|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 February, 2013

ரஷ்யாவில் எரி நட்சத்திரம் விழுந்து 500 பேர் படுகாயம்!மிகப் பெரிய விண்கல் (asteroid) ஒன்று இன்று பூமியை கடக்க இருக்கும் நிலையில் ரஷ்யாவின் வான்வெளியில் எரி நட்சத்திரம் (meteorite) ஒன்று விழுந்தது. இதன் அதிர்வலைகளால் வீட்டு கண்ணாடிகள் உடைந்தும் மேற்கூரைகள் விழுந்தும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1,500 கிலோ மீட்டர் தொலைவில் யுரால் பகுதியில் உள்ள ஒன்று செல்யபின்ஸ்க் என்ற இடத்தில் இன்று மிகப் பெரிய எரிநட்சத்திரம் விழுந்து வெடித்துச் சிதறியது. அப்போது நிலநடுக்கத்தைப் போல மிகப் பெரிய அதிர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. வானிலிருந்து பயங்கர வேகத்தில் தரையை நோக்கி பாய்ந்து வந்த இந்த நட்சத்திரம் தரையை நெருங்கும்போதே வெடித்துச் சிதறியது. அப்போது மிக பயங்கரமான வெடிச் சத்தம் எழுந்தது. அதைத் தொடர்ந்து பெரிய அளவில் தீப் பிழம்பு எழுந்ததோடு கடும் அதிர்வும் உண்டானது. இந்த வெடிப்பின்போது பல வீடுகளின் கூரைகள் நொறுங்கி விழுந்தன, ஏராளமான வீடுகளின் ஜன்னல்கள் வெடித்துச் சிதறின. தொலைத் தொடர்பு சேவைகளும் அறுந்துவிட்டன.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...