டாட்டங்களின் போது இளசுகளிடையே ஆண், பெண், தெரிந்தவர், தெரி யாதவர், நல்லவர், கெட்டவர் என்ற வித்தியாசங் கள் பார்க்கப்படுவதில்லை. நடன நிகழ்ச்சிகளில் ஆண்களுடன் இளம் பெண்கள் கைகோத்து ஆடுவதும் கச்சேரிகளில் ஆடிப் பாடுவதும் சகஜம். இதனால் இரவில் நீண்ட நேரம் வெளியில் தங்கும் இளம் பெண்கள் அவர்களது காதலர்களுடன் ஊர் சுற்றுவதும், காதலர் வீட்டில் தங்குவதும் நடப்பதால் பெண்கள் கற்பிழக்கும் நிலை ஏற்படுகிறது. தவிர, மும்பை நகரெங்கும் கட்டுக்கடங்காத கூட்டத்தை இரவு நேரத்தில் பார்க்கும் விபசாரப் பெண்களும், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பணம் குவிப்பதில் ஈடுபடுகின்றனர். இந்தக் காரணங்களால் தசரா பண்டிகைக்குப் பிறகு கர்ப்பம் அடையும் திருமணம் ஆகாத இளம் பெண்கள் எண்ணிக்கையும் எய்ட்ஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் அதிக ரிப்பதாக மும்பை மகப்பேறு இயல் அமைப்பு நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி யுள்ளது.

கடந்த ஆண்டு தசராவுக்குப் பிறகு திருமண மாகாமல் கர்ப்பம் அடைந்த இளம் பெண்கள் எண்ணிக்கை 30 முதல் 50 சதவிகிதம் அதிகரித்ததாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தசராவுக்குப் பிறகு மூன்று மாத கால கட்டத்தில், ஆஸ்பத்திரிகள், கிளினிக்குகளில் நடந்த கருக்கலைப்புகளைக் கணக்கிட்டு இது தெரிவிக்கப்பட்டது. 16 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களே இதில் அதிகம். இவ்வளவுத் தகவல்களையும் வெளியிட்டது. விடுதலை ஏடு அல்ல. 26.9.2005 நாளிட்ட தினகரன் தான். கலாச்சாரத்தைக் காப்பதற்காகவே அவதாரம் எடுத் ததாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சிவசேனா என்ன செய்யப் போகிறது?

பால்தாக்கரே இந்தப் பாலியல் சமாச்சாரத்துக்குச் செய்யப் போகும் பரிகாரம் என்ன?

பகவான் கிருஷ்ணன் செய்ததுதானே என்று சமாதானம் சொல்லப் போகிறாரா?

காதலர் தினத்தால் போச்சு, போச்சு, கலாச்சாரம் போச்சு என்று கலவரக் கொடியைத் தூக்கிப் பிடிக்கும் இந்த இந்துத்துவாவாதிகள் இந்துக்களின் நவராத்திரி விழாவில் இளம் பெண்கள் திருமணம் ஆகும் முன்பே சூறையாடப்படுகிறார்களே இதற்கு என்ன பதில்? கடந்த ஆண்டு தசராவில் அகமதாபாத், சூரத், வடோதரா ஆகிய நகரங்களில் நிகழ்ந்த ஆபாசம் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை (25.11.2009) விரிவாகவே செய்தி வெளியிட்டதே. பெண்கள் மருந்துக் கடைகளுக்குப் போய் காண்டம் (சிஷீஸீபீஷீனீ) வாங்குகிறார்களாம். இந்தக் கால கட்டத்தில் 50 சதவிகிதம் அளவுக்கு பெண்களுக்கான கர்ப்பம் தடுக்கும் காண்டம் விற்பனை அதிகமாம்.

நாக்கைப் பிடுங்கிக் கொள்ளப் போகிறார்களா சங்பரிவார்க் கும்பல்? அல்லது நவராத்திரிக்கு எதிராக மறியல் செய்வார்களா? நவராத்திரி விழா கொண்டாட்டங்களின் போது கருத்தடை உறை தயாரிப்பு நிறுவனங்களுக்கு சிறப்பு விற்பனைத் திட்டங்களை அறிமுகப்படுத்தின என்று கூறுகிறார். -_ அகமதாபாத் மருந்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜஸ்வந்த் படேல். வெற்றிலைப் பாக்-குக் கடைகளிலும்கூட இந்தக் கருத்தடை உறைகள் விற்கப்பட்டனென்றும் அவர் கூறியுள்ளனர். இத் தகைய உறைகளை எந்தவிதக் கூச்சமோ வெட்கமோ இன்றிப் பெண்கள் கேட்டு வாங்கினார்களாம். சொல் வது விடுதலை அல்ல _ டைம்ஸ் ஆப் இந்தியா. காதலர் தினத்தால் கலாச்சாரம் கெட்டொழிந்துவிட்டது என்று கூச்சல் போடும் மானஸ்தர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? இந்து ராஜ்ஜியம் உருவாக் குவதில் சேனாதிபதியாக வாள் தூக்கும் நரேந்திர மோடியின் குஜராத்திலே - _ நவராத்திரி நேரத்திலே காண்டம் விற்பனை அதிகம் என்று புள்ளி விவரம் பேசுகிறதே _ என்ன செய்யப் போகிறார் மோடி?

இந்து மதமே ஆபாசக் கிடங்குதானே! கற்பழிக் காத கடவுள் உண்டா? சோரம் போகாத கடவுளச்சி கள்தான் உண்டா? குரு பத்தினியைக் கற்பழிக்கும் சீடர்கள் வரை உண்டே! இந்த யோக்கியதையில் கலாச்சாரத்தைக் கட்டிக் காக்க கம்பும் தடியுமாகக் கிளம்புகிறார்களாம், வெட்கம்! மகாவெட்கம்!

Wow Awesome Dance...

 

Seeman Speech...


தூங்கிய குழந்தையை முழிக்க வைத்த பாட்டு!


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...